கலாச்சாரம்
நான் நாத்திகன்

“சொர்க்கத்திற்கு முகவரி என்ன?”… எனது ஏழு வயது மகள் தன் தாய்க்கு அன்னையர் தின வாழ்த்தட்டை மும்மரமாகத் தேடிக் கொண்டிருக்கையில், பின்னால் நின்று வெறுமையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எனக்குச் சட்டென மனதில் எழுந்தது இந்தக் கேள்வி. வாழ்த்தட்டை அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தைச் சுற்றிப் பல ஆண்கள். குழந்தைகளுடன் வந்தவர்கள் – என்னைப் போல – மனைவிமார்களுக்குக் குழந்தைகள் சார்பாக ஒரு வாழ்த்தட்டை வாங்க வந்ததாக ஊகித்துக் கொண்டேன். தனியாக வந்திருக்கும் ஆண்களை அவரவர்களின் அன்னையருக்காக வந்திருப்பதாக […]
மாந்தை தமிழ்க் குடியேற்றம் – பகுதி 2

ஈழநாட்டின் வடமேற்குப்பகுதியில் மாந்தையில் காணப்படும் பழைய தமிழ்க்குடியேற்றமானது, அவ்விடம் வாழ்க்கையைத் தொடர பல்வேறு உவர் நில இயற்கை அம்சங்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக நிலை கொண்டிருந்ததைக் காணலாம். குடியேற்ற அமைப்பு இவ்விடத்தில் காணப்படும் மிகவும் பாரிய குடியேற்றமானது கி.பி. 5 ம் ஆண்டில் சுமார் 6000 நிரந்தர வாசிகளை கொண்டிருந்திருக்கலாமென அகழ்வாராய்ச்சிச் சான்றுகள் மூலம் நம்பப்படுகிறது. மாந்தைக் குடியேற்ற நிலப்பரப்புகளில் 30 ஹெக்ரயர் சுற்றளவில், 12 மீட்டர் ஆழம் வரை மனித நடமாட்ட சுவடுகளைக் காணக்கூடியதாக உள்ளது. மேலும் […]
உலகின் முதன்மொழி
உலகின் முதன்மொழி தமிழ் மொழியாக இருக்குமோ? சமீபத்திய செய்தியில் 15,000 ஆண்டுகளாகச் சில சொற்கள் மாறவில்லை என்ற செய்தியைத் தொடர்பு படுத்திப் பார்க்கும் போது, மொழிக்குடும்பங்களின் வீச்சும் அவற்றின் படர்த்தியும் காண முடிந்தது. ஆசிய ஐரோப்பா மொழிக்குடும்பங்களைப் பற்றிய இந்தச் செய்தியில் புதைந்து கிடக்கும் பிற உண்மைகளையும் நாம் இங்கே பார்ப்போம். கீழ்க்கண்ட உலக வரைபடத்தைப் பாருங்கள், திராவிட மொழிக்குடும்பத்தின் ஆதி மொழி தமிழ் என்பது நாம் அறிந்தது, இதைத் தென் இந்தியா முழுவதும் பயன்படுத்தினார்கள் (நீல […]
உலகச் செம்மொழி – அத்தியாயம் 3

போன அத்தியாயத்த படிச்ச ஒரு தமிழ் ஆய்ந்த நண்பர் ஒருத்தர், தமிழ் மற்ற மொழிகளுக்கு எவ்வளவு வழங்கியுள்ளது என்று நீங்க எழுதுனதப் படிக்க. ஆச்சரியமாகவும், அருந்தகவலாகவும் இருந்தது. இச்சொற்கள் மற்ற மொழிகளில் கையாளப்பட்டது எப்போது எனும் ஆதாரக் கட்டுரைகள், குறிப்புகள் ஏதும் உங்களிடம் இருப்பின் அவற்றின் விவரங்களை வெளியிட முடியுமான்னு கேட்டாங்க.. ஏன்னா அவுங்க, இணயத்துல பல வார்த்தைகளுக்கு மூலம் தேடி பார்க்கும் போது அது பெரும்பாலும் old French, Latin , Greek, middle English லேயிருந்து வந்ததாகவே இருக்கும். ஒரு சில வார்த்தைகள் மட்டுமே தமிழில் இருந்து வந்ததாக இருக்குன்னு ஒரு சந்தேகத்த கேட்டு இருந்தாங்க.
பாவேந்தர்

“பயிலுறும் அண்ணன் தம்பி – அக்கம்
பக்கத்துறவின் முறையார்
தயைமிக உடையாள் அன்னை – என்னைச்
சந்ததம் மறவாத் தந்தை
குயில்போல் பேசிடும் மனையாள் – அன்பைக்
கொட்டி வளர்க்கும் பிள்ளை
அயலவராகும் வண்ணம் – தமிழென்
அறிவினில் உறைதல் கண்டீர்!”
அன்புள்ள அம்மாவுக்கு

சிறையிலிருக்கும் என் அன்புள்ள அம்மாவுக்கு
பாசமுடன் உன் இளைய மகன்
நான் எழுதிக் கொள்வது
நலம், நலமறிய ஆவல்.
அம்மா நான் இப்போது
ஆசிரமத்தில் நன்றாகப் படிக்கிறேன்
ஆனாலும்…
உலகச் செம்மொழி – அத்தியாயம் 2

நாம் தமிழகத்து சாலைகளில் செல்லும் போது இரு பக்கமும் உள்ள சுவற்றில் ”வீரபாண்டியார் அழைக்கிறார்”, ”நெல்லையார் அழைக்கிறார்” அப்படீன்னு பலப்பல ”ஆர்” அழைக்கிறதைப் பாத்து இருப்பீங்க. பாத்ததோட இல்லாம அவங்களை நினைச்சி சிரிச்சிட்டும் போய் இருப்பீங்க. தமிழில் “ஆர்” என்ற விகுதி ஒருவரை உயர்த்திக் குறிப்பிட பயன்படுகிறது. அது சரி sir. இப்ப எதுக்கு என்கிட்ட தமிழ் இலக்கணம் சொல்லுறீங்கனு கேக்கறீங்களா? இந்த “ஆர்” க்கு முன்னாடி ஒரு “ஸ்” சேத்துப் பாருங்க….
ஸ் + ஆர் =ஸ்ஆர் = sir
தஞ்சை வரலாறு

இஞ்சியும் மஞ்சளும் கொஞ்சித் தவழும் தஞ்சை மாநகர். என்னடா தஞ்சை மாநகர்னு சொல்லுறான், அது ஒரு சின்ன நகரம் அவ்வளவுதானே என்று நினைச்சிங்கன்னா உங்களுக்கு இந்தக் கட்டுரை வியப்பா இருக்கும். இன்னைக்கு மாநகர்ன்னு சொல்ற முக்கால்வாசி நகரங்கள் உருவாவதற்கு முன்னாடியே தஞ்சாவூர் ஒரு மாநகர். அதுவும் சும்மா இல்ல, தெற்காசியாவின் மிக முக்கியமான மாநகர். ஒரு உவமைக்குச் சொல்லனும்னா இப்போ இருக்கிற வாஷிங்டன் மாதிரி. இந்த ஊர் தலைநகரா இருந்த போது இதன் ஆட்சிக்குக் கீழ் இருந்த […]
பல்லாங்குழி

மிகத் தொன்மையான தமிழர் விளையாட்டு, கிட்டத்தட்ட 8000 ஆண்டுகள் பழமையானது எனலாம். பல்லாங்குழி பற்றிய குறிப்புகள் பல தமிழ்ச் சங்க இலக்கியங்களிலும் காணப்படுகின்றன. மொழி ஞாயிறு தேவனேயப்பாவாணர் தமிழரின் தொன்மையான, தமிழ் மண்ணின் மரபு மாறாத விளையாட்டுகளைப் பற்றி ஒரு தனி நூலே எழுதியிருக்கிறார். இந்நூலில் பாவாணர் எழுதிய முகவுரையிலிருந்து சில பகுதிகள் இதோ; . ”விளை என்றால் விருப்பு என்றும், ஆட்டு என்றால் ஆட்டம் பொருளாகும். எனவே, விரும்பியாடும் ஆட்டு, விளையாட்டு என்றானது. விரும்பப்படுதல், செயற்கெளிமை, […]
தமிழ்த்தாத்தா உ.வே.சா

வடமொழி (சமஸ்கிருதம்) மேற்கத்தியரின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்திருந்த காலமது. தமிழில் பக்தி இலக்கியங்களும் வரலாற்றுக் காப்பியங்களும் மட்டுமே அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ளது என்று நம்பப் பட்டுக்கொண்டிருந்த காலத்தினூடே, தமிழின் மறக்கப்பட்ட தொன்மையை ஓலைச் சுவடிகளின்பால் ஓடி ஓடித் தேடி மிகத்தெளிவாய் உலகிற்குக் கொண்டு வந்தவர், தமிழ்த்தாத்தா என்று அன்போடு அழைக்கப்படும் மகாமகோபாத்யாய தக்ஷிணாத்ய கலாநிதி உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாதய்யர் அவர்கள். அன்றும், இன்றும் தமிழ் மொழி கோடிக் கணக்கானவர்களைச் சிறப்புற வாழ வைத்துள்ளது. ஆனால் தமிழ் என்ற மொழியை, […]