கலாச்சாரம்
சொற்சதுக்கம் 7
கீழே கட்டத்துக்குள் இருக்கும் ஒன்பது எழுத்துக்களைக் கொண்டு சொற்களை உருவாக்குங்கள். சொற்கள் இரண்டெழுத்தாகவோ அல்லது அதற்கு மேற்பட்டதாகவோ இருக்கலாம். ஒரே எழுத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பாவிக்கலாம். சொற்கள் பொருள் பொதிந்தவையாக இருக்க வேண்டும். இருபது சொற்களுக்கு மேல் உருவாக்கினால் நீங்களே உங்களுக்கு தமிழ்ப் புலி என்ற பட்டமளித்துக் கொள்ளலாம். விடைகள்
சொற்புதிர் – காய்கறிகளைக் கண்டுபிடியுங்கள் – குறிப்பு
ஜூன் மாதம் தேசியப் பழங்கள் மற்றும் காய்கறிகள் மாதமாகக் கொண்டாடப்பட்டது. பொதுவாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் காய்கறிகளும் பழங்களும் கடைகளில் நிரம்பி வழியும். இக்காலங்களில் புத்தம் புதிய பழங்களும், காய்கறிகளும் தோட்டத்திலிருந்து நேரடியாக உழவர் சந்தைகளில் கிடைக்கும். பல சமயங்களில் நாம் காய்கறிகளின் ஆங்கிலப் பெயர்களை அப்படியே குறிப்பிடுவதுண்டு. அவசரத்தில், அதற்கான தமிழ்ப் பெயர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. இங்கே பட்டியலிலுள்ள காய்கறிகளின் தமிழ்ப் பெயர்கள் அருகிலுள்ள கட்டத்தில் மறைந்துள்ளன. அதனைக் கண்டுபிடிப்போமா? BROCOLLI DRUMSTICK GOOSEBERRY […]
மினசோட்டா மாநிலம் பற்றிய குறுக்கெழுத்துப் புதிர்
இடமிருந்து வலம் மினசோட்டா மாநிலத்தின் அடையாள விளையாட்டு (Official game of Minnesota) (5) கடந்த வருடம் இறந்த மினசோட்டாவைச் சேர்ந்த புகழ்பெற்ற பாப் இசைப் பாடகர் ( 4) மினசோட்டாவின் மிகப் பழமையான முதல் நகரம். (3) மினசோட்டா மாநிலத்தின் செல்லப் பெயர்களில் இதுவும் ஒன்று. இப்பெயரில் மினசோட்டா பல்கலையின் ஃபுட்பால் குழு பன்மையில் உள்ளது (3) மினசோட்டா மாநிலத்துக்குக் கிழக்கே அமைந்துள்ள இம்மாநிலத்தை சுப்பீரியர் ஏரி பிரிக்கிறது. (4) மினசோட்டா மாநிலத்தின் பெரிய […]
அன்பின் அகிலம்
அன்றலர்ந்த தாமரையாய் அந்தமுகம் விலகவில்லை…..
அன்பிற்கு நிரூபணமாய் அன்னையன்றி வேறொன்றில்லை !!
அளவில்லாப் பெருவலியும் அவளுக்குப் பொருட்டில்லை
அவதிகளைத் தாங்கியன்றோ அருமையுடன் ஈன்றாள்பிள்ளை !!
அவள்பட்ட துயரமெல்லாம் அன்றோடு நிற்கவில்லை
அக்கறையாய் வளர்த்தெடுக்க அவள்துயர் எல்லையில்லை
அரும்பாகத் தானுதித்து அரசாளும் யோகமில்லை
அதனாலே கிள்ளையதை அவளென்றும் விலக்கவில்லை !
புத்தாண்டு பூத்தது
ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி, 1990 ஆம் வருடம்….. தமிழ் வருடப் பிறப்பு என்பதினால் பூஜைக்குத் தயாராகிக் கொண்டிருந்தது வீடு. .…… வழக்கம் போல அன்று காலையும் வீட்டின் முன் ஹாலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த கணேஷின் முகத்தில் காலைச் சூரியன் தன் கிரணங்களை வீசி, விடிந்துவிட்டது என்பதை நளினமாய் உணர்த்தினான். அடுத்த மாதம் வர இருக்கும் பொறியியற் கல்வியின் நான்காம் செமஸ்டர் தேர்வுகளுக்குத் தயார் செய்வதற்காக, இரவு நெடுநேரம் விழித்திருந்ததால் காலையில் எழுவதற்குத் தாமதமானது. […]
தமிழ் – சிங்கள வருடப் பிறப்பு
சூரியன் மேட இராசிக்குள் நுழைவது சித்திரை மாதப் பிறப்பு எனப்படும். தமிழில் சித்திரை மாதம் 31 நாட்களைக் கொண்டது. ஆங்கில நாட்காட்டியில் வரும் “ஏப்ரல்” மாதம் 14 ஆம் நாள் முதல் “மே” மாதம் 14 ஆம் நாள் வரை தமிழில் “சித்திரை” மாதமாகும். சித்திரை முதல் மாதம் என்பதால் இதுவே புதிய ஆண்டின் தொடக்கமும் ஆகும் என்ற நம்பிக்கை காலங்காலமாக எம்மவரிடம் நிலவி வருவதனால் சித்திரை மாதம் முதல் நாளைத் தமிழர்கள் அனைவரும் தமிழ் வருடப் […]
ஜெயலலிதா ஒரு புதிர்
இடமிருந்து வலம் ஜெயலலிதா பிறந்த சிற்றூர் (5) ஜெயலலிதா தாயாரின் இயற்பெயர் (5) முதன் முதலில் ஜெயலலிதா போட்டியிட்ட சின்னம் (3) எம்.ஜி.ஆருடன் சேர்ந்து அவர் நடித்த முதல் படம். (10) ‘உனக்கும் எனக்கும் தான் பொருத்தம்’ என்ற பாடல் இடம் பெற்ற, எம்.ஜி.ஆருடன் சேர்ந்து நடித்த படம். (4) சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டுத் தோற்ற ஒரு தொகுதி. (4) ஜெயலலிதாவால், கல்கியில் தொடராக எழுதப்பட்டு பின்னர் நாவலாக வெளிவந்த நூல். (8) வலமிருந்து இடம் […]
பகுத்து ஆராய்தல் வல்லமை
முக்கிய குறிப்பு :இது உங்களிற்கு ஏற்கனவே அறிந்து கொண்டுள்ள ‘ தெரிந்து கொண்டுள்ள அறிவியல் தகவல்களைத் தவிர்த்து – தரப்பட்டுள்ள தகவல்களை மாத்திரம் உபயோகித்து, பகுத்து அறிந்து, ஆராய்ந்து முடிவுகளைப் பெற்றுக் கொள்ள முனையவும். கீழே உள்ள கூற்றுக்களை நீங்கள் அடிப்படை என்று எடுத்துக் கொண்டால் அதை வைத்துக் மிகுதித்தரவுகளில் உண்மையானது எது என்று கூறவும். உதாரணம்: தானியங்கள் எல்லாம் புல் விதைகள் . நெல்லு ஒரு தானியம். ஆகவே, (1) தானியங்கள் எல்லாம் நெற்கள். (2) […]
வான்கோழி வாட்டி – சமையல் விளக்கம்
1 உள்ளடக்கங்களை விலக்கவும் 2 வெண்ணெயை வான்கோழி மேல் பரவலாகப் பூசிக்கொள்ளவும் 3 செட்டைகளைக் குடைத்து மடக்கிச் செருகவும் 4 கால்களை நூலினால்,கயிற்றினால் பின்னால் கட்டிவிடவும் 5 வான்கோழியை, மார்புப் பகுதி மேல் நோக்கியிருக்குமாறு வாட்டும் தட்டில் வைக்கவும் 6. மார்புப் பகுதியை ஈயத்தாளினால் மூடிக்கொள்ளவும் 7 வெப்பமானியை உள்ளில் அழுத்தி அகல் அடுப்பினுள் வைக்கவும் 8 ஒவ்வொரு 45 நிமிட இடைவெளியில் வெண்ணெய்யையும், ஊறித்தட்டில் […]