கலாச்சாரம்
கேனன் காட்டாற்று வெள்ளம்
மினசோட்டா மாநிலத்தின் நாட்டுப்புறமும், பட்டினங்களும் இலையுதிர் காலத்திலே பல அடைமழைகளினால் அல்லல் பட்டவாறுள்ளன. செயின்ட்பால் தலைநகரத்தின் தென்கிழக்கில் நார்த்ஃபீல்ட் எனும் அமைதியான விவசாய நிலங்கள் மற்றும் சிறிய பல்கலைக் கழகங்கள் கொண்ட ஊர் ஒன்றுள்ளது. கால்ரன் கல்லூரி, மற்றும் செயின்ட் ஓலஃப் பல்கலைக் கழகங்கள் நூற்றாண்டுகளாக நார்த் ஃபீல்ட் ஊரை இருப்பிடமாகக் கொண்டுள்ளன. வளமான இலைகள் கோலாகலமாக ஒருபுறம் நிறம் மாற அதேசமயம் கேனன் (Cannon River) எனும் பட்டினத்தூடு செல்லும் காட்டாறு மடை கடந்து பாய்ந்தவாறுள்ளது. […]
குறுக்கெழுத்துப் புதிர்
தமிழ்த் திரைப்பட உலகம் தமிழர்களால் மதிக்கப்படுகிறதோ இல்லையோ, பிரான்ஸ் நாட்டினரால் பெரிதும் கவனிக்கப்பட்டு, கௌரவிக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 21ம் நாள் உலக நாயகன் கமலஹாசன் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘செவாலிய’ விருதுக்குத் தெரிவு பெற்றுள்ளார். சினிமாவைத் தனது தொழிலாக மட்டுமல்லாமல் தனது காதலாக நினைத்து உணர்வுப் பூர்வப் பணியாகச் வரும் கமலஹாசனுக்கு இவ்விருது சாலப் பொருந்தும். இவ்விருதினை அளித்த பிரான்ஸ் அரசுக்கு நன்றியையும், இவ்விருதினைப் பெற்ற திரு. கமலஹாசன் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் பனிப்பூக்கள் சார்பில் சமர்ப்பித்து […]
குறுக்கெழுத்து
கடந்த சில மாதங்களாக உலகத் தமிழர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன், உச்சரித்த ஒரு பெயர் நடிகர் ரஜினிகாந்த். இந்நிலையில் அவர் நடித்தசில படங்களை இந்தக் குறுக்கெழுத்துப் புதிரில் கண்டுபிடிப்போமா? இடமிருந்து வலம் “இது ரஜினி ஸ்டைல்” என்று ரஜினி கமலிடம் அடிக்கடிச் சொல்லும் படம்.(8 எழுத்துகள்) ரஜினியோடு ராதா கடைசியாக இணைந்து நடித்த ஆர். சுந்தர்ராஜனின் படம். (5) ரஜினியை வைத்து ஏ.வி.எம். நிறுவனத்தினர் தயாரித்த முதல் திரைப்படம். இப்படத்தின் வில்லனாக நடிக்க மறுத்தவர் விஜயகாந்த் (7) […]
குறுக்கெழுத்துப் புதிர்
கோடை விடுமுறையைக் கழிக்க ஏதாவதொரு ஊருக்குக் குடும்பத்துடன் சென்று வரலாமெனப் பலரும் முனைந்து கொண்டிருக்கும் வேளையில், உங்களுக்கு உதவ உலக நகரங்கள் சில குறுக்கெழுத்துப் புதிராக பட்டியலிடப்பட்டுள்ளன. புதிரை விடுவித்து, உங்களது பயணத்தை முடிவு செய்யுங்களேன்!! குறிப்புகள் மேலிருந்து கீழ் 1. ஸ்கொயர் மைல் நகரம் என்றழைக்கப்படும் ஐரோப்பிய நகரம். (4) 3. மூன்றாவது ரோம் எனப்படும் நகரம்.(3) 4. ஹாலிவுட், கோலிவுட் வரிசையில் சாண்டல்வுட் திரைத்துறை நகரம்.(5) 8. சிங்கநகரம் எனப்படும் ஆசிய நகரம்.(6) 9. […]
தமிழ்ப் புத்தாண்டு
சித்திரைத் திருமகள் சிறப்புடனே வருகிறாள்
சீராட்டிப் பாராட்டிச் செழிப்பூட்ட வருகிறாள்
சிந்தனைச் சிற்பிகளைச் சிரந்தூக்கிச் செறுக்கேற்றி
சீலமாய் வாழ்பவரைச் செழுமையுடன் வைத்திடுவாள் !!
கத்திரி வெயிலிலே கழனியில் உழைப்பவரை
காரிருள் நேரத்திலும் களத்துமேடு காப்பவரை
கனத்த மழையினிலும் கடுந்தொழில் புரிபவரை
காத்திடுக இயற்கையெனக் கைகூப்பி அழைக்கிறாள் !
அசோகமித்திரனுக்கு அருகாமையில்….
சமீபத்திய இந்தியப் பயணத்தின் போது ஒரு அரிய வாய்ப்பாக, பழம் பெரும் எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான எழுத்தாளர் அசோகமித்திரனைச் சந்தித்து உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. இந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த எனது கல்லூரி நண்பன் ஸ்ரீராமிற்கு, இச்சமயத்தில் எனது இதயபூர்வமான நன்றியை உரித்தாக்குகிறேன். எனது சந்திப்பைப் பற்றி எழுதுவதற்கு முன்னால், திரு. அசோகமித்திரன் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுவது பொருத்தமாக இருக்கும். தமிழ்ப் படிக்கும் ஆர்வலர்களுக்கு அவரைப் பற்றிய அறிமுகம் தேவையில்லையெனினும், இந்தக் […]
சொற்சதுக்கம் 6
கீழே கட்டத்துக்குள் இருக்கும் ஒன்பது எழுத்துக்களைக் கொண்டு சொற்களை உருவாக்குங்கள். சொற்கள் இரண்டெழுத்தாகவோ அல்லது அதற்கு மேற்பட்டதாகவோ இருக்கலாம். ஒரே எழுத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பாவிக்கலாம். சொற்கள் பொருள் பொதிந்தவையாக இருக்க வேண்டும். இருபது சொற்களுக்கு மேல் உருவாக்கினால் நீங்களே உங்களுக்கு தமிழ்ப் புலி என்ற பட்டமளித்துக் கொள்ளலாம் சொற்சதுக்கம் 6 – விடைகள்
சொற்சதுக்கம் – 5
கீழே கட்டத்துக்குள் இருக்கும் ஒன்பது எழுத்துக்களைக் கொண்டு சொற்களை உருவாக்குங்கள். சொற்கள் இரண்டெழுத்தாகவோ அல்லது அதற்கு மேற்பட்டதாகவோ இருக்கலாம். ஒரே எழுத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பாவிக்கலாம். சொற்கள் பொருள் பொதிந்தவையாக இருக்க வேண்டும். இருபது சொற்களுக்கு மேல் உருவாக்கினால் நீங்களே உங்களுக்கு தமிழ்ப் புலி என்ற பட்டமளித்துக் கொள்ளலாம் பா மா ம் தா ர ல் அ ப த (சொற்சதுக்கம் 5 – விடைகள்)
சொற்சதுக்கம் – 2
கீழே கட்டத்துக்குள் இருக்கும் ஒன்பது எழுத்துக்களைக் கொண்டு சொற்களை உருவாக்குங்கள். சொற்கள் இரண்டெழுத்தாகவோ அல்லது அதற்கு மேற்பட்டதாகவோ இருக்கலாம். ஒரே எழுத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பாவிக்கலாம். சொற்கள் பொருள் பொதிந்தவையாக இருக்க வேண்டும். இருபது சொற்களுக்கு மேல் உருவாக்கினால் நீங்களே தமிழ்ப் புலி என்ற பட்டமளித்துக் கொள்ளலாம். தொகுப்பு: ரவிக்குமார். (சொற் சதுக்கம் – விடைகள்)
கலைவாணர்
”சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கே சொந்தமான கை இருப்பு, வேறு ஜீவ ராசிகள் செய்ய முடியாத செயலாகும் இந்த சிரிப்பு” என்ற பாடலைக் கேட்டிராத, ரசித்திராத சென்ற தலைமுறையைச் சேர்ந்த தமிழர்களே இருந்திருக்க இயலாது என்று நினைக்கிறேன். இந்தப் பாடலுக்குக் குரல் கொடுத்து, நடித்து அதற்கு முழு உயிரும் கொடுத்த நகைச்சுவை நடிப்பின் மாமேதை கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனுக்கு அறிமுகம் தேவையில்லை. இந்தப் பாடலே அவரின் சிந்தனைக்கும் ஒரு எடுத்துக்காட்டு என்று கூறலாம். நகைச்சுவையில், சமூக […]