கலாச்சாரம்
யார் அந்த இராவணன் – பகுதி 2
(யார் அந்த இராவணன் – பகுதி 1) இலங்கைத் தீவு உருவான கதை இலங்கையின் ஆதிக்குடிகளாகக் கருதப்படும் இயக்கர் நாகர் பற்றியும், இவர்களோடு இராவணனுக்கு உள்ள தொடர்புகள் பற்றியும் பல ஐதீகங்கள் உள்ளன. ஒரு காலத்தில் புவிநிலப்பரப்பில் பல கண்டங்கள் இருந்தன என்றும், அவற்றில் ஒரு கண்டமாக இப்போதைய இந்தியாவும் அதனை அண்டிய நிலப்பரப்புகளும் காணப்பட்டன என்றும் சில வரலாற்றுக் குறிப்புக்கள் குறிப்பிடுகின்றன. இக்கண்டங்களை ஆட்சி செய்தவர்களில் மனுச்சக்கரவர்த்தி என்பவனும் ஒருவன். இவனுக்கு சமன் என்று ஒரு மகனும், […]
சொற்சதுக்கம்
கீழே கட்டத்துக்குள் இருக்கும் ஒன்பது எழுத்துக்களைக் கொண்டு சொற்களை உருவாக்குங்கள். சொற்கள் இரண்டெழுத்தாகவோ அல்லது அதற்கு மேற்பட்டதாகவோ இருக்கலாம். ஒரே எழுத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பாவிக்கலாம். சொற்கள் பொருள் பொதிந்தவையாக இருக்க வேண்டும். இருபது சொற்களுக்கு மேல் உருவாக்கினால் நீங்களே தமிழ்ப் புலி என்ற பட்டமளித்துக் கொள்ளலாம். ல உ க ப ம் ட ஓ டு த தொகுப்பு: ரவிக்குமார். (சொற் சதுக்கம் – விடைகள்)
யார் அந்த இராவணன் பகுதி – 1
வலவன் ஏவா வான ஊர்தி விமானம் அல்லது வானூர்தி என்பது புவியின் வளிமண்டலத்தின் உதவியுடன் பறக்கக்கூடிய ஓர் உந்துப்பொறியாகும். இது காற்றை உந்தியும் பின் தள்ளியும் பறக்கிறது. புவியீர்ப்பு விசையை மீறி வானில் பறக்கக் காற்றிதழின் நிலை ஏற்றத்தையோ இயக்க ஏற்றத்தையோ பயன்படுத்துகிறது. சுமார் 1890களில் தொடங்கி 1903 ஆம் ஆண்டு ஆர்வில் ரைட் (Orville Wright) வில்பர் ரைட் (Wilbur Wright) என்னும் இரு உடன்பிறந்தார்கள் (Wright brothers) முதன் முதல் பறக்கும் ஒரு இயந்திரத்தைப் […]
நடிப்புலகச் சக்கரவர்த்தினி
”சிக்கலாரே, எப்டி இருக்கீய…. சொகமா இருக்கீயளா……….. அடி ஆத்தி…. இந்த நாயனத்துல வாசிச்சுக் காட்டுங்க…… ஏஏஏஏஏஏன்…..” தில்லானா மோகனாம்பாளில் எல்லா நாதஸ்வரத்திலும் அதே சங்கீதம்தான் வருகிறதா, அல்லது சிக்கல் சண்முகசுந்தரம் (நடிகர் திலகம் சிவாஜி கணேசன்) வாசிக்கும் நாதஸ்வரம் மட்டும் சிறப்பாகச் செய்யப்பட்டதா என்று கேள்வி கேட்கும் நேரத்தில், ஒரு நிமிடம் சிவாஜி என்ற மாபெரும் ஜாம்பவான் அதே காட்சியில் இருக்கிறார் என்பதே நமக்கு மறந்துவிடுமளவுக்கு அதிகமான ஆளுமையுடன் நடிப்பதற்கு இயன்ற ஒரு சில நட்சத்திரங்களில் மிகவும் முக்கியமானவர். […]
கர்ம வீரர்
சீசரைப் பெற்ற தாயும் சிறப்புறப் பெற்றாள் – அன்று நாசரைப் பெற்ற தாயும் நலம்பெறப் பெற்றாள் – காம ராசரைப் பெற்ற தாயோ நாட்டிற்காகவே பெற்றாள் !!! -கவியரசு கண்ணதாசன்- ”பெருந்தலைவர்”, “கர்ம வீரர்”, “கிங் மேக்கர்”, “படிக்காத மேதை”, “கருப்பு காந்தி” எனப் பல்வேறு சிறப்புப் பெயர்களும், புகழும் பெற்ற, இந்த நூற்றாண்டு கண்ட ஒப்பற்ற தலைவர்களில் ஒருவரான காமராஜர் அவர்களின் 40 ஆவது நினைவு தினம் அக்டோபர் மாதம் 2 ஆம் திகதி வந்து […]
புதிர் – புதைந்திருக்கும் சொற்கள்
கீழேயுள்ள படத்தில் புதைந்திருக்கும் இரண்டு எழுத்துக்களினாலோ, அல்லது அவற்றிற்கும் மேலான எழுத்துக்களைக் கொண்டு அமையும் தமிழ் சொற்களைக் கண்டுபிடிப்பீர்களா? (புதிர் – புதைந்திருக்கும் சொற்கள் – விடைகள்)
உலகச் செம்மொழி – அத்தியாயம் 18
(அத்தியாயம் 17 செல்ல இங்கே சொடுக்கவும்) அரபிய தீபகற்பத்தின் வடபகுதியில் தான் நாகரிகத்தில் உச்சம் தொட்ட சுமேரிய நாகரீகம் தோன்றியதாகச் சொல்லப்படுகின்றது. இது இன்றைய இராக் நாடாகும். இங்குதான் யூஃப்ரடீஸ் மற்றும் சின்னார் என்று அழைக்கப்படுகின்ற டைக்ரஸ் நதிகள் ஓடுகின்றன. இவ்விரு ஆறுகளும் இப்பகுதியை வளம் கொழிக்கச் செய்கின்றன. அக்காடிய மொழியில் யூஃப்ரடீஸ் ஆற்றை இப்-புரத்து ஆறுஎன அழைத்தனர். இந்தப்பக்க ஆறு அந்தப்பக்க ஆறு என்பதை இப்புரத்து ஆறு அப்புரத்து ஆறு என்று குறிப்பிடப்பட்டது. இதே ஆற்றைப் […]
திரைப்படக் குறுக்கெழுத்து
இடமிருந்து வலம் அபிநய சரஸ்வதி என்ற செல்லப் பெயர் கொண்டவர் இவர் (5) பிரமிளா தேவி என்ற இயற்பெயர் கொண்ட நடிகை – இவரது மகளும் கனகா என்ற பெயரில் நடித்தார். (3) 1931ம் ஆண்டு தமிழில் (தெலுங்கு, ஹிந்தி உரையாடல்களும் இதில் இடம்பெற்றிருந்தன) வெளிவந்த முதல் பேசும் திரைப்படம் (4) இந்நாளைய செலவாளி இயக்குனரான இவரது பெயரில் எண்பது படங்களைப் படைத்த புகழ் பெற்ற முன்னாள் இயக்குனர் ஒருவரும் இருந்தார். (4) கேரளாவில் பிறந்து, தமிழில் […]
சொற் சதுக்கம்
கீழே பெட்டிக்குள் இருக்கும் எழுத்துக்களைக் கொண்டு பொருளுள்ள சொற்களை அமையுங்கள். சொற்கள் எத்தனை எழுத்துக்களை வேண்டுமானாலும் கொண்டிருக்கலாம். எ.கா. மனம். 25 சொற்களுக்கு மேல் கண்டுபிடித்தால் நீங்கள் தமிழ் வித்தகர் என்று சொல்லிக்கொள்ளலாம். ட வ ம த ம் ன வே க ர (சொற் சதுக்கம் – விடைகள்)