கலாச்சாரம்
திருக்குறளும் இளஞ்சிறகுகளும்
உலகத்து மொழிகளுள் முதன்மையான செம்மொழியாம் தமிழ்மொழியின் மகுடத்தை என்றுமே அலங்கரிக்கும் அழகான சிறகு திருக்குறளாகும். திருக்குறள் வள்ளுவரால் உலக மக்களுக்காக கட்டித் தரப்பட்ட அறிவுக் களஞ்சியமாகும். விவிலியத்தைத் தொடர்ந்து அதிகமான உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டதும் திருக்குறளே. எந்த மண்ணில், எந்தக் காலத்தில், எவர் படித்தாலும் படிப்பவருக்கும் படிக்கும் காலத்திற்கும் ஏற்புடையதாக அமைவது திருக்குறளின் பெருஞ்சிறப்பு. இத்தனைச் சிறப்புகள் வாய்ந்த திருக்குறள், வெறும் மதிப்பெண்ணிற்காக மனப்பாடம் செய்யும் வரிகளாக மாறிவிடுமோ என்ற அச்சம் நம்மில் பலருக்கு உண்டு. இந்த […]
உலகச் செம்மொழி – அத்தியாயம் 17
(அத்தியாயம் 16 செல்ல இங்கே சொடுக்கவும்) இன்றைய தமிழுக்கும் கொடுந்தமிழுக்கும் சற்றே வித்தியாசங்கள் இருப்பினும், பழையன கழிதலும், புதியன புகுதலும் என்னும் தமிழ் மறபிற்கு ஏற்ப பல புதியவைகள் உள்வாங்கப்பட்டும், சில கழிக்கப்பட்டும் தமிழ் இன்றைய நவீனத் தமிழாக உருப்பெற்று உள்ளது. இது மற்றைய திராவிடம் போல் பிற மொழிகளுடன் கலந்து தனித்தியங்கும் தன்மை போகாமல் மூலமொழியின் சாரத்தோடே பல்லாயிரம்ஆண்டுகளாய் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு இளமையான மூத்த மொழி தமிழ் மொழி. இந்திய துணைக்கண்டத்து மொழிகள் அனைத்தையும் […]
சொற் சதுக்கம்
பொழுதுபோக்காய் உங்களது சொல் வங்கியை வளப்படுத்தும் ஒரு குதூகல விளையாட்டு. கீழே கட்டங்களில் இருக்கும் எழுத்துக்களைக் கொண்டு குறைந்த பட்சம் 15 சொற்களையாவது உருவாக்க முயலுங்கள். எழுத்துக்களை எப்படி வேண்டுமானாலும் கோர்க்கலாம்; ஒரே சொல்லில் அதே எழுத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். சொற்கள் எத்தனை எழுத்துக்கள் கொண்டவையாகவும் இருக்கலாம். எடுத்துக்காட்டு : ஆடி, கடல் ஒரே நிபந்தனை சொற்கள் தமிழ்ச் சொற்களாக, பொருள் அமைந்தவையாக இருக்க வேண்டுமென்பதே. விளையாடித் தான் பாருங்களேன்! (சொற் சதுக்கம் – […]
யோகசுவாமிகள்
“சும்மா இரு” என்ற இரு சொற்களிலுமே நாம் தற்போது இந்த நிமிடத்தில் வாழ்வதைப் பற்றிக் கரிசனை செலுத்த வேண்டும் என்றார் யோகசுவாமிகள். அசலுக்கும் நகலுக்கும், நல்லுறவுக்கும், வல்லுறவுக்கும், அற்பத்துக்கும், ஆன்மீகத்திற்கும் வேறுபாடு தெரியாது இலத்திரனியல் வாழ்க்கையில் சஞ்சரிக்கும் மனித குலத்திற்கு மெஞ்ஞானியாகிய யாழ்ப்பாணம் யோகசுவாமிகள் பற்றித் தெரிந்திருப்பது அரிதான விடயமே. ஞானிகள் தோன்றி போதிக்கும் தத்துவங்களோ மனித சிந்தனையின் உயர் கட்டத்தை விவரிக்கிறது. ஏரியில் ததும்பும் நீர்க்குமிழிகள் போல வாழ்க்கையில் அவை அவ்வப்போது எமக்கு […]
குறுக்கெழுத்து – பழமொழி
இடமிருந்து வலம் தலை சாய்க்க மடி தரும் பஞ்சு நண்பன். யார் அவன்? (4) தண்ணீரில் பிறந்தாலும், தண்ணீரினால் மடியும். அது என்ன? (3) இரண்டு பக்கமும் காடு ; நடுவிலே ஒரு பாதை. அது என்ன? (3) ஊரெல்லாம் சுற்றினாலும் வீட்டுக்குள் மூலையில் முடங்கும். அது என்ன? (4) ஊர் உண்டு மக்களில்லை; மலையுண்டு மரங்களில்லை; ஆறுண்டு நீரில்லை. வண்ணமுண்டு உயிரே இல்லை – அது என்ன? (5) 12.வாயில் கடிபடாது. கையில் பிடிபடாது. […]
மினசோட்டா ஹிந்து மந்திர் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்
மினசோட்டா வாழ் தமிழர்களுக்கு இது கொஞ்சம் பிசியான வாரயிறுதி. ஆரம்பித்து வைத்தது, ஏப்ரல் 11 ஆம் தேதி அன்று மெபில் க்ரோவ் (Maplegrove) ஹிந்து மந்திரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சிகள். ஹிந்து மதத்தில் பல கடவுள்கள் இருந்தாலும், பொதுவாக அமெரிக்காவில் அனைத்துக் கடவுள்களுக்கும் அனைத்து இடங்களிலும் கோவில்கள் இருப்பதில்லை. ஈஸ்ட் கோஸ்ட் பகுதிகளை விதிவிலக்கு எனலாம். மற்ற பகுதிகளில் வெகு சொற்பமே. அந்த வகையில், மினசோட்டா இந்தியர்கள் கொடுத்து வைத்தவர்கள் எனலாம். பெரும்பாலான கடவுள்களின் […]
பொன்னம்பலம் ராமநாதன்
இங்கிலாந்திடமிருந்து இலங்கை நாட்டின் விடுதலைக்காகப் பல தலைவர்கள் உருவாகி அரும்பணியாற்றியுள்ளனர். அவர்களில் தமிழ்த் தலைவர்கள் பலரும் இடம்பெற்றிருந்தனர். அவர்களில் ஒருவர் சர். பொன்னம்பலம் ராமநாதன். 1851ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதினைந்தாம் தேதி கொழும்பில் பிறந்தவர் ராமநாதன். இவரது தந்தை கேட் (ராச வாசல்) முதலியார் அருணாச்சலம் பொன்னம்பலம். தாயார் செல்லாச்சி அம்மாள். தந்தை ஆங்கில அரசாங்கத்தில் ஒரு உயர் பதவியில் இருந்ததாலும்,வியாபாரம் நடத்தி வந்ததாலும் ராமனாதனின் பால்ய நாட்கள் சுகமாகவே அமைந்தன. கொழும்பு ராயல் கல்விக்கழகத்தில் […]
உலகச் செம்மொழி – அத்தியாயம் 16
(அத்தியாயம் 15 செல்ல இங்கே சொடுக்கவும்) கொடுந்தமிழாயிருந்த மூலமொழி பின் திராவிடமொழிகளாய்த் திரிந்துவிட்டது. மூலத்தமிழிலிருந்து முதலில் பிறிந்த முதல் மொழியாக பாவாணரால் கருதப்படுவது தெலுங்கேயாகும்.அது திரிந்த காலம் ஏறத்தாழ கிமு 1500ம் ஆண்டாகும். தெலுங்கு நாட்டிற்கு கீழ் தென்பகுதி முழுவதும் தமிழ் என்னும் ஒற்றை மொழியே வழங்கி வந்துள்ளது. தமிழிலிருந்து திரிந்த திராவிட மொழிகளை வடதிராவிடம், நடு திராவிடம் , தென் திராவிடம் என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். பனம்பாரனாரும் தொல்காப்பியரும் ஒரே கல்விச்சாலை மாணாக்கர்கள் […]
மார்லன் பிராண்டோ
1973ஆம் ஆண்டு, மார்ச் 27ஆம் நாள் லாஸ் ஏஞ்சலிஸ் நகரிலுள்ள டோரோதி சான்ட்லர் அரங்கம் (Dorothy Chandler Pavilion) – 45வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா. சிறந்த நடிகர் விருதுக்காக நியமனமாகியிருந்த ஐந்து பெயர்களை நடிகை லீவ் உல்மன் வாசித்து விட்டார். நடிகர் ரோஜர் மூர் வெற்றியாளரின் பெயரை அறிவித்தார். அரங்கம் முழுதும் பலத்த கரகோஷம். ‘சிறந்த நடிகரு’க்கான விருதைப் பெற ஒரு ‘பெண்’ மேடையேறினாள். பார்வையாளர்களுக்குக் குழப்பம். ரோஜர் மூர் ஆஸ்கர் விருதினை அந்தப் […]
குறுக்கெழுத்து – பழமொழி
குறுக்கெழுத்துப் புதிரில் ஒளிந்திருக்கும் பழமொழிச் சொற்களைக் கண்டுபிடியுங்கள்: இடமிருந்து வலம் 1 அளவுக்கு மிஞ்சினால் இது நஞ்சாகும். (5) 2 அடி உதவுகிற மாதிரி அண்ணனும் இவனும் உதவ மாட்டார்கள். (3) 3 உறவில் கணக்குப் பார்த்தால் _______________ தான் மிஞ்சும் (4) 6 சும்மா இருந்ததை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி. அது என்ன? (3) 7 இப்படி உக்காந்து தின்றால் குன்றும் மாளாதாம். எப்படி? (3) 9 இவன் கணக்கு பார்த்தா உழக்குக் கூட மிஞ்சாதாம். […]