கலாச்சாரம்
கண்ணதாசன்
“அவனது வாழ்க்கை அதிசயமான வேடிக்கை. அவசரத்தில் காரியம் செய்து, சாவகாசத்தில் சங்கடப்படுவது அவனது இயற்கையான சுபாவம். தவறுகளைப் புரிந்து கொண்டே அவற்றை மறந்து நியாயம் கற்பிக்க முயன்றான். அவன் மனம் அழுத பொழுதும் வாய் சிரித்துக் கொண்டிருந்தது. பயனற்ற வேலைகளில் ஆசையோடு ஈடுபட்டுப் பொழுதைச் செலவழித்தான்” கவிஞர் கண்ணதாசனைப் பற்றி, அவரை மிக நெருக்கமாக, நன்றாக அறிந்த ஒருவர் கூறிய வார்த்தைகள் இவை. நாம் கவிஞரைப் பற்றி முதலில் பார்ப்போம். சிறுகூடல்பட்டியில், சாத்தப்பன், விசாலாட்சி தம்பதியருக்கு 1927ஆம் […]
உலகச் செம்மொழி – அத்தியாயம் 12
அத்தியாயம் 11 செல்ல இங்கே சொடுக்கவும் “லாந்து” என்ற வார்த்தையின் பொருள் உலவுதல். ஒரு செயல் நடந்த இடத்தை அந்த செயலோடு தொடர்பு படுத்திச் சொல்வது நம் தமிழ் மரபு. உதாரணமாக போர் நடந்த இடங்களைப் போரூர் என்றும், மன்னர்கள் அல்லது பெரும் வீரர்கள் போர்களில் வீரமரணம் அடைந்த ஊர்களின் பெயரில் “பட்டு”(பட்டுப் போகுதல்) என்ற சொல் இணைந்திருப்பதையும் காணலாம். தாய்லாந்து மக்கள் சுதந்திரமாய் உலவிய இடம் தான் தாய்லாந்து எனப் பெயர் பெற்றிருக்க வேண்டும். […]
யாழ் தமிழ் – சென்னைத் தமிழ் (பாகம் – 2)
ஈழத்திலும் தமிழ் நாட்டிலும் பேசப்படும் மொழி தமிழாக இருப்பினும் இரண்டுக்கும் இடையில் பெரியளவிலான உச்சரிப்பு வேறுபாட்டினை அவதானிக்கலாம். ஈழத்திலும் பிரதேசத்துக்குப் பிரதேசம் இந்த மாறுதல் உள்ளது. அதேபோல் தமிழகத்திலும் உண்டு. ஆனால் ஈழத் தமிழுக்கும் தமிழகத் தமிழுக்கும் இடையில் பல சொற்கள் வேறுபட்டு வழங்கக் காணலாம். எனக்கு நன்கு பரிச்சயமான யாழ்ப்பாணத் தமிழுக்கும், சென்னையில் வசித்த காலத்தில் பேசிய சென்னைத் தமிழுக்கும் இடையிலான சில சொல் வேறுபாடுகளைப் புரிதல் விரும்பி இங்கு பதிவிலிடுகிறேன். ”மொழி என்பது ஒன்றை […]
தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
பத்தும் புகுந்து பிறந்து வளர்ந்து பட்டாடை சுற்றி முத்தும் பவளமும் பூண்டோடி ஆடி முடிந்த பின்பு செத்துக் கிடக்கும் பிணத்தருகே இனிச் சாம் பிணங்கள் கத்தும் கணக்கென்ன காண் கயிலா புரிக் காளத்தியே!!! பொட்டிலடித்தாற் போன்றதொரு தத்துவ விளக்கம் நான்கு வரிகளிலே. செத்துக் கிடக்கும் இன்றைய பிணத்தருகே, நாளை சாகப் போகும் இன்னொரு பிணம் அழுகிறதாம். மனித வாழ்வு நிலையற்றது என்ற தத்துவத்தை இதைவிட அழகாகவும், எளிதாகவும், சுவையுடனும் கூறிய ஒப்புயர்வற்ற தமிழ்க் கவி, சித்தர் பட்டிணத்துப் […]
அமுதூட்டிய அம்மா
மூணு வயசுவர நீதந்த தாய்ப்பாலு
மூளையின் மடிப்பிலே மறைஞ்சே போச்சுதடி ,
முப்பது வருஷம் நீபோட்ட சோறு
மூச்சே நின்னாலும் நினைப்பவிட்டு நீங்காதடி .
அம்பேத்கர்
வரலாற்றை உற்று நோக்கினால், நாட்டுக்காகத் தன்னலமற்று பணியாற்றிய எத்தனையோ தலைவர்கள், வேறுபட்ட கருத்தைக் கொண்டிருந்த ஒரே காரணத்தினால் வெளிச்சத்துக்கு வராமல் போய்விட்டனர். பரந்த சமுதாயப் பார்வையும், மனிதநேயமும், ஆழமான அறிவாற்றலும் கொண்டிருந்த அம்பேத்கரின் நிலையும் அதுதான். இந்திய நாட்டின் அரசியலமைப்புச் சாசனத்தை உருவாக்கியவர் என்ற அளவில் மட்டுமே அறியப்படும் அம்பேத்கரின் பன்முகத் திறன் வியக்கத்தக்கது. மத்தியப்பிரதேச மாநிலம் அம்பாவாதே எனும் ஊரில் 1891ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி, ராம்ஜி சக்பால்-பீமாபாய் ஆகியோருக்கு பதினாலாவது பிள்ளையாகப் […]
வேற்றுமையில் ஒற்றுமை
திருக்குறளின்வழியே “வேற்றுமையில்ஒற்றுமை” “பிறப்பொக்கும்எல்லாஉயிர்க்கும்சிறப்பொவ்வா செய்தொழில்வேற்றுமையான்” ( குறள் 972) திருக்குறள் முன்னுரை: “தித்திக்கும் தெள்ளமுதாய், திகட்டாததேன்கனியாய், எத்திக்கும்நிறைந்திருக்கும் செந்தமிழ் மாங்கனியின் சுவையினைத் தோண்டத் தோண்டச் சுரக்கும் நீரூற்றைப்போல வள்ளுவன் உரைத்த இரண்டடித் திருக்குறளின் சிறப்பினைப்பற்றிச் சிறிது காண்போம். பெருமை: “யாமறிந்தமொழிகளிலேதமிழ்மொழி போல்இனிதாவதுஎங்கும்காணோம்.” -பாரதியார் – தமிழ்மொழியின் சிறப்பினைப் பற்றிக் கூறிட வார்த்தைகள் போதாது, வாழ்ந்து பார்த்தால் தான் உணர்ந்திட முடியும். அத்தகைய வாழ்வினை சிறப்பாக வாழ்ந்திடவும், வாழ்வின் பொருளுணர்ந்து செயல்படவும் வள்ளுவன் தனது நூலில் இயற்றிய குறள் […]
உலகச் செம்மொழி – அத்தியாயம் 11
அத்தியாயம் 10 செல்ல இங்கே சொடுக்கவும் போன அத்தியாயத்தை எழுதி முடித்த பொழுது நான் தாய்லாந்தில் பேசப்படும் “தாய்” மொழி பற்றி பார்க்கலாம் என்று முடித்திருந்தேன். அதை முடிச்சதுக்கு அப்புறம் நான்கு ஐந்து நாட்களுக்கு எனக்கு தூக்கமே வரலை. தாய்லாந்து என்ற வார்த்தையில ஒரு பாதியான ”தாய்” நல்ல தமிழ்ல இருப்பதாகவும் மற்றொரு பாதி லாந்து(land) என்ற வார்த்தை ஆங்கிலத்தில் இருப்பதாகவும் பட்டது. எனக்கு அப்படி இருப்பதற்கான சாத்திய கூறுகள் குறைவு என்று மட்டும் பட்டது. இதுவும் […]
தமிழனென்று சொல்லடா!! தலை நிமிர்ந்து நில்லடா!!!
”கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி..” – தமிழ் மொழி ”கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி..” – தமிழ்க் குடி.. காலங்கலாமாய் பலரும் மேடையேறி முழங்கும் வசனம் இது. கல் மற்றும் மண் தோன்றுவதற்கு முன்னரே தோன்றிய மொழி தமிழ் மொழியாம். உருவகமாய்க் கூறப்பட்ட இதன் அர்த்தம், தமிழ் மொழியும், தமிழ் இனமும் மிகவும் பழமையானது என்பதே. உலகத்தின் தொன்மையான மொழிகளில் ஒன்று என்பதை […]
யாழ் தமிழ் – சென்னைத் தமிழ் (பாகம் – 1)
ஈழத்திலும் தமிழ் நாட்டிலும் பேசப்படும் மொழி தமிழாக இருப்பினும் இரண்டுக்கும் இடையில் பெரியளவிலான உச்சரிப்பு வேறுபாட்டினை அவதானிக்கலாம். ஈழத்திலும் பிரதேசத்துக்குப் பிரதேசம் இந்த மாறுதல் உள்ளது. அதேபோல் தமிழகத்திலும் உண்டு. ஆனால் ஈழத் தமிழுக்கும் தமிழகத் தமிழுக்கும் இடையில் பல சொற்கள் வேறுபட்டு வழங்கக் காணலாம். எனக்கு நன்கு பரிச்சயமான யாழ்ப்பாணத் தமிழுக்கும், சென்னையில் வசித்த காலத்தில் பேசிய சென்னைத் தமிழுக்கும் இடையிலான சில சொல் வேறுபாடுகளைப் புரிதல் விரும்பி இங்கு பதிவிலிடுகிறேன். ”மொழி என்பது ஒன்றை […]