முகவுரை
லக்கிம்பூர் கெரி வன்முறை
உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் அக்டோபர் 3ஆம் தேதி, நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். அகிம்சை, அறவழிப் போராட்டம் போன்றவற்றை உலகுக்கு எடுத்துரைத்த மகாத்மா காந்தியின் பிறந்ததினத்தை முன் தினம் கொண்டாடி விட்டு, மறுதினம் இத்தகைய வன்முறை அரங்கேறியது தேசத்துக்குப் பெருத்தத் தலைகுனிவை ஏற்படுத்திவிட்டது. உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கும் பதில் சொல்ல நாடு கடமைப்பட்டுள்ளது. Infographic vector created by freepik – www.freepik.com இந்தியாவில், […]
அலட்சியம் கூடாது
அமெரிக்காவின் பல மாநிலங்கள், மே மற்றும் ஜூன் மாதங்களில், முகக் கவசம் அணிய வேண்டிய கட்டாயத் தேவையைத் தளர்த்தின. அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு வாரியம் (சி.டி.சி. – CDC), முழுமையாகத் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டவர்கள், பெரும்பாலான பொது இடங்களில், சமூக இடைவெளி, இதர பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைபிடிக்க முடியுமானால், முகக் கவசம் அணியவேண்டிய அவசியமில்லை என்று அறிக்கை வெளியிட்டது. ஆனால் இன்று இந்த நிலை தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. முழுமையாகத் தடுப்பூசி போட்டிருந்தாலும், கோவிட் […]
மீண்டும் சுவாசிக்க முடிகிறதா?
“இன்று நாங்கள் மீண்டும் சுவாசிக்கிறோம். நிறம், இனம் எனும் பாகுபாடுகளைக் கடந்து, கீழே வீழ்த்தப்பட்டு, கால்களுக்கடியில் நசுக்கப்பட்டு, மிதிக்கப்படும் ஓவ்வொருவருக்கும் இந்தத் தீர்ப்பு நம்பிக்கையளித்துள்ளது. ஜார்ஜ், டி-ஷர்ட்களில் பதிக்கப்பட்ட படமாக மட்டுமே இருந்துவிடக்கூடாது என்று ஒவ்வொரு நாளும் வேண்டிக்கொண்டதற்கு விடை கிடைத்துள்ளது. ஜார்ஜின் மரணம் எங்களுக்குப் பெரும் இழப்புதான்; ஆனால் அவர் மாற்றத்திற்கான வரலாற்றில் இடம் பிடித்தது மகிழ்ச்சியளிக்கிறது” – ஃப்ளாயிட் சகோதரர்களின் இந்த வார்த்தைகள், மினியாபொலிஸ் நீதிமன்றத்தின் முன் குழுமியிருந்த கூட்டத்தினரின் ஆரவாரத்தோடு நாடெங்கும் பரவியது, […]
அமெரிக்காவின் புதிய தலைமை
பல மாதங்களுக்குப் பிறகு, பல வழக்குகள், கலவரங்களுக்குப் பிறகு 2020 அதிபர் தேர்தல் முடிவுக்கு வந்தது. ஐக்கிய அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸும், 2021 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் நாள் பொறுப்பேற்றுக் கொண்டனர். அமெரிக்க அரசியல் வரலாற்றில் அதிக வாக்கு எண்ணிக்கை (81,283,485) பெற்றவர் ஜோ பைடன்; அதிபர் பதவியேற்கும் மிக அதிக வயதுடைய நபர் ஜோ பைடன் – பதவியேற்ற தினத்தன்று அவரின் வயது 78 […]
விடைபெறும் 2020 ஆம் ஆண்டு
2020 ஆம் ஆண்டு முடிவடையப் போகிறது. முட்டி மோதி, தட்டுத் தடுமாறிக் கிட்டத்தட்ட அதனைக் கடந்து விட்டோம் நாம். ஆனால் நிறைய வடுக்கள், வலி, விரக்தி மற்றும் மனச்சோர்வு நம்மை ஆட்கொண்டுவிட்டன. இடையிடையே சின்னச் சின்னச் சந்தோஷங்கள். முந்தைய ஆண்டுகளை விட இந்தாண்டு குடும்பத்தினருடன் கூடுதல் நேரத்தைப் பகிர்ந்துகொண்டு, அவர்களை அதிகமாகப் புரிந்து கொண்டிருக்கிறோம் எனத் தோன்றுகிறது. ஒவ்வொரு ஆண்டு முடியும் தறுவாயில் நடப்பாண்டின் நன்மைகள் – தீமைகள், ஆச்சரியங்கள் – ஏமாற்றங்கள் , ஆக்கங்கள் – […]
விடுமுறைக் காலம் – 2020
“நன்றி நவிலல் நாளில் கடும் துக்கத்தினூடே பலருக்கு நன்றி தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளோம். இந்தப் போரில் எண்ணற்ற இராணுவ, விமான, கப்பற்படை வீரர்களை இழந்துள்ளோம். அவர்களுக்கு நாம் தெரிவிக்கும் தாழ்மையான நன்றி ஆழ்ந்த துக்கத்தைக் கொண்டது. இந்த நவம்பர் 22, 1945 வியாழக் கிழமையை, தேசிய நன்றி தெரிவிக்கும் தினமாக அறிவிக்கிறேன். அந்த நாளில், நம் வீடுகளிலும், நம் வழிபாட்டுத் தலங்களிலும், தனித்தனியாகவும், குழுக்களாகவும், நம்மை ஆசிர்வதிக்கும் சர்வ வல்லமையுள்ள கடவுளுக்கு நம் தாழ்மையான நன்றியைத் தெரிவித்துக் […]
தொழிலாளர் தினம்
“உங்களது பணிநேரம் உங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியை நிரப்புகிறது. வாழ்வில் மகிழ்ச்சியுறும் ஒரே வழி சிறந்த வேலை என்று நீங்கள் நம்புவதைச் செய்வதே ஆகும். அதை வெற்றிகரமாகச் செய்திடும் ஒரே வழி நீங்கள் செய்யும் பணியை நேசிப்பதே ஆகும்.” – ஸ்டீவ் ஜாப்ஸ் உலகின் பெரும்பான்மை நாடுகள் மே மாதம் முதல் தேதியைத் தொழிலாளர் தினமாகக் கொண்டாடி வந்தாலும், அத்தினம் உருவாக முக்கியக் காரணமாகயிருந்த அமெரிக்கா, செப்டம்பர் மாத முதல் திங்கட்கிழமையைத் தொழிலாளர் தினமாக மேற்கொண்டது. 1830 […]
வல்லவன் வாழ்வான்
“முதலில் அமெரிக்கா”! (America First) – அமெரிக்க அதிபர் டானல்ட் ட்ரம்ப் முன்வைத்த தேர்தல் கோஷங்களில் மிகப் பிரபலமான சொற்றொடர் இது. உலக நாடுகளின் வளர்ச்சிப் பரிமாணங்களில் அமெரிக்கா முதலில் நிற்கும் என்ற நோக்கத்தில் அவர் சொல்லி வந்த சொற்றொடர் இன்று மனித குலத்தையே அச்சுறுத்தி வரும் கோவிட்-19 எனும் பெருங்கொள்ளை நோயின் பாதிப்பைப் பொறுத்தவரை சந்தேகத்துக்கு இடமின்றி பலித்துள்ளது. திருவாளர் ட்ரம்பின் சாதனைகளில் இதுவும் ஒன்று என்று கூட சொல்லலாம். உண்மையில் பல நாடுகள் வெளிப்படைத்தன்மையும், […]
வேற்றுமை கடந்த ஒற்றுமை
“இந்திய நாட்டின் அழகே அதன் வேற்றுமையில் ஒற்றுமை என்ற தன்மையில்தான் உள்ளது. ஒற்றுமை எனும் மந்திரத்தைச் சிந்தனையிலும், வெளிப்பாட்டிலும் கொண்டு சென்று முன்னெடுத்துச் செல்ல வேண்டும். ஒருமைப்பாடு என்பதே நமது சிந்தனையின், நடத்தையின், வெளிப்பாட்டின் ஊடகமாக இருக்க வேண்டும். இந்தியா என்பது வேற்றுமைகளால் நிரம்பியது. இதில் பல தரப்பட்ட பிரிவினர்கள், பல தரப்பட்ட மதத்தினர், பல்வேறு மொழிகள், பல்வேறு சாதிகள் என்று பன்முக த்தன்மையுடன் விளங்குகிறது. இப்படி ஏகப்பட்ட வேற்றுமைகள் நாட்டில் உள்ளன, இந்த வேற்றுமைகளே நாட்டின் […]
எட்டாம் ஆண்டில் பனிப்பூக்கள்
இந்தாண்டின் தாய்மொழி தினத்தன்று, பனிப்பூக்கள் சஞ்சிகை எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. வட அமெரிக்காவில், கனேடிய எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு மாநிலம் மினசோட்டா. அமெரிக்க மாநிலங்களில் பரப்பளவில் 12 ஆவது, மக்கட்தொகையில் 21 ஆவது பெரிய மாநிலம். பன்முகக் கலாச்சாரம் கொண்ட மினசோட்டாவில் வாழும் 57 லட்சம் மக்களில், சுமார் 50 ஆயிரம் நபர்கள் இந்தியர்கள்; அதில் தமிழர் ஏறத்தாழ 75௦௦ பேர். பொதுவாக வாசிப்புத்தன்மை அதிகம் கொண்ட மினசோட்டா மக்களிடையே தமிழ்க் கலாச்சாரத்தைப் பகிரும் வகையில் […]