முகவுரை
வாசகர்களுக்கு வணக்கம் !
உங்களனைவரையும் எங்களின் தலையங்கத்தின் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெளியிடப்படும் எங்களின் தலையங்கங்கள் என்பது நீங்களறிந்ததே. அந்த மூன்று மாதங்களில் நடைபெற்ற நாட்டு நடப்புகளில் முக்கியமான சிலவற்றை ஒரு சிறு முத்தாய்ப்பாய் வெளியிடுவது எங்கள் தலையங்கத்தின் நோக்கங்களில் ஒன்று என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். அந்த வகையில், கடந்த மூன்று மாதங்களில் நடைபெற்ற விஷயங்களில் முக்கியமான ஒன்று குறித்துப் பேசலாம். உலக அளவில், எப்பொழுதும் போன்ற நடப்புகளே என்று தைரியமாகச் சொல்லிவிடலாம் என்று தோன்றுகிறது. […]
தலையங்கம்
வாசகர்களுக்கு வணக்கம் ! அக்னிக் குஞ்சொன்று கண்டேன் – அதை அங்கொரு காட்டினில் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு – தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ!!! – மகாகவி சுப்பிரமணிய பாரதி அன்றாட வாழ்வில் நாம் கணக்கற்ற அக்னிக் குஞ்சுகளைச் சந்திக்கின்றோம். எழுத்துத் திறமை, பேச்சுத் திறமை, ஓவியம் வரைதல், கதை சொல்வது, பாட்டுப் பாடுதல், அகழ்வாராய்ச்சி, வரலாற்று உண்மைகளின் தெளிவு, நிகழ்வுகளைத் திறனாய்வு செய்யும் திறமை என ஏதோவொரு துறையைக் கை வந்த […]
தலையங்கம்
வாசகர்களுக்கு வணக்கம் ! அனைவருக்கும் கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துக்களையும், ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்களையும் உரித்தாக்குகிறோம். 2016 ஆம் ஆண்டு விரைவில் முடிவுக்கு வரவிருக்கிறது. இந்த ஆண்டில் பல விஷயங்கள் நடந்து முடிந்துள்ளன. அவற்றுள் சில நன்மை பயக்கும் விஷயங்களாகவும், சில தீமை பயக்கும் விஷயங்களாகவும் நடந்து முடிந்துள்ளன. இந்த ஆண்டின் பெரிய நிகழ்வாக, அமெரிக்க அதிபர் தேர்தலைச் சொல்லலாம். தேர்தல் முடிந்து, வெற்றி பெற்றவரை அறிவித்து அரசாங்கத்தின் அங்கங்களெல்லாம் முடிவு செய்யப்பட்டு வருகின்றன. புதிய அரசாங்கம் […]
வாசகர்களுக்கு வணக்கம் !
இந்த இதழ் வெளிவரும் நாளிலிருந்து கிட்டத்தட்ட ஒரு வாரங்களில், உலக ஜனநாயகத்தில் மிகப்பெரிய ஒன்றான அமெரிக்க நாட்டிற்கான அதிபர் தேர்தல் நடந்து முடிந்திருக்கும். பண்டைய காலத்து குடவோலை முறை தொடங்கி இன்றைய காலத்து நவீன இயந்திரங்களின் உதவியுடன் நடத்தப்படும் தேர்தல்கள் வரை, இவை அனைத்தின் எதிர்பார்ப்புகளும் சாதாரண மனிதர்கள் தங்களுக்குத் தேவையான தலைமையைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்வது என்பதுதான். நாட்டின் பல துறைகளும் நாணயம் குறைந்து விட்டது என்பது உண்மைதான் என்றாலும், இன்றும் சாதாரணக் குடிமக்கள் வாக்களித்து […]
தலையங்கம்
வாசகர்களுக்கு வணக்கம் ! சமீபத்தில் நடந்த இரண்டு நிகழ்வுகளைக் குறித்துத் தலையங்கம் தீட்டலாம் என்பது திட்டம். ஒன்று, தமிழ்த் திரையுலகில் பிரபலமான பாடலாசிரியரான நா. முத்துக்குமாரின் அகால மரணம். இசையால் முழுவதுமாக ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டு, கிட்டத்தட்ட வரிகளே, கவிதைகளே தேவையில்லை என்ற நிலையை அடைந்து விட்டத் தமிழ் திரையிசையுலகில், சமீபக் காலத்தில் தரமான, சுவையான கவிதைகளைத் தந்த மிகச் சிலரில் அவரும் ஒருவர். கருத்துக்கள் செரிந்த பாடல்களாயினும் சரி, காதல் ரசம் சொட்டும் மெல்லிசையாயினும் சரி, சமீபக் காலங்களில் […]
தலையங்கம்
வாசகர்களுக்கு வணக்கம் ! உலகிலேயே மிகவும் பெரியதும், முக்கியமானதுமான ஒரு குடியரசுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவின் நான்கு மாநிலங்களின் சட்டசபைகளுக்கான தேர்தலின் சமீபத்தில் நடந்து முடிந்து முடிவுகளும் அறிவிக்கப்பட்டு, வென்ற கட்சிகள் பதவிப் பிரமாணமும் எடுத்துக் கொண்டன. தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சிகள் சரியானவையா, மக்கள் வேறுமாதிரியாகச் சிந்தித்திருக்க வேண்டுமா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து எழுதுவதற்கு, பனிப்பூக்கள் ஒரு அரசியல் பத்திரிகையன்று. நடந்து முடிந்த இந்த ஜனநாயகத் திருவிழாவில் நம் கண்களுக்குப் பட்ட முக்கியமான சில விஷயங்களை ஒரு தலையங்கமாக […]
தலையங்கம்
வாசகர்களுக்கு வணக்கம். இது தேர்தல்களின் நேரம். அமெரிக்காவில் அதிபருக்கான தேர்தல் களை கட்டத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் சட்ட சபைக்கான தேர்தல் தெருவெங்கும் முழக்கமிடத் தொடங்கியுள்ளது. இரண்டையும் கூர்ந்து கவனிக்கும் நமக்குச் சில விஷயங்கள் தெளிவாக விளங்குகின்றன. எந்த ஊரானாலும், எந்த நாடானாலும் மனிதர்களின் எண்ணங்களுக்கும் செய்கைகளுக்கும் இடையே பல ஒற்றுமைகள் உள்ளன. அரசியல்வாதிகளின் குணங்களிலும் பெருமளவு ஒற்றுமையைக் காண முடிகிறது. பொது வாழ்வில் நாகரிகம் என்பது எல்லா இடங்களிலுமே குறைந்து வருகிறது என்பதும் இன்றைய மேடைப் பேச்சுக்களைப் […]
தலையங்கம்
வாசகர்கள் அனைவருக்கும் பனிப்பூக்களின் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் ! புத்தாண்டில் பலர் பல விதமான தீர்மானங்களைச் செய்திருக்கலாம். அது இன்றிலிருந்து தொடர்ந்து உடற்பயிற்சி செய்வேன் என்பதாக இருக்கலாம். அல்லது ஏதேனும் கெட்ட பழக்கங்கள் இருந்தால் அதனைக் கைவிடுவதாக இருக்கலாம். அது எதுவாக இருப்பினும் அந்தத் தீர்மானத்தை நீங்கள் வாழ்நாள் முழுவதும் உறுதியாகக் கடைபிடித்து மகிழ்ச்சியாக வாழ்வதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டுமென்று இதன்மூலம் வேண்டிக் கொள்கிறோம். 2015 ஆம் வருட சாதனைகள் என்றும், 2016 […]
தலையங்கம்
வாசகர்களுக்கு வணக்கம், சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்றார் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். உலகிலுள்ள அத்தனைக் கலைச் செல்வங்களையும் நம் நாட்டிற்குக் கொண்டுவந்து சேர்க்கச் சென்றிடுவீர் எட்டுத் திக்கும் என்பதே அவரின் அறிவுரை. தமிழர் எட்டுத் திக்கல்ல பதினாறு திக்குகள் என்று கூடச் சொல்லலாம். பல செல்வங்களைச் சேர்த்தோம். கலைச் செல்வங்கள் என்று குறிப்பாகக் கூறமுடியாது. ஆனால் பிறந்த தேசத்திற்குப் பெருமை சேர்த்துள்ளோம் என்றே குறிப்பிட வேண்டும். அதுபோன்ற சாதாரணப் […]
தலையங்கம்
வாசகர்களுக்கு வணக்கம் !! இந்த இதழின் தலையங்கம் எழுதப்படும் இத்தருணம், அறிவியல் மேதை, இந்தியத் திருநாட்டின் முன்னாள் அதிபர், பாரத ரத்னா டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் காலமான செய்தி கிடைக்கப் பெறுகிறோம். வாழ்க்கையின் மிகவும் அடிமட்டத்திலிருந்து, தன் சுய முயற்சி ஒன்றினால் மட்டுமே உலமகே வியக்கும் இடத்தை எட்டிப்பிடித்த மேதாவி அவர் என்பதை நாமனைவருமறிவோம். அவரின் வாழ்க்கையும் வார்த்தைகளும் மனித இனம் முழுவதிற்குமே ஒர் பெரிய வழிகாட்டுதலாக அமையும் என்றால் அதிலேதும் மிகைப்படுத்துதல் இருக்காது என […]