முகவுரை
தலையங்கம்

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயன்றி வேறொன்றறியோம் பராபரமே!! – தாயுமானவர் “மினசோட்டா வாழ்த் தமிழர்களுக்கும் மற்றும் உலகின் அனைத்து மூலைகளிலும் இருந்து எங்களின் இணைய தளத்திற்கு ஆதரவு அளித்து வரும் அனைத்துத் தமிழ் நெஞ்சங்களுக்கும் எங்களின் வணக்கம். ஒரு வழியாகப் பனிக்காலம் முடிந்து, மினசோட்டாவில் வசந்தக் காலம் என்றோ கோடைக் காலம் என்றோ அழைக்க இயலாத ஒரு மாதிரியான குழப்பக் காலத்தில் அடியெடுத்து வைத்துள்ளோம். மனிதர்களைப் போலவே புள்ளினங்களும், புல்லினங்களும் குழப்பமடைந்துள்ளன போலத் தெரிகிறது. வழக்கமாக இந்த நாட்களில் […]
தலையங்கம்

அக்னிக் குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டினில் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு – தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ!!!
-மகாகவி சுப்பிரமணிய பாரதி
அன்றாட வாழ்வில் நாம் கணக்கற்ற அக்னிக் குஞ்சுகளைச் சந்திக்கின்றோம். எழுத்துத் திறமை, பேச்சுத் திறமை, ஓவியம் வரைதல், கதை சொல்லுதல், பாட்டுப் பாடுதல், அகழ்வாராய்ச்சி, வரலாற்று உண்மைகளின் தெளிவு, நிகழ்வுகளைத் திறனாய்தல் என ஏதோவொரு துறையை கை வந்த கலையாகக் கொண்ட அக்னிக் குஞ்சுகள் பல நம்மில், நம் நண்பர் குழாத்தில், நம் ஊரில், நமக்குத் தெரிந்தவர்களின் மத்தியில் என பல பிணைப்புகளிலும் கலந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அந்த அனைத்து அக்னிக் குஞ்சுகளையும் சமுதாயமென்ற காட்டிடை ஒளிரச் செய்யும் பொந்தாக அமைவதே இந்த சஞ்சிகை.
பதிப்புரை

உச்சத்தில் உறைபனிக்குளிர் எம்மை ஊடுருவும் தருணத்திலும் வருகிறது வசந்தகால ஆரம்பங்கள். இதை வரவேற்கின்றன நம்மாநிலத்தில் மலரும் பனிப்பூக்கள். வெண் பனியின் விரிதொடரில் வியப்பான வண்ணங்களில் வளமாக விளைகின்றன ரோக்கஸ் பூக்கள். இதே போன்று தரமான தகவல்களுடன் தங்கள் கைகளில் துளிர்கிறது தமிழ் இதழ் பனிப்பூக்கள்.