தலையங்கம்
‘டிரிக்கிள் டவுன்’ பொருளாதாரம்
உலக நாடுகள் பலவும், தங்களது நில அமைப்பு, வளங்கள், மக்களமைப்பு போன்ற பல காரணிகளை மனதில் கொண்டு தங்களுக்கு தேவையான பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றுகின்றனர். அடிப்படையில் முதலாளித்துவம், சோஷியலிசம், கலப்பு பொருளாதாரம் என மூன்று முக்கிய கோட்பாடுகள் இருந்தாலும், அவற்றை செயல்படுத்துவதில் பல நாடுகள் வெவ்வேறு வழிமுறைகளைக் கையாள்கின்றன. உதாரணமாக முதலாளித்துவ பொருளாதாரக் கோட்பாடு இலாபத்தை இலக்காக வைத்து செயல்படக்கூடிய தனியார் நிறுவனங்களை சுதந்திரத்துடன், எந்தப் பொருளையும், எந்த விலையிலும் விற்க அனுமதிப்பது என்பதாகும். ஆனால் இந்த […]
விளாடிமிர் புடின் – புதிய சாதனை
“நாம் ஒன்றுபட்ட சிறந்த மக்கள்; நாம் ஒருமனதுடன் ஒன்றாக இணைந்து, அனைத்து தடைகளையும் கடந்து, திட்டமிட்டபடி வெற்றி பெறுவோம்” – சமீபத்தில் தனது ஐந்தாவது பதவிக் காலத்தை கிரெம்ளின் மாளிகை பதவியேற்பு விழாவில் தொடங்கிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பேசியதன் ஒரு பகுதி இது. ரஷ்ய முன்னாள் அதிபர் ஸ்டாலினுக்கு பின்னர், நீண்ட காலம் பதவியிலிருக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதன் மூலம் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார் புடின். 1999 ஆம் ஆண்டு, ரஷ்யாவின் செயல் தலைவராக (தற்காலிக அதிபர்) […]
புலரும் புதிய ஆண்டு
மீண்டுமொரு ஆண்டு உருண்டோடிவிட்டது. வேகமாகப் பறந்து, கடந்து போகும் காலத்தின் நிழல் நம் மீது படர்ந்து, மனதில் பல நினைவுகளை விட்டுச் செல்கிறது. பெரும்பாலானவை மெதுவே கலைந்துவிட சில அழுத்தமாகப் பதிந்து வாழ்வின் சுவடுகளாக, அனுபவங்களாக மாறிவிடுகின்றன. கடந்த ஆண்டில் நாம் எல்லோரும் இனிப்பும், கசப்பும் கலந்த பல அனுபவங்களைப் பெற்றிருப்போம். இந்தாண்டும் பலவித சந்தோஷங்களையும், சவால்களையும் நாம் எதிர்கொள்ள வேண்டியிருப்பது இயற்கையின் நியதி. 2023 ஆம் ஆண்டில் கோவிட் பெருந்தொற்றின் தாக்கம் கணிசமாகக் குறைந்தது. இப்பெருந்தொற்றுத் […]
நிரந்தரப் போர் நிறுத்தம் சாத்தியமா?
காஸா பகுதியில், ஏறத்தாழ 14,000 நபர்கள் உயிரிழந்த நிலையில், கத்தார், எகிப்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்தத்திற்கு முனைந்து வருகின்றன. போர் நிறுத்தத்திற்கு உடன்பட இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர், இருதரப்பும் பணயக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளன. கடந்த அக்டோபர் மாதம், காஸாவைக் கட்டுப்படுத்தும் பயங்கரவாத ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேலின் முக்கியமான பகுதிகளில் மிகக் கொடுரமான அதிரடித் தாக்குதலை நிகழ்த்தியது. வான், கடல், மற்றும் தரை வழியாக இஸ்ரேல் நாட்டிற்குள் ஊடுருவிய ராக்கெட்டுகள் மற்றும் […]
உலகளாவிய கொதிநிலை (Global Boiling)
‘புவி வெப்பமயமாதல்’ என்ற சகாப்தம் முடிந்து ‘உலகளாவிய கொதிநிலை’ என்ற சகாப்தம் தொடங்கிவிட்டது என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். இந்தாண்டு ஜூலை மாதம், காலநிலை பதிவுகள் தொடங்கப்பட்ட 1979ஆம் ஆண்டுக்குப் பிறகு, உலகின் வெப்பமான மாதமாகப் பதிவாகும் என்ற அதிர்ச்சித் தகவலையும் பகிர்ந்துள்ளார். காலநிலை மாற்றங்கள், எதிர்பார்த்ததை விட அதி பயங்கர வேகத்தில் நடந்து வருகிறது. ‘தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம்’ (National Oceanic and Atmospheric Administration), […]
புத்தாண்டு சங்கற்பங்கள்
புது ஆண்டு பிறந்துவிட்டது. தனிமனித அபிலாஷைகள், கனவுகள் நிறைவேறக் காத்திராமல் காலம் நகர்ந்து செல்கிறது. அடுத்து என்ன வரப்போகிறது என்பதை யாராலும் கணிக்க முடியாது. ஒவ்வொரு புத்தாண்டு துவக்கத்திலும் அறியாத எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கத் தொடங்குகிறோம். புதிய ஆண்டு எல்லா வளங்களையும், நலத்தையும் நல்கும் என்ற நம்பிக்கையோடு அடியெடுத்து வைக்கிறோம். முந்தைய இரண்டாண்டுகளை விட 2022 மேலானதாகயிருந்தது என கருதினாலும், உலக அமைதி, பொருளாதாரம், சூழலியல் கோணங்களில், கடந்தாண்டு சிக்கலானதாகவேயிருந்தது. புத்தாண்டில், பெருந்தொற்றின் பதட்டம் சற்றே தனிந்துள்ள […]
விழிப்புறுவோம்
அமெரிக்கப் பிரதேசங்களில் இலையுதிர் காலத்துக்கான ஆயத்தங்கள் தொடங்கிவிட்டன. செப்டம்பர் முதல் வாரத்தில் பள்ளி, கல்லூரிகள் திறந்து சாலைகளில் பள்ளிச் சிறுவர்கள், பள்ளிப் பேருந்துகளைப் பார்க்க முடிகிறது; கடைகளில் ஆரஞ்சு நிற சட்டைகள், அலங்காரப் பொருட்கள், பரங்கிக்காய், ஹாலோவீன் சமாச்சாரங்கள் அடுக்கப்பட்டு கட்டியம் கூறி வரவேற்கின்றன; நீண்ட பயணத்துக்குத் தயாராகும் பெருந்தாரா வாத்துகள் (Geese) கூட்டமாகப் பயிற்சியெடுத்து வருகின்றன; வீட்டின் பின்கட்டில் அணில்கள் சுறுசுறுப்புடன் குளிர்காலத்துக்குத் தேவையான உணவுகளைச் சேகரிப்பதில் மும்முரமாகவுள்ளன; பகல்நேரம் சுருங்கி, சில்லென்ற காற்றுடன் இருளின் ஆட்சி மேலோங்கி […]
உலகின் அவசர, அத்தியாவசிய தேவைகள்
புதிய ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். சமீப ஆண்டுகளைப் போல 2022 ஆம் ஆண்டும் கேள்விக்குறியாகவே தெரிகிறது. கோவிட்டின் திரிபுகள், ஜனநாயகத்துக்கும் சர்வாதிகாரத்துக்கும் இடையிலான போராட்டம், நாட்டுக்குள்ளும் நாடுகளுக்கிடையுமான பயங்கரவாதம், மனிதாபிமான நெருக்கடிகள், உலகப் பருவ நிலை மாற்றம், இயற்கை சீற்றங்கள் என எண்ணற்ற சவால்கள் எதிரே நிற்கின்றன. துரதிர்ஷ்டவசமாக அவை தானாக மறைந்துபோகும் சவால்கள் அல்ல. கொரோனா தொற்றால் பல இலட்சம் உயிர்களை இழந்துவிட்டோம்; மேலும் இழந்து வருகிறோம். . அதன் நீட்சியாக வறுமை, பஞ்சம், […]
பெருகும் பாலியல் கொடூரங்கள்
“என்றைய தினம் நடு இரவில் பெண்கள் நகை அணிந்து தனியாகச் செல்ல முடிகின்றதோ அன்றுதான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக உணரப்படும்”. பெண்கள், ஆண்கள் விரும்புவதைச் செய்யும் அடிமைத்தன எண்ணங்களை விடுத்து, ஆண்களுக்குச் சமமான கல்வி, சமூக அந்தஸ்துப் பெற வேண்டும் என விரும்பினார் காந்தி. தன்னைச் சந்திக்க வரும் தலைவர்களிடம் கூட அவரவர் மனைவியரை, அரசியலில் ஈடுபட அழைத்து வருமாறு வற்புறுத்தினார் அவர். பெண்கள் தங்களின் அடிமைச் சங்கிலிகளை அணிகலன்களாகத் தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அது […]
லக்கிம்பூர் கெரி வன்முறை
உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் அக்டோபர் 3ஆம் தேதி, நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். அகிம்சை, அறவழிப் போராட்டம் போன்றவற்றை உலகுக்கு எடுத்துரைத்த மகாத்மா காந்தியின் பிறந்ததினத்தை முன் தினம் கொண்டாடி விட்டு, மறுதினம் இத்தகைய வன்முறை அரங்கேறியது தேசத்துக்குப் பெருத்தத் தலைகுனிவை ஏற்படுத்திவிட்டது. உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கும் பதில் சொல்ல நாடு கடமைப்பட்டுள்ளது. Infographic vector created by freepik – www.freepik.com இந்தியாவில், […]