தலையங்கம்
உலகம் ஒளி பெறட்டும்
உலக நாடுகள் பலவும் கிறிஸ்துமஸ், ஹனுக்கா, பொங்கல், சங்கராந்தி, மஹாயனா என வெவ்வேறு நம்பிக்கைகள் பேரில் விழாக்காலக் கொண்டாட்டங்களை எதிர்நோக்கியுள்ளன. மத விழாக்களைக் கடந்து வெவ்வேறு கலாச்சாரங்கள் பின்பற்றும் புத்தாண்டுகள் கொண்டுவரப்போவதை எண்ணி ஆவலுடன் காத்திருக்கும் மனங்கள் ஏராளம். காலச்சுழற்சியின் வேகம் ஏகப்பட்ட மாற்றங்களைக் கொண்டுவருகிறது. தனிப்பட்ட முறையிலும், சமூக நிலையிலும் பல ஏற்றத்தாழ்வுகளைக் கண்டு, கடந்து வந்துள்ளோம். இது போன்ற விழாக்களின் முதன்மை நோக்கம் மகிழ்வான கொண்டாட்டங்கள் மட்டுமல்ல. சக மனிதர்களைப் பாராட்டி, சுக துக்கங்களைப் […]
தள்ளாடும் சூழலியல்
வட அமெரிக்காவில் அதிகாரப்பூர்வமாகக் கோடைக்காலம் முடியவுள்ளது. மரங்கள், செடி கொடிகளின் இலைகள் வேனிற்காலத்திலும், கோடையிலும் சூரியச் சக்தி மூலம் பெற்று வந்த பச்சை நிறமிகள் (pigments) குறைந்துவிட்டதால் மஞ்சள், சிகப்பு, பழுப்பு என நிறம் மாறி வருகின்றன. பறவைகள் இதமான சூழலைத் தேடி தென் மாநிலங்களுக்கு இடம்பெயரத் தயாராகிவிட்டன. காலத்துடன் இயைந்து செயல்படும் இயற்கை அபூர்வமானது; அழகானது; அபாரச் சக்தி கொண்டது. “இயற்கை ஒவ்வொரு மனிதனின் தேவைகளையும் தீர்த்து வைக்கிறது; அவர்களின் பேராசையை அல்ல” (Earth provides […]
தீவிரவாதத்துக்கு தீர்வு?
உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தபின், ஓரளவுக்கு அமைதி நிலவிய இலங்கையில் ஏப்ரல் மாதம் 21ஆம் நாள், ஈஸ்டர் தினத்தன்றும் அதன் பின்னரும் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள், உலகமே மனிதர் வாழத் தகுதியற்ற இடமாக மாறி வருவதை உணர்த்துகிறது. இயேசு உயிர்த்தெழுந்த தினத்தில் நாடெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும் தவழ்ந்து, மக்கள் சுபிட்சமாக வாழ்ந்திட வேண்டுமெனப் பிரார்த்திக்க தேவாலயம் சென்ற பலர் உயிரிழந்துவிட்டனர். ஆண்டவர் நம்மைக் காப்பார் என்று வேண்டிக் கொண்டிருந்தவர்களின் உதிரச் சிதறல், அந்த ஆண்டவரின் சிலையில் […]
சாத்தான்கள்
விலங்கிலிருந்து படிப்படியாகப் பரிணாம வளர்ச்சிப் பெற்று உருவான மனிதன், இதற்கு மேலும் வளர முடியாத நிலையெய்தி மீண்டும் பின்னோக்கிச் செல்கிறானோ என்ற சந்தேகத்தை எழுப்புகின்றன அண்மைக்கால செய்திகளும் நிகழ்வுகளும். தமிழகத்தின் பொள்ளாச்சியில் நடைபெற்று வந்த பாலியல் வன்கொடுமை பற்றிய செய்திகளும், காணொளிகளும் நாட்டையே அதிர்ச்சியடைய வைத்துள்ளன. பெண்களை ஏமாற்றி, அச்சுறுத்தி, சதையின்பம் தேடிய கொடூர ஜந்துக்கள் இருக்கும் சமூகத்திலா நாமிருக்கிறோம் என்ற குற்றவுணர்வு எம்மை வருத்துகிறது. பல ஆண்டுகளாகத் தொடர்ந்த இந்த அட்டூழியம் சமீபத்தில் வெளியாகியுள்ளது, அவ்வப்போது […]
இந்திய நாட்டின் கறுப்புத் தினம்
நாடு முழுதும் அன்பைப் பரிமாறிக் கொண்டிருந்த வேளையில், ஜம்மு காஷ்மீரில், புல்வாமா மாவட்டப்பகுதியில் பயங்கரவாத இயக்கத்தைச் சார்ந்தவர்கள் நடத்திய தாக்குதலில், மத்திய ஆயுதக்காவல் படையைச் சேர்ந்த நாற்பத்தி நான்கு ராணுவ ஜவான்கள் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமுற்றுள்ளனர். நாட்டில் சட்ட ஒழுங்கை நிலை நிறுத்துவதும், தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதும், போர் கால ஆக்கிரமிப்புகளை தடுத்து முறியடிப்பதும் இப்படையினரின் முதன்மை குறிக்கோள். போர் முறைகளையும், அறங்களையும் முழுக்க அறிந்து பயிற்சி பெற்ற வீரர்கள் இவர்கள். இவர்களின் வீரத்துக்கு முன், நேர் நின்று […]
அரசுத் துறைகளின் பணி முடக்கம்
அமெரிக்க அரசாங்கத் துறைகளில் சில, கடந்த 29 நாட்களாக, பணி முடக்கத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. ஏறத்தாழ எட்டு லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் தங்களது இரண்டாவது சம்பளத்தைத் தவறவிட்டுள்ளார்கள். இவர்களில் மிக அத்தியாவசியமில்லாத துறைகளில் பணி புரியும் நான்கு லட்சம் பேர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர். பாதுகாப்பு, கல்வி, சட்ட ஒழுங்கு போன்ற அத்தியாவசியத் துறைகளிலும் பணிகள் மந்தமடைந்துள்ளன. பொதுவாக, வரப்போகும் ஆண்டுக்கான வரவு செலவுகள் கணக்கிடப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கீடு செப்டம்பர் இறுதியில், இரு அவைகளின் ஒப்புதலுடன் […]
வணக்கம்!
2018 ஆம் ஆண்டின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கிறோம். மகிழ்ச்சியான ஆண்டு முடியப்போகிறதே என்ற வருத்தத்தில் சிலரும், வருத்தங்கள் நிறைந்த இந்த ஆண்டு ஒரு வழியாக முடிகிறது என்ற மகிழ்ச்சியில சிலரும் இருக்கக்கூடும். வரப்போகும் ஆண்டைப் பற்றிய கனவுகள் எல்லோர் மனதிலும் தொக்கி நிற்கும். தேவையில்லாத பழக்கத்தை விடவேண்டும்; உடல் நலம் பேணவேண்டும்; குடும்ப நலனில் அக்கறை செலுத்த வேண்டும்; திருமணம் செய்ய வேண்டும்; புதிய பொருட்கள் வாங்கவேண்டும்; வீடு கட்ட வேண்டும்; வெளிநாடு சுற்றுலா போகவேண்டும்; இப்படி எண்ணிலடங்கா […]
வாசகர்களுக்கு வணக்கம்!
நீண்ட நாட்களாக வாசகர்களைத் தலையங்கத்தின் மூலம் சந்திக்க இயலாததற்கு வருத்தம் தெரிவிக்கிறோம். மினசோட்டா வாசகர்கள் கோடையை மகிழ்ச்சியாக அனுபவித்துக் கொண்டிருப்பர் என நம்புகிறோம். இந்தியா, இலங்கை மற்றும் கிழக்காசிய நாடுகளில் வெயிலின் உக்கிரம் அதிகமான காலமிது என்று நினைக்கிறோம். மனிதன் பொதுவாகவே எந்தவொரு தட்பவெப்ப நிலையிலும் ஏதோ ஒன்றைக் குறையாக நினைத்து வாழ்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளான் என்று தோன்றுகிறது. எந்தத் தட்ப வெப்பமாயினும் அதற்கேற்ப தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளும் எவரும், தட்ப வெட்பம் குறித்துக் கவலையுற மாட்டார்கள் […]
வாசகர்களுக்கு வணக்கம் !
அனைவருக்கும் பனிப்பூக்களின் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 2017 ஆம் ஆண்டு இப்பொழுதுதான் தொடங்கியது போல் இருந்தது. தொடங்கிய சுவடு தெரியாமல், வருடம் முடிவுக்கு வந்து விட்டது. நாமும் இதேபோல் ஒவ்வொரு வருடப் பிறப்பிலும் சொல்லிக் கொண்டு, மறு நாளே அந்த நினைவுகளைக் கைவிட்டு நம் வேலைகளைத் தொடர்கிறோம். இதேபோல் ஒரு நாள், நாம் வேண்டினாலும் வேண்டா விட்டாலும், இந்நிலவுலகு நீத்துப் போகவும் போகிறோம். இதுவே நிதர்சனம். எண்ணற்ற அறிவியல் கண்டுபிடிப்புகளை மனித குலம் செய்திருந்தாலும், பிறப்பு இறப்பை […]
வாசகர்களுக்கு வணக்கம் !
உங்களனைவரையும் இந்தத் தலையங்கத்தின் மூலம் மறுபடியும் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம். மூன்று மாதத்திற்கு ஒருமுறை, தப்பாமல் தட்ப வெப்ப நிலை மாறுவது இயற்கையாய் நடக்கும் ஒன்றே. அதேபோல, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பனிப்பூக்களில் எங்களின் தலையங்கங்கள் வெளியிடப்படுவதும் தவறாமல் நிகழ்கிறது. வீட்டின் வெளி முற்றத்தில் அமர்ந்து இயற்கையில் எழிலைப் பார்த்துக் கொண்டிருக்கையில் எழும் எண்ண ஓட்டங்கள் அற்புதமானவை. இயற்கைக்குத்தான் எவ்வளவு திறமை? பூமிப் பந்து உருளுவதற்கு ஒப்ப, உலகின் பல பகுதிகளையும் பல்வேறு சீதோஷண நிலையில் வைத்திருக்கும் […]