தலையங்கம்
தலையங்கம்
வாசகப் பெருமக்களுக்கு அன்பான வணக்கங்கள் ! நம்மில் பலர் – குறிப்பாக கீழை நாடுகளில் – உழைக்கும் தோழர்களை இன்றும் பெருமளவில் சமமாக நடத்துவது இல்லையென்பதே கசப்பான உண்மை. பொதுவாக, நன்கு படித்து உலகம் “ஒய்ட் காலர்ட்” (White Collared) என்று குறிப்பிடும் மேல்தட்டு வேலைகளில் இருப்பவர்கள் உயர்வு என்றும், படிப்பறிவு தவிர்த்து உடலுழைப்பை முன்னிறுத்தி வாழ்க்கை நடத்தி “ப்ளூ காலர்ட்” (Blue Collared) என்று குறிப்பிடப்படும் தொழில்கள் புரியும் உழைப்பாளிகளைச் சற்றுத் தாழ்வு என்றும் கருதுவதே […]
தலையங்கம்
பேரன்புடையீர் வணக்கம். மார்ச் 2015 க்கான இணைய தள இதழ் உங்களின் கணினியில் தவழ்ந்து கொண்டிருக்கும் நேரமிது. இந்த நல்ல நேரத்தில் எங்களின் மைல் கல் குறித்த செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் பெருமையடைகிறோம். சென்ற ஃபிப்ரவரித் திங்கள் 21 ஆம் திகதியன்று எங்கள் பனிப்பூக்கள் இதழின் இரண்டாமாண்டு பிறந்த தினம். சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் இதனைத் தொடங்குகையில் எங்கள் குழுவுக்கு இருந்த பதைபதைப்பு இன்றும் அடங்கியபாடில்லை. ஒவ்வொரு மாதமும் இணைய தள வெளியீட்டு தினத்தையும், அச்சுப்பிரதி […]
தலையங்கம்
வாசகர்களுக்கு வணக்கம். சென்ற மாதம் உலகத் தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டதைப் பற்றிப் படித்திருப்பீர்கள், பார்த்திருப்பீர்கள். பல செழிப்பு மிக்க மொழிகள் அதிகார பலம் பொருந்திய சில மொழிகளால் தொடர்ந்து வழக்கொழிக்கப்பட்டு வருவதை உணர்ந்த நல்லவர்கள் சிலரின் முயற்சியால் யுனெஸ்கோ நிறுவனத்தால் தொடங்கப்பட்ட தினம் தான் இந்த உலகத்தாய் மொழி தினம். ஒவ்வொரு வருடமும் ஃபிப்ரவரி மாதம் 21ஆம் திகதி உலகத் தாய்மொழி தினமாகக் கொண்டாடப்படுகிறது. காலங்காட்டியில் ஒரு திகதியை எடுத்துக் கொண்டு அதனை ஒரு குறிப்பிட்ட தினமாக […]
வாசகர்களுக்கு வணக்கம்
வாசகர்களுக்கு வணக்கம் மற்றும் 2015 ஆம் ஆண்டின் புத்தாண்டு வாழ்த்துக்கள் !! உலகெங்கும் உள்ள தமிழர்கள் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி முடித்து சில தினங்களே ஆகியுள்ள நிலையில், வாசகர்கள் அனைவருக்கும் பனிப்பூக்களின் உளங்கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் – மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர். என்ற பொய்யாமொழிப் புலவனின் கூற்றுக்கொப்ப, விவசாயமே எல்லாச் சமூகங்களின் முதுமெலும்பான துறையாக இருந்து வந்துள்ளது. கடவுள் என்னும் முதலாளி நேரடியாகக் கண்டெடுத்த தொழிலாளி விவசாயி மட்டுமே […]
தலையங்கம்
வாசகர்களுக்கு வணக்கம். மினசோட்டாவில் கோடைக் காலம் கிட்டத்தட்ட முடியும் தருவாயை எட்டிக் கொண்டிருக்கிறது. இப்பொழுதுதான் துவங்கியது போலிருந்த கோடைக் காலம், கண் சிமிட்டி முடிப்பதற்குள் முடிவடையும் நிலையை எட்டிவிட்டதாய் அனைவரும் உணர்கின்றோம். வாழ்க்கைச் சக்கரம் மிக வேகமாக உருண்டோடிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்த்துவதாகவே இது அமைகிறது. பொய்யாமொழிப் புலவன் கூறியது இதுவே; நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும் வாள துணர்வார்ப் பெறின். கண்ணுக்குத் தெரியாத காலம் என்பது ஒரு நாள் போலக் காட்டி உயிரினை அறுக்கும் வாளாகும், […]
தலையங்கம்
வாசகர்களுக்கு வணக்கம். நீங்கள் அனைவரும் எங்களின் அடுத்த வெளியீட்டிற்காகக் காத்துக் கொண்டிருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் மே மாத இதழை வெளியிடுகிறோம். இந்த மாதம் முதல் எங்களின் வெளியீட்டுத் திகதிகளைச் சற்று மாற்றி அமைக்கலாமெனத் திட்டமிட்டுள்ளோம். இதுவரை ஒவ்வொரு மாதமும் – நாங்கள் தொடங்கிய திகதியான – இருபத்தி ஒன்றாம் திகதி அன்று வெளியிட்டுக் கொண்டிருந்தோம். இந்த இதழ் முதல், ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக் கிழமை மத்தியத் திட்ட நேரப்படி (Central Standard Time) இரவு நேரத்தில் […]
தலையங்கம்
வாசகர்களுக்கு வணக்கம். பனிப்பூக்கள் ஆசிரியர் குழு சார்பாக வாசகர்கள் அனைவருக்கும் எங்களின் இதயங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு, மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்கள். இந்த ஆண்டில் தங்களின் வாழ்வு மேலும் ஒளிமயமானதாக ஆக எங்களின் இதய பூர்வமான வாழ்த்துக்கள். மினசோட்டாவில் வாழ்பவர்கள் கடந்த சில வாரங்களாக உதிரத்தை உருக்கும் குளிரை அனுபவித்து வருகின்றனர். அண்மையில் ஒரு நாள் தட்பம் பூஜ்யத்திற்கு நாற்பது அலகு குறைவான (Minus Forty Degree Fahrenheit) நிலையை அடைந்தது. மினசோட்டா மாகாணத்தின் வட எல்லையிலுள்ள […]
தலையங்கம்
சரியாக நூற்றி நாற்பத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் உலகின் மொத்த நம்பிக்கைகளையும், கலாச்சாரத்தையும் வழி நடத்த ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒளி ஒன்று பிறந்தது. அதன் பெயர் மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி. அஹிம்சையின் பலம் என்னவென்பதை உலகம் முழுதும் உணர்த்திய மகா சக்தி அது.
தலையங்கம்
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயன்றி வேறொன்றறியோம் பராபரமே!! – தாயுமானவர் “மினசோட்டா வாழ்த் தமிழர்களுக்கும் மற்றும் உலகின் அனைத்து மூலைகளிலும் இருந்து எங்களின் இணைய தளத்திற்கு ஆதரவு அளித்து வரும் அனைத்துத் தமிழ் நெஞ்சங்களுக்கும் எங்களின் வணக்கம். ஒரு வழியாகப் பனிக்காலம் முடிந்து, மினசோட்டாவில் வசந்தக் காலம் என்றோ கோடைக் காலம் என்றோ அழைக்க இயலாத ஒரு மாதிரியான குழப்பக் காலத்தில் அடியெடுத்து வைத்துள்ளோம். மனிதர்களைப் போலவே புள்ளினங்களும், புல்லினங்களும் குழப்பமடைந்துள்ளன போலத் தெரிகிறது. வழக்கமாக இந்த நாட்களில் […]
தலையங்கம்
அக்னிக் குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டினில் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு – தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ!!!
-மகாகவி சுப்பிரமணிய பாரதி
அன்றாட வாழ்வில் நாம் கணக்கற்ற அக்னிக் குஞ்சுகளைச் சந்திக்கின்றோம். எழுத்துத் திறமை, பேச்சுத் திறமை, ஓவியம் வரைதல், கதை சொல்லுதல், பாட்டுப் பாடுதல், அகழ்வாராய்ச்சி, வரலாற்று உண்மைகளின் தெளிவு, நிகழ்வுகளைத் திறனாய்தல் என ஏதோவொரு துறையை கை வந்த கலையாகக் கொண்ட அக்னிக் குஞ்சுகள் பல நம்மில், நம் நண்பர் குழாத்தில், நம் ஊரில், நமக்குத் தெரிந்தவர்களின் மத்தியில் என பல பிணைப்புகளிலும் கலந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அந்த அனைத்து அக்னிக் குஞ்சுகளையும் சமுதாயமென்ற காட்டிடை ஒளிரச் செய்யும் பொந்தாக அமைவதே இந்த சஞ்சிகை.