ஆன்மிகம்
மினசோட்டா மலையாளி சங்கத்தின் கிறிஸ்துமஸ் விழா 2024
மினசோட்டா மலையாளி அமைப்பு (Minnesota Malayalee Association) ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் விழாவை மிகவும் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றது. இந்தாண்டு டிசம்பர் 7ஆம் தேதி அன்று மினசோட்டா, புளூமிங்டன் நகரில் அமைந்துள்ள ஆல்சன் நடுநிலை பள்ளியில் (Olson Middle School, Bloomington, MN) கிறிஸ்துமஸ் விழாவை நடத்தியிருந்தார்கள் அவர்கள். மினசோட்டாவில் உள்ள கேரள மக்களும், இன்னும் பலரும் இந்த விழாவில் பங்கேற்றனர். மதிய உணவுடன் ஆரம்பித்த விழாவில், பல விதமான கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. சுமார் மூன்று […]
கிறிஸ்துமஸ் – கிறிஸ்து பிறப்பு – ஓர் எதார்த்த தேடல்
அனைவருக்கும் அன்பும், அமைதியும், சமாதானமும் நிறைந்த இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்…! ஊரெங்கும்… நகரெங்கும்…உலகெங்கும்… என எங்கு நோக்கினும் மாடிடைக் குடில்கள்; இறைமைந்தனை புகழ்ந்தேத்தும் மெல்லிசை பாடல்கள்… குடிசை குப்பங்கள் முதல் அடுக்குமாடி குடியிருப்புகள், வியாபார கோபுரங்கள் வரை எங்கு பார்த்தாலும் பளபளக்கும் மின்விளக்குகள், மினுக்கும் தோரணங்கள். இவை எல்லாம் கிறிஸ்து பிறப்பைப் பரபரப்பாக வரவேற்க இயங்கிக் கொண்டிருக்கும் தருணத்தில்……. என்னுள் சிதறி எழும் எண்ணங்கள்…! ஒருபுறம் குதூகலத்தையும், மறுபுறம் வேறுபட்ட தாக்கங்களையும் எற்படுத்துவதை தவிர்க்க முயலாது பகிர […]
விநாயகர் சதுர்த்தி | உரையாடல்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் குறித்தும், பண்டிகை குறித்தும் திரு. மதுசூதனன், திரு. சரவணகுமரன் அவர்கள் உரையாடிய பாகம்.
அமெரிக்க கொலு 2022
இந்தியாவில் இருந்து பல ஆயிரம் மைல்கள் தள்ளி இருந்தாலும், நமது கலாச்சாரம் நம்முடன் இன்றும் நெருக்கமாகத் தான் இருக்கிறது. கொரோனா என்ற காலகட்டத்தைத் தாண்டி இப்பொழுது வழக்கமான வாழ்க்கைக்கு வந்து கொண்டிருக்கையில், நவராத்திரி கொலு இந்த ஆண்டு மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கொலு வைக்கும் வழக்கம் உள்ள குடும்பத்தினர், அந்த வழக்கத்தைக் கைவிடாமல் மினசோட்டாவிலும் மற்ற வட அமெரிக்க மாநிலங்களிலும் உள்ள குடும்பத்தினர், நண்பர்களுடன் இணைந்து கொலு வைத்து நவராத்திரியைக் கொண்டாடினர். தங்கள் வீட்டு கொலு பொம்மைகளின் […]
மார்கழி மாதங்களில் திருப்பாவை
இறை வழிபாட்டில் ஒவ்வொரு மதத்திலும் பல வகைகள் இருப்பினும், பக்தியில் உருகி பாக்கள் பாடி, இறை வழிபாடு செய்வது அனைத்து மதங்களுக்கும் பொதுவான ஒன்று. சங்க இலக்கியத்தில் பெருமளவு பக்தி இலக்கிய நூல்கள் உள்ளன. வேறு எம்மொழியிலும். தமிழ் மொழியில் தோன்றிய அளவு பக்தி இலக்கிய நூல்கள் தோன்றவில்லை. பக்தி இலக்கிய நூல்களில் நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்கள் மிக முக்கியமானவை. பன்னிரு ஆழ்வார்களில் “ஒரு பெண்ணின் தமிழ்” என்று அழைக்கப்பட்ட திருப்பாவை எழுதிய ஆண்டாள் பல […]
பக்ரீத்
ஏக இறைவனின் திருப்பெயரால், முஸ்லீம்கள் உலகளவில் ஆண்டுதோறும் இரண்டு பண்டிகைகளைக் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர். ஒன்று, இறை வேதமாகிய திருக்குரான் மனிதர்களுக்கு அருளப்பட்டதைக் கொண்டாடும் ஈகைத் திருநாளான “ரமலான்”. மற்றொன்று தியாகத் திருநாளான “பக்ரீத்” பண்டிகை. இந்தக் கட்டுரையில் பக்ரீத் பண்டிகையைப் பற்றிச் சுருக்கமாகப் பார்ப்போம். பக்ரீத் பண்டிகை பன்னிரண்டாவது இஸ்லாமிய மாதமான “துல்-ஹிஜ்ஜாஹ்”வின் பத்தாவது நாள் ஆண்டுதோறும் முஸ்லிம்களால் கொண்டாடப்படுகின்றது. இந்த நாளை “ஹஜ்” பெருநாள் என்றும் கூறுவார்கள். “ஈத் உல் அத்ஹா” என்று அரபி மொழியிலும் […]
கடவுளைக் காண்பீர்!
பொன் கொண்டோர், பொருள் கொண்டோர், மண், மாளிகை கொண்டோர், பூமியை ஆண்டோரையும் கண்டீர்! பூவையர் மனம் வென்றோரைக் கண்டீரோ? மங்கையரின்றி ஒரு மார்க்கம் உண்டோ – இந்த மானிட உலகில்? அன்பைப் பொழியும் தாயாக, காதலால் கசிந்துருகும் தாரமாக, சோதனையில் தோள்தாங்கும் உற்ற சகோதரியாக, தாயோ தந்தையோ மூப்படைந்ததும் மடிதாங்கும் சேயாக … பெண்ணைக் கண்டோர் உண்டிங்கு! ஆனால், சமூகப் பாகுபாடின்றி, கருணையே வடிவாக மானிட உயிரைக் காத்திட அச்சமின்றி, அருவெறுப்பின்றி அன்போடு அரவணைக்கும் […]
ரமலான் பண்டிகை குறித்து திரு. இம்ரான்
ரமலான் பண்டிகை குறித்து திரு. இம்ரான் உரையாடியவர் – சரவணகுமரன்.
கபீர்தாஸ்
இந்தி இலக்கிய உலகினை ஆதிகாலம் (1050-1375), பக்தி காலம் (1375-1700), ரீதி காலம் (1700-1900), தற்காலம் (1900 முதல் இன்றுவரை) எனப் பகுத்துள்ளனர். பக்தி காலத்தில் இடம் பெறுபவர் கபீர்தாஸ். நிர்குண பக்தி, சகுண பக்தி எனும் பக்தியின் இரு நெறிகளில் நிர்குணத்தைச் சார்ந்தவர் கபீர். நிர்குண பக்தர்கள் ஞானிகள் ஆவர். இவர்களின் பக்தி நெறியில் வணங்கப்படும் இறைவனுக்குப் பெயர், உருவம், நிறம், குலம் ஏதும் கிடையாது. எங்கும் நிறைந்தவன்; உருவமில்லாதவன், சாதி, மத வேறுபாடின்றி இருப்பவன் […]
உண்மையான அன்பின் வல்லமை
இந்த உலகம் அன்பால் இணைக்கப்பட்டது. அதில் உள்ள அனைத்து உயிர்களும் அன்புக்காக ஏங்குகின்றன. அன்பின் அடிப்படையில் உருவாகுவதுதான் திருமணம். அந்த திருமணம் வெற்றிபெற முதன்மையான காரணம் கடவுளின் அன்பும், மற்றும் கணவன் மனைவியிடையே உள்ள அன்பு கலந்த உறவும்தான். எந்த ஒரு நபரும் கடவுளின் விருப்பப்படி நடப்பதன் மூலமாகவே கடவுளின் அன்பைப் பெறுகிறார். அதேபோல குடும்பத்தில் தம்பதியர்கள் கடவுளை முழுமனதோடு நேசிக்கும்போது, அவர்கள் மிகவும் ஆசிர்வதிக்கப்படுவார்கள். அவர்களின் திருமணபந்தத்தில், அவர்கள் கடவுளின் மேல் கொண்டுள்ள அன்பினாலும், பக்தியினாலும் […]