ஆன்மிகம்
கடவுளின் எல்லையற்ற அன்பு
கடவுள் நம்மேல் அன்பும் இரக்கமும் நிறைந்தவர். அன்பு என்பது கடவுளின் குணமாகும், கடவுள் தன் அன்பைத் தம்முடைய படைப்புகளோடு எப்போதும் பகிர்ந்து கொள்கிறார். மனித குலத்திற்கான அவரது அன்பு அவரது படைப்புகளில் வெளிப்படுகிறது. கடவுள் ஆணும், பெண்ணுமாக மனிதரை உருவாக்கினார். மனிதர்கள் பழுகிப் பெருகவும் செய்தார். தன் சாயலாக எண்ணற்ற நல்ல ஆத்மாக்களைப் பெருகச் செய்து, அவர்களைப் பரலோக ராஜ்யத்தில் சேர்த்தார். மனிதனைப் படைப்பதற்கு முன் கடவுள் மனிதனுடைய தேவைகளை அறிந்திருந்து […]
சின்மய மிஷனீன் வண்ண கொண்டாட்டம் 2018
ட்வின் சிட்டிஸில் உள்ள சின்மய மிஷன் சார்பில் வண்ண (ஹோலி) கொண்டாட்டம் 2018 வூட்புரி நகரில் மார்ச் 3ம் தேதி கொண்டப்பட்டது. ட்வின் சிட்டிஸில் உள்ள இந்திய குடும்பம் மற்றும் உள்ளூர் பக்தர்கள் கலந்து கொண்டார்கள். அரங்கில் சிறிய கடைகள் அமைத்து உணவு, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அமைப்பை ஏற்பாடு செய்து இருந்தனர். குழந்தைகளுடைய பத்திப் பாடல்களுடன் ஆரம்பித்து பலவிதமான கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. தாண்டியா நடன நிகழ்ச்சியுடன் முடிவுற்றது. அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படம் உங்களுக்காக: […]
ஆண்டாள் கல்யாணம் 2018
ஜனவரி 13ம் தேதி 2018 அன்று மினசோட்டாவில் உள்ள S V கோவிலில் ஆண்டாள் கல்யாண விழா சடங்கு, நடனம் பாட்டு போன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்டாள் (கோதை) ரங்கநாதரை மார்கழி மாதம் கடைசி நாள் மணமுடிப்பதாக சம்பிராதயம். இந்த விழாவை மனிதர்கள் திருமன விழா போல் சிறப்பாக நடத்தினார்கள். மார்கழி மஹோத்சவம் 2017-18 ஒரு பகுதியாக மினசோட்டா தேவகணம் அமைப்பு சார்பில் நடைபெற்றது. இந்த விழாவை கடந்த மூன்றாண்டாக மினசோட்டா தேவகணம் அமைப்பு சார்பில் “ட்வின் […]
நம்மில் ஓர் அன்பின் ஒளி பிறந்தது…….
டிசம்பர் மாதம் என்றாலே குளிர்காலம் வந்துவிட்டது என்பதை அறிவோம். நீண்ட விடுமுறை நாட்கள் கிடைக்கும். இந்த விடுமுறை, குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டாடும் அன்பான நேரங்களைக் கொண்டது. டிசம்பர் 25ம் தேதி உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் இயேசு பிறந்த நாளான கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நீங்கள் எல்லாரும் இறைமகன் இயேசு பிறந்த கிறிஸ்துமஸ் பண்டிகையைப் பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்படுவீர்கள் என்று நினைக்கிறேன். ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன், மரியாள் என்ற ஒரு […]
பகுத்தறிவு – 8
(பாகம் 7) மந்திரங்கள் ஓதுவதாலோ, சடங்குகளை முறையாகச் செய்வதினாலோ எல்லா விளைவுகளும் மாறி அமைந்துவிடுமா என்றால், அமையாது என்பதே பதிலாகும். இதனைச் சொல்லக் கேட்கையில், ஒரு நாத்திகரின் வாதம்போல் இருக்கிறதல்லவா? இதுவரை அப்படித் தெரிந்தாலும், நாத்திகர்களால் ஒரு செயலின் விளைவு எதிர்பார்த்தபடி இல்லாததன் காரணமென்ன என்றால் அறிவுபூர்வமாக விளக்க இயலாது. ஆனால், அதனையும் தொடர்ந்து அறிவியல் நோக்கோடு விளக்குவதே ரமணரை மகரிஷி நிலைக்கு எடுத்துச் செல்கிறது. ஒரு கட்டிடத்தின் மாடிக்குச் செல்வதற்காகத்தான் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் யாரேனும் […]
பகுத்தறிவு – பகுதி 7
(பகுதி 6) சென்ற இதழில் ரமணர் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். அவரின் வாழ்வில் நடந்த பல சிறிய, ஆனால் அரிய நிகழ்வுகளையும், அவை காட்டும் பகுத்தறிவையும் தொடர்ந்து பார்ப்போம். ரமணர் குகையில் வாழ்ந்து கொண்டிருந்தார் என்று ஏற்கனவே பார்த்தோம். அவரின் அதீத ஞானத்தைச் சிறிது சிறிதாக உணரத் தொடங்கிய கிராம மக்கள் அவரைத் தினமும் வந்து பார்க்கத் தொடங்கினர். தினமும் வந்து பார்க்கத் தொடங்கியவர்கள், அவருக்கு உணவு, உடை எனக் கொடுத்துப் பாதுகாக்கத் தொடங்கினர். அவரின் பாதுகாப்பிற்காக […]
பகுத்தறிவு – பகுதி 6
பகுதி – 5 சென்ற பகுதியில், பாரதிக்கும் குள்ளச்சாமிக்குமான ஒருசில சம்பாஷணைகள் குறித்துப் பார்த்தோம். விரிவாக இல்லாவிட்டாலும், ஒரு சிறு அறிமுகமாகப் பார்த்தோம். ஆனால் அங்கு என்ன நடந்தது, அதில் எந்த அளவு பகுத்தறிவைப் புகுத்த முடியும் என்பதெல்லாம் போகப்போக விரிவாகப் பார்த்துக் கொள்ள வேண்டியவை. பாரதி குறித்துப் பேசியதற்கு முக்கியக் காரணம், இலக்கிய ஆர்வமுள்ள பலரும் பனிப்பூக்களில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதுதான். இலக்கியத்தை விட்டு விலகும், அதுவும் தமிழிலக்கியத்தை விட்டுவிலகி, பகுத்தறிவு என்ற நோக்கில் பார்க்கத் […]
பகுத்தறிவு – பகுதி 5
(பகுதி – 4) நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் இந்தத் தலைப்பைத் தொடர்வது என்ற முடிவுக்கு வந்துள்ளேன். சென்ற பகுதிகளுக்கு வந்த விமரிசனங்களும், கருத்துக்களும், கேள்விகளுக்கும் மனதுக்கு மிகவும் உற்சாகமூட்டுவதாக அமைந்தது. என் கருத்தோடு உடன்படாதவர்களின் கேள்விகளும் உற்சாகமூட்டுவதாகவே அமைந்தன. நிச்சயமாக, மாற்றுக் கருத்துள்ளவர்களின் மன ஓட்டத்தையும் அறிந்து கொள்ள வேண்டுமென்பதே எனது ஆசையும்கூட. பின்னூட்டங்கள் உற்சாகமாக அமையும் அதே சமயத்தில், நேரடியாக அனுப்பப்பட்ட சில கேள்விகளும், சந்தேகங்களும், மேலும் பொறுப்புணர்ச்சியோடு எழுத வேண்டுமென்ற எண்ணத்தைத் தூண்டுவதாக […]