அரசியல்
வெறுப்பு சூழ் உலகு
‘சங்கி’, ‘திராவிடியா’, ‘கோட்டா ஜாதி’, ‘கிராஸ்பெல்ட்’, ‘பாவாடை’, ‘அரிசி மூட்டை’, ‘மூத்திர குடிக்கி’, ‘கூலிபான்’, ‘நூலாண்டி’, ‘முக்கா’, ‘அந்நிய கைக்கூலி’, ‘கிரிப்டோ கைக்கூலி’, ‘ஆண்ட பரம்பரை’, ‘வந்தேறி’, ‘சொம்பு தூக்கி’, ‘கொத்தடிமை’, ‘சொறியன்’ – நீங்கள் எந்தவொரு சமூக ஊடகத்தையும் பாவிப்பவராக இருப்பீர்களென்றால், ஊடக அகராதியில் புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கும் மேற்கண்ட சொற்கள் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமாகியிருக்கும். மேலும், ‘கதறுடா’, ‘கக்கூஸ் கழுவு’, ‘பர்னால் தடவிக்கோ’, ‘உண்டகட்டி வாங்கித் தின்னு’, ‘தொங்கிடு’ போன்ற சில அறிவுரைகள் வழங்கப்படுவதையும் காதுகள், […]
மடமையைக் கொளுத்துவோம்
ஆண்டுதோறும் கொண்டாடப்படுவதைப் போல இந்தாண்டும், மார்ச் 8 ஆம் நாள் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் ஊடகங்களில், தாய், தமக்கை, தங்கை, மனைவி, மகள் என தத்தம் வாழ்வில் சந்தித்த அனைத்துப் பெண்களுக்கும் விதவிதமான வடிவில் வாழ்த்துகளைச் சொல்லித் தீர்த்தனர். மறுதினமே, தன் மனைவியை சிலாகித்துப் பேசும் கணவனிடம் ‘யோவ், நேத்தே வுமன்ஸ் டே முடிஞ்சி போச்சு..’ என்று இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பச் சொல்வதான ‘மீம்ஸ்’ வெளிவந்து ‘லைக்ஸ்களை’ அள்ளியது. வேடிக்கையாகயிருந்தாலும் இது தான் […]
கருக்கலைப்புத் தடைச் சட்டம்
சில வாரங்களுக்கு முன்னர், கருக்கலைப்பு உரிமைகளுக்கான சட்டப் பாதுகாப்பை, அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ‘ரோ – வேட்’ வழக்கின் தீர்ப்பு அடிப்படையில், 1973ஆம் ஆண்டு மத்திய அரசு நிறுவியிருந்த கருக்கலைப்பு பாதுகாப்புச் சட்டம், தொடக்க நாள் முதலே பல சர்ச்சைகளைக் கிளப்பி வந்தாலும், கருத்தடைத் தொடர்பான பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்து வந்தது. மத்திய அரசமைப்பின் இச்சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து விட்டதால், கருக்கலைப்பு தொடர்பான சட்டங்களை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் […]
புதிய அரசு : ஓர் அலசல் – பாகம் 2
சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கும் புதிய அரசு குறித்து திரு. ரவிக்குமார் சண்முகம் அவர்களும், திரு. சரவணகுமரன் அவர்களும் உரையாடி வரும் வலையொலி பகுதி தொடர்கிறது. இந்தப் பகுதியில் புதிய அமைச்சரவை குறித்தும், புதிய அரசின் முதல் கட்ட நடவடிக்கைகள் குறித்தும் திரு. ரவிக்குமார் அவர்கள் பேசியுள்ளார். கேளுங்க.. பகிருங்க..
புதிய அரசு : ஓர் அலசல் – பாகம் 1
சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்தும், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கும் புதிய திமுக அரசு குறித்தும் இந்த வலையொலி பகுதியில் திரு. ரவிக்குமார் சண்முகம் அவர்களும், திரு. சரவணகுமரன் அவர்களும் உரையாடியுள்ளனர். கேளுங்கள்.. பகிருங்கள்..
போடுங்கம்மா ஓட்டு!!
தமிழகத்தின் தேர்தல் நாளன்று தேர்தல் வரலாறு, தேர்தல் நடைமுறைகள் குறித்து பனிப்பூக்கள் அரட்டையின் இந்த பகுதியில் உரையாடுகிறார்கள் திரு. மதுசூதனன் மற்றும் திரு. சரவணகுமரன். காணுங்கள்.. பகிருங்கள்.. முக்கியமா, இன்று மறவாமல் ஓட்டு போடுங்கள்..
தேர்தல் சத்தியங்களும் சாத்தியங்களும் – பாகம் 2
தேர்தலுக்குச் சில நாட்களே இருக்கும் நிலையில், தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு கட்சியின் வாக்குறுதியையும் வாக்காளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். கட்சிகளின் தேர்தல் அறிக்கை குறித்து அறிந்து கொள்ள இந்த வலையொலி நிகழ்ச்சி உதவும். தேர்தலில் யாருக்கு வாக்களிக்கலாம் என்று முடிவெடுக்கவும் இது உதவும் என்று நம்புகிறோம். கேளுங்கள்.. பகிருங்கள்.. ஜனநாயகக் கடமையைச் சரிவரச் செய்திடுங்கள்.. நிகழ்ச்சியின் முதல் பகுதி. பங்கேற்றோர் – திரு. ரவிக்குமார் சண்முகம், திரு. சரவணகுமரன்.
தமிழகத் தேர்தல் – சத்தியங்களும் சாத்தியங்களும்
2021 ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுப்பிடித்திருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில் அறிவித்திருக்கும் வாக்குறுதிகள் குறித்து திரு. ரவிக்குமார் சண்முகம் அவர்கள் இந்த வலையொலி நிகழ்ச்சியில் விரிவாக பேசியுள்ளார். நிகழ்ச்சியைத் தொகுத்தளித்திருப்பவர், திரு. சரவணகுமரன். முதல் பாகமான இதில் தேர்தல் அறிக்கையின் முக்கியத்துவம், தேர்தல் அறிக்கை தயாரிப்பு முறை ஆகியவற்றுடன் மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகளின் தேர்தல் அறிக்கை குறித்து விவரிக்கிறார் […]