அறிந்ததும் அறியாததும்
இணைப்பின் வசதி: ஒரு நட்புக் கதை

அது ஒரு அழகான நட்பாகத் தொடங்கியது. நானும் என் மனைவியும்,பல வருடங்களாக ஒரே கட்டடத்தில் வசித்து வந்தோம். அதே கட்டடத்தில் ஆதவன், யாழினி என்ற கணவன் மனைவி வசித்து வந்தனர். அவ்வப்போது சின்ன சின்ன புன்சிரிப்புகள், விசாரிப்புகள் என்ற அளவில் தான் எங்கள் நட்பு இருந்தது. பின்னர் தொற்றுநோய் தாக்கியது. இரு குடும்பங்களுக்கும் அதிக நேரம் கிடைத்து, நெருக்கம் ஏற்பட்டது. உணவு, பானங்கள், புத்தகங்கள் மற்றும் அன்றாட நிகழ்வுகளைப் பரிமாறிக் கொண்டோம். நாங்கள் உண்மையான நண்பர்கள், கடவுளுக்கு […]
கோவிட் தடுப்பூசி பயமா? இதைக் கேளுங்க!!

கோவிட் தடுப்பூசி மீதான பயத்தையும், தயக்கத்தையும் போக்கும் வகையில் இந்த வலையொலி பகுதியில், யூனிவர்சிடி ஆஃப் மினசோட்டாவில் ஆராய்ச்சியாளராக பணியாற்றும் திருமதி. அமுதா முத்துசாமி அவர்கள் தடுப்பூசி குறித்து எளிமையான முறையில் விளக்கம் தந்துள்ளார். கேளுங்கள்.. பகிருங்கள்.. உரையாடியவர் – சரவணகுமரன்.
முட்டாள்களின் தினமா ஏப்ரல் 1?

முட்டாள்களின் தினமாக ஏப்ரல் ஒன்றாம் தேதி கொண்டாடப்படுவதின் பின்னணி குறித்தும், ஏப்ரல் ஒன்றாம் தின அனுபவங்கள் குறித்தும் இந்த பனிப்பூக்கள் அரட்டையில் உரையாடுகிறார்கள் மதுசூதனன் & சரவணகுமரன். புகைப்படங்கள் – ராஜேஷ் கோவிந்தராஜ் தொகுப்பு – சரவணகுமரன்
மினசோட்டாவில் தமிழ்க் கல்வி

இருமொழி முத்திரை, மினசோட்டாத் தமிழ்ப்பள்ளி பாடத்திட்டம், Pro Lingua விருது, மாணவர் உதவித்தொகை, தமிழ் பி.ஏ. என அமெரிக்காவில் தமிழ் கற்கும் மற்றும் கற்க விரும்பும் மாணாக்கர்களும் பெற்றோர்களும் அறிய வேண்டிய பல தகவல்களை, இந்த பனிப்பூக்கள் “ஃப்ரீயா பேசலாம்” பகுதியில் மினசோட்டாத் தமிழ்ச்சங்கத் தமிழ்ப்பள்ளியின் (http://www.mntamilschool.org/) இயக்குனரான திரு. பாலமுருகன் அவர்களும், பாடத்திட்ட இயக்குனரான திரு. சிவானந்தம் அவர்களும் விளக்கிப் பேசியுள்ளார்கள். காணுங்கள்… பகிருங்கள்… தொகுப்பு – சரவணகுமரன்
யார் இந்த கமலா ஹாரிஸ்?

2020 அமெரிக்கத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் திருமதி. கமலா ஹாரிஸ் அவர்களின் பின்புலம் குறித்தும், அவர் கடந்து வந்த பாதை குறித்தும் இந்த வலையொலிப் பகுதியில் திரு. ரவிக்குமார் அவர்கள் விவரித்துள்ளார். திருமதி. ஹாரிஸ் அவர்களின் தேர்வுக்கான காரணம் மற்றும் அவருடைய தேர்வு இந்தத் தேர்தல் களத்தில் ஏற்படுத்தியுள்ள அதிர்வுகள் போன்றவை குறித்தும் இந்த உரையாடலில் அலசப்பட்டுள்ளது. வாருங்கள்.. கேளுங்கள்.. பகிருங்கள்.. உரையாடியவர் – சரவணகுமரன்.
மின்னூல் – அ முதல் ஃ வரை – என். சொக்கன்

மின்னூல்கள் (Ebooks) பற்றியும், அவற்றை கிண்டில் போன்ற தளங்களில் பதிப்பிப்பது பற்றியும் இந்த உரையாடலில் எழுத்தாளர் திரு. என். சொக்கன் (www.nchokkan.com) அவர்கள் விளக்கமாகப் பேசியிருக்கிறார். காணுங்கள்… பகிருங்கள்… இந்தக் காணொளி உரையாடல் குறித்த உங்கள் கருத்துகளையும் கேள்விகளையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உரையாடியவர் – சரவணகுமரன்
இந்தியச் சுதந்திரம் – சில வாதங்களும் விளக்கங்களும்

பனிப்பூக்கள் வாசகர்கள் அனைவருக்கும் பனிப்பூக்களின் இந்தியச் சுதந்திர நாள் வாழ்த்துக்கள். இன்றைய தினத்தில் இந்தியச் சுதந்திரம் குறித்து பொதுத்தளத்தில் வைக்கப்படும் சில வாதங்கள் குறித்து இந்த வலையொலி பகுதியில் திரு. மதுசூதனன் அவர்கள் தனது பார்வையை முன்வைத்துள்ளார். வாசகர்கள் தங்களது கருத்தினை பின்னூட்டப் பகுதியில் வெளிப்படுத்தலாம். தொகுப்பு – சரவணகுமரன்.
கொரோனா அலையில் அமெரிக்கத் தேர்தல்

கோவிட்-19 னால் இத்தேர்தலில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளனவா? திட்டமிட்டபடி, இந்த தேர்தல் நடந்து முடிந்துவிடுமா? இந்த தேர்தலில் மக்களின் தீர்ப்பைத் தீர்மானிக்க போகும் முக்கிய காரணிகள் எவை ? போன்ற கேள்விகளுக்கு இந்த பகுதியில் பதிலளித்துள்ளார், திரு. ரவிக்குமார் சண்முகம் அவர்கள். வாருங்கள்… கேளுங்கள்… பகிருங்கள்… உரையாடியவர் – சரவணகுமரன்.
அமெரிக்கத் தேர்தலில் என்ன நடக்கிறது?

கடந்த பகுதியில் அமெரிக்கத் தேர்தல் நடைமுறைகள் குறித்துப் பார்த்தோம். இப்பகுதியில் அமெரிக்கத் தேர்தல் நடைமுறையில் இருக்கும் சிக்கல்கள் குறித்தும், தற்போதைய 2020 ஆம் ஆண்டின் தேர்தல் நிலவரம் குறித்தும் நம்மிடம் தகவல்களைப் பகிர்கிறார், திரு. ரவிக்குமார் சண்முகம் அவர்கள். வாருங்கள்.. கேளுங்கள்.. பகிருங்கள்.. உரையாடியவர் – சரவணகுமரன்.
கனடா குடியேற்றம்

கனடா அரசும், அந்நாட்டு மக்களும் பிற நாட்டு மக்களை எப்படி எதிர்கொள்கிறார்கள்? கனடாவில் வேலை வாய்ப்புக்கான சந்தை, அமெரிக்காவை ஒப்பிடும்போது எப்படி இருக்கிறது? குடியேற்ற சேவை வழங்கும் மற்ற நிறுவனங்களில் இருந்து CANext எப்படி மாறுபடுகிறது? .. கனடாவில் CANext immigration நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வரும் திரு. ஸ்ரீராம் அவர்களுடன் ஒரு தகவல் பொதிந்த உரையாடல். வாருங்கள்.. கேளுங்கள்.. பகிருங்கள்.. உரையாடியவர் – சரவணகுமரன்.