ஆன்மிகம்
திருமலை திருக்கோணேச்சரம்
தக்கிண பூமி எனப்படுவது நவீன அரசியல் எல்லைகள் தாண்டிய தமிழர் பூமியைக் குறிப்பிடும் . இதில் தற்போதைய தென்னிந்தியப் பிரதேசமும் குறிப்பாகத் தமிழ்நாடும், இலங்கை தீவும் சேர்த்து கடல் மேற்காணப்படும் நிலப் பரப்பைக் குறிக்கும். தமிழர்கள் வழிபாட்டில் சிவன் வழிபாடு தொன்மை வாய்ந்தது. பண்டய ஈசன் வழிபாட்டுத் தலங்கள் தக்கண ஈச்சரங்கள் என்று அழைக்கப்பட்டன. இவற்றில் ஒன்று தான் திருக்கோணேச்சரமாகும். இலங்கையின் வடகிழக்குக் கரையில் பாறைமுனையில் வங்காள விரிகுடாவைப் பார்த்துக் கொண்டிருக்கும் இடம் திருகோணமலை ஆகும். இவ்விடம் […]
குழப்பத்தின் கோபுரம் பாபேல் – பைபிள் கதைகள்
வேற்றுமையில் ஒற்றுமை கொண்டது உலகம். இன, மொழி வேறுபாடுகள் நிறைந்தாதாயிற்று நாம் வாழும் உலகம். வீட்டில் பேச ஒரு மொழி, அலுவலகத்தில் ஒரு மொழி, வேலையின் நிமித்தம் வெளியூர் சென்றால் அங்கு வேறொரு மொழி. குழந்தைக்குச் சில நேரத்தில் வீட்டில் அப்பா என்றழைக்க வேண்டும் பள்ளியில் டாடி என்றழைக்க வேண்டும் …. அந்தச் சிறு உள்ளத்தில் ஒரு மொழிப் போராட்டம்…… டாடியா……. அப்பாவா… முடிவில் டப்பாவான தந்தை அம்மாவா…. மாம்மியா…… முடிவில் அம்மியான தாய்… […]
சிம்சோனின் வலிமை எங்கே … ? பைபிள் கதைகள்
திருவிவிலியத்தின் (பைபிள்) பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ள நிகழ்வைப் பார்போம். அந்தக் காலத்தில் கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு எல்லாக் கொடைகளையும் கொடுத்திருந்தார். வசதி வந்தால் வழிமாறும் மனிதர்கள் போல இஸ்ரயேல் மக்களும் கடவுளை மறந்து தீய வழிகளை நாடிச் சென்றனர். அதன் பலனாகத் தங்களுடைய உரிமைகள் இழந்து பெலிஸ்தியர்களுக்கு அடிமையானார்கள். அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரயேல் மக்களைக் காப்பாற்ற கடவுள் சிம்சோன் என்பவரைப் படைத்தார். சிம்சோன் வளர்ந்து அழகான, வலிமையான வாலிபனாக உருவெடுத்தார். சாதாரண வலிமையல்ல, ஒருநாள் அவரை […]
வேர்வையின்றி வெற்றியில்லை….. பைபிள் கதை
மனிதனாகப் பிறந்த நமக்கு, கடவுள் பல்வேறு வரங்களைக் கொடையாகத் தந்திருக்கிறார். நாம் அதனை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதிலேதான் நம்முடைய வாழ்வு அடங்கியிருக்கிறது. இதை அழகாக கிறிஸ்துவ மறையின் புனித நூலான திருவிவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் இயேசுநாதர் மக்களுக்கு ஒரு உவமையின் மூலமாக எடுத்துரைப்பதை இங்கு காணலாம். ஒருநாள் நெடும் பயணம் செல்லவிருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார். அவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும் வேறொருவருக்கு இரண்டு தாலந்தும் இன்னொருவருக்கு […]
வஞ்சனை செய்வோரே …! பைபிள் கதைகள்
திருவிவிலியத்தின் (பைபிள்) பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ள நிகழ்வைப் பார்ப்போம். ஆதிகாலத்தில் பாபிலோனில் யோவாக்கிம் என்னும் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் சூசன்னா என்ற பெண்ணை மணந்தார். அவர் ஒரு பேரழகி. அதோடு கடவுளுக்கு அஞ்சி நடப்பவர். சூசன்னாவின் பெற்றோர்களும் நேர்மையானவர்கள். சூசன்னாவின் கணவர் யோவாக்கிம் பெரும் செல்வந்தர். அவரது வீட்டுக்கு அருகிலேயே அவருக்கு ஒரு தோட்டம் இருந்தது. யூதர்கள் அவரிடம் வருவது வழக்கம்; ஏனெனில் மற்ற எல்லாரையும்விட அவர் மிகவும் மதிக்கப் பெற்றார். அக்காலத்தில் யூதர்கள் மத்தியில் […]
ஆடிக் கிருத்திகை 2016
ஆடி மாதக் கிருத்திகை நாளன்று தமிழ்க் கடவுள் முருகனுக்கு விழா எடுப்பது தொன்று தொட்டு நடந்து வரும் வழக்கம். உலகெங்கிலுமுள்ள முருக பக்தர்கள் ஆடிக் கிருத்திகை திருவிழாவன்று பால் குடம், காவடி எடுத்து சிறப்பாகக் கொண்டாடுவார்கள். இந்த ஆண்டு மினசோட்டாவில் இருக்கக் கூடிய ‘மேப்பிள் குரோவ்’ ஹிந்துக் கோவிலில் ஜூலை மாதம் 30ம் தேதி ஆடிக் கிருத்திகை திருவிழா கொண்டாடப்பட்டது. அன்றைய தினத்தில் முருகப் பெருமானுக்கு, சிறப்பு ஆடை அலங்காரம், சிறப்பு வழிபாடு என பல சிறப்பு […]
பூஜ்ய குருதேவ் – கர்ம யோகா விளக்கம்
(English Version) பூஜ்ய குருதேவ் சின்மயானந்தா, சின்மயா மிஷன் எனும் இயக்கத்தைத் துவங்கி வைத்தார். அவரது சீடர்களாகிய நாங்கள் இந்த ஆண்டை குருதேவின் நூறாவது பிறந்த வருடமாகக் கொண்டாடி வருகிறோம். இந்த இயக்கத்தின் குருஜி, மினியாபொலிஸ் மிஷனுக்கு ஜூலை 11 முதல் 15 ஆம் திகதி வரை வருகைத் தந்திருந்தார். அவர் பகவத் கீதையின் ஐந்தாவது அத்தியாயத்தினைப் பற்றி விளக்கினார் . அவரது உரையைக் கேட்க நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆர்வத்துடன் வந்திருந்தனர். எனக்கு சமஸ்கிருதம் தெரியாது. […]
இந்தோனேசியாவில் ஹிந்து மதம்
நான்கு பக்கமும் கடலினால் சூழ்ந்த ஒரு தீவு. உலகில், இஸ்லாமியர்களின் மக்கட்தொகையில் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ள நாடு. சமீபத்தில் சுற்றுலாவாகச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அந்தப் பயணத்தின் சுவையான சில மதம் குறித்த கவனிப்புகளை ஆவணப்படுத்துவதே இந்தக் கட்டுரையின் நோக்கம். முதலாவதாகவும், அரிதானதாகவும் நமது கண்களுக்குப் புலப்பட்ட காட்சி இங்கு வாழும் மக்களின் மதம் மற்றும் ஆன்மிகம் குறித்த நம்பிக்கை. நாட்டின் மொத்த மக்கட்தொகையில் எண்பது சதவீதத்திற்கும் மேலானவர்கள் இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றுபவர்களாயினும், நாம் சென்ற […]
Pujya Guruji – Karma Yoga explained
Chinmaya Mission is founded by devotees of Pujya Gurudev Swami Chinmayananda. All of us, the devotees, are celebrating May 8, 2015 till Aug 3, 2016 as his centennial birthday celebration year. We were blessed with visit by the head of Chinmaya Mission worldwide, Swami Tejomayanandaji, who is called Pujya Guruji. Guruji visited us from July […]
உண்மையான அன்பே உலகிற்கு விளக்கு – பைபிள் கதைகள்
“உலகில் வெறுப்பது யாரக இருந்தாலும், நேசிப்பது நீங்களாக இருங்கள்”, என்றார் அன்னை தெரசா. எத்தனை யுகங்கள் கடந்து சென்றாலும் அன்பின் வடிவமாகப் போற்றப்படுவது மாசற்ற தாயன்பே என்பது மிகையல்ல. காரணம்…… வார்த்தைகளே இல்லாத வடிவம் அளவுகோலே இல்லாத அன்பு சுயநலமே இல்லாத இதயம் வெறுப்பைக் காட்டாத முகம் ……………… அதுதான் அம்மா கிறிஸ்துவ மறையின் புனித நூலாம் திருவிவிலியத்தின் (பைபிள்) பழைய எற்பாட்டில் கூறப்பட்டுள்ள ஒரு நிகழ்வில் நீதியின் தேவன் பொய்மையின் கொடூரத்தை வெளிக் கொணர்ந்து உண்மையான […]