சமையல்
சுட்டு / வாட்டிச்சமைப்பது (Grilling) எளிதானது
கோடைகாலங்களில், புறநகர் பகுதிகளில், பல அப்பாக்கள் தங்கள் வீட்டின் பின்புறத்திலோ, பூங்காக்கள் போன்று பொதுவெளியிலோ வாட்டு அடுப்பு அல்லது வலைத்தட்டிகளில் (Grill) இறைச்சி, காய்கறிகள், பழங்களை நெருப்பிலும், புகையிலும் வாட்டி சமைப்பதைப் பார்த்திருக்கிறோம். நேரடியாக தணலில் சமைப்பதால் உணவின் மணமும், தன்மையும் காற்றில் பரவி, புதியதொரு சுவையுணர்வை அளிக்கும். குடும்பமாக, திறந்தவெளியில் நேரத்தைச் செலவிட எத்தனிக்க நினைக்கும் எவருக்கும், அதே சந்தர்ப்பத்தில் உணவும் தயாராவது அலாதியானதொரு அனுபவத்தைத் தரக்கூடும். தண்ணீரில் வேகவைக்காமல், பாத்திரங்கள் அதிகமில்லாமல் நேரடியாக நெருப்பில் […]
பூசணிக்காய் Pie
தேவையான பொருட்கள்: 1 ¼ கோப்பை அனைத்து மாவு 2 தேக்கரண்டி சர்க்கரை ¼ தேக்கரண்டி உப்பு 8 தேக்கரண்டி (1 குச்சி) குளிர்ந்த, உப்பு சேர்க்காத வெண்ணெய், சிறிய சதுரங்களாக வெட்டப்பட்டது 4 தேக்கரண்டி குளிர்ந்த நீர் நிரப்புதலுக்கு: 15 அவுன்ஸ் சுத்தமான பூசணிக் கூழ் (Pumpkin Puree) 3 முட்டைகள் […]
இலகுவான ஆப்பிள் பை (Apple Pie)
இந்த எளிதான ஆப்பிள் பை விஸ்கொன்சின் மாநில பல்கலைக்கழக தோழியின் தாய் அளித்த சமையற்குறிப்பு. ஆப்பிள் அறுவடை ஆரம்பிக்கும் செப்டெம்பர் மாதத்தில், இந்த இலகு முறை ஆப்பிள் பையை செய்ய விரும்புவதுண்டு. நான் பெரும்பாலும் நறுமணத்திற்கு ஜாதிக்காய் (nutmeg) சிறிதளவு சேர்க்கிறேன்; நீங்கள் விரும்பினால் சேர்த்துக்கொள்ளலாம். தேவையானவை 9 அங்குல இரட்டை மேலோடு ஆப்பிள் பைக்கு, 1 தொகுப்பு (14.1 அவுன்ஸ்) பேஸ்ட்ரி தேவை. உள்ளூர் மளிகைக் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். […]
சமையல்.. சமையல்.. சமையல்..
சில வருடங்களுக்கு முன்பு, ஒரு சர்வே எடுத்திருந்தார்கள். உலகெங்கிலும் உள்ள குடும்பங்கள் சமைப்பதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் குறித்து அந்த ஆய்வு நடத்தப்பட்டிருந்தது. உலகிலேயே சமையற்கட்டில் அதிக நேரம் செலவிடும் நாடு – இந்தியா, என்று ஆய்வு முடிவில் வந்திருந்தது. இதற்கு எதற்கு ஆய்வு, நமக்குத் தான் தெரியுமே!! என்கிறீர்களா? உண்மை தான். மற்ற நாடுகளுடான ஒப்பீடு, நமக்குப் பயனளிக்கும் தகவல்கள் தரும் வகையில் அந்த ஆய்வு முடிவில் தெரியவந்தன. நமக்குத் தெரிந்த விஷயமான, உலகிலேயே அதிகம் சமையலில் […]
வெங்காயம் வெட்டும் விதம்
கோடை காலம் வருகிறது உள்வீட்டு சமையல் அறையிலும் விசாலமாக வெளியிடங்களிலும் ஒன்று கூடி சமைத்து மகிழ்வது வடஅமெரிக்க வழக்கம். வெங்காயங்கள் சிவப்பு, மஞ்சள், வெள்ளை எனப் பலவகைப்படும். ‘ஏலியம் சீப்பா’ (Allium Cepa) என்பது வெங்காயத்தின் தாவரவியல் பெயர். வெங்காயமானது சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னரே மத்திய ஆசியாவிலும் அதன் அருகாமை நாடுகளிலும் பயிராக வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது என்கிறது சரித்திரம். தமிழர்கள், வெங்காயம் இல்லாமல் சாப்பிடுவது மிகக் குறைவே. இன்று வெங்காயம் வெட்டுவது பற்றியான கைமுறையைப் பார்ப்போம். இதே […]
பீஃப் வெலிங்டன் அகலடுப்புச் சமையல்
குளிர்காலத்தில் அகலடுப்பு (Oven) மூலம் பார்க்கப் பொலிவாகவும், சற்று ஏளிதாகவும் செய்யக்கூடியது உரொட்டி தயாரிப்பது போன்ற, வெலிங்டன் வகை வாட்டி வேகவைக்கும் சமையல். பிரித்தானியர் பீஃப் எனும் மாட்டு இறைச்சியைப் பாவிப்பதை விரும்பினும், இதனைக் கோழி, ஏன் உருளைக்கிழங்கு மசாலாவுடனும் இலகுவாகத் தயாரிக்க முடியும். உரொட்டியில் மூடப்பட்ட மாமிசம் (filet de bœuf en croûte – fillet of beef in pastry) என்ற பிரெஞ்சு சமையலை பிரித்தானியர் பின்பற்றி சமைக்க, காலப்போக்கில் அது பீஃப் […]
சமையல் : ஸ்பானியப் பயேயா (Spanish Paella)
இது என்ன வினோதமானப் பெயராக இருக்குதே என்று நீங்கள் எண்ணலாம். ஆனால் நீங்கள் கடலுணவுப் பிரியர் என்றால் உங்களுக்காகக் காத்திருக்கிறது இந்த ஸ்பானியக் கடலுணவுப் பொக்கிஷம். இவ்விடம் நாம் தரும் ஸ்பானிய பயேயா சமையல் குறிப்பு, தமிழ் சமையலறையில் எளிதாக உருவாக்கிக் கொள்ளக்கூடியது. மேலும் சைவம் மட்டுமே சாப்பிடக்கூடியவர்களும் இதை எவ்வாறு செய்யலாம் என்ற குறிப்பும் கீழே வழங்கப்பட்டுள்ளது. ஸ்பானிய பயேயா உண்மையில் இத்தாலி நாட்டு வெலேன்சியா கடல் சார்ந்த இடத்திலிருந்து உருவானது என்று கருதப்படுகிறது. இத்தாலியரும், […]
எலுமிச்சை மெறாங் பை (Lemon Meringue Pie)
குளிர் காலம் ஆரம்பித்து விட்டது; சுற்றுப்புற சூழல் யாவும் மந்தமாகும் காலமிது. இச்சமயத்தில் நாக்குத் தித்திக்க மினசோட்டா மற்றும் அண்டை மாநிலங்களில் பனிக் காலப் பண்டிகை, கேளிக்கைகளில் பாங்காகப் பகிரப்படும் உணவுகளில் ஒன்று தான் எலுமிச்சை மெறாங் பை. இது எலுமிச்சையின் புளிப்பு, சர்க்கரையின் இனிப்பு சேர்ந்த பாகினை மத்தியிலும், ஒரத்தில் நறுக்கான மாவினால் ஆன கோது (crust) கொண்டும் அமைந்திருக்கும். தேவையானவை பாகு செய்ய 1 கோப்பை சீனி ½ கோப்பை சோள மாவு (Corn […]
கோழி சுக்கா
சுலபமான முறையில் சுவையான கோழி சுக்காவுக்கான செயல்முறை இது. தேவையான பொருட்கள்: கோழி – 400g –ஊறவைக்க தேவையான பொருட்கள்:– மஞ்சள் தூள் – 1 tsp காஷ்மீரி மிளகாய்த் தூள் – 2 tsp கொத்தமல்லித் தூள் – 2 tsp கரம் மசாலாத் தூள் – 1 tsp சீரகத் தூள் – 1 tsp மிளகுத் தூள் – 1 tsp இஞ்சி பூண்டு விழுது – 2 tbsp தயிர் – […]