சமையல்
காட்டரிசிக் கஞ்சி

மினசோட்டா ஆதிவாசிகளும் காட்டரிசியும் தெற்காசியக்கண்டத்தவராகியத் தமிழர்க்கு பண்டயக்காலத்தில் இருந்து இன்றுவரை உணவில் நெல் அரிசி பிரதானமான தானியம். இதே போன்று மினசோட்டா வாழ் ஆதிவாசி மக்களுக்கும் அத்தியாய தானியம் காட்டு அரிசியே. மினசோட்டா மாநிலப் பிரதான காட்டரிசி்ப்பிரதேசம். இதை தமது மொழியில் மனோமின் Manomin (Zizania aquatic L.) என்று அழைக்கின்றனர்.இம்மக்கள் ஏரி, குளக்கரைகளில் தாமாகவே விளையும் காட்டு அரிசியைக் கடவுள் பாக்கியம் என்று எடுத்துக்கொள்வர். இந்த புல்லு வகையைச்சேர்ந்த தாவரங்கள் மினசோட்டா, அயல் அமெரிக்க, கனேடிய […]
பயற்றம் பணியாரம்

துருவிய தேங்காய்ப்பூவை பொன்னிறமாக வாணலியில் வறுத்து, மாவாக இடித்துக்கொள்ளவும். பின்னர் பயிற்றமாவில், சிறிது தேங்காய், சர்க்கரை, சீனி, சேர்த்து இடித்துக் கலந்து கொள்ளவும். பின்னர் பொடித்த ஏலக்காய்ப்பொடி, உப்பு சேர்த்து சிறிது கொதிநீரில் குழைத்து சிறிய உருண்டைகளாக செய்துக் கொள்ளவும்.
வெப்பகால யாழ்ப்பாண உணவு

சென்ற பனிப்பூக்கள் இதழில் சமையல் குறிப்பில் யாழ்ப்பாணக் கூழ் பற்றிப் பார்த்தோம். வெட்பதட்பம் அதிகரித்த மினசோட்டாவில் நாம் எமது ஈழத்து, தமிழகக் கிராமிய வாழ்க்கை முறைகளைப் பற்றி ஆராய்ந்தால் உடலுக்கும் உளத்திற்கும் மிகுந்த அனுகூலமான விடயங்களை தெரிந்து கொள்ளலாம். Mid June, July இல்லை தமிழில்ஆனி, ஆடி மாதங்கள் எம் ஊரைப் பொறுத்தளவில் முதுவேனிற் காலம் என்பார்கள். இந்த வெப்பம் கூடிய காலத்தில் பித்தம், கபம், தலை சுற்றுதல் போன்றவை ஆரம்பிக்கலாம். இதே சமயம் வாதங்களும் சில சமயம் […]
யாழ்ப்பாண ஒடியல் கூழ் (மச்சக்கூழ்)

யாழ்ப்பாணத்துத் தமிழற்கும் தமிழக ஊர்ப்புறத்தாருக்கும் ஆடிமாதமெனில் கொதிக்கும் வெய்யிலில் இதமான கூழ் வடித்துக் குடிப்பது வழமை. இது மேலும் பனங்கட்டியும், தேங்காய்ச் சொட்டுடன் சேர்த்துச் சுவைப்பதும் பண்டைய கால மரபு. தேவையானவை ½ lbs மீன் ½ lbs கணவாய் ½ lbs இறால் ½ lbs சிறிய சிங்க இறால்/crawfish ¼ lbs பயிற்றங்காய் ¼ lbs மரவள்ளிக்கிழங்கு ¼ lbs பலாக்கொட்டை ¼ lbs முழக்கீரை/spinach 3 மேசைக்கரண்டி அரிசி ¼ கோப்பை/cup உலர்ந்த […]
இனிக்கும் இராசவள்ளிக் கிழங்கு

குளிர்பனிக் கூதலை தவிர்க்க இதமான இனிக்கும் இராசவள்ளிக் கிழங்குக் களி அல்லது கஞ்சி. இதன் நிறமோ கவர்ச்சிகரமான் ஊதாநிறம். இவ்வகை கிழங்குகள் பொதுவாக மினசோட்டாவில் இந்திய,சீன, வியட்நாமிய மரக்கறிக் கடைகளில் பிந்திய பனிமாதங்களாகிய் மாசி, பங்குனியில் கிடைக்கும். இவ்விடம் ஊதாக் கிழங்கு அல்லது பெர்பிள் யாம் (Purple Yam) என்றழைக்கப்படும் கிழங்கு, நமது தமிழ்ப் பிரதேசங்களில் மார்கழி, தைதொட்டு நிலத்தில் இருந்து கிண்டி எடுக்கப்படும் சுவையான ஊதாநிறக் கிழங்கு . இது வெவ்வேறு வள்ளிக்கிழங்கு வகைகளிலேயே இராச […]
சமையல் : பிஸிபேளேபாத்

தேவையான பொருட்கள்: அரிசி – 1 கப் துவரம் பருப்பு – ½ கப் வெங்காயம் – 1 தக்காளி – 1 பீன்ஸ் – 10 கேரட் – 1 உருளைக்கிழங்கு – 1 முருங்கைக்காய் – சிறிதளவு புளி – சிறிய எலுமிச்சை அளவு (கரைத்து கொள்ளவும்) மிளகாய்த் தூள் – தேவைக்கேற்ப மஞ்சள் தூள் – சிறிதளவு மசாலா அறைப்பதற்காகத் தேவையான பொருட்கள்: கடலைப் பருப்பு – 2 ஸ்பூன் தனியா – […]