\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

நிகழ்வுகள்

சங்கமம் 2025 பொங்கல் விழா

சங்கமம் 2025 பொங்கல் விழா

பிப்ரவரி 1, 2025 அன்று மினசோட்டா தமிழ்ச் சங்கம் “சங்கமம் 2025” பொங்கல் விழாவை ஹாப்கின்ஸ் உயர்நிலைப் பள்ளியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடியது. இந்த விழாவில் மரபு சார்ந்த கலை நிகழ்ச்சிகள், கேளிக்கை கொண்டாட்ட ஆட்டங்கள், உணவு விருந்து, விருந்தினர் உரை மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. விழா காலை 10:30 மணிக்கு பொங்கல் சிறப்பு விருந்துடன் தொடங்கியது. இதில் கருப்பட்டி பொங்கல், வடை, கூட்டு, சாம்பார் என பலவிதமான உணவு வகைகள் பரிமாறப்பட்டன. மதியம் 12:00 […]

Continue Reading »

மகளிர் தினம் – 2025

மகளிர் தினம் – 2025

சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் செயல்படும் இந்திய கலை மற்றும் கலாச்சார சங்கம் (Indian Art and Culture Association) ஏற்பாடு செய்திருந்த மகளிர் தின விழா மார்ச் 2 அன்று ஹேவர்டு செயல்திறன் மையத்தில் (Hayward Performance Center) சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் பல்வேறு நடனப் பள்ளிகளைச் சேர்ந்த திறமைமிக்க உள்ளூர் கலைஞர்களின் கண்கொள்ளாக் கலைநிகழ்வுகள் நடைபெற்றன. இந்த நிகழ்வைச் சிறப்பிக்கும் வகையில், புகழ்பெற்ற நடன ஆசிரியர் கலைமாமணி கலா மாஸ்டர் அவர்கள் பிரத்யேக அழைப்பின் […]

Continue Reading »

இலங்கைத் தமிழ்ப் பாடசாலை தைப் பொங்கல் விழா

இலங்கைத் தமிழ்ப் பாடசாலை  தைப் பொங்கல் விழா

இந்தப் படத்தில் பொங்கல் திருவிழாவின் அழகிய சாரம் காணப்படுகிறது. வெண்கலத் தட்டில் பல்வேறு பொருள்கள் அமைக்கப்பட்டுள்ளன.  மத்தியில் சிவப்பு மலர்கள் அலங்கரிக்கப்பட்ட நாரியல் (தேங்காய்) வைக்கப்பட்டிருக்கிறது. பக்கவாட்டில் வாழைப்பழங்கள் சுவையாக தொங்கிக் கொண்டிருக்கின்றன. சிறப்பாக வெண்கலக் கிண்ணங்கள் மற்றும் தீபங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  பச்சை நிறத்தில் ஒரு பாய் விரிக்கப்பட்டு, அதன் மேல் ஒரு வண்ணமய மண்டல வடிவ அலங்காரமும் வைக்கப்பட்டிருக்கிறது. இது தமிழர்களின் மகிழ்ச்சியான சூரியப் பொங்கல் திருவிழாவைக் குறிக்கிறது.  அடுத்து நமது பள்ளி அமைப்புக்கு வருவோம். […]

Continue Reading »

மினசோட்டா மலையாளி சங்கத்தின் கிறிஸ்துமஸ் விழா 2024

மினசோட்டா மலையாளி சங்கத்தின் கிறிஸ்துமஸ் விழா 2024

மினசோட்டா மலையாளி  அமைப்பு (Minnesota Malayalee Association) ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் விழாவை மிகவும் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றது. இந்தாண்டு டிசம்பர் 7ஆம் தேதி அன்று மினசோட்டா, புளூமிங்டன் நகரில் அமைந்துள்ள ஆல்சன் நடுநிலை பள்ளியில்  (Olson Middle School, Bloomington, MN) கிறிஸ்துமஸ் விழாவை நடத்தியிருந்தார்கள் அவர்கள். மினசோட்டாவில் உள்ள  கேரள மக்களும், இன்னும் பலரும் இந்த விழாவில் பங்கேற்றனர். மதிய உணவுடன் ஆரம்பித்த விழாவில், பல விதமான கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. சுமார் மூன்று […]

Continue Reading »

நவராத்திரி நிகழ்வுகள்

நவராத்திரி நிகழ்வுகள்

“சிதக்னி குண்ட ஸம்பூதா தேவ கார்ய சமுத்தியதா” என்ற வரிகளுடன் தொடங்கும் லலிதா சஹஸ்ரநாமத்தை முக்கிய சாரமாக கொண்டாடும் பண்டிகை சரத் நவராத்திரி. மனதின் உள் அகந்தை சொரூபத்தில் இருக்கும் மகிஷாசுரன் என்ற அரக்கனை அழிக்க அம்பிகை செய்யும் ஒரு யுத்தமே இந்த நவராத்திரி பண்டிகை. பத்து நாட்களின் முடிவில் சித்தத்தில் இருந்து எழும்பிய அம்பிகை மகிஷாசுரனை அழித்து பின் ராஜராஜேஸ்வரி சொரூபத்தில் மகிழ்வுடன் கொலுவேறும் நாளே விஜய தசமி என்று கொண்டாடப்படுகிறது.  ஒவ்வொரு ஆண்டும் இந்த […]

Continue Reading »

நவராத்திரி திருவிழா 2024

நவராத்திரி  திருவிழா 2024

முப்பெருந்தேவியரான லட்சுமி, சக்தி, சரஸ்வதி ஆகிய மூவரையும் போற்றும் விதமாகக் கொண்டாடப்படுவது நவராத்திரி. நவம் என்ற சொல்லுக்கு வட மொழியில்  ஒன்பது என்று பொருள். ஒன்பது நாட்கள் நடைபெறும் இவ்விழாவை இந்தியாவின் பல பகுதிகளில் பலவிதமாகக் கொண்டாடுகிறார்கள். குஜராத் மாநிலத்தில் இவ்விழா நடனத் திருவிழாவாக அனுசரிக்கப்படுகிறது. ஓவ்வொரு இரவும் மக்கள் ஒன்று கூடி நடனமாடுவார்கள். இந்த வகையான நடனத்தை கார்பா (garba) அல்லது தாண்டிய (dandiya) என்று அழைப்பார்கள். இந்த ஆண்டு மினசோட்டா மாநிலத்தில் உள்ள குஜராத் […]

Continue Reading »

ஆட்டம் பாட்டம் அனிருத்

ஆட்டம் பாட்டம் அனிருத்

அனிருத் – இன்றைக்கு தமிழ் சினிமாவின் ஹாட் இசையமைப்பாளர். ’3’ திரைப்படத்தில் அறிமுகம் ஆகும் போதே‘வொய் திஸ் கொலவெறி’ என்று யூ-ட்யூப் மூலம் உலக அளவில் வைரல் ஆகி நல்ல கவனத்தைப் பெற்றார். அடுத்தடுத்தபடங்களில் அவரது பாடல்கள் இளைஞர்களிடையே ஹிட் ஆகி, புகழ் ஏணியில் ஏறத் தொடங்கினார். குறுகியகாலத்திலேயே ரஜினி, கமல், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களது ஆஸ்தான இசையமைப்பாளர் ஆனார். ஆரம்பத்தில் அவருடைய பாடல்களைக் கேட்டு, ”என்ன இது டம் டும் என்று இவ்வளவு […]

Continue Reading »

சிகாகோவில் தமிழ்நாடு முதல்வர்

சிகாகோவில் தமிழ்நாடு முதல்வர்

அரசுமுறைப் பயணமாக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 12 ஆம் தேதிவரை, அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து வந்த தமிழ்நாட்டு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள்செப்டம்பர் 3ஆம் தேதி அன்று சிகாகோ வந்தார். செப்டம்பர் 7, சனிக்கிழமையன்று அமெரிக்கத் தமிழர்களைரோஸ்மண்ட் அரங்கில் சந்தித்து உரையாற்றிய முதல்வர் அவர்கள், முன்னதாக அமெரிக்கத் தமிழர்களின் கலைநிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தார். அமெரிக்காவின் பல்வேறு தமிழ்ச் சங்கத்தினர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளைவழங்கினார்கள். இதில் […]

Continue Reading »

நிருத்யா வித்தியாலயா நடனப் பள்ளி ஆண்டு விழா 2024

நிருத்யா வித்தியாலயா நடனப் பள்ளி ஆண்டு விழா 2024

மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள நிருத்யா வித்தியாலயா (NRITYA VIDYALAYA) பரதநாட்டியப் பள்ளியின் ஆண்டு விழா இந்த ஆண்டு சேஸ்க்கா (Chaska) நகரில் உள்ள அரங்கத்தில் நடைபெற்றது.  நடன பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகளும் இந்த விழாவில் பங்கேற்று,  அவர்களின் பரதநாட்டியக் கலைத் திறமையை அரங்கேற்றினர். இவர்களுடன் சேர்ந்து நடனப் பள்ளி ஆசிரியையும் சேர்ந்து பரதநாட்டியம்  ஆடிச் சிறப்பித்தார். விழாவின் முடிவில் பள்ளி மாணவ மாணவியர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்து. அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படம் உங்களுக்காக!

Continue Reading »

தமிழ் புத்தாண்டு விழா 2024

தமிழ் புத்தாண்டு விழா 2024

மினசோட்டா மாநிலத்தில்  உள்ள  மேப்பிள் குரோவ்  நகரில் அமைந்துள்ள இந்து கோவிலில் தமிழ்ப் புத்தாண்டு விழா சிறப்பாக ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்பட்டது. தமிழ்க் கடவுள் முருகப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகளுடன் இந்த விழா கொண்டாடப்பட்டது. தமிழர் விழா என்றாலே மிகவும் சிறப்பு சாப்பாடு இருக்கும் என்று எதிர்பார்ப்பை போல் இந்த வருட தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு இந்துக் கோவிலில் தன்னார்வலர் குடும்பங்கள் சேர்ந்து  வாழை இலை விருந்தைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.  சுமார் 800க்கு மேற்பட்டவர்கள் வாழை […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad