நிகழ்வுகள்
ஃபெட்னா 2019 தமிழ் விழா
ஒவ்வொரு ஆண்டும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் தமிழ் விழா ஜூலை முதல் வாரயிறுதியில் அமெரிக்கச் சுதந்திரத்தின விடுமுறையையொட்டி, அமெரிக்காவின் மாநகர் ஒன்றில் நடைபெறும். இவ்வருடம் இந்த விழா சிகாகோவில் ஜூலை 4ஆம் தேதியிலிருந்து 7ஆம் தேதிவரை நடைபெற்றது. இந்தாண்டு இதனுடன் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு மற்றும் சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் 50வது ஆண்டுவிழாவும் இணைந்து முப்பெரும் விழாவாக நடைபெற்றது. ஜுலை 4ஆம் தேதி வியாழன் காலையில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்ட இவ்விழாவில் திருக்குறள் மறை ஓதப்பட்டு, அமெரிக்க […]
ஸ்டாரிங் லேக் தமிழ் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி
மினசோட்டாவின் ஈடன் ப்ரெய்ரி (Eden Prairie) நகரத்தில் இருக்கும் ஸ்டாரிங் லேக் (Staring Lake) வெளிப்புற மேடையில், கோடைக்காலங்களில், பொது மக்களுக்காக மாலை நேரங்களில் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும். அவ்வாறு இவ்வாண்டு ஜூன் 28ஆம் தேதியன்று மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தென்னிந்திய நாட்டுப்புற இசை மற்றும் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் திரு. மாரிமுத்து, திரு. நாகராஜ், திரு. ரங்கராஜ், முனைவர். அருள் செல்வி மற்றும் திரு. […]
2019 இளையோர் கலை, பண்பாட்டுப் பயிற்சிப் பட்டறை
ஒவ்வொரு ஆண்டும் மினசோட்டாத் தமிழ்ப் பள்ளி நடத்தும் இளையோருக்கான பேச்சுத்தமிழ், கலை மற்றும் பண்பாட்டுப் பயிற்சிப் பட்டறை இந்தாண்டு ஜுன் 29 மற்றும் 30 ஆகிய தினங்களில் ஆப்பிள் வேலியில் உள்ள Camp Sacajawea என்னும் இடத்தில் நடந்தது. இயற்கைச் சூழலில் அமைந்திருக்கும் இவ்விடத்தில் நடைபெற்ற பட்டறையில் கலந்துகொண்ட இளையோருக்குப் பேச்சுத்தமிழிலும், தவில், நாதஸ்வரம், நாட்டுப்புறப் பாடல், நடனம் போன்ற கலைகளிலும், கபடி, சிலம்பம், பம்பரம், ஆடு புலி ஆட்டம், பல்லாங்குழி போன்ற விளையாட்டுகளிலும் பயிற்சி அளிக்கப்பட்டது. […]
மினசோட்டா வெயிலில் கோடைக்காலக் குதூகலம்!
என்ன? எங்கே? எப்போது? Edina Art Fair Diverse collection of art, entertainment, kids’ zone, craft beer gardens and gourmet foods 50th and France Avenue மே 31-ஜூன் 2 Stone Arch Bridge Festival Art, music, & car show on the Minneapolis riverfront. SE Main Street, Minneapolis ஜூன் 14-16 Twin Cities Jazz Festival Free, three-day music festival featuring headline acts on […]
பட்டமளிப்பு விழா 2019
மினசோட்டாவிலுள்ள மேப்பிள் குரோவ் இந்து கோவிலில் பள்ளிப் படிப்பு முடித்து கல்லூரி செல்லவிருக்கும் மாணவர்களுக்கு மே மாதம் 19 ஆம் தேதி பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு, ஓக்கலாமா மாநிலப் பல்கலைக் கழகத்தின், பத்மஸ்ரீ முனைவர் சுபாஷ் காக், சிறப்புரையாற்றி மாணவ மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கினார். முனைவர் டேஷ் அறக்கட்டளை சார்பில் சிறந்த 7 மாணவர்களுக்கு $500 ஊக்கத் தொகை வழங்கப்பட்டது இவர்கள் அனைவரும் கோவில் மற்றும் கோவில் பள்ளிகளில் பணியாற்றிய தன்னார்வலத் தொண்டர்கள். இந்த […]
ஃபெஸ்டிவல் ஆஃப் நேஷன்ஸ் – 2019
ஆண்டுதோறும் செயிண்ட் பால் ரிவர் சென்டரில் (St. Paul River Center) இன்டர்நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஆஃப் மினசோட்டா (International Institue of Minnesota) அமைப்பால் நடத்தப்படும் ஃபெஸ்டிவல் ஆஃப் நேஷன்ஸ் (Festival of Nations) நிகழ்ச்சி, இந்தாண்டு மே இரண்டாம் தேதி, வியாழக்கிழமையன்று தொடங்கி ஐந்தாம் தேதி, ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்று முடிந்தது. 86 ஆண்டுகளாக நடைபெறும் இந்த நிகழ்ச்சி, அமெரிக்காவில் பல்வேறு இனக்குழுக்கள் சங்கமிக்கும் நிகழ்வுகளில் பழமையான ஒன்றாகும். கிட்டத்தட்ட நூறு இனக்குழுக்கள் இந்த நிகழ்வில் […]
பான் ஏசியன் ஆர்ட்ஸ் ஃபெஸ்டிவல் 2019
பல்வேறு ஆசியக் கலைக்குழுக்கள், கலைஞர்கள் கலந்துகொண்ட பான் ஏசியன் ஆர்ட்ஸ் ஃபெஸ்டிவல், ப்ளுமிங்டனில் இருக்கும் மால் ஆஃப் அமெரிக்கா பேரங்காடியில் மே 4ஆம் தேதியன்று நடைபெற்றது. காலை பதினொரு மணியிலிருந்து இரவு எட்டு மணி வரை இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்திய, சீன, ஜப்பானிய இசைக்குழுக்களும், நடனக்குழுக்களும் இதில் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். பரத நாட்டியம், காவடி, கரகம் போன்றவற்றுடன், தமிழ் திரைப்பாடல்களுக்கும் தமிழ்க்குழுக்கள் நடனமாடின. நிகழ்ச்சிக்காக வந்திருந்த பார்வையாளர்களுடன், பேரங்காடிக்கு வந்தவர்களும் பார்வையாளர்களாக மாறி நிகழ்ச்சியைக் கண்டுக்களித்தனர். […]
மினசோட்டாத் தமிழ்ச்சங்கப் பள்ளியின் 11ஆவது ஆண்டு விழா
மினசோட்டாத் தமிழ்ச்சங்கப் பள்ளியின் 11ஆவது ஆண்டு விழா ஏப்ரல் 20ஆம் தேதி ஐசன்ஹோவர் சமூகக்கூடத்தில் நடந்தது. மதியம் 2 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழா, மாலை ஆறரை மணிவரை நடைபெற்றது. பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோரது பங்களிப்புடன் பல்வேறு வகை நிகழ்ச்சிகள் மேடையேற்றப்பட்டன. பாடல், நடனம், நாடகம், இசை, பேச்சு என அனைத்துப் பிரிவுகளிலும் மாணவர்களது திறன் அங்கு வெளிப்பட்டது. நிகழ்ச்சிக்கு வந்தோரை வரவேற்று பேசிய பள்ளியின் இயக்குனர் திரு. பாலமுருகன் ராமசாமி, பள்ளியின் […]
நாட்டிய மஞ்சரி நடனப் போட்டி 2019
ஏப்ரல் 14ம் தேதி மினசோட்டா எடைனா நகரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆலயத்தில், தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நடனப் போட்டிகள் நடைபெற்றன. கோயில் நிர்வாகத்தினரும், தன்னார்வல தொண்டர்களும் சேர்ந்து இந்த விழாவைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில உங்களுக்காக ராஜேஷ் கோவிந்தராஜன்
சின்மயா மிஷனின் வண்ண கொண்டாட்டம் 2019
ஏப்ரல் 20ம் தேதி மினசோட்டா சின்மயா மிஷன் சார்பில் வண்ண (ஹோலி) கொண்டாட்டம் உட்பரி நகரத்தில் அமைந்துள்ள ஈஸ்ட் ரிட்ஜ் உயர் நிலை பள்ளியில் நடை பெற்றது. உட்பரி நகர மேயர் திருமதி ஆன் பர்ட் (Anne Burt) குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். சின்மயா மிஷன் உள்ளூர் அமைப்பின் தலைவி மற்றும் மாநிலத் தலைவர் சிறப்புரை ஆற்றினார்கள். ட்வின் சிட்டிஸில் உள்ள இந்தியர்கள் பலரும் இவ்விழாவில் கலந்து கொண்டார்கள். அரங்கில் சிறிய கடைகள் […]