நிகழ்வுகள்
சின்மயா மிஷனின் வண்ண கொண்டாட்டம் 2019
ஏப்ரல் 20ம் தேதி மினசோட்டா சின்மயா மிஷன் சார்பில் வண்ண (ஹோலி) கொண்டாட்டம் உட்பரி நகரத்தில் அமைந்துள்ள ஈஸ்ட் ரிட்ஜ் உயர் நிலை பள்ளியில் நடை பெற்றது. உட்பரி நகர மேயர் திருமதி ஆன் பர்ட் (Anne Burt) குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். சின்மயா மிஷன் உள்ளூர் அமைப்பின் தலைவி மற்றும் மாநிலத் தலைவர் சிறப்புரை ஆற்றினார்கள். ட்வின் சிட்டிஸில் உள்ள இந்தியர்கள் பலரும் இவ்விழாவில் கலந்து கொண்டார்கள். அரங்கில் சிறிய கடைகள் […]
ஈஸ்டர் முட்டை வேட்டை 2019
ஈஸ்டர் என்பது இயேசுநாதர் மறைந்தபின் உயிர்த்தெழுந்ததைக் குறிக்கும் திருவிழா. இவ்விழாவை ஒட்டி நடைபெறும் ஈஸ்டர் முட்டை வேட்டை (Easter Egg hunt) குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த நிகழ்வாகும். இந்த வருடம் மினசோட்டா மாநிலத்தில் உள்ள உட்பரி நகரில் ஏப்ரல் 13ம் தேதி இந்த விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் எடுத்த புகைப்படம் உங்களுக்காக:
ஹோலி 2019
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத பௌர்ணமி தினத்தில் ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. வசந்த காலத்தை வரவேற்கும் விதமாகவும், மக்களிடம் புன்னகையையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டுவதைக் குறிக்கோளாக் கொண்டும் ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஹோலிப் பண்டிகையன்று ஒருவரை ஒருவர் சந்தித்து, வாழ்த்துக்களைத் தெரிவித்து, கலர்ப் பொடிகளைத் தூவியும், வண்ண நீரைப் பீய்ச்சி அடித்தும், திலகமிட்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். இந்தப் பொடி காற்றில் உயரப் பறந்து தேவர்களையும் மகிழ்விப்பதாக ஐதீகம். வட மாநிலங்களில் இந்தப் பண்டிகையை வண்ண மயமாக, மிகவும் விமரிசையாக் […]
2019 மினசோட்டா மாநிலத் தமிழ்த் தேனீப் போட்டிகள்
2019 ஆண்டின் மினசோட்டா மாநிலத்தின் தமிழ்த் தேனீக்கான போட்டிகள் மார்ச் மாதம் 17ஆம் தேதி ஞாயிறன்று மினியாபொலிஸ் நார்த் ரீஜினல் நூலகத்தில் நடைபெற்றன. முதலாம் மற்றும் இரண்டாம் நிலை மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும், மூன்று முதல் ஐந்தாம் நிலை மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும், ஆறாம் நிலை மற்றும் அதற்கு மேற்பட்ட நிலை மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும் என மொத்தம் மூன்று பிரிவுகளில் இப்போட்டிகள் நடைபெற்றன. சிறுவயது மாணவர்கள் பெரும் திரளாக இப்போட்டிகளில் கலந்துகொண்டு, சிறப்பாகத் தங்கள் தமிழ்த் […]
குளிர்காலப் பொழுதுபோக்கு விளையாட்டு
அமெரிக்காவின் மினசோட்டா மாநிலம் குளிர் மிகுந்திருக்கும் பிரதேசமாகும். பனிப்பொழிவும் இங்கு அதிகம். குளிர்காலங்களில் தொடர்ந்து சில நிமிடங்கள் வெளியில் நின்றாலே உறைந்துபோய்விடக் கூடிய அளவுக்கு வெப்பநிலை, பூஜ்யத்துக்கு 50 டிகிரி (-50 F) குறைவாகயிருக்கும் தினங்களும் இங்குண்டு. குளிர்காலங்களில், சிறுவர்களுக்கு வெளியே சென்று விளையாட முடியாத நிலையில் பொழுதைக் கழிப்பது மிகப் பெரிய சவால். ஆனால் இங்குள்ள நிறுவனங்கள் சில, சிறுவர்களின் இந்தத் தவிப்பைப் போக்கும் வகையில் புதிய வகையான, பனிக்காலங்களுக்கேற்றதான விளையாட்டுகளை உருவாக்கிய வண்ணம் […]
செயிண்ட் பாட்ரிக்ஸ் தினம் – 2019
வருடந்தோறும் செயிண்ட் பால் நகரில் கொண்டாடப்படும் செயிண்ட் பேட்ரிக்ஸ் தின அணிவகுப்பு இந்த ஆண்டும் மார்ச் 16, 17 தினங்களில் கொண்டாடப்பட்டது. இந்தக் கொண்டாட்டத்தைப் பற்றிய விபரம் அறிய எங்களது களஞ்சியத் தொகுப்பினைக் காணவும். செயிண்ட் பாட்ரிக்ஸ் தினம் – 2018 செயிண்ட் பாட்ரிக்ஸ் தினம் – 2016 செயிண்ட் பாட்ரிக்ஸ் தினம் – 2014 மார்ச் 16 அன்று நடைபெற்ற அணிவகுப்பின் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில, உங்களுக்காக. ராஜேஷ் கோவிந்தராஜன்
புல்வாமா – சேமக் காவல் படையினர்க்கு நினைவஞ்சலி
மினசோட்டாவிலுள்ள பி எஸ் கரோகி (PS Karaoke Klub LLC) அமைப்பினர் புல்வாமா தாக்குதலில் பலியான மத்திய சேமக் காவல் படையினர்க்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக, கீதா ஆசிரமத்தில் ஃபிப்ரவரி 24ஆம் தேதி கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள். இராணுவத்தினருக்குப் புகழ் சேர்க்கும் பாடல்களைப் பாடி அவர்களின் சேவைகளை நினைவுகூர்ந்து நன்றி செலுத்தினர். நிகழ்ச்சியில், பாதிக்கப்பட்ட துணை இராணுவத்தினரின் குடும்பத்துக்கு உதவும் வகையில் நிதி சேகரிக்கப்பட்டது. இந்நிதி ‘இந்தியாஸ் பிரேவ் ஹார்ட்ஸ்’ (India’s Bravehearts) எனும் தொண்டு நிறுவனத்துக்கு […]
தமிழ்த் திருவிழா 2019
மினசோட்டாத் தமிழ்ச் சங்கப் பள்ளிக்கூடத்தில் கடந்த ஃபிப்ரவரி 23ஆம் தேதி ‘தமிழ்த் திருவிழா 2019’ நடைபெற்றது. இங்கு பயிலும் குழந்தைகள் வெவ்வேறு தலைப்புகளில் விளக்கப்படங்கள், மாதிரி அமைப்புகள் செய்து, பார்வையாளர்களுக்கு அவை குறித்த விளக்கமும் அளித்தனர். பழங்காலத் தமிழ்ப் புலவர்கள், புராணங்கள், அரசர்கள், தமிழக நகரங்கள் போன்றவற்றை அறிந்து, அவை குறித்த தகவல்கள், புகைப்படங்களைச் சேகரித்து அவற்றைக் காட்சிப்படுத்தியிருந்தனர். மாதிரிப் படங்கள் மற்றும் முப்பரிமாண மாதிரி அமைப்புகள் மிகவும் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அரசர்கள், புலவர்கள் மற்றும் நகரங்களின் […]
2019 உலகத் தாய்மொழித் தினப் பேச்சுப் போட்டி
உலகத் தாய்மொழி தினத்தையொட்டி, ஃபிப்ரவரி 23ஆம் தேதியன்று ஹாப்கின்ஸ் வெஸ்ட் ஜூனியர் பள்ளி வளாகத்தில் இளையோருக்கான பேச்சுப் போட்டியை மினசோட்டாத் தமிழ்ச்சங்கப் பள்ளி நடத்தியது. இந்தப் போட்டியில் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, கொடுக்கப்பட்டிருந்த தலைப்புகளில் அழகாகப் பேசினார்கள். ஒவ்வொரு வருடமும் இதில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும், அதில் ஆங்கிலக் கலப்பு பெருமளவு குறைந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. நான்கு பிரிவுகளில் நடத்தப்பட்ட இப்போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவர்கள் இறுதியில் அறிவிக்கப்பட்டனர். கூடவே, இதற்கு […]
சங்கமம் 2019
தைப்பொங்கலையொட்டி ஆண்டுதோறும் மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் நடத்தும் கொண்டாட்ட நிகழ்வான சங்கமம், இந்தாண்டு செயிண்ட் பால் ஹார்டிங் பள்ளியில் பிப்ரவரி 9ஆம் தேதியன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மினசோட்டாவைச் சேர்ந்த பல்வேறு குழுக்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவர்களுடன் இந்த நிகழ்ச்சியில் முத்தாய்ப்பாகத் தமிழ்நாடு கிராமியக் கலைகள் வளர்ச்சி மையத்தின் சார்பில் கண்கவர் கிராமிய இசை மற்றும் நடனக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காலை பதினொரு மணியளவில் நிகழ்ச்சிக்காக மக்கள் குழுமத் தொடங்கினர். தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் […]