நிகழ்வுகள்
ஆண்டாள் கல்யாணம்
ஏதோ ஒரு காரணத்தினால் பரம்பொருளை பிரிந்த ஜீவாத்மா, லோக வியாபாரம் என்னும் சுழற்சியில் பிறப்பு, இறப்பு என்னும் மாய வலைக்குள் சிக்கி உழல்கிறது. “அந் நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்” என்ற வாக்கிற்கிணங்க ஜீவாத்மா மீண்டும் மீண்டும் சுழன்றபடியே இருக்கிறது.அந்த சுழற்சியிலிருந்து விடுபட்டு, பரம்பொருளை அடைவதற்கு ஒரு மார்க்கமே பக்தி மார்க்கம். “பவ்யதே இதி பக்தி: ” என பக்தி தோன்றுவதற்கு முதலில் மனதில் பவ்யம் மிக அவசியம். பக்தி மார்க்கத்தில் இறைவனை உணர்ந்து […]
நன்றி நவிலல் நாள் – பிரதிக்ஷனா 5 கி.மீ, ஓட்டம் 2018
மினசோட்டா மாநிலத்தின் மேபிள் குரோவ் நகரத்தில் உள்ள இந்து கோவில் சார்பில், நன்றி நவிலல் நாளான நவம்பர் 22ம் தேதியன்று, 7வது ஆண்டாக, பிரதிக்ஷனா ஐந்து கிலோமீட்டர் ஓட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வைக் கோயில் நிர்வாகத்தினர், தன்னார்வலர்கள் பலர் துணையுடன் சேர்ந்து நடத்தினர். சிறியவர் முதல் பெரியவர் வரை சுமார் 50 பேர் இந்தப் பந்தயத்தில் பங்கேற்றனர். முதல் மூன்று இடம் பெற்றவர்களுக்குப் பரிசும், பங்கேற்றவர்கள் அனைவருக்கும் சான்றிதழும் வழங்கப்பட்டன அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில […]
வன்முறை மறுப்பு நாள் – NON VIOLENCE DAY 2018
இந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்தியின்149 ஆவது பிறந்த நாள் “வன்முறை மறுப்பு நாள்” (NON-VIOLENCE DAY) என்று கொண்டாடப்பட்டது. மினசோட்டா மாநிலத்தின் தலைநகரக் கட்டிட அரங்கில் இந்த நாளில் ஒரு பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவை இந்திய மினசோட்டா அசோசியேஷன் மற்றும் மினசோட்டாவில் உள்ள மற்ற இந்திய அமைப்புகளும் இணைந்து ஏற்பாடு செய்து இருந்தனர். ஸ்ரீவித்யா வைத்தியநாதன் இந்திய மினசோட்டா அசோசியேஷன் சார்பில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். […]
மாநாட்டுச் செய்தி அறிவிப்பு – சிகாகோ
அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம் அதன் 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, 2019-ஆம் ஆண்டு சூலை திங்கள் 3 முதல் 7 வரை சிகாகோவில் நடைபெறும் என மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது சிகாகோ, இல்லினாய், செப்டெம்பர் 15, 2018. பெருமதிப்புக்குரிய தமிழ் அறிஞர் பெருமக்களே வணக்கம். 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிகாகோ பெருநகரில், 2019-ஆம் ஆண்டு, சூலை திங்கள் 3 முதல் 7ஆம் நாள் வரை நடைபெற இருப்பதை உங்களில் பலர் அறிந்திருக்கக் கூடும். […]
மைத்ரீ – சிநேகத்தின் சங்கீதம் (Maithree: The Music of Friendship)
இசை என்னும் தங்கச் சங்கலியால் உலக மக்கள் எல்லோரையும் இணைக்க முடியும் என்பது வெறும் கூற்றல்ல. அது நிஜமாவதை நேரில் காண மினசோட்டா மக்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு. நம் மினசோட்டா வாழ் தமிழ் மக்களின் பெருமை வீணை விதூஷி நிர்மலா ராஜசேகர் என்றால் அது மிகை ஆகாது . அவரின் மைத்ரீ – சிநேகத்தின் சங்கீதம் (Maithree: The Music of Friendship) “இசைத் தட்டு” வெளியீட்டு விழா அக்டோபர் 28 ஆம் தினம் தி […]
அமெரிக்க கொலு 2018
இந்தியாவில் இருந்து பல ஆயிரம் மைல்கள் தள்ளி இருந்தாலும், நமது கலாச்சாரம் நம்முடன் என்றும் நெருக்கமாகத் தான் இருக்கிறது. கொலு வைக்கும் வழக்கம் உள்ள குடும்பத்தினர், அந்த வழக்கத்தைக் கைவிடாமல் இங்கும் மினசோட்டாவில் குடும்பத்தினருடன், நண்பர்களுடன் இணைந்து கொலு வைத்து நவராத்திரியைக் கொண்டாடி வருகின்றனர். இவ்வருடம் வைக்கப்பட்ட கொலு புகைப்படங்கள் சில இங்கே உங்கள் பார்வைக்கு. வெங்கட் – உமா குடும்பத்தினர் மாறன் – அர்ச்சனா குடும்பத்தினர் சுப்பு – லக்ஷ்மி குடும்பத்தினர் பிரபு – ராதிகா குடும்பத்தினர் […]
நவராத்திரி திருவிழா 2018
முப்பெருந்தேவியரான லட்சுமி, சக்தி, சரஸ்வதி ஆகிய மூவரையும் போற்றும் விதமாகக் கொண்டாடப்படுவது நவராத்திரி. நவம் என்ற சொல்லுக்கு வட மொழியில் ஒன்பது என்று பொருள். ஒன்பது நாட்கள் நடைபெறும் இவ்விழாவை இந்தியாவின் பல பகுதிகளில் பலவிதமாகக் கொண்டாடுகிறார்கள். குஜராத் மாநிலத்தில் இவ்விழா நடனத் திருவிழாவாக அனுசரிக்கப்படுகிறது. ஓவ்வொரு இரவும் மக்கள் ஒன்று கூடி நடனமாடுவார்கள். இந்த வகையான நடனத்தை கார்பா (garba) அல்லது தாண்டிய (dandiya) என்று அழைப்பார்கள். இந்த ஆண்டு மினசோட்டா மாநிலத்தில் உள்ள குஜராத் […]
உட்பெரி நாட்கள் திருவிழா 2018
வட அமெரிக்காவில் கோடை காலம் முடியப் போகும் காலம்; பள்ளி மற்றும் கல்லூரி ஆரம்பிக்கும் முன்பு அனைத்துப் பெருநகரங்களும் அவற்றைச் சுற்றியுள்ள சிறு நகரங்களிலும் விழா எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இவ்வாறு காட்சிகள் நடத்துவதில், அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலம் முதல் இடத்திலும் மினசோட்டா மாநிலம் இரண்டாம் இடத்திலும் உள்ளனவாம். மினசோட்டா மாநிலத்தில் உட்பெரி என்ற நகரத்தில் நடைபெற்ற ”உட்பெரி டேய்ஸ் ()” மிகவும் சிறப்பான ஒன்றாகும். இந்த நகரம் உருவாகி 50 வருடங்கள் ஆனதைக் கொண்டாடும் விதமாக […]
ரொறோன்ரோ தமிழர்த் தெரு விழா
வருடா வருடத் தமிழர் கோடைவிழாவாகிய தெரு விழா மீண்டும் கோலாகலமாக ஆகஸ்ட் 25-26 தேதிகளில் ரொறோன்ரோ நகரின் ஸ்காபரோ பகுதியில் மார்க்கம் வீதியில் நடைபெற்றது. குறிப்பாக மக் நிக்கல் அவனியூ விற்கும் பாஸ்மோர் அவனியூவிற்கும் இடையே நடைபெற்றது. பண்டைய யாழ்ப்பாண ஆஸ்டின் மார்டின் கார்களும், ஆகா, ஓகோ என்று சுவைக்க ஐஸ்கிரீம் பழங்களும், சுடச்சுடக் கூழும் கிடைக்கப் பெற்றன. யாழ்ப்பாண மண்வாசனை மறவாதவருக்கு பனம் பண்டங்கள் பலவும், பசியாறப் பலவகைப் பணியாரங்களும், அப்பம்,தோசை கொத்து உரொட்டிகளும் கிடைக்கப்பெற்றன. […]
மினசோட்டாவில் இந்திய சுதந்திர தின விழா 2018
இந்தியாவின் 72வது சுதந்திர தினத்தை மினசோட்டாவில் உள்ள ‘இந்தியா அசோசியேஷன் ஆஃப் மினசோட்டா’ (IAM) அமைப்பினர், செயின்ட் பாலில் உள்ள மாநில தலைமைக் கட்டிட மைதானத்தில் கடந்த 18ம் தேதி நடத்தினர். விழா மைதானத்தில் பல வகையான இந்திய உணவகங்கள், சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு இடங்கள், குழந்தைகள் விளையாட பல்வேறு விளையாட்டுப் பகுதிகள், மெஹந்தி கூடங்கள் என நிரம்பி வழிந்தன. இவை தவிர மினசோட்டாவிலுள்ள இந்தியச் சங்கங்களின் கூடங்களும் மற்ற நிறுவன கடைகளின் கூடாரமும் இடம்பெற்றிருந்தன. சுமார் இரண்டு […]