நிகழ்வுகள்
மரபிசைக் கலைஞர்களுடன் ஒரு சந்திப்பு – பாகம் 2
(பாகம் 1) கேள்வி (சிலம்பரசன்): உங்களுக்குப் பல கருவிகள் வாசிக்கத் தெரியும் என்று கூறினீர்கள். ஒரு கருவி கற்றுக் கொண்டால் மற்ற கருவிகள் வாசிக்க கற்றுக்கொள்வது சுலபமா? சிலம்பரசன்: சொல்கட்டு எடுத்து கொண்டால், லயம் சம்பந்தப்பட்ட எல்லாக் கருவிகளுக்கும் “தா தீ தம் நம் தகிட” போன்று சொல்கட்டுகள் அமைந்திருக்கும். ட்ரம்ஸ் போன்ற கருவிகள் மேற்கத்தியக் கருவிகள். அதன் வாசிப்பு முறையே வேறு. அதற்கும் வாத்தியத்துக்கும் சம்பந்தம் இல்லை. ட்ரம்ஸ் கருவிக்கு வெஸ்டர்ன் நோட்ஸ், நான் பயன்படுத்துவது […]
23 வது கற்பாலக்கொண்டாட்டம் (Stone Arch Bridge Festival)
ஸ்டோன் ஆர்ச் ஃபெஸ்டிவல் என்பது மினியாப்பொலிஸ் நகரில் செயின்ட் ஆந்தனி நீர்வீழ்ச்சிக்கருகே மிசிசிப்பி ஆற்றைக் கடக்க உதவும் பண்டைய கற்பாலத்தில் கொண்டாடப்படும் கோடைக்கால விழாவாகும். இது வெள்ளிக் கிழமை ஜூன் 16இல் இருந்து ஞாயிற்றுக் கிழமை ஜூன் 18 வரை நடைபெற்றது. வானம் முகில் பிளந்து மழை பொழிவேன் என மிரட்டினும் மழையினால் கொண்டாட்டங்களிற்குப் பாதிப்பில்லை. இம்முறை மினசோட்டாக் கோடை வெய்யில் உக்கிரம் இல்லாமல் யாவும் இதமான கால நிலை விழாவாக அமைந்தது. இது மிசிசிப்பி […]
கர்நாடக இசை நிகழ்ச்சி
மினசோட்டா மாநிலத்தின் மேப்பிள்க்ரோவ் நகரில் அமைந்துள்ள ஹிந்து தேவாலயத்தில், ஜூன் மாதம் 10ஆம் திகதி கர்நாடக இசைக்கச்சேரி விமரிசையாக நடைபெற்றது. இதில், பிரபல கர்நாடக இசைக் கலைஞர்களான ஸ்ரீசாய் ஸ்ரீனிவாசன், ஸ்ரீ சங்கரன் நம்பூதிரி மற்றும் வயலின் வித்வான் பகல ஜெயப்பிரகாஷ், புல்லாங்குழல் வித்வான் கோ. நடராஜ் மற்றும் தவில் வித்வான் கணேஷன் கஜேந்திரன் ஆகியோர் பங்கேற்று நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர். அந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில வாசகர்களின் பார்வைக்கு: – புகைப்படம்: இராஜேஷ் கோவிந்தராஜன்.
மினியாப்பொலிஸ் அரங்கு அருகாமை உணவகங்கள்
மினியாப்பொலிஸ் நகர விருந்தாளிகள் மற்றும் தமிழ் விழாவிற்கு வரும் அன்பர்களும் யாவரும் இந்திய உணவை வேண்டினால் வான்பாதை இணைப்பு முலம் இலகுவாகச் சென்று அடையக் கூடிய உணவகங்கள்: 1 Dancing Ganesha 2 Bombay Bistro 820 S Marquette Ave, Minneapolis, MN 55402 (612) 312-2800 3 Kadai Indian Kitchen 601 S Marquette Ave #200, Minneapolis, MN 55402 (256) 472-2545 4 Bombay Palace 11 […]
ரிது – பருவக்காலங்களின் கோர்வை
மினியாபொலிஸ் நகரில் ஜனவரி மாதத்தில் “ரிது (RITU) – பருவங்கள்” எனும் நாட்டிய நிகழ்ச்சி நடந்தேறியது. ரிது எனும் சம்ஸ்கிருத சொல், தெற்காசிய நாடுகளில்- குறிப்பாக இந்தியா, பங்களாதேஷ், நேபால், இலங்கை போன்ற நாடுகளில் நிலவும் ஆறு பருவகாலங்களைக் குறிப்பிடும் பதமாகும். இப்பருவக் காலங்களை வரிசைப்படுத்தி நான்காம் நூற்றாண்டில், காளிதாசரால் இயற்றப்பட்ட ரிது சம்ஹாரம் எனும் இலக்கியத்தின் அடிப்படையில் ‘கலா வந்தனம்’ எனும் பரதநாட்டியக் குழுவினர், நாட்டிய நிகழ்ச்சி ஒன்றை ஒருங்கிணைத்து அமைத்திருந்தனர். இந்நிகழ்ச்சி , […]
மரபிசைக் கலைஞர்களுடன் ஒரு சந்திப்பு – பாகம் 1
மினசோட்டா தமிழ்ச்சங்கத்தினர், தமிழ் மரபு கலைகளைப் போற்றும் விதத்தில் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தமிழர் இசையான நாதஸ்வரம், தவில் மற்றும் பறையிசையை இங்குள்ளவர்கள் பயிலும் வண்ணம் தமிழகத்திலிருந்து இவ்விசைக் கலைஞர்களை வரவழைத்துள்ளனர். திரு. ராமச்சந்திரன், நாதஸ்வர இசையிலும், திரு. சிலம்பரசன் தவில் இசைப்பதிலும், திரு. சக்தி பறையிசையிலும் மிகுந்த தேர்ச்சிப் பெற்றவர்கள். கடந்த சில வாரங்களாக இவர்கள், மினசோட்டாவில் பயிற்சிப் பட்டறையை நடத்தி வருகின்றனர். பனிப்பூக்கள் சார்பில் இக்கலைஞர்களுடன் ஒரு நேர்முக […]
மினசோட்டாத் தமிழர்கள் பல்தேசகொண்டாட்டத்தின் மத்தியிலே மங்கள மத்தாப்பு
செயின்ட் பால் நகர ரிவர் சென்டரில் நாதஸ்வர கானம் தனியாகத் தமிழன் செவிக்குச் செழிப்பைத் தருகிறது. அதனுடன் வருகை தந்த யாவரும் அவர் இதயத் துடிப்புடன் இன்பமாக இணைகிறது இனிய தவில் மேளம், அதி உற்சாகத்துடன் கால்களைச் சும்மா ஒரிடத்தில் நின்று பார்க்காமல் துள்ள வைக்கிறது ஆடி அடிக்கும் தமிழ்ப்பறை வித்தகர் அருகில் கூடிக் குதிக்கிறார்கள் இளம் நாட்டியத் தம்பதிகள். ஏறத்தாழ 90 சமூகங்களில் 30 மேற்பட்ட சமூகக் கண்காட்சிக் கூடாரங்களில் தமிழர் கூடாரத்தின் கும்மாளம் வருவோர் […]
மே மாதம் மினசோட்டா மீன் பிடிப்பு ஆரம்பம்
பல்லாயிரம் மாநில வாசிகள் தம் பனிகாலத்தைப் பின்வைத்து கோடையில் காலெடுத்து வைக்கும் முதல் பொழுதுபோக்கு நாள் மினசோட்டா மீன் பிடிப்பு தொடக்க நாள் எனலாம். இது வழமையாக அன்னையர் தினத்திற்கு முதல் நாள் வருவதினால் சில வீடுகளில் தகராறு ஏற்படுவதுண்டு. எனினும் மினசோட்டாவில் மீன் பிடிக்கும் அன்னையருக்கு இது இரு கொண்டாட்டங்களினால் உவகையடையும் நாள் என்று நாம் கருதிக்கொள்ளலாம். இயற்கையன்னை தனது எழிலை இதமாகப் படைத்துள்ளாள் எம் மாநிலத்தில். மினசோட்டா மாநிலத்தை 10,000 ஏரி மாநிலம் என்று […]
மினசோட்டா பன்னாட்டு பன்சமூகக் கொண்டாட்ட விழா 2017
பன்தேச விழாவானது குதூகலமாக சென்ற 85 வருடங்களாக மினசோட்டா மாநில சர்வதேச நிறுவனத்தினால் (The International Institute of Minnesota) நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் புதிதாகக் குடிபுகுந்த அமெரிக்கரையும் அவர்களின் கலாச்சாரத்தையும் மினசோட்டா மக்களுடன் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டது. இந்தக் கொண்டாட்டம் பனிகாலம் மாறி இளவெனில் காலத்தின் வெய்யில் உந்தலில் உள்ளூர் மக்கள் உற்சாகமாகக் கலந்து கொள்ளும் வகையில் அழகிய ஆற்றோரக் கரை மண்டபத்தில் வருடந்தோறும் நடைபெறுகிறது. இந்த ஆண்டு இவ்விழா மே மாதம் 4இல் […]