நிகழ்வுகள்
வாழையிலை விருந்து
மினசோட்டா தமிழ் சங்கம் மூன்றாவது ஆண்டாக வாழையிலை விருந்து விழாவை, இந்தாண்டு ஏப்ரல் 8ஆம் தேதியன்று ஹாப்கின்ஸ் கம்யூனிட்டி செண்டரில் நடத்தியது. முந்தைய ஆண்டுகளைப் போல, இந்தாண்டும் தமிழர் பாரம்பரிய உணவு வகைகளை, வாழையிலையில் பரப்பி விருந்து படைத்தனர். முருங்கைக்காய் சாம்பார், மோர் குழம்பு, வேப்பம்பூ ரசம், வெண்டைக்காய் கூட்டு, திணை பாயாசம், அப்பளம் என சுவையான தமிழர் விருந்து, வந்திருந்த விருந்தினரைக் கவர்ந்தது. அன்றைய நிகழ்வின் புகைப்படங்கள், உங்கள் பார்வைக்கு இங்கு. சரவணகுமரன்
எஸ்பிபி 50 – சிகாகோ இசைக் கச்சேரி
“பாடும் நிலா” என்று இசை ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும், பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் ஐம்பது ஆண்டுத் திரையுலகப் பயணத்தைக் கவுரவிக்கும் விதமாக, எஸ்பிபி 50 என்ற பெயரில் உலகமெங்கும் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார் அவருடைய புதல்வரான எஸ்.பி.பி.சரண். இந்தத் தொடர் இசை கச்சேரிகளின் ஒரு நிகழ்ச்சி, சிகாகோ நகர் ஓடியம் அரங்கில் ஏப்ரல் 15 ஆம் தேதியன்று நடந்தது. இந்த இசை நிகழ்ச்சிக்குத் திரையிசை ரசிகர்கள் குடும்பத்துடன் அக்கம் பக்கத்து மாநிலங்களில் இருந்தும் வந்திருந்தனர். தமிழ், […]
நாட்டிய மஞ்சரி நடனப் போட்டி 2017
ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி ஸ்ரீ நாட்டியமஞ்சரிக் குழுவினரின் நடனப் போட்டி மினசோட்டா மாநிலத்தில் ப்ளூமிங்க்டன் நகரிலுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலில் நடைபெற்றது. இந்த நிகழ்வு தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட ஒன்று. கடந்த ஆண்டு இப்போட்டியில் பல குழுக்கள் இடம் பெற்றிருந்தனர். எனவே இந்த ஆண்டு போட்டியை 11 மணிக்குத் துவங்கி இரவு 7 மணி வரை நடத்தி, போட்டியில் பங்கேற்றவர்களுக்குப் பரிசளித்து சிறப்பித்தனர். இந்த ஆண்டும் பரதநாட்டியம், பாலிவுட் மற்றும் நாட்டுப்புற நடனங்கள் […]
MN தமிழ் பள்ளியின் ஆண்டு விழா 2017
ஏப்ரல் 8ம் தேதி பள்ளியின் 9ம் ஆண்டு விழா ஹாப்கின்ஸ் கம்யூனிட்டி அரங்கில் நடைபெற்றது. மதியம் 3 மணிக்கு பள்ளி ஆண்டு விழா ஆரம்பித்து இரவு 7 மணி வரை நடைபெற்றது. பள்ளி ஆண்டு விழாவை, பள்ளிக்குழுவினர், உட்பரி ஆசிரியர்கள், ஷாப்கின்ஸ் ஆசிரியர்கள் மற்றும் 8ம் வகுப்பு மாணவ மாணவியர்கள் சேர்ந்து ஏற்பாடு செய்திருந்தார்கள். 8ம் வகுப்பு மாணவ மாணவியர்கள் விழாவைத் தொகுத்து வழங்கினார்கள். சிறப்பு விருந்தினராக பேராசிரியர் திரு. குமார் மல்லிகார்ஜுனன் பங்கேற்று வாழையிலை விருந்து […]
தமிழ்த் தேனீ 2017
மார்ச் 26, 2017 ஆம் தேதியன்று மினசோட்டா தமிழ்ச்சங்கப் பள்ளியின் சார்பில் “தமிழ்த் தேனீ ” போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டி, பொதுப் பள்ளிகளில் அவரவர் படிக்கும் நிலைகளை வைத்து பிரிக்கப்பட்ட மூன்று பிரிவுகளில் பல சிறுவர், சிறுமியர் கலந்துகொண்டனர். போட்டியில் பங்கேற்றவர்களுக்கு 200 சொற்கள் கொண்ட பட்டியல் முன்னதாக அனுப்பப்பட்டிருந்தது. அதிலிருந்து எடுக்கப்பட்ட சொல்லை நடுவர்கள் முன்னிலையில் எழுதி அடுத்தடுத்த சுற்றுகளுக்குப் போட்டியாளர்கள் முன்னேறினர். கடுமையான போட்டி நிலவிய பல சுற்றுகளுக்குப் பிறகு, ஒவ்வொரு பிரிவிலும் […]
CONNECT INDIA 2017
இந்தியா அசோஸியேஷன் ஆஃப் மினசோட்டா (IAM) சார்பில் பிப்ரவரி 11ம் தேதி அன்று “CONNECT INDIA 2017” நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மினசோட்டாவில் உள்ள அனைத்து இந்திய அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் பங்கேற்றனர். அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில உங்கள் பார்வைக்கு. ராஜேஷ்
கைப்பந்து விளையாட்டுப் போட்டி 2017
மினசோட்டா மலையாளி அசோஸியேஷன் சார்பில் மார்ச் மாதம் 25ஆம் நாள், கைப்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் பல்வேறு அணிகள் பங்கேற்றன. இந்த போட்டி திரு. சீதா காந்த டேஷ், திரு. ப்ருஸ் கோரி மற்றும் மலையாளி அசோஸியேஷன் நிர்வாக உறுப்பினர்கள் தலைமையில் நடைபெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு பனிப்பூக்கள் சார்பாக வாழ்த்துகள். அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில உங்களுக்காக. ராஜேஷ்
சங்கமம் 2017
தை மாதத்தின் பிறப்பை , அறுவடை திருநாளாக , உழவர் உழைப்பின் சிறப்பாக, பொங்கல் திருநாளாக தமிழினம் கொண்டாடி வருகிறது. தமிழ் மொழியை முன்னிறுத்தியே பணிகள் செய்யும் மினசோட்டா தமிழ் சங்கமும் இவ்வாண்டு பொங்கல் தினத்தை சனவரி 15 ஆம் தேதி அன்று “தமிழர் மரபு தினமாக” பெரும் விமரிசையாக கொண்டாடியது. தமிழ் பாரம்பரிய உணவான கருப்பட்டி பொங்கல், சாம்பார், உருளை வறுவல், பலகறிக் கூட்டு, தயிர், வடை என வீட்டு உணவு போலவே சுவையுடன் மதிய […]
டிம் ஹார்ட்டன்ஸ் மினசோட்டாவில்
ஓ கனடா டிம் ஹார்ட்டன்ஸ் மினசோட்டாவுக்கும் வந்தாச்சா? கனடாவிற்கும், மினசோட்டாவிற்கும் இடையே பயணிக்கும் தமிழ் நெஞ்சங்களே, உங்கள் காஃபி சுவைக்கும் நாக்கிற்கு இன்னும் ஒரு அனுகூலம். கனடாவில் பல தமிழர் சுவைத்து மகிழும் காஃபி டபிள் டபிள், மற்றும் டிம் பிட்ஸை (Tim – bits) இனி விமானம் பிடித்துப் போய் வாங்கத் தேவையில்லை. சுடச் சுட மினசோட்டா மாநிலத்திலேயே பெற்றுக் கொள்ளலாம், நவெம்பர் மாதம் நன்றி நவிலல் நாட்களுடன் நாக்குக்கு நல்சுவை தரும் பிரபல கனடா […]
மினசோட்டா மலையாளி அமைப்பு கிறிஸ்துமஸ் விழா 2016
மினசோட்டா மலையாளி அமைப்பு (Minnesota Malayalee Association) சார்பில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழா ஹாப்கின்ஸ் சமுதாயக் கூடத்தில் (Hopkins Community Center) நடைபெற்றது. இந்த விழாவைச் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர். சிறப்பு அம்சமாக மதிய உணவு விருந்தைச் சொல்லலாம். தன்னார்வலர்கள் சேர்ந்து அங்குள்ள சமையல் கூடத்தில் சமைத்து அனைவருக்கும் விருந்து அளித்தனர். மதிய உணவுக்குப் பிறகு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. மொத்தம் இருபத்து மூன்று கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. இவற்றில் […]