நிகழ்வுகள்
மினசோட்டா ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல்
டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் “இயல், இசை, நாடகத்தில் ஆர்வம் கொண்ட பெருமக்களே!! உங்களுக்கு ஒரு நற்செய்தி. வரும் ஆகஸ்ட் நான்காம் தேதி முதல் பதினான்காம் தேதி வரை, மினியாபோலிஸில் ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல் (Fringe Festival) நடக்கப் போகிறது. அதிலும், மிக முக்கியமாக, தமிழின் ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் தெருக்கூத்தாக மேடையேறப் போகிறது. மதுரையை எரித்த கண்ணகியை, மினசோட்டாவில் காண […]
லிட்டில் மெக்காங்க்
தென்கிழக்காசிய நாடுகளான சீனா, மியான்மர், தாய்லாந்து, கம்போடியா, வியாட்நாம், லாவோஸ் ஆகியவற்றின் இடையே ஓடுவது, மெக்காங்க் ஆறு. இந்த நாடுகளுக்கிடையான வணிக மற்றும் கலாச்சாரப் பரிமாற்றங்களில், இந்த ஆறு முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த நாடுகளைச் சேர்ந்த மக்கள் பெருமளவில் வசித்து, வணிகம் புரியும் இடமான, செயிண்ட் பால் நகரில் உள்ள யூனிவர்சிட்டி அவின்யூவில், மெக்காங்க் ஆற்றின் பெயரில் வருடம் தோறும் ‘Little Mekong Night Market’ என இரவுச் சந்தை நடத்துகிறார்கள். இந்த ஆண்டு, ஜூலை 23ஆம் […]
இளையோர் பட்டறை
மினசோட்டா தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ்ப் பள்ளி இணைந்து வருடந்தோறும் நடத்தும் கோடைக் காலத் தமிழ்க் கலை, பண்பாட்டு இளையோர் பட்டறை (Tamil Immersion Youth Camp), இந்த ஆண்டு ஜூலை 30 ஆம் தேதியன்று மினசோட்டா யங் அமெரிக்கா நகரில் இருக்கும் பெய்லர் ரிஜினல் பார்க்கில் (Baylor Regional Park) நடைபெற்றது. இந்தப் பட்டறையின் நோக்கம், நம் தமிழ்க் குழந்தைகள் இங்கு அமெரிக்காவில் தவறவிடும் தமிழ்ப் பண்பாட்டு அனுபவத்தை மீட்டெடுத்து அவர்களுக்குக் கொடுப்பதே. தமிழ்ச் சங்க […]
ஆகஸ்ட் மாத மினசோட்டா நிகழ்வுகள்
வாஷிங்டன் கவுண்டி கண்காட்சி – Washington County Fair 1871 இல் இருந்து நடைபெறும் கண்காட்சி இது. குழந்தைகளுக்கான விளையாட்டுகள், ஏராளமான காட்சிப் பொருட்கள், கலை நிகழ்ச்சிகள் எனப் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த கண்காட்சி. August 3 – 7 7 AM – 10 PM 12300 North 40th Street Lake Elmo, Minnesota 55042 மேலும் தகவலுக்கு – https://www.washingtoncountyfair.org/ மஹா கும்பாபிஷேகம் – Maha Kumbha Abhishekam ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில் […]
2௦16 மினசோட்டா மாநிலத் திருக்குறள் போட்டி
உலகப் பொதுமறையாம் திருக்குறளின் சிறப்புகளை இளந்தலைமுறையினர் அறிந்து போற்றும் வகையில், மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் மற்றும் மினசோட்டாத் தமிழ்ச் சங்கப் பள்ளி இணைந்து, மினசோட்டா மாநிலப் போட்டிகளின் ஒரு பகுதியாக திருக்குறள் போட்டியினை நடத்தி வருகின்றன. பனிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான இப்போட்டியில், பலரின் கவனத்தை ஈர்த்துப் பங்கேற்கச் செய்யும் வகையில் பொருளுடன் சொல்லப்படும் ஓவ்வொரு திருக்குறளுக்கும், ஒரு வெள்ளி வழங்கும் புதுமையான திட்டத்தினை இவர்கள் பல ஆண்டுகளாக பின்பற்றுகின்றனர். சென்றாண்டின் போட்டியில் அனைத்துக் குறள்களையும் […]
2016 மினசோட்டாத் தமிழ்ச்சங்கக் கோடை மகிழுலா
மினசோட்டாத் தமிழ்ச்சங்கம் வருடா வருடம் ஒருங்கிணைத்து நடத்தும் கோடை மகிழுலா, இவ்வருடம் ஜூலை 9 ஆம் தேதியன்று ப்ளூமிங்க்டன் நகரில், ஹைலேண்ட் பார்க் ரிசர்வில் (Hyland Lake Park Reserve) நடந்தது. மினசோட்டாவில் வசிக்கும் தமிழ் மக்கள் பெரும்பாலோர், இதில் குடும்பத்துடன் ஆர்வமாக கலந்துக்கொண்டனர். ஏற்கனவே திட்டமிட்டப்படி, ஒவ்வொருவரும் விதவிதமான உணவுப்பொருட்களைக் கொண்டு வர, காலை பதினொரு மணிக்குத் தொடங்கிய மகிழுலா, குழந்தைகள், பெரியோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளுடன் மாலை ஐந்து மணி வரை நடைபெற்றது. தமிழகத்தில் இருந்து […]
சலங்கை பூஜை
மினசோட்டாவில் வசிக்கும் குமாரி கிரன்மாயி அவர்களின் சலங்கை பூஜை ஹாப்கின்ஸ் கம்யூனிட்டி அரங்கில் ஜூன் 4 ம் தேதி நடைபெற்றது. 12 வயதே நிரம்பிய கிரன்மாயி மேபிள் குரோவ் பள்ளியில் ஆறாம் நிலையில் படிக்கிறார். கிரன்மாயி தனது ஐந்தாம் வயதிலிருந்து பரத நாட்டியம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தாராம். ஆசிரியர் திருமதி பத்மஜா தாமிபிரகாடாவிடம் தொடங்கி, பின்பு ஆசிரியர் திருமதி சுசித்ரா சாய்ராம் அவர்களிடம் தொடர்ந்து பரத நாட்டியம் கற்றுக் கொண்டுள்ளார்.– ”கலா வந்தனம்” எனும் இந்த பரதநாட்டியப் […]
இளையராஜா சல்யூட்ஸ் தியாகராஜா
மேப்பிள் குரோவ் ஹிந்து கோவிலில் மே 27ம் தேதி இளையராஜா சல்யூட்ஸ் தியாகராஜா என்ற தலைப்பில் சைந்தவி பிரகாஷ், நிரஞ்சன், கார்த்திக், அனுஷ், ஸ்ரீராம் ரமேஷ் மற்றும் செல்வா ஆகியோர் பங்கு கொண்ட இசை நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறியது. இதற்கு சுபஸ்ரீ தணிகாச்சலம் தலைமை ஏற்றார். இந்த நிகழ்ச்சியை மினசோட்டாவில் கர்நாடக சங்கீதப் புகழ் திருமதி நிர்மலா ராஜசேகர் சிறப்பாகத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் புகழ் பெற்ற கர்நாடக சங்கீத கீர்த்தனைகளை இளையராஜா எவ்வாறு அவரது […]
தமிழிசை இது நம் மக்களிசை
ஒரு சனிக்கிழமை இரவு தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தேன். செய்வதறியாது படுக்கையிலிருந்து வெளி நடப்புச் செய்த எனக்குக் கிடைத்த அரிய காட்சியது. மதிமங்கிய பொழுதினிலும் மூன்று குமரிகள் ஒய்யாரமாக உலவிக் கொண்டிருந்தார்கள். அரைமயக்கத்தில் இருந்த எனக்கு முன்னவளும் பின்னவளும் அன்று பெரிதாக ஈர்க்கவில்லை. ஆயினும் இடையவளின் வனப்பும் மென்மையும் என்னைச் சற்று ஈர்க்கவே செய்தது. அணைத்துக் கொள்ளும் ஆசையினால் அருகினில் சென்றேன், பெயரைக் கேட்டேன், இசை என்றாள், ஊர் தமிழகம் என்று பேசத் தொடங்கினாள். பேசிய […]
MNTS வாழையிலை விருந்து 2016
வாழையிலை விருந்து என்றால் பெரியவர் முதல் சிறுவர் வரை அனைவருக்கும் ஆனந்தமே பல வகையான உணவுகள், அதுவும் வாழை இலையில் பரிமாறுவதற்கென்றே நம் முன்னோர்கள் எந்த வரிசையில் உண்பது என்ற வரைமுறை வகுத்து அதற்கான முறையில் இலையின் எந்தப் பகுதியில் என்ன உணவு இருக்க வேண்டும் என்று கூட வரையறுத்துள்ளனர். உணவிற்குத் திருவிழா எடுப்பது, பருவகாலத்திற்கு ஏற்றாற்போல் உணவை உண்பது, உணவே மருந்து என்று வாழ்ந்து, உணவைக் கொண்டாடியது போன்ற சிறப்பம்சம் கொண்ட சமூகம் நம் தமிழ்ச் […]