நிகழ்வுகள்
துருவக்கரடி தோய்தல் 2016 (Polar Bear Plunge)

துருவக்கரடி தோய்தல் (Polar Bear Plunge) கொண்டாட்டம் ஒவ்வொறு ஆண்டும் குளிர் காலத்தில் நடை பெறுகிறது. இதில் பலதரப்பட்ட தன்னார்வலர்களும் மற்றும் தன்னார்வல அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் ஆர்வமாய்க் கலந்து கொள்கிறார்கள். உறைந்திருக்கும் ஏரிகளில் பனிக்கட்டியைத் துளைபோட்டு வெட்டியெடுத்து, வெறும் நீச்சலுடையுடன் பனிக்கட்டிகளின் அடியில் இருக்கும் நீருக்குள் பாய்ந்து, கடும் குளிரில் நீந்துவது இங்கு ஒரு பிரபலமான விளையாட்டு . இந்த நிகழ்வு வட அமெரிக்காவில் பல மாநிலங்களில் நடைபெறுகிறது. இதன் மூலம் திரட்டப்படும் நிதியை விசேட ஒலிம்பிக் […]
சிகாகோ பொங்கல் விழா 2016 கொண்டாட்டம்

வருடாவருடம் பொங்கல் விழாவைக் கொண்டாடி வரும் சிகாகோத் தமிழ்ச்சங்கம், இவ்வாண்டும் ஏறத்தாழ ஆயிரம் தமிழன்பர்களுடன் கொண்டாடினார்கள். பொங்கல் விழாவானது.சனவரி மாதம் 23ம் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் தொடங்கியது. சிகாகோ தமிழ்ச்சங்கம் வட அமெரிக்கத் தமிழ்மக்களின் முன்னோடிகளில் ஒன்று என்றே நாம் கூறலாம். இச்சங்கம் 46 வருடம் பழைமை வாய்ந்தது. இந்தச் சங்கம் தமிழ்க் கலாச்சார நிகழ்ச்சிகள், பல்கலைக்கழகத் தொடர்புகள், மற்றும் தமிழ் மொழிப்பாட சாலைகள் போன்ற சேவைகளை அளித்து வளர்ந்து வருகிறது. இம்முறை பொங்கல் விழா […]
உலகப் பொதுமறை உரைத்தொரு சாதனை

இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை ! மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்! மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள் ! அந்த தமிழ் மறையை, வெறும் மூன்று மணி ஐம்பத்தி இரண்டு மணித்துளிகளில் ஒரே மூச்சாக மழை போல் பொழிய முடியும் என்று நிரூபித்தார் திருமதி பிரசன்னா சச்சிதானந்தன். மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சி ஜனவரி 24 அன்று மதியம் 12.05 தொடங்கியது. இடைவிடாத உரையாக 1330 குறள்களையும் , பொருளுடன் உரைத்தார். […]
சென்னை வெள்ள நிவாரண இசை நிகழ்ச்சி

நான் சென்னையில் இருந்து பதினைந்து வருடம் முன்பு அமெரிக்காவிற்கு வந்தேன். இங்கு வந்ததில் இருந்து தாயகம் நினைவு மேலோங்கி இருந்தது. விஜய் டிவி அல்லது ஜெயா டிவி பார்த்து அதில் பாடும் பாடகர்கள் திறமை கண்டு வியந்துள்ளேன். ஏதோ ஒரு வெளியூருக்கு வந்து தமிழ் மக்கள் அதிகம் இல்லாத இடத்தில் இருக்கிறோம் என நினைத்திருந்தேன். ஆனால் அந்த ஏக்கத்தைத் தகர்த்தெரிந்தது மினசோட்டா பல வருடங்களாக வெற்றிகரமாக நடத்தப்பட்டு வரும் ஒரு இசைக்குழுவான ஃபிரெண்ட்ஸ் கரியோக்கி. அவர்கள் சென்னை […]
கலிஃபோர்னியா பாரதியார் பிறந்தநாள் விழா

பாரதி தமிழ்ச் சங்கம் இந்து தர்மத்தை அடியொற்றி இயங்கும், உலகத் தமிழர்களுக்கான ஒரு அமைப்பு, பாரதி தமிழ்ச் சங்கம் பாரதியார் பிறந்தநாள் விழாவை டிசம்பர் மாதத்தில் Milpitas Shridi Sai கோயிலில் நடத்தியது. இது சென்னை வெள்ள நிவாரணத்திற்கு நிதி திரட்டும் ஒரு நிகழ்ச்சியாகவும் நடை பெற்றது. இந்தக் கட்டுரை, இந்த நிகழ்ச்சி குறித்த ஒரு சிறு குறிப்பே. முதலில் திரு முரளி ஜம்பு முன்னுரை வழங்கினர். அதனைத் தொடர்ந்து, திரு. வெங்கடேஷ்பாபு நிகழ்ச்சியைத் தொடக்கவைத்தார். முரளி […]
பண்டிகைக்காலப் பரவச தள்ளுபடி Holiday Shopping 2015

பண்டிகைக்காலப் பரவச தள்ளுபடி Holiday Shopping 2015 வட அமெரிக்க வாடிக்கையாளரே உங்கள் வாகனத்தை ஆரம்பியுங்கள். இந்த வாரம் (11/26/2015) அமெரிக்காவில் வியாழன் நன்றி நவிலல் நாள் உணவையுண்டு ஏப்பம் விட்ட அடுத்த நிமிடமே தள்ளுபடி பார்த்து பண்டங்கள் வாங்கி வர ஓடி வேண்டாமா? கனடாவிலும் ‘பாக்சிங்டே’ என்று தள்ளுப்படிக் காலம் ஆரம்பம். இந்த வருடம் சுமார் 135.8 மில்லியன் அமெரிக்க நுகர்வோருடன் நமது தமிழ் மக்களும் ஏட்டிக்குப்போட்டி போட்டு பண்டிகைகாலத் தள்ளுபடிகள் பெற்று செலவழிக்கவுள்ளனர். அமெரிக்கா […]
MNTS வழங்கும் – லக்ஷ்மண் ஸ்ருதி இசைத் திருவிழா…!

மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் (MNTS) வழங்கும் – லக்ஷ்மண் ஸ்ருதி இசைக்குழுவினர்களுடன், பிரபல பின்னணிப் பாடகர்கள் இணையும் இசைத் திருவிழா…! இன்னிசையில் இணைய வாருங்கள் !! உங்கள் இருக்கையை இன்றே பதிவு செய்யுங்கள் !!!
கோடை மகிழ்வுலா

ஆகஸ்ட் 8 ஆம் தேதியன்று 2015க்கான கோடை மகிழ்வுலாவை (Summer Picnic), மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் ஹைலேண்ட் ஏரிப் பூங்காவில் ஏற்பாடு செய்திருந்தது. ஏரிக்கரையோரம், மரக்கூடாரம், புல்வெளி மைதானம் என ரம்மியமான லொக்கேஷன் பிடித்திருந்தார்கள். சூரிய வெளிச்சத்தில், புல்வெளியின் பச்சை மின்னிக் கொண்டிருந்தது. காலை பதினொரு மணிவாக்கில் இருந்து, மினசோட்டாத் தமிழர்கள் அங்கே கூடிக் கொண்டிருந்தனர். எண்பதுகளின் இளையராஜா பாடல்களை, ஏரிக்கரைக் காற்றில் கரைய விட்டு, சங்கத்தின் நிர்வாகிகளும், தன்னார்வலர்களும் வந்தவர்களைச் சிறு இனிப்பு மிட்டாய் கொடுத்து […]