\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

நிகழ்வுகள்

2022 கைப்பந்து விளையாட்டு

2022 கைப்பந்து விளையாட்டு

மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள ப்ளூமிங்டன் நகரில் அமைந்துள்ள கென்னடி ஆக்டிவிட்டீஸ் சென்டர் என்ற பள்ளி மைதானத்தில் டிசம்பர் 10ஆம் தேதி இந்த கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் ஆடவர், மகளிர் அணி இரு குழுவாக பிரித்து ஆடவர்க்கும், மகளிர்க்கும்  தனித்தனி  பிரிவுகளில், போட்டிச் சுற்றுகள் நடைபெற்றன. தகுதிச் சுற்றுகளில் வெற்றி பெற்ற அணிகள் இறுதிப் போட்டியில் பங்கேற்றன. மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட பக்கத்திற்கு சென்று பார்க்கவும் https://www.facebook.com/mdvtvolleyball அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில உங்களுக்காக!!!   […]

Continue Reading »

மினசோட்டா மலையாளி சங்கத்தின் கிறிஸ்துமஸ் விழா 2022

மினசோட்டா மலையாளி சங்கத்தின் கிறிஸ்துமஸ் விழா 2022

மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள மினசோட்டா மலையாளி  அமைப்பு (Minnesota Malayalee Association) ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் விழாவை அவர்கள் அமைப்பின் சார்பில்  மிகவும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் இதே போல் கடந்த டிசம்பர் 10ஆம் தேதி அன்று மினசோட்டாவில் அமைந்துள்ள ஹாப்கின்ஸ் சமுதாயக்  கூடத்தில் (Hopkins Community Center) கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. மினசோட்டாவில் உள்ள  கேரள மக்களும், இன்னும் பலரும் இந்த விழாவில் பங்கேற்றனர் சிறப்பு விருந்தினராக ஜேம்ஸ் சீட்டேத் (James Chitteth) (Pastor St. […]

Continue Reading »

பிங்க் கார்பா (Pink Garba)-  மார்பகப் புற்று நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

பிங்க் கார்பா (Pink Garba)-  மார்பகப் புற்று நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஐக்கிய அமெரிக்காவின், மினசோட்டா  மாநிலத்திலுள்ள மினசோட்டா இந்தியச் சங்கங்களின் கூட்டமைப்பு (IAM) அமைப்பின் மூலம் ‘பிங்க் கார்பா – மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு’ நிகழ்ச்சி, கடந்த மாதம் அக்டோபர் 28ஆம் தேதி நடைபெற்றது. மக்களுக்கு மார்பகப்  புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, அது தொடர்பான மருத்துவம் குறித்த தெளிவான தகவலை கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்திய மற்றும் அமெரிக்க உணவின் விருந்தோம்பலுடன் தொடங்கிய விழாவில், பின்னர் புற்று நோயின் வல்லுனர்கள், […]

Continue Reading »

மினசோட்டா வரலாற்றுச் சங்கக் கட்டடத்தின் ஒரு பகுதிக்கு இந்தியரின் பெயர்

மினசோட்டா வரலாற்றுச் சங்கக் கட்டடத்தின் ஒரு பகுதிக்கு இந்தியரின் பெயர்

வட அமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாகாணத்தில் செயிண்ட்பால் நகரில் புகழ்பெற்ற ‘மினசோட்டா வரலாற்றுச் சங்கத்தின்’ கட்டிடம் உள்ளது. இந்தக் கட்டிடத்தில் மினசோட்டா மாநில வரலாறு குறித்த அனைத்து தகவலும் சேகரிக்கப்பட்டு கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.  மேலும் விவரங்களை https://www.mnhs.org/ இணையதளத்தில் காணலாம். டாக்டர் எஸ். கே. டேஷ் (Dr.S.K Dash, Sita Kantha Dash – Scientist & Founder of Probiotics), அவர்கள் மினசோட்டா மட்டுமல்லாது, அமெரிக்காவில் உள்ள அனேகத் தன்னார்வத் தொண்டு  நிறுவனங்களுக்கும்,   இந்தியாவில் செயல்படும் […]

Continue Reading »

IAMன் GOLF 2022

IAMன் GOLF 2022

மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள IAM (Indian Association of Minnesota) என்ற தொண்டு நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் கால்ஃப் (GOLF) விளையாட்டுப் போட்டியைச்  சிறப்பாக நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டும் அதேபோல், அக்டோபர் ஒன்றாம் தேதி ஹேமல் (Hamel) நகரில் உள்ள ‘பேக்கர் நேஷனல் கால்ஃப் கோர்ஸ்’ இல் (Baker National Golf Course) போட்டி நடைபெற்றது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கென இரு பிரிவுகளில் இந்த விளையாட்டு இடம்பெற்றது.  பலர் இந்தப் போட்டியில் பங்கேற்று சிறப்பாக விளையாடினர். […]

Continue Reading »

IAMன் வன்முறை இல்லாத வாரம் 2022

IAMன் வன்முறை இல்லாத வாரம் 2022

வட அமெரிக்காவில் உள்ள மின்சோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள IAM (Indian Association of Minnesota) என்ற தொண்டு நிறுவனம் மற்றும் உள்ளூரில் உள்ள அமைந்துள்ள மற்ற தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து அக்டோபர் இரண்டாம் தேதியை அகிம்சை வாரத்தின் கடைசி நாளாகக் கொண்டாடியது.  இந்த விழா  மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள  செயின்ட் பால்  நகரில் அமைந்துள்ள மினசோட்டா வரலாற்று மையத்தில் (Minnesota History Center) நடைபெற்றது. அக்டோபர் இரண்டாம் தேதி என்றால் நினைவுக்கு வருவது மகாத்மா காந்தி அவர்களது […]

Continue Reading »

அமெரிக்க கொலு 2022

அமெரிக்க கொலு 2022

இந்தியாவில் இருந்து பல ஆயிரம் மைல்கள் தள்ளி இருந்தாலும், நமது கலாச்சாரம் நம்முடன் இன்றும் நெருக்கமாகத் தான் இருக்கிறது. கொரோனா என்ற காலகட்டத்தைத் தாண்டி இப்பொழுது  வழக்கமான வாழ்க்கைக்கு வந்து கொண்டிருக்கையில், நவராத்திரி கொலு இந்த ஆண்டு மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கொலு வைக்கும் வழக்கம் உள்ள குடும்பத்தினர், அந்த வழக்கத்தைக் கைவிடாமல் மினசோட்டாவிலும் மற்ற வட அமெரிக்க மாநிலங்களிலும்  உள்ள குடும்பத்தினர், நண்பர்களுடன் இணைந்து கொலு வைத்து நவராத்திரியைக் கொண்டாடினர். தங்கள் வீட்டு கொலு பொம்மைகளின் […]

Continue Reading »

உட்பெரி டேஸ் 2022 (Woodbury Days)

உட்பெரி டேஸ் 2022 (Woodbury Days)

வட அமெரிக்காவில் கோடை காலம் வந்து விட்டால் போதும் மக்கள் தங்களுக்கும் சிறப்பான கொண்டாட்டங்கள், விழாக்கள் என பலவிதமான  விழாக்களை சிறப்பாக கொண்டாடுவார்கள். வடஅமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள உட்பரி நகரில் ஆண்டு தோறும் உட்பெரி டேஸ் என்ற பெயரில் பெரிய திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்தத் திருவிழாவில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளுக்கு மத்தியில், பொழுதுபோக்கு விளையாட்டுக்கள், […]

Continue Reading »

மினியாபொலிஸில் ஏ.ஆர்.ரஹ்மான்

மினியாபொலிஸில் ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர். ரஹ்மான் கச்சேரியை நேரில் பார்க்க வேண்டும் என்பது ஒரு பெரும் ஆசையாக ஒரு காலத்தில் இருந்தது. 2015 ஆம் ஆண்டு, சிகாகோ சென்று அந்த ஆசையைப் பூர்த்திச் செய்தாகிவிட்டது. 2020 ஆம் ஆண்டுத் திட்டமிடப்பட்டிருந்த ஏ.ஆர். ரஹ்மானின் அமெரிக்கா இசை பயணத்தில் மினியாபொலிஸ் இடம்பெற்றிருந்தது மகிழ்ச்சியை அளித்தது. கச்சேரிக்கு என்று வேறு ஊருக்குப் பயணம் செல்ல வேண்டாம் என்பது இதிலுள்ள உபரி மகிழ்ச்சி செய்தி. கொரோனா காரணமாக அப்பயணம் ரத்துச் செய்யப்பட்டது. இப்போது கொரோனா நிலைமை […]

Continue Reading »

சாலைகளைத் தத்தெடுப்போம்

சாலைகளைத் தத்தெடுப்போம்

மினசோட்டாவின் சாலைகளில் பயணிக்கும் போது கவனித்திருப்பீர்கள்!! இந்தச் சாலையைத் தத்தெடுத்திருப்பது என்று ஒரு நபரின் பெயரோ, நிறுவனத்தின் பெயரோ அல்லது அமைப்பின் பெயரோ குறிப்பிடப்பட்டிருக்கும். சாலையைத் தத்து எடுப்பது என்றால் என்ன? பொதுவாக, சாலைகளை அமைப்பது, பழுது பார்ப்பது, சுத்தம் செய்வது போன்ற வேலைகளை அரசு எடுத்து செய்யும். இதில் சுத்தம் செய்து பராமரிக்கும் வேலையில் பொதுமக்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் வாய்ப்பு அளிப்பதே, இந்தத் திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்தின்படி மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ்ப் பள்ளி […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad