நிகழ்வுகள்
(Indian Association of Minnesota) IAMன் இந்திய மக்கள் சந்திப்பு 2022

IAMன் இந்திய மக்கள் சந்திப்பு கடந்த மாதம் மார்ச் 19 2022 அன்று மினசோட்டா மாநிலத்தில் உள்ள மின்னெடுங்கா (Minnetonka) உள்ள சமூக மன்றத்தில் சமூக மன்ற கட்டிடத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு பல்வேறு இந்திய அமைப்பு நிறுவனத்தின் பிரமுகர்களும், தன்னார்வத் தொண்டு அமைப்பு நிறுவனத்தின் உள்ள பிரமுகர்களும், மினசோட்டா மாநிலத்தில் தேர்வுசெய்யப்பட்ட உள்ளூர் அரசியல் (elected officials) பிரமுகர்களும் மெலிசா ஹோர்ட்மன் (Melissa Hortman), ஜின்னி க்ளெவோர்ன் (Ginny Klevorn), கிறிஸ்டின் பஹனீர்(Kristin Bahner), ரியான் […]
செயிண்ட் பாட்ரிக்ஸ் தினம் – 2022

‘செயிண்ட் பாட்ரிக்ஸ் டே’ என்பது ஐரிஷ் நாட்டின் கொண்டாட்ட தினம். கடந்த பல வருடங்களாக மார்ச் 17ஆம் தேதி இந்த செயிண்ட் பாட்ரிக்ஸ் டே கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மக்கள் பலரும் பல தினங்களுக்குப் பிறகு வீட்டை விட்டு வெளியே வந்து இந்த விழாவைச் சிறப்பித்தனர். ‘செயிண்ட் பாட்ரிக்ஸ் டே’ தினத்தன்று நகரில் பல இடங்களில், மக்கள் பச்சைப் பசேலென்று உடைகள் அணிந்தும், பச்சை நிற அலங்காரப் பொருட்களைக் காட்சிப்படுத்தியபடியும் மிகவும் […]
ஹோலி 2022

வட அமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள ‘மிலன் மந்திர்’ இல் கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும், மார்ச் மாதம் 20ஆம் தேதியன்று ஹோலி திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஹோலி கொண்டாட்டம் குறித்த எங்களது முந்தைய ஆண்டு பதிவுகளை இங்கு காணலாம் : https://www.panippookkal.com/ithazh/archives/18284 ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் ஹோலித் திருவிழா இந்த ஆண்டும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கடந்த இரண்டு வருடங்களாக மக்கள் அனைவரும் வீட்டிற்குள் இருக்கவேண்டிய சூழல் மாறி, இப்பொழுது தான் வெளியே […]
துருவக்கரடித் தோய்தல் (Polar Bear Plunge) 2022

வடஅமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாநிலத்தில் குளிர்காலம் கடந்த டிசம்பர் முதல் கடுமையாக இருந்தபோதிலும் துருவக்கரடித் தோய்தல் (Polar Bear Plunge) என்ற போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி ஜனவரி 29-ஆம் தேதி முதல் ஆரம்பித்து மே 7ஆம் தேதி வரை, ஒவ்வொரு ஊரிலுமுள்ள ஏரிகளில் நடைபெறுகிறது. போட்டி நடைபெறும் ஏரியின் விபரத்தை இந்த முகநூல் https://www.plungemn.org/ பக்கத்தில் காணலாம். இந்தப் போட்டிகளில் முக்கிய அம்சம் நிதி திரட்டுவது. விசேஷ ஒலிம்பிக் போட்டியாளர்கள் மற்றும் காவல்துறை, தீயணைப்பு […]
பத்தாவது ஆண்டில் பனிப்பூக்கள்

பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பனிப்பூக்களின் பயணம் குறித்த ஒரு உரையாடல். உரையாடியவர்கள் – மதுசூதனன், ரவிக்குமார், யோகி தொகுப்பு – சரவணகுமரன் பயணம் குறித்த சிறு காணொலி.
பட்டம் பறக்கும் விழா

மினசோட்டா மாநிலத்தில் உள்ள ஹாரியட் ஏரி பூங்கா (Harriet Lake) சுமார் 470 ஏக்கரில் அமைந்துள்ள இந்த ஏரியின் நடுவில் இந்தப் பட்டம் பறக்க விடும் திருவிழா கடந்த மாதம் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற்றது. இந்த திருவிழாவில் மக்கள் பலவிதமான பட்டங்களைக் கொண்டு வந்து, அதை மேல் நோக்கிப் பறக்க விட்டனர். இப்பொழுது மினசோட்டாவில் குளிர்காலம் என்பதால் அனைத்து மக்களும் வெளியே செல்வதற்கு ஏதாவது பொழுதுபோக்கு வேண்டும் என்று இந்தத் திருவிழாவைக் கொண்டாடுகின்றனர். இந்தத் திருவிழாவில் […]
பனிப்பூக்கள் 2022 ஆம் ஆண்டுக்கான சிறுகதைப் போட்டி

ஆங்கிலப் புத்தாண்டு, தைப் பொங்கல், உழவர் திருநாள், திருவள்ளுவராண்டு துவக்கம் என ஜனவரி மாதம் கொண்டாட்டங்கள் நிரம்பி வழியும் மகிழ்ச்சியான மாதமாகும். பெருந்தொற்றின் வீரியம் புதிதாய் உருவெடுத்து அச்சுறுத்துவதால், கொண்டாட்டங்கள் சுருங்கி ஒரு கட்டுக்குள் அடங்கிப்போனதென்னவோ உண்மை. ஆனாலும் இன்றைய இணையத் தொழில்நுட்பம் பெருந்தொற்றின் கட்டுப்பாடுகள், முழுமையாகக் கொண்டாட்டங்களை முடக்கிவிடாமல் பார்த்துக் கொண்டதெனலாம். பனிப்பூக்கள் சஞ்சிகையின் பயணத்தில் இந்தாண்டு ஒரு மைல்கல்லாக அமைகிறது. வரும் தாய்மொழி தினமான பிப்ரவரி 21 இல், பத்தாம் ஆண்டில் நுழையவுள்ளது பனிப்பூக்கள். […]
மார்கழி மாதங்களில் திருப்பாவை

இறை வழிபாட்டில் ஒவ்வொரு மதத்திலும் பல வகைகள் இருப்பினும், பக்தியில் உருகி பாக்கள் பாடி, இறை வழிபாடு செய்வது அனைத்து மதங்களுக்கும் பொதுவான ஒன்று. சங்க இலக்கியத்தில் பெருமளவு பக்தி இலக்கிய நூல்கள் உள்ளன. வேறு எம்மொழியிலும். தமிழ் மொழியில் தோன்றிய அளவு பக்தி இலக்கிய நூல்கள் தோன்றவில்லை. பக்தி இலக்கிய நூல்களில் நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்கள் மிக முக்கியமானவை. பன்னிரு ஆழ்வார்களில் “ஒரு பெண்ணின் தமிழ்” என்று அழைக்கப்பட்ட திருப்பாவை எழுதிய ஆண்டாள் பல […]
பனிப்பூக்கள் Bouquet – ஓமிக்ரான் பொங்கல்

தமிழ் வருடங்களுக்கு விஷு, விளம்பி, பிலவ என்று பெயர் வைப்பது போல, இனி ஆங்கில வருடங்களை நினைவில் வைத்துக் கொள்ள, கோவிட்-19, டெல்டா, ஒமிக்ரான் போன்ற பெயர்கள் தேவைப்படும் போல இருக்கிறது. சூறாவளிக்கு விதவிதமாகப் பெயர் வைத்து கூப்பிடுவதைப் போல, வருடாவருடம் தொடர்ந்து வரும் கொரோனா வகைகளுக்கும் விதவிதமான பெயர்களைப் பல நாடுகளிலிருந்து பரிந்துரைக்கலாம். எப்படி 2005இல் வந்த சூறாவளியை கத்ரீனா என்ற பெயருக்காகவே நினைவில் வைத்திருக்கோம். அது போல, அழகான பெயர்களைச் சூட்டலாம். சூறாவளி […]
எறிகணை புத்தக அறிமுக விழா

எழுத்தாளர் திரு. தியா காண்டீபன் அவர்கள் சமீபத்தில் எழுதிய ‘எறிகணை’ நூலின் அறிமுக விழா டிசம்பர் 11ஆம் தேதி அன்று பேஸ்புக் நேரலை வாயிலாக நடைபெற்றது. இவ்விழாவில் இப்புத்தகத்தைப் பதிப்பித்த டிஸ்கவரி புக் பேலஸ் திரு. வேடியப்பன், ஈழ எழுத்தாளர் கவிஞர் திரு. தீபச்செல்வன், பனிப்பூக்கள் பதிப்பாளர் திரு. யோகி அருமைநாயகம், முதன்மை ஆசிரியர் திரு. ரவிக்குமார் சண்முகம், பொறுப்பாசிரியர் திரு. மதுசூதனன் ஆகியோர் கலந்துக்கொண்டு நூலாசிரியரை வாழ்த்திப் பேசினர். சாகித்திய விருது பெற்ற மூத்த ஈழ […]