நிகழ்வுகள்
நீர்ச்சறுக்கு விளையாட்டு
வட அமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாநிலத்தில் 10,000 ஏரிகள் உள்ளது. இந்த ஏரிகளில் பருவ காலங்களுக்கேற்ப அதற்குண்டான விளையாட்டுகள் விளையாடப்படுகின்றன. இப்பொழுது மினசோட்டா மாநிலத்தில் வசந்தகாலப் பருவம் நடந்து கொண்டு உள்ளது மக்கள் வசந்த கால அனுபவத்தை அனுபவித்துக் கொண்டு உள்ளனர். எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்ற மரங்களும் வண்ணப் பூக்களால் ஆன பூச்செடிகள் காணப்படுகின்றன. பருவக் காலங்களுக்குத் தகுந்தாற்போல் உள்ளுர் மக்களும் பொருத்தமான உணவு, உடை, பொழுது போக்குகளை அனுபவிக்கின்றனர். வசந்தகாலத்தில் நடத்தப்படும் போட்டிகளில்ம் […]
Dr.டேஷ் நிறுவனத்தின் தொண்டு உதவி
டாக்டர் டேஷ் (Dr.Dash Foundation) தொண்டு நிறுவனமானது வட அமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ளது. இத்தொண்டு நிறுவனமானது சேவை மனப்பான்மையுடன் பல்வேறு அமைப்புகளுக்கும், இந்திய அமைப்பு நிறுவனங்களுக்கும், அவர்களுடைய கலாச்சாரம் மற்றும் இசை இயல் நடனங்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. முக்கியமாக இந்த நிறுவனத்தை நடத்துபவர் டாக்டர் டேஷ் என்பவர் மினசோட்டாவில் அமைந்துள்ள ஹிந்து மந்திர் கோவில் அவைத் தலைவராக (Chairman) உள்ளார். பொதுவாக டிசம்பர் மாதங்களில், விடுமுறை தினக் கொண்டாட்டங்களுக்கிடையே மக்கள் பரிசுகளை […]
2021 ஆஸ்கார் விருதுகள்
உலககெங்கிலும் இருக்கும் திரைப்படக் கலைஞர்களாலும், ரசிகர்களாலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு, கவனிக்கப்படும் ஆஸ்கார் விருதுகளுக்கான விழா, கடந்த வாரயிறுதியில் ஏப்ரல் 25ஆம் தேதியன்று லாஸ் ஏஞ்சல்ஸில், யூனியன் ஸ்டேசன் மற்றும் டால்பி திரையரங்கில் நடைபெற்றது. பிப்ரவரி மாதம் நடைபெறவிருந்த 93 ஆம் ஆண்டிற்கான இந்த விழா, கோவிட் காரணமாக ஏப்ரலுக்குத் தள்ளி வைக்கப்பட்டது. திரையரங்கில் வெளியான படங்கள் மட்டுமின்றி, கடந்தாண்டும், இந்தாண்டும் கோவிட் காரணமாகத் திரையரங்கில் வெளியாகாமல், பல்வேறு ஓடிடி தளங்களில் வெளியான படங்களும் இந்தாண்டு ஆஸ்கார் தேர்வில் […]
முட்டாள்களின் தினமா ஏப்ரல் 1?
முட்டாள்களின் தினமாக ஏப்ரல் ஒன்றாம் தேதி கொண்டாடப்படுவதின் பின்னணி குறித்தும், ஏப்ரல் ஒன்றாம் தின அனுபவங்கள் குறித்தும் இந்த பனிப்பூக்கள் அரட்டையில் உரையாடுகிறார்கள் மதுசூதனன் & சரவணகுமரன். புகைப்படங்கள் – ராஜேஷ் கோவிந்தராஜ் தொகுப்பு – சரவணகுமரன்
உலகத் தாய்மொழி தினம்
உலகத் தாய்மொழி தினத்தின் வரலாறு மற்றும் தற்காலக் கொண்டாட்டம் குறித்து மதுசூதனனும் சரவணகுமரனும் பேசி கொண்ட அரட்டை நிகழ்ச்சி.
சூப்பர் போல் எப்படி இருந்தது?
கடந்த ஞாயிறன்று (பிப்ரவரி 7ஆம் தேதி) நடைபெற்ற சூப்பர் போல் கால்பந்து விளையாட்டு இறுதிப்போட்டியைப் பற்றி மதுசூதனன் அவர்களும், சரவணகுமரன் அவர்களும் பேசிய அரட்டை.
சூப்பர் போல் (Super Bowl) அரட்டை
அமெரிக்காவில் நடந்து வரும் NFL விளையாட்டு தொடரின் இறுதி போட்டியான சூப்பர் போல் (Super Bowl) குறித்து மதுசூதனன் அவர்களும், சரவணகுமரன் அவர்களும் நடத்திய அரட்டை.
வர்ணத்தில் கிறிஸ்துமஸ்
இருண்ட பனிக்கால விடியலின் சூரியோதயம். சோகமாகவும் விசித்திரமாகவும் இருக்கிறது. அரை விழித்த பறவைகளின் ஆரவாரம், இன்னும் இரை தேடியபடி. இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் பாடசாலைகள் கூட வீட்டில் இருந்த படியே நடைபெறுவதால், கடந்த பத்து மாதங்களாகப் பிள்ளைகளுக்கு வீடு கிட்டத்தட்ட ஒரு சிறைச்சாலை போல மாறியிருந்தது. வீட்டுச் சிறையில் இருந்து அவர்களுக்கு ஒரு சிறிய விடுதலை கிடைப்பதையிட்டுப் பிள்ளைகள் இருவரும் காலையிலிருந்தே பெரும் ஆரவாரமாக இருந்தார்கள். எங்கள் குழந்தைகளுக்கு நாங்கள் கொடுக்கக்கூடிய மிக மதிப்புமிக்க விஷயம் பணம் […]
செல்வி விஜயாவின் பரதநாட்டிய அரங்கேற்றம்
வட அமெரிக்காவில், மினசோட்டா மாநிலத்தில் உள்ள மேபிள் குரோவ்லில் வசிக்கும் பாஸ்கர் மற்றும் பானு கோபாலனின் மகள் செல்வி விஜயாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஆகஸ்ட் 15ம் தேதி மினசோட்டாவில் மேபிள் குரோவ் நகரிலுள்ள ஹிந்து கோவிலில் நடைபெற்றது.அவரின் நடன ஆசிரியை திருமதி. சுஜாதா ஆகுறட்டி (Guru Smt.Sujatha Akurati) அவர்களிடம் கடந்த 12 வருடமாக நடனம் கற்று, இப்பொழுது அரங்கேற்றம் நடைபெற்றது. விழா நிகழ்ச்சியை பாஸ்கர், பானு கோபாலனின் குடும்பத்தினரும் மற்றும் அவரது நண்பர்களும் இணைந்து ஏற்பாடு […]
அயலகம் ஆராதித்த தமிழ்க்கவிஞர்
ஈரோடு தமிழன்பன் வாசகர் வட்டம், அமெரிக்கா, அமெரிக்கத் தமிழ் வானொலி, ஒருதுளிக்கவிதை, புதுச்சேரி, உலகப் பெண் கவிஞர் பேரவை, அட்லாண்டா மற்றும் வல்லினச் சிறகுகள் இணைந்து, மகாகவி ஈரோடு தமிழன்பன் 87ஆம் பிறந்த நாள் விழா இணையவழியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதில் அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், இந்தியா போன்ற நாடுகளிலிருந்து பல அறிஞர்கள், கவிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இரண்டரை மணி நேரம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, எப்பொழுதும் மகாகவிக்காகத் தங்களுடைய பங்களிப்பைத் […]