\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

நிகழ்வுகள்

தன்னார்வலர்களின் முகக் கவசத் தயாரிப்பு

தன்னார்வலர்களின் முகக் கவசத் தயாரிப்பு

இன்றைய தினம் உலகையே  ஸ்தம்பிக்கச் செய்து மனிதர்களைப் பயமுறுத்தி, வீட்டில் அடைப்பட்டிருக்கச் செய்த, கொடிய  நோயாக  கொரோனா வைரஸ்  உள்ளது.  அவசியக் காரணங்களுக்காகக் கூட வெளியில் செல்வதற்கு மிகவும் பயந்து போய் உள்ளனர். இந்த நோய் எப்படி பரவுகிறது என்று தெரியாத சூழ்நிலையில் மக்கள் வெளியே செல்வதற்கு முகக் கவசம் அணிந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.   இந்த முகக் கவசத் தயாரிப்பில் பல நிறுவனங்கள் இருந்தாலும் அனைத்து தொழிலாளிகளும் பணிக்கு வர முடியாத நிலையில், பல நிறுவனங்களில் […]

Continue Reading »

ரமலான் பண்டிகை குறித்து திரு. இம்ரான்

ரமலான் பண்டிகை குறித்து திரு. இம்ரான்

ரமலான் பண்டிகை குறித்து திரு. இம்ரான் உரையாடியவர் – சரவணகுமரன்.

Continue Reading »

மினசோட்டாத் தமிழ்ச்சங்கப் பள்ளியின் உலகத் தாய்மொழி தினக் கொண்டாட்டம்

மினசோட்டாத் தமிழ்ச்சங்கப் பள்ளியின் உலகத் தாய்மொழி தினக் கொண்டாட்டம்

உலகத் தாய்மொழி தினத்தையொட்டி, மினசோட்டாத் தமிழ்ப்பள்ளியில் தமிழ்மொழி சார்ந்த கொண்டாட்ட நிகழ்ச்சிகள், பிப்ரவரி 22ஆம் தேதியன்று ஈடன் ப்ரெய்ரியில் இருக்கும் PiM Arts High School இல் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் தமிழ்ப்பள்ளியில் தமிழ் பயிலும் மாணவர்கள் வெவ்வெறு தலைப்பில் காட்சிப்பொருட்கள் செய்து, அவற்றைக் காட்சிப்படுத்தியிருந்தனர். கீழடி, கல்லணை, தமிழ் மன்னர்கள், தமிழ்த் தலைவர்கள், தமிழ் கவிஞர்கள், தமிழ்நாட்டு மாவட்டங்கள், ஊர்கள், ஆறுகள், விளையாட்டுகள், கலைகளின் சிறப்புகள் எனப் பல்வேறு தலைப்புகளில் தங்கள் படைப்புகளைக் காட்சிப்படுத்தியிருந்தனர். பின்னர், […]

Continue Reading »

சமூக அக்கறைக்குப் புத்தக வாசிப்பே அடித்தளமிடும்

சமூக அக்கறைக்குப் புத்தக வாசிப்பே அடித்தளமிடும்

வந்தவாசி, அம்மையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேஷ் எழுதிய ‘குக்கூவென…’ ஹைக்கூ கவிதை குறுநூல் வெளியீட்டு விழாவில் மேனாள் மருத்துவ இணை இயக்குநர் டாக்டர் எஸ்.குமார் பேசும்போது, “அன்றாடம் செய்தித்தாளையும் புத்தகங்களையும் படிப்பதே ஒரு மனிதனின் சமூக அக்கறைக்கு அடித்தளமிடும் செயலாகும்” என்று குறிப்பிட்டார். வந்தவாசி அரசுக்கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டமும் வந்தவாசி ரோட்டரி சங்கமும் இணைந்து நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ் எழுதிய உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுவதற்கான ‘குக்கூவென…’ எனும் […]

Continue Reading »

அட்லாண்டாவில் உலகத் தமிழ்க் கவிஞர்கள் நாள்

அட்லாண்டாவில் உலகத் தமிழ்க் கவிஞர்கள் நாள்

அட்லாண்டா உலகத் தமிழ்க் கவிஞர்கள் பேரமைப்பு சார்பில், திருவள்ளுவர் தினமான தை இரண்டாம் நாள், உலகத் தமிழ்க் கவிஞர்கள் நாளாகச்  சிறப்புடனும் எழுச்சியுடனும் கொண்டாடப்பட்டது. சனவரி 19, 2020, ஞாயிறன்று அட்லாண்டாவில்  உலகத் தமிழ்க் கவிஞர்கள் பேரமைப்பின் தொடக்க நிகழ்வும் உலகத்தமிழ்க் கவிஞர்கள் நாளும் ஒருசேர நடைபெற்றது.  ஒருங்கிணைப்பாளர் ராஜி ராமச்சந்திரனின் வரவேற்புரைக்குப் பிறகு உறுப்பினர் பிரதீபா பிரேம் வரவேற்புக் கவிதை வாசிக்க, நிகழ்வு களைகட்டியது. மூத்த தமிழ் அறிஞரும், கவிஞருமான ந. குமரேசன் தமது சிறப்புரையில் […]

Continue Reading »

சங்கமம் 2020

சங்கமம் 2020

மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் ஆண்டுதோறும் நடத்தும் பொங்கல் கொண்டாட்ட விழாவான சங்கமம், இந்தாண்டு ஜனவரி மாதத்தின் 18ஆம் தேதியன்று ஹாப்கின்ஸ் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. மினசோட்டாவில் வசிக்கும் தமிழ்க் குடும்பங்கள் இந்த விழாவில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். சனிக்கிழமை காலை 11:30 ஆரம்பித்த இவ்விழா, இரவு ஒன்பது மணி வரை ஆடல், பாடல், இசை, நாடகம் எனத் தொடர் நிகழ்ச்சிகளால் நிரம்பி வழிந்தது. மதிய சிறப்புப் பொங்கல் உணவு மற்றும் உபசரிப்புடன் விழா தொடங்கியது. விழாவிற்கு வந்திருந்த […]

Continue Reading »

பனிகாலப் பரவசம் 2020

பனிகாலப் பரவசம் 2020

  January/தை மாதம் எது எங்கு  எப்போது நிகழ்வு பனிச்சறுக்கப் பார்ட்டி   Lutsen, Minnesota Jan 10 – 11 மினசோட்டா வடக்கிழக்குப் பகுதியில் Lutsen மலைச்சாரல்கள் கோலாகலமாக பனிச்சறுக்குதல் கொண்டாட்டங்களை வருடாந்தம் கொண்டாடும். இவ்விடம் பனிக்குடிசைகள் Charlet  அனுபவமும் போகுபவர்க்குக் கிடைக்கும் I.C.E Fest Little Falls, Minnesota Jan 11-12 இது மூன்றாவது வருட பனிக் கொண்டாட்டம். உறைந்த ஏரியின் மேல் பெரும் Carousel (merry-go-round சுழற்றி) மற்றும் பனிச் சைக்கிள், பனிச்சப்பாத்து […]

Continue Reading »

மால் ஆஃப் அமெரிக்காவில் புத்தாண்டுக் கொண்டாட்டம்

மால் ஆஃப் அமெரிக்காவில் புத்தாண்டுக் கொண்டாட்டம்

ப்ளூமிங்டனில் மால் ஆஃப் அமெரிக்காவில், டிசம்பர் 31 ஆம் தேதியன்று இரவு, புத்தாண்டுக் கொண்டாட்டமாக, மூன்லைட் சர்க்கஸ் (Moonlight Circus) என்ற நிகழ்ச்சியும், ஃபேமிலி கவுண்ட் டவுன் டான்ஸ் பார்ட்டி (Family Countdown Dance Party) என்ற நிகழ்ச்சியும் மாலை ஆறு மணியிலிருந்து நள்ளிரவு வரை நடைபெற்றது. செலியஸ் ஏரியல் ஆர்ட்ஸ் ஸ்டுடியோ (Xelias Aerial Arts Studio) என்ற குழு இந்த சர்க்கஸ் நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்தினார்கள். வந்திருந்த பலரும் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டு, மகிழ்வுடன் […]

Continue Reading »

சாய்பாபா கோவில் திறப்பு விழா 2019

சாய்பாபா கோவில் திறப்பு விழா 2019

வட அமெரிக்க மினசோட்டா மாநிலத்தின் சாஸ்கா நகரில் புதிதாக கட்டப்பட்ட சாய்பாபா கோவில் திறப்பு விழா கடந்த டிசம்பர் மாதம் 13 ஆம் நாள் தொடங்கி 15 ஆம் நாள் வரை நடைபெற்று, பக்தர்களுக்குத் திறக்கப்பட்டது இந்த மூன்று நாள் நிகழ்ச்சியில்  குருஜி ஸ்ரீ சி பி சட்பதி (Guruji Shri C.B. Satpathy) முன்னிலையில் சாய்பாபா திருவுருவம் திறக்கப்பட்டு பூஜை நடைபெற்றது. இந்தக் கோவிலை நிர்மாணிக்க, சாஸ்கா நகரில் 2014ஆம் ஆண்டு 42 ஏக்கர் நிலம் […]

Continue Reading »

ஐ.ஏ.எம் நன்றி நவில்தல் விழா 2019 (IAM Thanksgiving 2019)

ஐ.ஏ.எம் நன்றி நவில்தல் விழா 2019 (IAM Thanksgiving 2019)

அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள இந்தியன் அசோசியேஷன் ஆஃப் மினசோட்டா (Indian Association of Minnesota) அமைப்பு சார்பில் 2019 ஆண்டில் உதவிய அனைத்து தன்னார்வலர்களுக்கும்  நன்றி தெரிவிக்கும் விழா கொண்டப்பட்டது. இந்த விழா சென்ற வாரம், டிசம்பர் 6 ஆம் தேதி நியு பிரைட்டன் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.  திருமதி. மீனா கோனார் நடனத்துடன் தொடங்கிய விழாவில், அமைப்பின் தலைவி திருமதி. நாஷ் அனைவரையும் வரவேற்று, தன்னார்வலர்களுக்கு நன்றி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து  இந்த ஆண்டின் […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad