பேட்டி
மினசோட்டா மாநிலச் செயலருடன் …

Please click here for English version நிருபர்: வணக்கம் திரு. சைமன் அவர்களே! நலமாக உள்ளீர்களா? செயலர்: வணக்கம். எப்படி இருக்கிறீர்கள்? நி: எங்களுக்காக நேரம் ஒதுக்கிக் கொடுத்தமைக்கு நன்றி. செ:கண்டிப்பாக! நி:பனிப்பூக்கள் மினசோட்டாவைத் தலைமையகமாகக் கொண்ட தமிழ்ப் பத்திரிகை. இதன் வாசகர்கள் அமெரிக்கா முழுவதும் வியாபித்து உள்ளனர். எங்களுக்காக நேரம் ஒதுக்கிக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி. இன்றைய நாட்டு நடப்புப் பற்றி உங்களிடம் பேசலாம் என்று நினைக்கிறோம். நாட்டின் பொருளாதாரம் உயர்வு தாழ்வுகளை மாறி […]
கனடா வாய்ப்புகள்

ஐடி தவிர வேறு என்ன துறை வாய்ப்புகள் கனடாவில் அதிகம் காணப்படுகின்றன? அமெரிக்க க்ரீன் கார்டுக்காக காத்திருப்போருக்கு கனடா குடியேற்ற வாய்ப்புகள் என்னென்ன? கோவிட்-19 கால நெருக்கடியில் கனடா குடியேற்றத்திற்கான சாதக பாதகங்கள் என்னென்ன? போன்ற கேள்விகளுக்கு நமது உரையாடலின் இந்த இரண்டாம் பகுதியில் CANext immigration திரு. ஸ்ரீராம் அவர்கள் பதிலளித்துள்ளார். வாருங்கள்.. கேளுங்கள்.. பகிருங்கள்.. உரையாடியவர் – சரவணகுமரன்.
கனடா குடியேற்றம்

கனடா அரசும், அந்நாட்டு மக்களும் பிற நாட்டு மக்களை எப்படி எதிர்கொள்கிறார்கள்? கனடாவில் வேலை வாய்ப்புக்கான சந்தை, அமெரிக்காவை ஒப்பிடும்போது எப்படி இருக்கிறது? குடியேற்ற சேவை வழங்கும் மற்ற நிறுவனங்களில் இருந்து CANext எப்படி மாறுபடுகிறது? .. கனடாவில் CANext immigration நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வரும் திரு. ஸ்ரீராம் அவர்களுடன் ஒரு தகவல் பொதிந்த உரையாடல். வாருங்கள்.. கேளுங்கள்.. பகிருங்கள்.. உரையாடியவர் – சரவணகுமரன்.
மினசோட்டா மருத்துவர் ஆறுமுகம் – நேர்காணல்

மினசோட்டாவில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாகக் குழந்தைகளுக்கான இரைப்பை மற்றும் குடலியல் மருத்துவ நிபுணராகப் பணியாற்றி வருபவர், திரு. ராமலிங்கம் ஆறுமுகம் அவர்கள். மருத்துவர் ஐயா என்று மினசோட்டாத் தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் இவர், காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவப் படிப்பை ஆரம்பித்த இவர், பின்பு லண்டனிலும், அமெரிக்காவிலும் மேற்படிப்பை முடித்து, மினசோட்டாவில் இருபதாண்டு காலமாக மருத்துவச் சேவை புரிந்து வருகிறார். 2016 இல் சிறந்த மருத்துவருக்கான விருது பெற்ற இவர், மினசோட்டாவில் […]
குமார்ஸ் தென்னிந்திய உணவகம்

வட அமெரிக்காவில் பல இந்திய உணவகங்கள் இருந்தாலும், தமிழ்நாட்டு உணவுகளுக்கெனப் பிரத்யேக உணவகமாக, முதலில் டெக்ஸாஸில் தொடங்கப்பட்டு, இன்று அமெரிக்காவில் பல நகரங்களில் கிளை பரப்பி வருகிறது, குமார்’ஸ் தென்னிந்திய கிராமத்து சமையல் முறை உணவகம் (Kumar’s South Indian Village Cuisine). மினியாபொலிஸ் ஆப்பிள் வேலி பகுதியில் சமீபத்தில் உதயமாகியிருக்கும் குமார்’ஸ் உணவகத்தின் உரிமையாளர் திரு. ராமையும், குமார்’ஸ் உணவகத்தின் முதல் கிளையை டெக்ஸாஸில் தொடங்கி, பிறகு பல இடங்களிலும் அமைக்க உதவி வரும் திரு. […]
டி.என். பாலமுரளி – கலந்துரையாடல்

பனிப்பூக்கள்: உங்களுக்குக் கர்நாடக சங்கீதத்தின் மேல் கொண்ட ஈர்ப்புக்குக் காரணம் என்ன? எப்படித் தொடங்கினீர்கள்? டி.என். பாலமுரளி: எனக்கு ஐந்து வயது இருக்கையில் அம்மா என்னையும் என் சகோதரியையும் பாட்டுக் கிளாசில் சேர்த்தார்கள். என்னுடைய அம்மாவும், மாமாவும் இசையில் ஈடுபாடு கொண்டவர்கள். அம்மா மகாராஜபுரம் சந்தானம் அவர்களிடம் சங்கீதம் கற்றுக்கொண்டவர். நான் பல பாட்டுப் போட்டிகளில் பங்கெடுத்து வெற்றி பெற்றேன். Sri Lanka Broadcasting Corporation(SLBC) நிகழ்ச்சிகளில் பாடத் தொடங்கினேன். இவர்கள் எல்லோரும் கொடுத்த உற்சாகம் என்னைச் […]
கலக்கப்போவது நாங்கதான்

ஃபிப்ரவரி ஆறாம் தேதியன்று மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் நடத்திய சங்கமம் நிகழ்ச்சிக்காக ஈரோடு மகேஷ், வெங்கடேஷ், கிறிஸ்டோபர் மற்றும் சசி ஆகியோர் வந்திருந்தனர். அவர்களுடன் பனிப்பூக்கள் சார்பில் ஒரு கலந்துரையாடல். கேள்வி: சிரிப்பே மருந்துன்னு சொல்லுவாங்க. அது படி பார்த்தா நீங்க எல்லாம் டாக்டர்கள் தானே? நீங்க கொடுக்கிற மருந்து எப்படி இருக்கும்? பதில் (மகேஷ்): நான் பொதுவா சொல்ற மாணவர் ஜோக்குங்களை எல்லாரும் ரசிப்பாங்க. நிறைய பேரு என்னை வாத்தியாருன்னுதான் சொல்லுவாங்க. நான் காலேஜுல […]
லக்ஷ்மன், மாலதி – நேர்முகம்

1987 ல் முதன் முதலில் ஒரு பத்துப் பேருடன் கூடிய ஒரு சிறு குழுவாக தொடங்கப்பட்டு, 25 ஆண்டுகளுக்கும் மேல் ஒரு மிக பிரபலமான இசை குழுவாக மக்களிடையே அங்கீகாரம் பெற்ற ஒரு இசைக் குழு என்றால் அது லக்ஷ்மன் சுருதி தான். தொழில் நுட்பங்கள் அதிகமாக புகுந்த இந்தக் காலத்திலும், முழுக்க முழுக்க மனித உழைப்பே கொண்டே இந்த இசைக் குழு செயல்படுகிறது. அந்த குழுவின் தலைவர் லக்ஷ்மன் அவர்களுடன் ஒரு உரையாடல். கேள்வி : […]
உன்னிமேனனுடன் உரையாடல்

கேள்வி: நீங்க மூவாயிரத்துக்கும் மேல பாடல்கள் பாடி இருக்கீங்க. இதுல பாடாத பகுப்புகள் (Genre) ஏதாவது இருக்கா? பதில்: நிறைய இருக்கு. இசைல அதன் பகுப்புகளுக்கு அளவே கிடையாது. அதுவும், இப்ப நாம உலகிலுள்ள பல இசைகளைக் கேட்கிறோம். சாட்டிலைட் சேனல்ஸ், சோஷியல் மீடியா வழியா பல வகை இசையைக் கேட்கிறோம். இன்னும் நிறைய பாட ஆர்வமா இருக்கேன். இந்த மூவாயிரம் பாடல்களைப் பல மொழிகளில் பாடியுள்ளேன். இது மட்டும் இல்லாமல், பக்தி பாடல்கள் கொண்ட ஆல்பங்கள் […]
சித்த மருத்துவம்

உலகின் மூத்தமொழியான நம் தமிழ்மொழியில் இருக்கும் பலகலைகளில், நம் மக்களோடு ஒன்றிணைந்து, நம் வாழ்வியலோடு இணைந்திருக்கும் மிகமுக்கிய கலை சித்த மருத்துவ கலையாகும். சித்த மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்று, கடந்த 22 ஆண்டுகளாக மக்களுக்குச் சிறப்பாக மருத்துவ தொண்டாற்றிவரும் , சித்த மருத்துவர் ப.செல்வ சண்முகம் எம்.டி (சித்தா), பி.எச்.டி அவர்கள் , நம் மினசோட்டா தமிழ்ச் சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் , 09/27/15 அன்று, ரிட்ஜ்டேல் நூலகத்தில் “சித்த மருத்துவ அடிப்படையும்,வாழ்வியல் முறைகளும்” […]