திரைப்படம்
விடாமுயற்சி – திரை விமர்சனம்

1997 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளிவந்த ‘ப்ரேக்டௌன்’ எனும் திரைப்படத்தைத் தழுவி வந்த தமிழ்த் திரைப்படம் “விடாமுயற்சி”. இருபத்தி ஏழு வருடங்களுக்கு முன்னர் பார்த்த கர்ட் ரஸ்ஸல் முழுவதுமாக மறந்து விட்டிருக்க, நம்ம ‘தல’யின் அளவான நடிப்பு அந்தத் திரைப்படத்தை ஒப்பீடலாக மனதிற்குள் கொண்டு வரவேயில்லை என்பதுதான் உண்மை. காதலித்துத் திருமணம் செய்து கொண்ட அஜித்தும், த்ரிஷாவும் சோவியத் யூனியனின் ஒரு பகுதியான அஜர்பெய்ஜானின் தலைநகரான ‘பாகு’வில் வசித்து வருகின்றனர். சில பல காரணங்களுக்காக விவாகரத்து செய்வது […]
காற்றில் உலவும் கீதங்கள் – 2024

இவ்வருடத்தில் வெளியான படங்களில் இருந்து ரசிகர்களைக் கவர்ந்த பாடல்களில் தொகுப்பு. அரண்மனை 4 – அச்சோ அச்சோ சென்ற வருடம் அனிருத் இசையில், தமன்னா ஆட்டத்தில் புகழ்பெற்ற “வா காவலா வா” பாடல் போலவே, இவ்வருடம் ஹிப்ஹாப் ஆதி இசையில் தமன்னா மற்றும் ராஷி கன்னா ஆட்டத்தில் ஹிட் அடித்த பாடல் இது. அதே போன்ற இசை, அதே போன்ற ஆட்டம், ரசிகர்களுக்கும் அதே போல் பிடித்துப் போனது. பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் படங்களைத் […]
வேட்டையன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் படத்தை ”ஜெய் பீம்” படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் அவர்கள் இயக்கப்போகிறார் என்ற செய்தி வந்தபோதே ஒரு ஆர்வம் கிளம்பியது. ரஜினி அவர்களின் கமர்ஷியல் படங்கள் தான் நம்மை விசிலடித்து, கைத்தட்டி, ஆட்டம் போட்டுப் படத்தைப் பார்க்க வைக்கும் என்றாலும், புதிய இயக்குனர்களின் வித்தியாசமான கதைக்களங்களில் அவர் நடித்தால் நல்லாயிருக்குமே என அவ்வப்போது எண்ணத் தோன்றும். கபாலி, காலா ஆகிய படங்களில் இயக்குனர் ரஞ்சித் அவர்கள் அப்படி வேறுபட்ட கதையில் ரஜினியைக் காட்டினார். […]
‘மெய்’யழகன்

“வெண்ணிப் பறந்தலைப் போர், கரிகால் பெருவளத்தானின் வீரம், பெருஞ்சேரலாதனின் மானம், வடக்கிருத்தல், இலங்கைத் தமிழரின் துயர்கள், நீடாமாங்கலம் கலவரம், ஜல்லிக்கட்டுப் போராட்டம், ஸ்ட்டெரிலைட் பிரச்சனை மற்றும் அந்தத் துப்பாக்கிச் சூட்டில் இறந்த பெண்மணிக்கு சம்பந்தமே இல்லாத ஒருவர் திதி கொடுப்பது …. “ – இரு ஆண்கள் தண்ணி அடிக்கும்பொழுது பேசிக் கொள்ளும் பேச்சின் சாராம்சம்.. தமிழரின் வீரம், மானம், வரலாற்று உண்மைகள் இவை குறித்த புரிதல்களும், பெருமையும் உள்ளவர்களுக்கு இந்தக் காட்சிகள் புரிந்து கொள்ளக் கூடியவை. […]
திரைக் கவிஞர்கள் பார்வையில் அழகு

தமிழ்த் திரையிசையில் பிரதான இடம் பிடித்தவை காதல் பாடல்கள். நாயகன் – நாயகி இருவருக்குள்ளும் பிறந்த காதலை விளக்குவதற்குப் பெரிதும் துணை நின்றவை, இன்றும் நிற்பவை, பாடல்களே. ஒருவருக்கு ஒருவரைப் பிடிக்கப் பல காரணங்கள் உண்டென்றாலும் அந்தக் காரணங்களை எடுத்துச் சொல்வது, அதிலும் மெய்ப்பிக்கும் வகையில் சொல்வது மிகக் கடினமான விஷயம். ‘சந்தித்த வேளையில் சிந்திக்கவேயில்லை தந்துவிட்டேன் என்னை’ என்று எந்தக் காரணமும் இல்லாமல் மற்றவர் மீது ஏற்பட்ட காதலை, ஈர்ப்பைச் சொன்னது கண்ணதாசனின் சிந்தனைக்கோர் சிகரம். […]
2023இல் கவனம் ஈர்த்த பாடல்கள்

இவ்வருடம் படங்கள் நிறைய வந்திருந்தாலும் கவனத்தை ஈர்த்த பாடல்கள் என்றால் ஒப்பீட்டளவில் குறைவே. தமிழில் இவ்வருடத்தின் பெரிய வசூல் புரிந்த படங்களான ஜெயிலர் மற்றும் லியோ இரண்டிற்கும் அனிருத் இசையமைத்திருந்தார். அது போல, இந்திய அளவில் பெரிய வசூல் படைத்த படமான ஜவானுக்கும் அனிருத்தே இசை. அது அவருக்குத் தனி இசையமைப்பாளராக முதல் ஹிந்தி படமும் கூட. தமிழ்த் திரையுலகின் தற்போதைய டாப் இசையமைப்பாளர் யார் என்று இதில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்குத் திரையுலகில் […]
நானே சிந்திச்சேன் – திரைப்படக் குறியீடுகள்

நேற்று நானும், ஜனாவும் வரதுவைப் பார்க்கப் போயிருந்தோம். அவன் வீட்டருகிலிருக்கும் ‘ஸ்வீட் வாட்டர் டிரெய்லில்’, ‘டிரக்கிங்’ கிளம்பினோம். கொஞ்ச தூரம் நடந்ததும் ஜனா பேச்சைத் துவங்கினான். ‘என்ன மச்சி.. உங்காளு படத்துக்குப் பூஜை போட்டாங்க போலிருக்கு?’ என்றான் என்னைப் பார்த்து. ‘எந்தப் படத்தடா சொல்ற?’, அறிந்தும் அறியாமல் கேட்டேன் நான். ‘உங்காளுன்னு அவன் என்ன ஆலியா பட்டையா சொல்லப்போறான்.. ஆண்டவரத்தான்..’, வரது பல்ஸைப் பிடித்துவிட்டான். ‘ஓ.. ‘தக் லைஃபை’ சொல்றியா. அப்டியே ‘தக்’ லுக்கு இல்ல?..’ ‘என்ன […]
டைகர் கா ஹுக்கும் ..

72 வருடங்கள், எட்டு மாதங்கள், 10 நாட்கள் – இந்தப் படம் வெளியாகும் தினம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் வயது. முக்கால்வாசி மனிதர்களுக்கு, அந்த வயதில் கழிப்பறை செல்வதற்கே துணை வேண்டும். இவரால் மட்டும், இன்னும் அந்த லட்சக்கணக்கான ரசிகர்களை வசீகரிக்க முடிகிறது என்பதை நினைத்தால் ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. 1978இல் வெளிவந்த ‘பைரவி’ கதாநாயகனாக அவரின் முதல் படம். அதைத் தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்துப் பெற்று, கிட்டத்தட்ட நாற்பது வருடங்கள் என்று வைத்துக் கொள்ளலாம். […]
காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 10 சாங்ஸ் (நவம்பர் 2022)

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் வெளிவந்த பாடல்களின் தொகுப்பை, கடந்த மே மாத பகுதியில் பார்த்தோம். அதன் பின், வந்த படங்களில் உள்ள ஹிட் பாடல்களின் தொகுப்பை இப்பகுதியில் காணப் போகிறோம். படங்களின் எண்ணிக்கை, கடந்த சில மாதங்களில், உயர்ந்துள்ளதைக் காண முடிகிறது. அதனால், இப்பகுதியில் ஐந்து பாடல்களுக்குப் பதிலாகப் பத்துப் பாடல்களைப் பார்க்க போகிறோம். டான் – ப்ரைவேட் பார்ட்டி இந்த ஆண்டின் தொடக்கம் முதல் அனிருத்தின் பாடல்கள் மட்டுமல்ல, அவர் இசையமைத்த படங்களும் ஹிட் […]