திரைப்படம்
பாகுபலி – The Conclusion
பாகுபலி வழக்கமான இந்தியச் சினிமா அல்ல என்பது நிச்சயம். பல ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அதிசயம். பல ஆண்டுகளைத் தாண்டியும் பேசப்படப் போகும் படம். பேருழைப்பு தாங்கிய அசாதாரண வணிகச் சினிமா. இந்தியப் புராண அம்சங்களைக் கமர்ஷியலாகச் சொல்லத் துணிந்த கதை. மிகுந்த பொருட்செலவில், பலரது கடும் உழைப்பில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு, மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. முதல் பாகத்தின் இறுதியில் எழுப்பப்பட்ட கேள்வியான “கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்?” இப்படி எதிர்பார்ப்பு எழுப்ப நன்றாகவே உதவியது. […]
ராஜமெளலி – இந்தியாவின் நம்பர் 1 இயக்குனரா?
எந்தவொரு மனிதனும் அவன் சார்ந்த பிராந்தியத்தில், மக்களின் மனங்கவர்ந்து வெற்றிகளைப் பெற்ற பின், தனது அடுத்த இலக்காகத் தனக்கான எல்லைகளை விரிவாக்க எண்ணுவான். அரசியலோ, சினிமாவோ அல்லது அது எந்தவொரு துறையாக இருந்தாலும் வளர்ச்சி என்பது இப்படியே அடையப்படும். சினிமாவிலும் இப்படி ஒரு மாநிலத்தில் பெயர் பெற்ற கலைஞர்கள், புகழ் ஏணியில் மேலும் ஏற, தங்கள் மாநில எல்லையைக் கடப்பார்கள். அதனால் தான், ஒரு மொழியில் நன்கு வெற்றியடைந்த ஹீரோக்கள், அடுத்துப் பக்கத்து மாநிலத்தைக் குறி வைப்பார்கள். […]
காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (ஏப்ரல் 2017)
கடந்த இரு மாதங்களில் வெளிவந்த பாடல்களில் சில, இங்கு உங்கள் பார்வைக்கு. எங்களது முந்தைய தொகுப்பைக் காண இங்கு செல்லவும். காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (ஃபிப்ரவரி 2017) டோரா – எங்க போற எங்க போற “லேடி சூப்பர் ஸ்டார்“ என்று அழைக்கப்படும் (!!) நயன்தாரா இப்போதெல்லாம் தனி ஆவர்த்தனம் செய்யத் தொடங்கிவிட்டார். நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வருகிறார். டோராவும் அப்படியே. படம் ரிலீஸ் அன்று நயன்தாராவுக்குகென்று, சென்னையில் […]
கவண்
ஷங்கரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய எவரும், அவர் பாணியில் படமெடுக்கவில்லை. பாலாஜி சக்திவேல் மட்டும் ஒரு படம் எடுத்தார். ஆனால், அவருடன் ஒரேயொரு படத்தில் பணியாற்றிய கே.வி.ஆனந்த் எடுக்கும் படங்களில் எல்லாம் ஷங்கர் படத்தின் தாக்கம் இருக்கும். அயன், கோ என்று ஹிட்டடித்தவர், சமீபக் காலமாக எங்கேயோ சொதப்பி விடுகிறார். இப்ப,கவண் எப்படி வந்திருக்கிறது என்று பார்க்கலாம். தற்கால ஊடக அரசியல் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான போராட்டங்கள் கலந்த கதைக்களம். அதனால் நடப்பு நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்திக் கொள்ள […]
காற்றில் உலாவும் கீதங்கள் – டாப் சாங்ஸ் (ஃபிப்ரவரி 2017)
இந்த ஆண்டு 2017இல் இதுவரை வெளியாகிய பாடல்களில், நம் மனம் கவர்ந்த பாடல்களில் சில உங்கள் பார்வைக்கு: பைரவா – வர்லாம் வர்லாம் வா சந்தோஷ் நாராயணனுக்கு அமைந்த முதல் கமர்ஷியல் மசாலாப் படம். விஜய் காம்பினேஷன் வேறு. பெரிதாகச் சொல்லிக்கொள்ளும்படி இல்லையென்றாலும், முதலுக்கு மோசமில்லை ரகம். இண்ட்ரோ சாங் ஸ்பெஷலிஸ்ட் ஆகிவிட்டார் அருண்ராஜா காமராஜ். வெறியூட்டும் குரலில் தெறி, கபாலி படங்களைத் தொடர்ந்து இதிலும் முதல் பாட்டு இவருக்குத் தான். மில் சைரன், பைக் ரேஸிங் […]
சிங்கம் 3
ஜேம்ஸ் பாண்ட் சீரிஸ் போல நம்மூருக்கு அமைந்து விட்டது, சிங்கம் சீரிஸ் படங்கள். தொடர்ந்து ஹரி – சூர்யா கூட்டணியில் சிங்கம் 3ஆம் பாகமும் பரபரவென அமைந்து மசாலாப் பட ரசிகர்களிடையே வெற்றி பெற்று விட்டது எனலாம். கூடவே, கண் வலி மற்றும் காது வலி அபாயத்தையும் கொண்டுள்ளது என்பதைப் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. சிங்கம் 3ம் ஹரியின் வழக்கமான ரோலர் கோஸ்டர் படமே. முதல் பாகத்தில், தூத்துக்குடியில் இருந்து சென்னை சென்று, பின்பு ஆந்திரா நெல்லூரில் […]
பைரவா
விஜய்யிடம் இருக்கும் ஒரு பாராட்டுக்குரிய விஷயம், ஜெயிக்கும் கதை என்று தான் நம்புவதை, எக்ஸ்ப்பிரியன்ஸ், சென்டிமெண்ட்ஸ் போன்ற காரணங்களுக்காக விட்டுக் கொடுக்க மாட்டார். இந்த விஷயத்தில் எத்தனை முறை பல்ப் வாங்கினாலும் இதை விடாமல் தொடர்ந்து செய்து வருகிறார். தொடர்ந்து செய்து வரணும். இந்த நல்ல பழக்கத்தைத் தான், இப்படத்தில் தன்னிடம் இருக்கும் கெட்ட பழக்கமாக பஞ்ச் வசனத்தில் சொல்லி வருகிறார். படத்தின் இயக்குனரான பரதனுக்கு என்ன வாக்குக் கொடுத்தாரோ தெரியவில்லை. விஜய் காப்பாற்றி விட்டார். பரதன் […]
2016 – டாப் டென் பாடல்கள்
பாடல்கள் பல தரப்புச் சமூகங்களிடம் எப்படி ஒருமித்த ரசனையை ஏற்படுத்துகிறதோ, அதுபோல் அவை ஒவ்வொருவருக்குமான தனி ரகசிய மொழியும் அழகும் கொண்டிருப்பவை. ஒருவர் கேட்டு ரசித்திராத ஒரு பாடல், இன்னொருவருக்கு மிகவும் நெருக்கமான உணர்வைக் கொடுக்கும். இங்கு உள்ளவை, எனது தனிப்பட்ட அனுபவத்தைக் கொண்டு, ரசனையின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட பத்துப் பாடல்கள். பிடித்த பாடல், நல்ல பாடல் என்றால் எழுதிக்கொண்டே போகலாம். அதனால், ஒரு சில விதிமுறைகளைக் கடைப்பிடித்திருக்கிறேன். எண்ணிக்கை, பத்து மட்டுமே. ஒரு படத்திற்கு ஒரு […]
ரெமோ
ரெமோ வளரும் இளம் கதாநாயகன் என்பதில் இருந்து முன்னணி இளம் கதாநாயகன் நிலைக்குச் சென்று விட்டார் சிவகார்த்திகேயன் எனலாம். காமெடி, நடனம் போன்றவற்றில் மட்டும் திறமை காட்டிக் கொண்டிருந்த சிகா, அவரின் ஒன்பதாவது படமான ரெமோவில் மேக்கப், நடிப்பு, டப்பிங் போன்றவற்றிலும் தனது திறமையைக் காட்டியிருக்கிறார். அவருக்கான ரசிகர் கூட்டம் கூடிக்கொண்டே செல்கிறது. கூடவே, கடுப்பில் பிற முன்னணி நடிகர்களது ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதும் சமூக ஊடகங்களைச் சுற்றி வரும் போது தெரிகிறது. தமிழர்களுக்கு ஒரு நடிகர் […]
கபாலி திரைப்படத் திறனாய்வு
ஜுலை 21, 2016 – புலி வருது புலி வருது கதை போல ஏமாற்றாமல் ஒரு வழியாக மிகுந்த பரபரப்புடன் எதிர்ப்பார்த்துக் காத்திருந்த சூப்பர் ஸ்டாரின் படம் அமெரிக்கத் திரையரங்குகளில் வெற்றிகரமாகத் திரையேறிய நாள். அப்படி ஒரு நாளில் தான் அடியேனுக்கும் மினசோட்டா (MINNESOTA) மாநிலத்தில் ரோஸ்மௌன்ட் (ROSEMOUNT) நகரத்தில் உள்ள கார்மைக் (Carmike) திரையரங்கில் நண்பர்கள் மற்றும் சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகர்களுடன் இணைந்து இப்படத்தைக் காணும் ஒரு அரிய வாய்ப்பு கிட்டியது. படம் பார்த்ததோடு […]