திரைப்படம்
தீபாவளித் திரைப்படங்கள்
பண்டிகைக் காலங்களில், பொங்கல்; தீபாவளி என எதுவாக இருந்தாலும், மக்கள் பூஜை புனஸ்காரம், புதிய உடைகள், பலமான சாப்பாடு என்பவை முடிந்ததும் அடுத்துச் செய்யத் துடிப்பது புதிய திரைப்படம் பார்ப்பது. தமிழர் கலாச்சாரத்தில் இவ்விஷயம் வெகு நாட்களாகவே ஒரு எழுதப்படாத சாங்கியமாகி விட்டது. இதை நன்கு புரிந்துக் கொண்ட தயாரிப்பாளர்களும், திரையரங்க உரிமையாளர்களும் இந்தச் சமயத்தில் போட்டியிட்டுச் சிறந்த படங்களைத் தர முயல்கின்றனர். இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளிவர இருக்கும் படங்களில் சிலவற்றைப் பற்றி இங்கே காணலாம்.
Ceylon – “இனம்” திரைப்படம் ஒரு முன்னோட்டம்
ஈழத்தமிழர்களின் வாழ்வியலை வலிகளை அவர்கள் பட்ட.. பட்டுக்கொண்டிருக்கின்ற துன்பங்களைப் பலர் பல கோணங்களில் இன்று படமாக்கி வருகின்றனர். அந்தவகையில் தனது வித்தியாசமான கேமிரா கோணங்கள் மூலம் புகழ் பெற்ற பிரபல ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் சிறிது கால இடைவெளிக்குப் பின்னர் “இனம்” என்ற படம் மூலம் மீண்டும் இயக்குனராக களமிறங்கி இருக்கிறார். “அசோகா”, “உறுமி” போன்ற ஒருசில படங்களை ஏற்கனவே இயக்கிப் புகழ் பெற்ற இவர் ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் “Ceylon” எனவும் தமிழில் […]
திரைப்படத் திறனாய்வு – பரதேசி
65 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மக்களே தமிழ் மக்களை அடிமைகளாக நடாத்திய உண்மைப் பதிவுகளை மையமாக கொண்டு படைத்திருக்கும் பாலாவின் மற்றுமொரு சீரிய படைப்பு. ஒரு படைப்பாளியின் திறமை வெளிப்படுவது சமரசம் செய்யாமல் கதை சொல்லும் பாங்கில் தான். மனிதக் குலத்தின் கருமையான பகுதியைத் துகிலுரித்துக் காட்டுவதில் வல்லவர் பாலா. வேறு நாடுகளுக்குக் கொத்தடிமைகளாகச் சென்றவர் அனுபவித்த பல துன்பங்களைக் கதைகளாகப் படித்திருப்போம். ஆனால் நம், சொந்த மண்ணிலேயே கொத்தடிமைகளாய் ஆக்கப்பட்ட மக்களின் கதை தான் பரதேசி. […]
திரைப்படத் திறனாய்வு – வன யுத்தம்
பனிப்பூக்களில் திரைப்படத் திறனாய்வுகள் குறிஞ்சி நிலப் படங்களாகவே எழுதுவது (இதற்கு முன்பு கும்கி) ஒரு சாதாரண நிகழ்வே, எல்லோரும் காட்டுவாசிகள் எண்ணி விடாதீர்கள்! ”குப்பி” என்றொரு படத்தை எடுத்த ரமேஷ் என்பவர் இந்தப் படத்தின் இயக்குநர், சாண்டல்வுட்டை (அதாங்க கன்னடச் சினிமாத்துறையின் பெயர்) சார்ந்தவர். குப்பி படத்தில் விடுதலைப்புலிகள் என்று சொல்லப்படும் சிவராசன்/தானு பெங்களூருவில் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட கதையைப் படமாக்கினார். ”வனயுத்தம்”, “குப்பி” இரண்டுக்கும் பல ஒற்றுமைகள், 1. காவல்துறையின் பார்வையில் இருந்தே கதை சொல்லப்பட்டிருக்கிறது. 2. […]
திரைப்படத் திறனாய்வு – கும்கி
மைனா திரைப்பட வெற்றிக்குப் பிறகு வழக்கமான இயக்குனர்கள் போல், பெரிய நடிகர்களை இயக்கி அவர்களுக்கு விதிக்கப்பட்ட வரையரைக்குள் சிக்கி கொள்ளாமல், தனக்கென பாதை வகுத்துக் கொண்டதற்கு பிரபு சாலமனை முதலில் பாராட்ட வேண்டும். மார்த்தாண்டம் பகுதியில் ஆதிகாடு எனும் கிராமம். இங்கு காட்டு யானைகளால் துயரப்படும் கிராமத்தினர், அரசாங்கம் உதவி செய்யாததினால் தாங்களாகவே பொருள் சேர்த்து, காட்டு யானையை விரட்ட, கும்கி யானை ஒன்றை கொண்டு வர முயல்கின்றனர். சந்தர்ப்ப வசமாக, கும்கி யானைக்கு பதிலாக கதாநாயகன் […]