திரைப்படம்
அண்ணாத்தே திரைப்படம் – ஒரு திறனாய்வு
நவம்பர் 05, 2021 – உலகெங்கிலும் வசிக்கும் தமிழ் மக்களின் தீபத்தருநாளாம் தீபாவளி நாளான இன்று தங்கள் உற்றார் உறவினர் மற்றும் நெருங்கிய நண்பர்களின் இல்லங்களை விட அந்தந்த ஊர்களில் உள்ள திரையரங்குகளை நோக்கிப் படையெடுக்கும் ஒரு மகத்தான நாள். அதுவும் சூப்பர் ஸ்டார் ரஜினி படம் வெளி வருகிறதென்றால் போதும் – வீடுகள் காலியாகவும் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலை மோதி கரை புரண்டோடுவதும் அதிசயமல்ல. அப்படிப்பட்ட ஒரு தீபாவளித் திருநாளில் நானும் என் தர்மபத்தினியும் […]
Squid game
திரைப்படங்களுக்கு இணையான எதிர்பார்ப்பையும், வரவேற்பையும் ஓடிடி வெப்சீரிஸ்கள் பெறத் தொடங்கி இப்போது பல நாட்களாகி விட்டது. சமீபத்தில் அப்படிப் பலமான வரவேற்பைப் பெற்ற வெப்சீரிஸ், செப்டம்பர் 17 ஆம் தேதி நெட்ப்ளிக்ஸில் வெளிவந்த ”ஸ்க்யூட் கேம்” (Squid game) ஆகும். இது ஒரு கொரியன் சீரிஸ். முழுக்க முழுக்கக் கொரியர்கள் தயாரிப்பில், படமாக்கத்தில், நடிப்பில் உருவாக்கப்பட்டு, உலகம் முழுக்க வெளியிடப்பட்டுள்ளது. அதனால் யார் நடித்திருக்கிறார், இயக்கியிருக்கிறார் என ஜில் ஜங் ஜக் என்றெல்லாம் சொல்லி, உங்கள் வாய்க்கு […]
சார்பட்டா பரம்பரை
தமிழ்நாட்டின் ஒவ்வொரு நிலப்பரப்பையும் வெவ்வேறு சமயத்தில், பல்வேறு இயக்குனர்கள் வந்து வெள்ளித்திரையில் காட்சிப்படுத்தியுள்ளனர். அது போல், தமிழ்நாட்டின் தலைநகரின் ஒரு பகுதியான வடசென்னையின் பல முகங்களை, தனது படங்களில் தொடர்ந்து காட்டி வருபவர் இயக்குனர் பா. இரஞ்சித். அட்டக்கத்தியில் பருவ வயதில் வரும் காதலை நகைச்சுவை கலந்து காட்டியவர், மெட்ராஸ் திரைப்படத்தில் அப்பகுதியில் நிகழும் அரசியலையும், அதன் மூலம் பாதிக்கப்படும் மக்கள் குறித்தும் விறுவிறுப்பாகக் காட்டி, திரையுலகையும், ரசிகர்களையும் திரும்பிப் பார்க்கச் செய்தார். முக்கியமாக, கல்வியைத் தீர்வாகச் […]
ஃபேமிலி மேன் 1 & 2
திரைப்படத்திற்கான ஆக்கமும் வரவேற்பும் மட்டும் வெப்சீரிஸ் தொடர்களுக்குக் கிடைக்கவில்லை, திரைப்படங்களுக்குக் கிடைக்கும் சர்ச்சைகளும் எதிர்ப்புகளும் வெப்சீரிஸ் தொடர்களுக்குக் கிடைத்து வருகின்றன. அப்படியான ஒரு எதிர்ப்பு தமிழர்களிடையே ஃபேமிலி மேன் இரண்டாவது சீசன் தொடருக்கு எழுந்துள்ளது. ஃபேமிலி மேன் முதல் சீசன் 2019 ஆம் ஆண்டு அமேசான் ப்ரைமில் ஒளிப்பரப்பானது. மும்பையில் வெளிதோற்றத்திற்குச் சராசரி குடும்பஸ்தனாகக் காட்சியளிக்கும் ஶ்ரீகாந்த் திவாரி, வெளியுலகிற்குத் தெரியாமல் இந்திய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் டாஸ்க் (TASC) என்ற உளவுப்படையில் முக்கியப் […]
மாஸ்டர்
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகத் திட்டமிட்டப்பட்டு, பிறகு கொரோனா லாக்டவுனில் திரையரங்குகள் மூடப்பட, மாஸ்டர் படத்தின் ரிலீஸும் தடைப்பட்டு நின்றது. அதன் பிறகு, திரையரங்குகள் எப்போது திறக்கப்படுமோ, படம் எப்போது வெளியாகுமோ என்பது தான் கடந்த ஆண்டுக் கொரோனா தடுப்பூசியை விட விஜய் ரசிகர்களது பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. நடுவில் ஒரு பக்கம் ஓ.டி.டி பேச்சுவார்த்தைகள் நடக்க, இப்படத்தை வீட்டிலிருந்தே பார்க்க வேண்டி வருமோ, வழக்கமான திரையரங்கு கொண்டாட்டத்தை அனுபவிக்க முடியாதோ என்ற வருத்தம் ரசிகர்களைத் […]
மாறா – திரைப்பார்வை
மார்ட்டின் பிரகத் இயக்கிய மலையாளப் படமான ‘சார்லி ‘ யின் ரீமேக் தான் “மாறா’. ஒரு கதைசொல்லியாய், தன்னைத் திறந்து கொள்ளுகிற ஓவியம் , காட்சிக்குக்காட்சி புதுமைகொள்கிறது. பார்வதி என்னும் கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ரதா ஸ்ரீநாத் மறுசீரமைப்புப் பணிக்காக ஒரு ஊருக்குச் செல்லும்போது , சிறு வயதில் அவளைப் பாதித்த ஒரு கதை, உருவம் பெற்று ஓவியமாய் அவள் முன் நிற்கிறது. அந்த ஓவியத்தை நெருங்கும் போது அது பல ஓவியமாய் விரித்துக்கொண்டு பல கதைகளைக் காட்சிப்படுத்துகிறது. […]
காவல்துறை உங்கள் நண்பன் – திரைப்பார்வை
நடுத்தர வர்க்கத்தின் ஒட்டு மொத்தச் சாயலும் படத்தின் கதாநாயகனான சுரேஷ் ரவியின் முகத்தில் திரையில் மிகைப்பு இல்லாமல் வலம் வருகிறது. ஒவ்வொருவருக்குள்ளும் மின்னலெனப் பளிச்சிடும் அச்சம் அவ்வப்போது நம் வாழ்ந்துவிடும் வாழ்க்கைக்கான தேடலின் குறுக்கே வந்து மறைவது தெரிந்து போகிறது. இருவர் கொண்ட அழகான குடும்பம், ரவீனா ரவி உதிர்க்கும் காதலில் மேலும் அழகுடன் காட்டப்பட்டுள்ளது. எப்போதும் போல காதலை ஏற்றுக்கொள்ளாத ஒரு சமூகம் . காதலியின் தோள்களில் துயில் கொள்வதற்காகவே களைப்பின் சுமையை இரவில் களைந்துவிட்டு […]
மூக்குத்தி அம்மன்
தீபாவளி கொண்டாடுவதற்குப் பல காரணங்களைச் சொல்லுவார்கள். நமக்குக் காரணங்கள் தேவையில்லை. கொண்டாட்டம் தான் முக்கியம். எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு, சாமி கும்பிட்டுவிட்டு, புத்தாடை அணிந்து, தீபாவளி ஸ்பெஷல் பலகாரங்கள் சாப்பிட்டுவிட்டு, பட்டாசு வெடித்து, அவரவருக்கு ஸ்பெஷலான உணவை உண்டு, டிவியில் சிறப்பு நிகழ்ச்சிகள் பார்த்தோமா, பண்டங்களை நண்பர்களுடன் பகிர்ந்தோமா, தியேட்டருக்குச் சென்று புதுப்படம் பார்த்தோமா என்றவாறு நமது தீபாவளிகள் நடந்து முடியும். இது கொரோனா காலம். பண்டங்களைப் பகிர முடியாது, தியேட்டருக்கு சென்று படம் பார்க்க முடியாது. […]
சூரரைப் போற்று
சாமானியனும் உயரத்தில் பறக்க வேண்டும், பறக்க முடியும் என்ற நியாயத்தைப் பேசும் படமாகச் சூர்யாவின் “சூரரைப் போற்று” திரைப்படம் இயக்குனர் சுதா கோங்கரா இயக்கத்தில் இவ்வாரம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ளது. இதுவரை ‘ஓடிடி’யில் வெளிவந்த திரைப்படங்கள் எல்லாம் சோபிக்காத நிலையில், இந்தப் படம் திரையரங்கில் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ‘ஏர் டெக்கான்’ நிறுவனர் கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, அதனுடன் பிற விமான நிறுவனங்களின் கதையையும் சேர்த்து, அத்துடன் […]
ரம்மியமான ராகங்கள் – சண்முகப்பிரியா
கர்நாடக ராகங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட திரையிசைப் பாடல்கள் குறித்து மினசோட்டாவைச் சேர்ந்த இசைக் கலைஞர் திருமதி. லக்ஷ்மி அவர்கள் இந்த “ரம்மியமான ராகங்கள்” நிகழ்ச்சியில் வரிசைப்படுத்துகிறார். நிகழ்ச்சியின் இரண்டாம் பகுதியான இதில் சண்முகப்பிரியா ராகம் பற்றியும், அந்த ராகத்தில் உருவான திரைப்படப்பாடல்களைப் பற்றியும் கேட்கலாம். வாருங்கள்.. கேளுங்கள்.. பகிருங்கள். இந்த நிகழ்ச்சி குறித்த உங்கள் கருத்துகளை, பின்னூட்டப் பகுதியில் பகிருங்கள். தொகுப்பு – சரவணகுமரன்