திரைப்படம்
HBD சந்தோஷ் நாராயணன்!!
இன்று மே 15 தேதியன்று பிறந்தநாள் கொண்டாடும் தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் திரு. சந்தோஷ் நாராயணன் அவர்களுக்கு பனிப்பூக்களின் வாழ்த்துகள். அவரது பிறந்தநாளை முன்னிட்டு திரு. சந்தோஷ் நாராயணன் அவர்களைப் பற்றியும், அவரது இசையில் இருக்கும் நுணுக்கங்களைப் பற்றியும் இசை ஆர்வலர் திரு. செந்தில்குமார் அவர்களுடன் ஓர் இசை சார்ந்த உரையாடல். வாருங்கள்.. கேளுங்கள்.. பகிருங்கள்.. உரையாடியவர் – சரவணகுமரன்.
காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (மார்ச் 2020)
2020 ஆண்டின் தொடக்க மாதங்களில் வெளியான படங்களிலிருந்து, ரசிகர்களைக் கவர்ந்த பாடல்களை இந்தப் பகுதியில் காணலாம். சைக்கோ – உன்னை நினைச்சு இளையராஜாவின் இசையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளியாகிய படம் – மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த சைக்கோ. 1976இல் இருந்து இசையமைத்து வரும் இளையராஜாவின் இசை, இத்தனை தசாப்தங்களுக்குப் பிறகு, இன்றைய தலைமுறையையும் ரசிக்க வைக்கிறது என்பது வியப்புக்குரிய விஷயமே. ஜனவரியில் வெளிவந்த இப்படம், கலவையான விமர்சனத்தைப் பெற்றிருந்தாலும், இளையராஜாவின் இசையும், பின்னணி இசையும் ரசிகர்களை […]
1917 – திரை அனுபவம்
முதல் காட்சியில் பசுமை படர்ந்து கிடக்கும் அமைதியான ஒரு நிலப்பரப்பைக் காட்டும் கேமரா, கொஞ்சம் பின்னால் நகரும் போது, இரண்டு இளம் சிப்பாய்கள் ராணுவ உடையில் உறங்கிக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது. அங்கு வரும் ஒரு அதிகாரி, ஒருவனை எழுப்பி, “உனக்குத் துணையாக இன்னொரு ஆளைத் தேர்வு செய்துகொண்டு உயர் அதிகாரியைப் போய்ப்பார்” என ஆணையிடுகிறார். கதாநாயகன் தன் நண்பனை எழுப்பிவிட, இருவரும் உயர் அதிகாரி இருக்கும் இடத்தை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறார்கள், நடந்து முன்னோக்கிச் செல்லும் அவர்களை […]
2019 டாப் சாங்க்ஸ்
ஒரு ஆண்டின் சிறந்த பத்துப் பாடல்கள் என்று ஒரு லிஸ்ட் எடுக்க வேண்டுமென்பது அவ்வளவு சுலபமானது அல்ல. ஒவ்வொருவரின் ரசனையும் வேறுபடும் என்பதால், ஒரு பட்டியல் அனைவரையும் திருப்திப்படுத்துவது என்பது சிரமமே. இருப்பினும், இந்த ஆண்டை நினைவுப்படுத்தும் வண்ணம் அமைந்த பாடல்களின் பட்டியல் அவசியம் என்பதால், அதற்கென முயன்று தேர்ந்தெடுத்த பட்டியல் இது. இதில் ஆட்டம் போட வைக்கும் பாடல்களும் உண்டு, ஆழ்ந்து உறங்க வைக்கும் பாடல்களும் உண்டு. குழந்தைகள் ரசித்த பாடல்களும் உண்டு, பெரியோர்கள் ரசித்த […]
ஃப்ரோஸன் 2
2013 இல் ஃப்ரோஸன் முதல் பாகம் வெளிவந்த போது, பெண் குழந்தைகளின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றதோடு நிற்காமல், பாக்ஸ் ஆபிஸிலும் சாதனைகளைப் படைத்தது. ‘லெட் இட் கோ’ பாடல், அப்போதைய சிறுமிகளின் தேசிய கீதமாகவே மாறிவிட்டிருந்தது. அந்த ஆண்டின் வசூல் சாதனை படைத்த படங்களில் முதல் இடத்தைப் பிடித்தது. வீடுகளில் வாங்கப்படும் வீடியோ விற்பனையிலும் முதல் இடத்தைப் பிடித்தது. அனிமேஷன் படங்களின் வசூல் சாதனை பட்டியலில் இந்தாண்டு வரை அதுவே முன்னணியில் இருந்தது. சமீபத்தில் தான் லயன் […]
காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (அக்டோபர் 2019)
சென்ற இரு மாதங்களில் வெளிவந்த படங்களில் பல படங்கள் நல்ல பாராட்டையும், வெற்றியையும் பெற்று வருவது நல்ல விஷயம். கேட்பதற்கு நல்ல பல பாடல்கள் வெளியாகி உள்ளன. இனி வரும் மாதங்களிலும், தீபாவளி, கிருஸ்துமஸ் எனப் பண்டிகை தினங்களில் பெரிய படங்கள் வரவிருக்கின்றன. அப்படங்களில் உள்ள பாடல்களும் நம்மைக் கவரும்விதமாக இருக்கும் என்று நம்புவோமாக. பக்ரீத் – ஆலங்குருவிகளா ரொம்பவும் சிரமப்பட்டு வெளிவந்த இப்படம் வந்ததே தெரியாமல் போய்விட்டாலும், இமான் இசையில் சித் ஸ்ரீராம் […]
அசுரன்
“சாதிச் சச்சரவுகளைத் தாண்டிச் செல்ல, கல்வியே சரியான வழி” ‘மெட்ராஸ்’ படத்தில் இயக்குனர் ரஞ்சித் சொன்னதையும், ரஞ்சித்தின் தயாரிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் சொன்னதையும், அசுரன் படத்தில் இயக்குனர் வெற்றி மாறன் அவருக்கே உரிய பாணியில் சொல்லியிருக்கிறார். கூடவே “அப்படிக் கல்வியால் பெற்ற பதவியில் உட்கார்ந்து அவர்கள் நமக்குச் செய்ததை, நாம் செய்யாமல் இருக்க வேண்டும்” என்று சொல்லி நம்மை மேலும் கவருகிறார் வெற்றி மாறன். கலைப்புலி தாணு தயாரிப்பில், தனுஷ் நடிப்பில், […]
காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (ஆகஸ்ட் 2019)
கடந்த இரண்டு மூன்று மாதங்களில் நிறையத் தமிழ்ப்படங்கள் வெளியாகி இருந்தாலும், வெற்றி சதவிகிதம் மிக மிகக் குறைவு. அதனால், பெரிய ஹிட் பாடல்கள் என்று நிறைய வரவில்லை. இந்த லிஸ்ட்டை எடுத்துக்கொண்டாலே, இதில் நிறையப் படங்கள் ஓடவில்லை என்று தெரியும். இனி வரும் மாதங்களில் நல்ல பெரிய ஹிட் பாடல்களும், படங்களும் வரும் என்று நம்புவோம். அயோக்யா – கண்ணே கண்ணே தெலுங்கு டெம்பரின் (Temper) தமிழ் ரீ-மேக்கான இப்படத்தில் இடம்பெற்ற இப்பாடலைப் பாடியது அனிருத். […]
நேர்கொண்ட பார்வை
அமிதாப் நடிப்பில் ஹிந்தியில் வெற்றிப்பெற்ற ‘பிங்க்’ திரைப்படம் தமிழில் அஜித்தின் நடிப்பில் ‘நேர்கொண்ட பார்வை’யாக இந்த வாரம் வெளியாகியுள்ளது. இது அவருடைய வழக்கமான கமர்ஷியல் மசாலா படம் அல்ல என்பதையறிந்து அஜித்தின் ரசிகக் கண்மணிகள் சென்றால் படம் அவர்களைக் கவரும். ஒரு பெண் “இல்லை என்றால் இல்லை” தான் எனும் ஒரு மிக அடிப்படையான கருத்தை, இக்காலக்கட்டத்தில் பெரும்பாலோருக்கு மீண்டும் நினைவுப்படுத்த அஜித் எண்ணியதின் வெளிப்பாடாக இப்படத்தைக் கருதலாம். இன்றைய காலக்கட்டத்தில் இந்த எளிய கருத்தே, ஒரு […]