திரைப்படம்
2.0
நடப்பதைக் காணும் போது ரஜினியின் மவுசு குறைந்து விட்டது போல் தான் தெரிகிறது. சூப்பர் ஹிட் படமான எந்திரனின் தொடர்ச்சி, பெரும் பொருட்செலவு, VFX என பரபரப்பைக் கிளப்ப ஏகப்பட்ட சங்கதிகள் 2.0 க்கு இருந்தாலும், படத்தின் ரிலீஸ் அந்தளவுக்கு எதிர்பார்ப்பைக் கிளப்பவில்லை. அதாவது ரஜினி, ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான், அக்ஷய் குமார் என இத்தனை பெரும் தலைகள் இருக்கும் போது, அதற்கேற்ற பெரிய ஓப்பனிங் இல்லை. படம் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொண்டு படம் பார்க்கலாம் என்பது […]
சர்க்கார்
உண்மையில் ஜெயிக்க இதுதான் சக்சஸ் பார்முலா என்று ஒன்று இல்லாவிட்டாலும், அப்படி ஒன்று இருப்பதாக எண்ணிக் கொண்டு தமிழ்த் திரையுலகினர் ஒரு வரைமுறையில் படம் எடுப்பார்கள். அஞ்சு பாட்டு, நாலு ஃபைட்டு, இரண்டு செண்டிமெண்ட் சீன், நடுநடுவே காமெடி என்று போகும் அவர்களது ஃபார்முலா. தற்போது அதில் சேர்ந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தும் வசனங்கள் மற்றும் காட்சிகள். ஒரு பிரிவினரைக் காயப்படுத்துவது, ஒரு கட்சியினைத் தாக்குவது, கதைத் திருட்டு வழக்கு என்ற சர்ச்சைகளும் தற்போது படத்தின் வெற்றிக்குத் தேவைப்படுகிறது. […]
96 – திரைப்பட விமர்சனம்
ஒரு மாமாங்கத்திற்கு ஒருமுறை மெச்சிக் கொள்ளும்படி ஒரு காதல் திரைப்படம் தமிழில் வெளியாகும். அப்படி ஒரு படம் இம்மாதம் வெளியாகி உள்ளது. விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வந்துள்ள 96 தான் அப்படம். பிரிந்த காதலர்கள் சந்தித்தால் என்னவாகும் எனும்போது அதற்குப் பல பதில்கள் உருவாகலாம். அறிமுக இயக்குனர் பிரேம்குமார் பார்ப்போரை நெகிழச்செய்யும் வண்ணம் ஒரு பதிலை இப்படத்தில் கூறியிருக்கிறார். இயற்கை புகைப்படக் கலைஞராகவும், புகைப்படக் கலை ஆசிரியராகவும் இருக்கும் விஜய் சேதுபதி ஒரு சமயம் தனது […]
காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 10 சாங்ஸ் (அக்டோபர் 2018)
இவ்வருடத்தின் முந்தைய பகுதிகள். காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (மார்ச் 2018) காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (ஜூன் 2018) காற்றில் உலவும் கீதங்கள் மூலம் உங்களைச் சந்தித்து வருவதில் சின்ன இடைவெளி விழுந்துவிட்டதால், அதை ஈடுகட்டும் விதமாக, நமது இந்த லிஸ்ட்டில் பத்துப் பாடல்கள். கோலி சோடா 2 – பொண்டாட்டி கோலி சோடாவின் இரண்டாம் பாகம் முதல் பாகம் ஓடிய அளவுக்கு ஓடவில்லை. படத்தில் சமுத்திரக்கனி, […]
செக்கச் சிவந்த வானம்
எத்தனை தோல்விகள் கொடுத்தாலும், மணிரத்னம் என்ற கலைஞனுக்கு இருக்கும் மவுஸ் குறையாது என்று மீண்டும் நிருபித்து இருக்கிறது – செக்கச் சிவந்த வானம். விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், அரவிந்த் சாமி, பிரகாஷ் ராஜ், ஜோதிகா எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளம் அவருடன் இப்படத்தில். எதிர்பார்ப்புக்குச் சொல்லவா வேண்டும்? எதிர்பார்த்ததைப் போலவே படத்திற்கு மாஸ் ஓப்பனிங். எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்திருக்கிறாரா மணிரத்னம் என்பதைப் பார்ப்போம். கடல், ஓ காதல் கண்மணி, காற்று வெளியிடை என மணிரத்னத்தின் […]
சாமி ஸ்கொயர்
தமிழின் தலை சிறந்த இயக்குனர்களான மணிரத்னம், ஷங்கர் போன்றோர் கூட ஆங்கிலப் படங்கள் பார்த்து இன்ஸ்பையர் ஆவதுண்டு. உள்ளூர் சரக்கோடு மட்டுமே படம் எடுத்து கமர்ஷியல் ஹிட் கொடுத்துக் கொண்டிருப்பவர் இயக்குனர் ஹரி. அவ்வப்போது, கூடவே கொஞ்சம் தலைவலியும் கொடுப்பார். 2003 இல் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன சாமி படத்தின் இரண்டாம் பாகத்துடன் இப்போது களம் இறங்கியிருக்கிறார். சிங்கத்தின் மூன்று பாகங்களை இயக்கியவருக்கு சாமியின் அடுத்த பாகத்தை எடுக்க ஆசை வராதா? நமக்கும் தான். விக்ரமின் […]
கமலின் விஸ்வரூபம்
பலமுறை பலராலும் பலவிதமாகப் பாராட்டப்பட்டது கமலஹாசனின் கடின உழைப்பு, விடா முயற்சி, படைக்கும் கலையின்மீது அவர் கொண்டுள்ள மாறாக் காதல், எல்லாவற்றையும் செய்யத் துடிக்கும் அவரின் ஆர்வம் – சொல்லிக் கொண்டே போகலாம். இந்தப் படமும் அவரின் இக்குணாதிசயங்களைக் காட்டுவதில் விதி விலக்கல்ல. விஸ்வரூபம் முதல் பகுதி வெளிவந்த தினத்திலேயே கமல் சொன்னதாக வெளிவந்த செய்தி, பகுதி இரண்டுக்குத் தேவையான அளவுக்கு பல காட்சிகளும் ஏற்கனவே படமாக்கப்பட்டு விட்டது என்பதாக நினைவு. 2014ஆம் ஆண்டிலேயே வெளிவரும் என்றும் […]
தமிழ்ப் படம் 2.0
இன்னமும் தமிழ் சினிமா சார்ந்த மேடைகளில் பிற நடிகர்களையோ, படங்களையோ பற்றி விமர்சனம் செய்து கருத்துக் கூறுவது அரிது. எதற்கு மல்லாந்து படுத்துக்கொண்டு துப்புவது, கண்ணாடி வீட்டில் கல்லெறிவது என்று காரணம் கூறுவார்கள். நிலைமை அப்படி இருக்கும் போது, பிற படங்களைக் கிண்டல் செய்து எடுக்கப்படும் ஸ்பூஃப் வகைத் திரைப்படங்கள் தமிழில் சாத்தியமா என்ற கேள்வி நெடுநாட்களுக்கு இருந்தது. அதற்கு விடையாக 2010 இல் “தமிழ்ப்படம்” வந்தது. அச்சமயம் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட அப்படம் வெற்றியடைந்து நல்ல […]
காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (ஜூன் 2018)
ஏப்ரலில் சினிமா ஸ்ட்ரைக் முடிய, காத்திருந்த படங்கள் எல்லாம் கடந்த இரு மாதங்களாக வர தொடங்கியது. அதனால், ஏற்கனவே வெளிவந்து ஹிட்டாகி இருந்த பாடல்களை, திரையில் காண ரசிகர்களுக்கு வாய்ப்பு அமைந்தது. இரும்புத்திரை – முதல் முறை விஷாலுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு அமைந்த ஹிட் திரைப்படம். டிஜிட்டல் இந்தியாவில் இருக்கும் பிரச்சினைகளைப் பேசிய திரைப்படம். யுவன் பாடல்களை விட, படத்தின் பின்னணி இசையில் கலக்கியிருந்தார். இந்த ‘முதல் முறை’ அவருடைய டிபிக்கல் சாங் […]
காலா!!
வாரணம் பொருத மார்பு.. வரையினை எடுத்த தோள்கள் … நாரத முனிவர்க்கேற்ப நயம்பட உரைத்த நா… தாரணி மௌலி பத்து, சங்கரன் கொடுத்த வாள், வீரம் …. இவையெல்லாம் கவிச்சக்ரவர்த்தி கம்பன் வில்லன் ராவணன் குறித்துப் புகழ்ந்து எழுதியவை. இவை தவிர, தனது கம்பராமாயாணத்திலே இன்னும் சொல்லலங்காரமாய் ராவணனைப் புகழ்ந்து – திரும்பவும் படிக்கவும், புகழப்பட்டது ராமனல்ல, ராவணன் – கம்பன் எழுதி எழுதி மாய்ந்துள்ளான். அவ்வளவு சிறப்புகள் மிக்கவன் ராவணன் என்பதில் கவிச்சக்கரவர்த்திக்கு எந்தச் சந்தேகமும் […]