\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

திரைப்படம்

காலா சொல்லும் பத்துப் பாடங்கள்

காலா சொல்லும் பத்துப் பாடங்கள்

இது காலா படத்தில் சொன்ன பாடங்கள் அல்ல. காலாவைச் சுற்றி நடப்பதில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய 10 பாடங்கள், தெரியாத விஷயங்களில் தலையை நுழைக்காதே – இந்தப் படத்திற்காகத் தான் ரஜினி தூத்துக்குடி சென்றிருப்பாரென்றால் அது முட்டாள்த்தனமான முடிவு என்று ரஜினியே இப்போது அறிந்திருப்பார். அதனால் இருந்த இமேஜும் டேமேஜ் ஆனது தான் மிச்சம். சினிமாவும் ரியலும் வேறு – இது ரஜினி ஒத்துக்கொண்ட விஷயம். ரஜினி படத்தில் பேசுவதை அவர் கருத்து என்று எடுக்கக் […]

Continue Reading »

இரும்புத்திரை

இரும்புத்திரை

ஒரே மாதிரி கதைக்களம் இல்லாமல் படம் எடுப்பது சிறப்பு, அதையும் பார்க்கும்படி எடுப்பது மேலும் சிறப்பு, அதில் ஒரு கருத்தைச் சொல்லி, பார்ப்பவர்களை அது குறித்து யோசிக்கச் செய்வது பெரும் சிறப்பு. இந்தச் சிறப்பினைச் செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் மித்ரன் அவர்கள். இரும்புத்திரை படத்தில் டிஜிட்டல் உலகின் பாதகங்களைச் சீரியஸாக அலசியிருக்கிறார் மித்ரன். முதலில் அவருக்கு நம் பாராட்டுகள். ராணுவப் பயிற்சி அளிக்கும் அதிகாரியாக வரும் விஷால், அடிக்கடி அதிகம் கோபம் அடைவதால், பணி நீக்கம் செய்யப்பட்டு […]

Continue Reading »

அமெரிக்கத் தியேட்டர்கள் எப்படி?

அமெரிக்கத் தியேட்டர்கள் எப்படி?

தயாரிப்பாளர்கள், தியேட்டர் ஓனர்கள் மற்றும் டிஜிட்டல் விநியோகிப்பு நிறுவனம் ஆகியவற்றிற்கு இடையேயான முட்டல் மோதலினால் 47 நாட்களாக நீடித்து வந்த தமிழ் திரையுலகின் போராட்டம் ஒருவழியாகக் கடந்த வாரம் முடிவுக்கு வந்துள்ளது. திரையிடலுக்கான கட்டணத்தைக் குறைக்கச் சொன்னது தயாரிப்பாளர்கள் சங்கம். திரையிடல் கட்டணத்தைக் குறைப்பதைவிட, நடிகர்கள் சம்பளத்தைக் குறைக்கட்டும் என்பது திரையரங்குகள் வாதம். முதலில் கட்டணத்தைக் குறைக்க மறுத்து, அதற்குரியக் காரணத்தைக் கூறிய க்யூப் நிறுவனம், தற்போது கட்டணத்தைச் சில காலத்திற்கு ஒரளவுக்குக் குறைத்து அறிவித்துள்ளது. திரையரங்கு […]

Continue Reading »

ப்ளாக் பேந்தர் (Black Panther)

ப்ளாக் பேந்தர் (Black Panther)

  ஹாலிவுட்டில் சூப்பர் ஹீரோ படங்களுக்கு எப்போதும் பஞ்சமிருக்காது. சூப்பர் ஹீரோ படங்களில் ரசிகர்கள் சலிப்புறாமல் இருக்க இவற்றை வெவ்வேறு   வகையிலும், புதுப் புதுப் பரிமாணத்திலும் காட்டப் பிரயத்தனப்படுகிறார்கள். சூப்பர் ஹீரோ எல்லையில்லா சக்தி கொண்டவன் என்பதில் இருந்து இறங்கி, அவனும் அல்லது அவளும் நம்மைப் போல ஆசாபாசம் கொண்டவர்கள் தான் என்றும், அவ்வப்போது அடியும் வாங்குவார்கள் என்றும் கடந்த சில வருடங்களாக இவர்களின் கதாபாத்திரங்கள் இந்திய செண்டிமெண்ட் படங்களுக்குக் குறைவில்லாமல் படைக்கப்படுகின்றன. ஏன் சூப்பர் ஹீரோ […]

Continue Reading »

காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (மார்ச் 2018)

காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (மார்ச் 2018)

2018 தொடங்கியதில் இருந்து வெளி வந்த படங்களில் உள்ள சிறந்த பாடல்கள் என்று கணக்கிட்டால் குறைவு தான். முன்னணி இசையமைப்பாளர்கள் படங்கள் ஏதும் சொல்லிக் கொள்ளும்படி வரவில்லை. தவிர, கடந்த இரு வாரங்களாகப் படங்கள் எதுவுமே ஸ்ட்ரைக்கால் வெளிவரவில்லை. பார்ப்போம், போகப் போக எப்படிப் போகிறது என்று. தானா சேர்ந்த கூட்டம் – சொடக்கு மேல சொடக்கு அனிருத் இசையில் இந்த வருடம் வந்த முதல் படமான இதில் இருந்த பாடல்கள் நன்றாக ஹிட்டடித்தது. முக்கியமாக, இந்த […]

Continue Reading »

ஸ்ரீதேவி – சிவகாசி மத்தாப்பூ

ஸ்ரீதேவி – சிவகாசி மத்தாப்பூ

சினிமாவிலும் சரி, தினசரி பேச்சு வழக்கிலும் சரி அழகுக்கு உதாரணமாக அனைவரும் சொல்வது, ஸ்ரீதேவியைத்தான். இது ஏதோ அவர் கதாநாயகியாக நடித்துவரும் காலத்தில் சொல்லப்பட்டது அல்ல. இப்போது வரை அதுதான் நிலை. அப்படி அழகின் இலக்கணமாய்த் திகழ்ந்தவர். 1963 இல் சிவகாசியில் பிறந்த ஸ்ரீதேவி, கடந்த வாரம் துபாய்க்கு ஒரு திருமணத்திற்குச் சென்ற இடத்தில் தன்னுடைய 54 ஆம் வயதில் பிப்ரவரி 24ஆம் தேதியன்று மரணமடைந்த செய்தி, அவருடைய ரசிகர்கள் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. ஸ்ரீதேவி […]

Continue Reading »

பத்மாவத் – திரை விமர்சனம்

பத்மாவத் – திரை விமர்சனம்

மதம் – அரசியல் – சினிமா, இம்மூன்றும் எக்காலத்திலும் இல்லாத வகையில் தற்காலத்தில் ஒரு பெரும் தொடர்போடு செயல்பட்டு வருகிறது. அது இந்த ‘பத்மாவத்’ திரைப்படத்தின் மூலம் மேலும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது. பிரமாண்ட இதிகாசப் படங்களுக்குப் புகழ் பெற்ற ஹிந்திப் பட இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, இந்த முறை கையில் எடுத்துக் கொண்டது, ராஜபுத்திர ராணியான பத்மாவதி பற்றி பதினாறாம் நூற்றாண்டில் மாலிக் முகமது ஜயாஸி என்னும் கவிஞர் எழுதிய ‘பத்மாவத்’ இதிகாசப் படைப்பை. ராணி […]

Continue Reading »

வேலைக்காரன்

வேலைக்காரன்

தனி ஒருவன் படத்திற்குப் பிறகு இயக்குனர் மோகன் ராஜாவும், ரெமோ படத்திற்குப் பிறகு சிவகார்த்தி்கேயனும் இந்த வேலைக்காரனில் கைகோர்த்திருக்கிறார்கள். தங்கள் முந்தையப் படங்களில் வெற்றிப் பெற்ற இயக்குனரும் நாயகனும் தரும் அடுத்தப் படம் என்பதால் இயல்பாகவே இப்படத்தின் மீது ஒரு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. எதிர்பார்ப்பைப் படம் பூர்த்திச் செய்ததா எனப் பார்ப்போம். கொலைகாரக் குப்பத்தில், குப்பத்து மக்களுக்கெனப் பிரத்யேக ஃஎப்.எம். சர்விஸ் தொடங்குகிறார், அம்மக்களுக்கான அக்கறையுடன் அங்கிருக்கும் படித்த வேலையில்லாத இளைஞரான சிவகார்த்திகேயன். அந்த வானொலிக்கான […]

Continue Reading »

2017 டாப் 10 சாங்ஸ்

2017 டாப் 10 சாங்ஸ்

இந்த வருடம் நாம் அவ்வப்போது பார்த்து வந்த டாப் சாங்ஸ் வரிசைகளைப் பின்வரும் இணைப்புகளில் காணலாம். ஃபிப்ரவரி 2017 ஏப்ரல் 2017 ஜூலை 2017 செப்டம்பர் 2017 நவம்பர் 2017 கீழ் வருபவை அனைத்தும் இவ்வருடம் இதுவரை வெளியான படங்களில் உள்ள பாடல்கள். ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’, ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘2.0’ போன்ற படங்களிலிருந்து பாடல்கள் வெளியாகி இருந்தாலும், படங்கள் இன்னும் வெளியாகாததால் அவற்றை இவ்வரிசையில் சேர்க்கவில்லை. பத்து பாடல்கள் தான் என்று ஒரு […]

Continue Reading »

அருவி – திரை விமர்சனம்

அருவி – திரை விமர்சனம்

தவிர்க்கவே முடியாத,  தவிர்க்க கூடாத ஒரு சினிமா தமிழில் வந்திருக்கிறது. போஸ்டர் டிசைன், டீஸர், ட்ரைலர், பாடல்கள் என ஏகத்துக்கும் எகிறிவிட்ட எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்திருக்கிறதா இந்த அருவி என்றால்,  நிச்சயமாகச் செய்திருக்கிறது, சொல்லப் போனால் எல்லா எதிர்பார்ப்பையும் மீறி இருக்கிறது இந்தப் படம். ஜோக்கர், தீரன் இப்போது அருவி போன்ற நல்ல படங்களைக் கொடுக்கும் ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்குப் பாராட்டுகள். இப்படி ஒரு கதையையும் காட்சியமைப்பையும் யோசித்த இயக்குனருக்கு அன்பின் முத்தங்கள்.. சரி படத்துல […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad