செய்தி
பத்தாவது ஆண்டில் பனிப்பூக்கள்
பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பனிப்பூக்களின் பயணம் குறித்த ஒரு உரையாடல். உரையாடியவர்கள் – மதுசூதனன், ரவிக்குமார், யோகி தொகுப்பு – சரவணகுமரன் பயணம் குறித்த சிறு காணொலி.
சார்லட் நகரில் பெண்கள் நிகழ்த்திய தமிழ்ப் புத்தகக் கண்காட்சி
“என் புத்தகங்களில் இடம் பெற்றது போன்ற மாய மந்திரங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் நல்ல புத்தகங்களைப் படிக்கும் போது உங்களுக்குள் மாயங்கள் நிகழும் என்பதில் எனக்கு எந்தவிதச் சந்தேகமும் இல்லை” என்பார் ஜே.கே ரௌலிங் என்ற புகழ்பெற்ற எழுத்தாளர். அமெரிக்காவில், முற்றிலும் பெண்களே நடத்தும் ஒரு தொடர் புத்தகக் கண்காட்சியை நிகழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தது உலகப் பெண் கவிஞர் பேரவை, அட்லாண்டா மற்றும் வல்லினச் சிறகுகள் மின்னிதழ், அட்லாண்டா நிறுவனர் மதிப்பிற்குரிய முனைவர் தி. […]
தேர்தல் சத்தியங்களும் சாத்தியங்களும் – பாகம் 2
தேர்தலுக்குச் சில நாட்களே இருக்கும் நிலையில், தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு கட்சியின் வாக்குறுதியையும் வாக்காளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். கட்சிகளின் தேர்தல் அறிக்கை குறித்து அறிந்து கொள்ள இந்த வலையொலி நிகழ்ச்சி உதவும். தேர்தலில் யாருக்கு வாக்களிக்கலாம் என்று முடிவெடுக்கவும் இது உதவும் என்று நம்புகிறோம். கேளுங்கள்.. பகிருங்கள்.. ஜனநாயகக் கடமையைச் சரிவரச் செய்திடுங்கள்.. நிகழ்ச்சியின் முதல் பகுதி. பங்கேற்றோர் – திரு. ரவிக்குமார் சண்முகம், திரு. சரவணகுமரன்.
யார் இந்த கமலா ஹாரிஸ்?
2020 அமெரிக்கத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் திருமதி. கமலா ஹாரிஸ் அவர்களின் பின்புலம் குறித்தும், அவர் கடந்து வந்த பாதை குறித்தும் இந்த வலையொலிப் பகுதியில் திரு. ரவிக்குமார் அவர்கள் விவரித்துள்ளார். திருமதி. ஹாரிஸ் அவர்களின் தேர்வுக்கான காரணம் மற்றும் அவருடைய தேர்வு இந்தத் தேர்தல் களத்தில் ஏற்படுத்தியுள்ள அதிர்வுகள் போன்றவை குறித்தும் இந்த உரையாடலில் அலசப்பட்டுள்ளது. வாருங்கள்.. கேளுங்கள்.. பகிருங்கள்.. உரையாடியவர் – சரவணகுமரன்.
ஜார்ஜ் ப்ளாய்ட் படுகொலையும் புரட்சிப் போராட்டங்களும்
ஜார்ஜ் ப்ளாய்ட் படுகொலை குறித்தும், அதைத் தொடர்ந்து எழுந்த போராட்டங்கள் குறித்தும் மினசோட்டாவில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர் திரு. காண்டீபன் அவர்களுடன் ஓர் உரையாடல். உரையாடியவர் – சரவணகுமரன்.
கோவிட்-19 பரிசோதனைகளும் மருந்துகளும்
கோவிட்-19 மருந்து கண்டுபிடிக்க ஏன் இவ்வளவு நேரமாகிறது? தற்சமயம் பாதிக்கப்பட்டோருக்கு என்ன மருந்துகள் கொடுக்கப்படுகின்றன? அவற்றின் பலன் எப்படி உள்ளது? மினசோட்டாவில் எடுக்கப்போகும் தினசரி 20 ஆயிரம் பேர்களுக்கான பரிசோதனையின் சிறப்பம்சம் என்ன? இது போன்ற கேள்விகள் குறித்து, யூனிவர்சிடி ஆஃப் மினசோட்டாவில் ஆராய்ச்சியாளராக பணியாற்றும் திரு. அமுதா முத்துசாமி அவர்களுடன் பேசினோம். அந்த உரையாடலை இங்கு நீங்கள் கேட்கலாம். நண்பர்களுடன் பகிர்ந்து, இத்தகவல்கள் பலரையும் சென்று சேர உதவலாம். உரையாடியவர் – சரவணகுமரன்.
அமெரிக்க இடைத்தேர்தல் 2018 – முடிவுகள்
மிகுந்த எதிர்பார்ப்பு மற்றும் பரபரப்புடன் நடைபெற்ற இடைத்தேர்தலின் பெரும்பான்மையான முடிவுகள், தேர்தல் நடந்த இரவே வெளிவந்தன. கட்சிக்குள் சில மாறுபட்ட கருத்துகள் இருந்த போதிலும் பிரதிநிதிகளவை (House of Representatives) மற்றும் அதிகாரச் சபை (Senate) என்ற இரண்டு அவைகளிலும் பெரும்பான்மை பெற்றிருந்த குடியரசுக் கட்சி அதை நிலைநிறுத்திக் கொள்ள மிகக் கடுமையாக முனைந்தது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் மாற்றம் கொண்டுவர வேண்டுமெனில் இந்த இடைத்தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டுமென்ற கட்டாயத்தில் ஜனநாயகக் கட்சி போட்டியிட்டது. அதிகார அவைத் தேர்தல் முடிவுகள் (Senate results) செப்டம்பர் மாதக் […]
டிம் ஹார்ட்டன்ஸ் மினசோட்டாவில்
ஓ கனடா டிம் ஹார்ட்டன்ஸ் மினசோட்டாவுக்கும் வந்தாச்சா? கனடாவிற்கும், மினசோட்டாவிற்கும் இடையே பயணிக்கும் தமிழ் நெஞ்சங்களே, உங்கள் காஃபி சுவைக்கும் நாக்கிற்கு இன்னும் ஒரு அனுகூலம். கனடாவில் பல தமிழர் சுவைத்து மகிழும் காஃபி டபிள் டபிள், மற்றும் டிம் பிட்ஸை (Tim – bits) இனி விமானம் பிடித்துப் போய் வாங்கத் தேவையில்லை. சுடச் சுட மினசோட்டா மாநிலத்திலேயே பெற்றுக் கொள்ளலாம், நவெம்பர் மாதம் நன்றி நவிலல் நாட்களுடன் நாக்குக்கு நல்சுவை தரும் பிரபல கனடா […]
மினசோட்டாவின் பாப் டிலனிற்கு Bob Dylan நோபல் இலக்கிய விருது
மினசோட்டாவின் பாப் டிலனிற்கு நோபல் இலக்கிய விருது மினசோட்டா மாநிலத்தின் மைந்தரான ஆங்கில இசைக் கவி திரு. பாப் டிலன் அவர்கட்கு, சுவீடிஷ் அக்காடமி, 2016ம் ஆண்டு அகில உலகப் புகழ் வாய்ந்த நோபல் இலக்கிய விருதினை அக்டோபர் மாதம் 13ம் திகதி 2016 வழங்கியுள்ளது. பாப் டிலனிற்கு வயது 75. நோபல் இலக்கிய விருதினை வாங்கிய இரண்டாவது இசைக் கவிஞர் இவரே. இதன் முன்னர் 1993ம் ஆண்டு இலக்கியப் பரிசினைப் பெற்றவர் திரு ரோனி மோரிசன். […]
வீழ்வேனென்று நினைத்தாயோ!
“சாவு பயத்தக் காட்டிடாங்க பரமா!”… அடையாறு மற்றும் கூவம் ஆற்றின் கரை வாழும் அனைத்து சென்னை மக்களும் சொன்ன வார்த்தைகள் இவை. கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திடீரென ஒரேநேரத்தில் 35 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் சென்னையில் மோசமான பாதிப்பு ஏற்பட்டது. மாநகரம் முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்தது. நீர் தேங்கி மாநகருக்குள் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மழைநீரில் வீடுகள் மூழ்கியதால், மின் […]