அன்றாடம்
கடம் ஆராய்ச்சி

கடம் இசையில் உலகப் புகழ்பெற்ற திரு. சுரேஷ் வைத்தியநாதன் அவர்கள் இந்தப் பகுதியில் கடம் குறித்த அவருடைய ஆராய்ச்சி குறித்தும், இத்துறையில் அவர் அடைந்த அங்கீகாரங்கள் குறித்தும் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். உரையாடியவர் – திருமதி. லஷ்மி சுப்ரமணியன் ஒளிப்பதிவு – ராஜேஷ் கோவிந்தராஜ் படத்தொகுப்பு – சரவணகுமரன்
கடம் இசையில் சின்ன சின்ன ஆசை

கடம் கலைஞர் திரு. சுரேஷ் வைத்தியநாதன் அவர்கள் தனது இசை வாழ்க்கை பயணத்தை நம்மிடம் பகிர்ந்து வருகிறார். உரையாடலின் இரண்டாம் பாகத்தை இங்குக் காணலாம். உரையாடியவர் – திருமதி. லஷ்மி சுப்ரமணியன் ஒளிப்பதிவு – திரு. ராஜேஷ் கோவிந்தராஜ் தொகுப்பு – திரு. சரவணகுமரன்
விக்கு வினாயக்ராம் ஏற்படுத்திய பிரமிப்பு : கடம் சுரேஷ் வைத்தியநாதன்

உலகளவில் கடம் இசைக்குப் பெயர் பெற்று விளங்கும் இசை கலைஞர் திரு. சுரேஷ் வைத்தியநாதன் அவர்களுடன் திருமதி. லஷ்மி சுப்ரமணியன் அவர்கள் நடத்திய சுவையான உரையாடலை இங்குக் காணலாம். உரையாடலின் முதல் பகுதியான இதில், சுரேஷ் அவர்கள் தனது இளம் வயது நினைவுகளை மற்றும் அவரது பெற்றோர், ஆசிரியர்கள் பற்றிய தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். பதிவு – ராஜேஷ் கோவிந்தராஜ் தொகுப்பு – சரவணகுமரன் காணுங்கள்.. பகிருங்கள்..
நீர்ச்சறுக்கு விளையாட்டு

வட அமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாநிலத்தில் 10,000 ஏரிகள் உள்ளது. இந்த ஏரிகளில் பருவ காலங்களுக்கேற்ப அதற்குண்டான விளையாட்டுகள் விளையாடப்படுகின்றன. இப்பொழுது மினசோட்டா மாநிலத்தில் வசந்தகாலப் பருவம் நடந்து கொண்டு உள்ளது மக்கள் வசந்த கால அனுபவத்தை அனுபவித்துக் கொண்டு உள்ளனர். எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்ற மரங்களும் வண்ணப் பூக்களால் ஆன பூச்செடிகள் காணப்படுகின்றன. பருவக் காலங்களுக்குத் தகுந்தாற்போல் உள்ளுர் மக்களும் பொருத்தமான உணவு, உடை, பொழுது போக்குகளை அனுபவிக்கின்றனர். வசந்தகாலத்தில் நடத்தப்படும் போட்டிகளில்ம் […]
ஃபேமிலி மேன் 1 & 2

திரைப்படத்திற்கான ஆக்கமும் வரவேற்பும் மட்டும் வெப்சீரிஸ் தொடர்களுக்குக் கிடைக்கவில்லை, திரைப்படங்களுக்குக் கிடைக்கும் சர்ச்சைகளும் எதிர்ப்புகளும் வெப்சீரிஸ் தொடர்களுக்குக் கிடைத்து வருகின்றன. அப்படியான ஒரு எதிர்ப்பு தமிழர்களிடையே ஃபேமிலி மேன் இரண்டாவது சீசன் தொடருக்கு எழுந்துள்ளது. ஃபேமிலி மேன் முதல் சீசன் 2019 ஆம் ஆண்டு அமேசான் ப்ரைமில் ஒளிப்பரப்பானது. மும்பையில் வெளிதோற்றத்திற்குச் சராசரி குடும்பஸ்தனாகக் காட்சியளிக்கும் ஶ்ரீகாந்த் திவாரி, வெளியுலகிற்குத் தெரியாமல் இந்திய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் டாஸ்க் (TASC) என்ற உளவுப்படையில் முக்கியப் […]
பத்மஸ்ரீ காயத்ரி சங்கரனுடன் உரையாடல்

பத்மஸ்ரீ, கலைமாமணி போன்ற உயரிய விருதுகளைப் பெற்றுள்ள இசை கலைஞர் முனைவர் திருமதி. காயத்ரி சங்கரன் அவர்களுடன் திருமதி. லஷ்மி சுப்ரமணியன் அவர்கள் நடத்திய இசை அனுபவம் குறித்த உரையாடலை இங்கு காணலாம். தொகுப்பு – சரவணகுமரன்.
Dr.டேஷ் நிறுவனத்தின் தொண்டு உதவி

டாக்டர் டேஷ் (Dr.Dash Foundation) தொண்டு நிறுவனமானது வட அமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ளது. இத்தொண்டு நிறுவனமானது சேவை மனப்பான்மையுடன் பல்வேறு அமைப்புகளுக்கும், இந்திய அமைப்பு நிறுவனங்களுக்கும், அவர்களுடைய கலாச்சாரம் மற்றும் இசை இயல் நடனங்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. முக்கியமாக இந்த நிறுவனத்தை நடத்துபவர் டாக்டர் டேஷ் என்பவர் மினசோட்டாவில் அமைந்துள்ள ஹிந்து மந்திர் கோவில் அவைத் தலைவராக (Chairman) உள்ளார். பொதுவாக டிசம்பர் மாதங்களில், விடுமுறை தினக் கொண்டாட்டங்களுக்கிடையே மக்கள் பரிசுகளை […]
வெங்காயம் வெட்டும் விதம்

கோடை காலம் வருகிறது உள்வீட்டு சமையல் அறையிலும் விசாலமாக வெளியிடங்களிலும் ஒன்று கூடி சமைத்து மகிழ்வது வடஅமெரிக்க வழக்கம். வெங்காயங்கள் சிவப்பு, மஞ்சள், வெள்ளை எனப் பலவகைப்படும். ‘ஏலியம் சீப்பா’ (Allium Cepa) என்பது வெங்காயத்தின் தாவரவியல் பெயர். வெங்காயமானது சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னரே மத்திய ஆசியாவிலும் அதன் அருகாமை நாடுகளிலும் பயிராக வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது என்கிறது சரித்திரம். தமிழர்கள், வெங்காயம் இல்லாமல் சாப்பிடுவது மிகக் குறைவே. இன்று வெங்காயம் வெட்டுவது பற்றியான கைமுறையைப் பார்ப்போம். இதே […]
புதிய அரசு : ஓர் அலசல் – பாகம் 2

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கும் புதிய அரசு குறித்து திரு. ரவிக்குமார் சண்முகம் அவர்களும், திரு. சரவணகுமரன் அவர்களும் உரையாடி வரும் வலையொலி பகுதி தொடர்கிறது. இந்தப் பகுதியில் புதிய அமைச்சரவை குறித்தும், புதிய அரசின் முதல் கட்ட நடவடிக்கைகள் குறித்தும் திரு. ரவிக்குமார் அவர்கள் பேசியுள்ளார். கேளுங்க.. பகிருங்க..
கோவிட் தடுப்பூசி பயமா? இதைக் கேளுங்க!!

கோவிட் தடுப்பூசி மீதான பயத்தையும், தயக்கத்தையும் போக்கும் வகையில் இந்த வலையொலி பகுதியில், யூனிவர்சிடி ஆஃப் மினசோட்டாவில் ஆராய்ச்சியாளராக பணியாற்றும் திருமதி. அமுதா முத்துசாமி அவர்கள் தடுப்பூசி குறித்து எளிமையான முறையில் விளக்கம் தந்துள்ளார். கேளுங்கள்.. பகிருங்கள்.. உரையாடியவர் – சரவணகுமரன்.