அன்றாடம்
மினுக்க மினசோட்டா மின்னொளி அலங்காரம் (Glow Festival)
மார்கழி மாத மந்த இருட்டைப் போக்கும் முகமாக வந்துள்ளது GLOW Holiday Festival. இது மில்லியன் கணக்கில் மின்னொளி அலங்காரங்களை மினசோட்டா மக்களுக்கு,குதூகலமாகத் தருகிறது. இந்த இருட்டில், ஒளி இன்பத்தை மனதில் தரும் என்பதில் ஐயமே இல்லை. இந்த நிகழ்வு மினசோட்டா fairgrounds இல் இந்த விடுமுறை காலத்தில் நடைபெறுகிறது. Fair Grounds முகவரி: 1265 Snelling Ave. N., St. Paul, MN 55108 இதன் இன்னொரு நற்செய்தி என்னவென்றால், அதை வாகனத்தில் இருந்தவாறே குடும்பமாக, […]
மூக்குத்தி அம்மன்
தீபாவளி கொண்டாடுவதற்குப் பல காரணங்களைச் சொல்லுவார்கள். நமக்குக் காரணங்கள் தேவையில்லை. கொண்டாட்டம் தான் முக்கியம். எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு, சாமி கும்பிட்டுவிட்டு, புத்தாடை அணிந்து, தீபாவளி ஸ்பெஷல் பலகாரங்கள் சாப்பிட்டுவிட்டு, பட்டாசு வெடித்து, அவரவருக்கு ஸ்பெஷலான உணவை உண்டு, டிவியில் சிறப்பு நிகழ்ச்சிகள் பார்த்தோமா, பண்டங்களை நண்பர்களுடன் பகிர்ந்தோமா, தியேட்டருக்குச் சென்று புதுப்படம் பார்த்தோமா என்றவாறு நமது தீபாவளிகள் நடந்து முடியும். இது கொரோனா காலம். பண்டங்களைப் பகிர முடியாது, தியேட்டருக்கு சென்று படம் பார்க்க முடியாது. […]
சூரரைப் போற்று
சாமானியனும் உயரத்தில் பறக்க வேண்டும், பறக்க முடியும் என்ற நியாயத்தைப் பேசும் படமாகச் சூர்யாவின் “சூரரைப் போற்று” திரைப்படம் இயக்குனர் சுதா கோங்கரா இயக்கத்தில் இவ்வாரம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ளது. இதுவரை ‘ஓடிடி’யில் வெளிவந்த திரைப்படங்கள் எல்லாம் சோபிக்காத நிலையில், இந்தப் படம் திரையரங்கில் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ‘ஏர் டெக்கான்’ நிறுவனர் கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, அதனுடன் பிற விமான நிறுவனங்களின் கதையையும் சேர்த்து, அத்துடன் […]
அயலகம் ஆராதித்த தமிழ்க்கவிஞர்
ஈரோடு தமிழன்பன் வாசகர் வட்டம், அமெரிக்கா, அமெரிக்கத் தமிழ் வானொலி, ஒருதுளிக்கவிதை, புதுச்சேரி, உலகப் பெண் கவிஞர் பேரவை, அட்லாண்டா மற்றும் வல்லினச் சிறகுகள் இணைந்து, மகாகவி ஈரோடு தமிழன்பன் 87ஆம் பிறந்த நாள் விழா இணையவழியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதில் அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், இந்தியா போன்ற நாடுகளிலிருந்து பல அறிஞர்கள், கவிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இரண்டரை மணி நேரம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, எப்பொழுதும் மகாகவிக்காகத் தங்களுடைய பங்களிப்பைத் […]
பொம்மைத் தொலைக்காட்சி
நவராத்திரிப் பண்டிகை வந்துவிட்டால் எங்கள் ஊர் மினியாபொலிஸ் மாநகரம் வண்ணம் பூசினாற்போல இருக்கும். இது தமிழ்ப் பெண்டிர் கொண்டாடும் பண்டிகை என்பதால், தமிழ்ப் பெண்கள் கலர் கலராகத் தமிழ் பாரம்பரியப் புடவை அணிந்து உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டிற்குச் சென்று அவர்கள் வைத்திருக்கும் கொலுவைப் பார்த்துவிட்டு, அங்கு ஓரிரு தேவி பாடல்களைப் பாடிக் கொண்டாடுவார்கள். ஒவ்வொருவர் வீட்டிலும் அவர்கள் இதற்காக செய்த சுண்டல் போன்ற தின்பண்டங்களும் வழங்கப்படும். அந்த நேரங்களில்,இவர்களின் கணவன்மார்கள் படும்பாட்டைச் சொல்ல வேண்டுமென்றால், இந்த […]
SPB நினைவலைகள்
‘பாடும் நிலா’ திரு. எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் குறித்த நினைவலைகளை நம்மிடம் பகிர்ந்துக்கொள்கிறார், மினசோட்டாவைச் சேர்ந்த இசை ஆர்வலர் திரு. செந்தில்குமார்.
ரம்மியமான ராகங்கள் – சண்முகப்பிரியா
கர்நாடக ராகங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட திரையிசைப் பாடல்கள் குறித்து மினசோட்டாவைச் சேர்ந்த இசைக் கலைஞர் திருமதி. லக்ஷ்மி அவர்கள் இந்த “ரம்மியமான ராகங்கள்” நிகழ்ச்சியில் வரிசைப்படுத்துகிறார். நிகழ்ச்சியின் இரண்டாம் பகுதியான இதில் சண்முகப்பிரியா ராகம் பற்றியும், அந்த ராகத்தில் உருவான திரைப்படப்பாடல்களைப் பற்றியும் கேட்கலாம். வாருங்கள்.. கேளுங்கள்.. பகிருங்கள். இந்த நிகழ்ச்சி குறித்த உங்கள் கருத்துகளை, பின்னூட்டப் பகுதியில் பகிருங்கள். தொகுப்பு – சரவணகுமரன்
ரத ஆலயம் (Gundicha Mandir)
வட அமெரிக்காவில் மினசோட்டா மாநிலத்தில் மேப்பிள் குரோவில் உள்ள இந்துக் கோவிலில் தேர் நிறுத்துவதற்கு என்று தனியிடம் அமைத்து அதற்குண்டான கோபுர வழிபாடுகள் சென்ற மாதம் ஆகஸ்ட் 22ஆம் தேதி, விநாயகர் சதுர்த்தியன்று விழாவாக நடைபெற்றது. விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்த பின்பு சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. கோவில் நிர்வாகம் ஒருங்கிணைத்த இந்த விழாவில், டாக்டர் டேஷ், தலைமையில் கலசத்திற்குச் சிறப்பு பூஜை நடைபெற்றது. வழிபாடுகள் முடிவடைந்து டாக்டர் டேஷ் அவர்களுக்கு பரிவட்டம் கட்டப்பட்டது. கோபுரக் […]
ரம்மியமான ராகங்கள் – மாயாமாளவகௌளை
கர்நாடக ராகங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட திரையிசைப் பாடல்கள் குறித்து மினசோட்டாவைச் சேர்ந்த இசைக் கலைஞர் திருமதி. லக்ஷ்மி அவர்கள் இந்த “ரம்மியமான ராகங்கள்” நிகழ்ச்சியில் வரிசைப்படுத்துகிறார். நிகழ்ச்சியின் முதல் பகுதியான இதில் மாயாமாளவகௌளை ராகம் பற்றியும், அந்த ராகத்தில் உருவான திரைப்படப்பாடல்களைப் பற்றியும் கேட்கலாம். வாருங்கள்.. கேளுங்கள்.. பகிருங்கள். இந்த நிகழ்ச்சி குறித்த உங்கள் கருத்துகளை, பின்னூட்டப் பகுதியில் பகிருங்கள். தொகுப்பு – சரவணகுமரன்
மினசோட்டாவில் 74வது இந்திய சுதந்திர தின விழா
இந்தியாவின் 74வது சுதந்திரத் தினத்தை மினசோட்டாவில் உள்ள ‘இந்தியன் அசோசியேஷன் ஆஃப் மினசோட்டா’ (IAM) அமைப்பினர், செயின்ட் பாலில் உள்ள மாநில தலைமைக் கட்டிட மைதானத்தில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி நடத்தினர். இப்பொழுது உள்ள சூழ்நிலையில் இந்த வருடம் கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது. கொடியேற்றம் மட்டும் ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெற்றது அமெரிக்க, இந்தியக் கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டு இருநாட்டு தேசிய கீதங்களும் பாடப்பட்டன. இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக […]