அன்றாடம்
பேரிடர் காலத்தில் தமிழால் இணையும் அட்லாண்டாத் தமிழர்கள்
படுப்பினும் படாது, தீயர் பன்னாளும் முன்னேற்றத்தைத் தடுப்பினும், தமிழர் தங்கள் தலைமுறை தலைமுறைவந்து அடுக்கின்ற தமிழே! பின்னர் அகத்தியர் காப்பியர்கள் கெடுப்பினும் கெடாமல் நெஞ்சக் கிளைதொத்தும் கிளியே வாழி! -பாரதிதாசன் மேற்கூறிய பாரதிதாசனாரின் பாடலுக்கிணங்க அட்லாண்டா மாநகரத் தமிழ் சங்கம் இனி வரும் தலைமுறைக்கும் தமிழைக் கொண்டு சேர்க்கும் வகையில் பாடுபடுகின்றது என்று சொன்னால் அது மிகையாகாது! ஆமாம்,தமிழே! அமுதே! என்ற நிகழ்ச்சியின் வாயிலாக வாரந்தோறும் சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு ஒருவர் படித்த புத்தகத்தின் […]
இசைஞானி பிறந்தநாள் சிறப்பு உரையாடல்
ஜூன் 2 அன்று 77வது பிறந்தநாள் கொண்டாடும் இசைஞானி இளையராஜா அவர்களின் சிறப்பைப் பற்றி, மினசோட்டாவைச் சேர்ந்த இசை கலைஞர்கள் திருமதி. லக்ஷ்மி, திரு. செந்தில், திரு. சதீஷ், திரு. சரவணன் மோகன் அவர்களுடன் ஒரு இசை சார்ந்த உரையாடல். நல்ல கேட்பனுபவத்திற்கு ஹெட்போனில் கேட்கவும். உரையாடியவர் – சரவணகுமரன்.
அமெரிக்கத் தேர்தலில் என்ன நடக்கிறது?
கடந்த பகுதியில் அமெரிக்கத் தேர்தல் நடைமுறைகள் குறித்துப் பார்த்தோம். இப்பகுதியில் அமெரிக்கத் தேர்தல் நடைமுறையில் இருக்கும் சிக்கல்கள் குறித்தும், தற்போதைய 2020 ஆம் ஆண்டின் தேர்தல் நிலவரம் குறித்தும் நம்மிடம் தகவல்களைப் பகிர்கிறார், திரு. ரவிக்குமார் சண்முகம் அவர்கள். வாருங்கள்.. கேளுங்கள்.. பகிருங்கள்.. உரையாடியவர் – சரவணகுமரன்.
கார்த்திக் டயல் செய்த எண் – சில பார்வைகள்
சமீபத்தில் கௌதம் மேனன் யூ-ட்யூபில் வெளியிட்ட ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படம், 2010இல் வெளிவந்த ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் சிறு தொடர்ச்சியாக வந்துள்ளது. அப்படம் குறித்த குறு சிறு பார்வைகள் கொண்ட உரையாடல். பங்கு கொண்டோர் – மனோ அழகன், வினித்ரா & சரவணகுமரன். படத்தைக் காண,
ஹாப்பி பர்த்டே!! சித் ஸ்ரீராம்
பின்னணி பாடகர் சித் ஸ்ரீராமின் பிறந்தநாளையெட்டி (மே 19) அவரை பற்றி, அவரது பாடல்கள் பற்றி இசை ஆர்வலர் திரு. செந்தில்குமார் அவர்களுடன் சித் ஸ்ரீராம் பாடல்களைக் கேட்டுக்கொண்டே ஒரு இசை சார்ந்த உரையாடல். உரையாடியவர் – சரவணகுமரன்
அண்ணல் காந்தியின் அழகான ஆசிரமம் சேவாக்ராம்
தேசப்பிதா, அண்ணல் காந்தி அடிகளிடம் பற்றுக் கொண்டவர்கள் கொல்லாமையை நேசிப்பவர்கள்,எளிமையை விரும்புவோர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம் மகாராஷ்டிரா மாநிலத்தின் வர்தா (wardha)வின் அருகில் சேவாக்ராமம் எனும் கிராமத்தில் உள்ள காந்தி அடிகளின் ஆசிரமம் தான்.வாருங்கள், இதைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.12 மார்ச் 1930ல் உப்புச் சத்தியாக்ருஹத்திற்காகத் தன் 78 தொண்டர்களுடன் சபர்மதி ஆசிரமத்திலிருந்து புறப்பட்ட காந்தி அடிகள் தண்டி யாத்திரைக்குக் கிளம்பும் போது,முழு வெற்றி கிடைத்தால்தான் இங்கு திரும்பி வருவேன் என்று முடிவெடுத்தார். 6 ஏப்ரல் […]
கடவுளைக் காண்பீர்!
பொன் கொண்டோர், பொருள் கொண்டோர், மண், மாளிகை கொண்டோர், பூமியை ஆண்டோரையும் கண்டீர்! பூவையர் மனம் வென்றோரைக் கண்டீரோ? மங்கையரின்றி ஒரு மார்க்கம் உண்டோ – இந்த மானிட உலகில்? அன்பைப் பொழியும் தாயாக, காதலால் கசிந்துருகும் தாரமாக, சோதனையில் தோள்தாங்கும் உற்ற சகோதரியாக, தாயோ தந்தையோ மூப்படைந்ததும் மடிதாங்கும் சேயாக … பெண்ணைக் கண்டோர் உண்டிங்கு! ஆனால், சமூகப் பாகுபாடின்றி, கருணையே வடிவாக மானிட உயிரைக் காத்திட அச்சமின்றி, அருவெறுப்பின்றி அன்போடு அரவணைக்கும் […]
சர்வதேச குடும்பங்கள் தினம்
சர்வதேச குடும்பங்கள் தினத்தையொட்டி தமிழ் திரைப்படப் பாடல்களில் குடும்பத்தைப் போற்றும் பாடல்கள் குறித்த உரையாடல். உரையாடியவர்கள் – மதுசூதனன், சரவணகுமரன்.
HBD சந்தோஷ் நாராயணன்!!
இன்று மே 15 தேதியன்று பிறந்தநாள் கொண்டாடும் தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் திரு. சந்தோஷ் நாராயணன் அவர்களுக்கு பனிப்பூக்களின் வாழ்த்துகள். அவரது பிறந்தநாளை முன்னிட்டு திரு. சந்தோஷ் நாராயணன் அவர்களைப் பற்றியும், அவரது இசையில் இருக்கும் நுணுக்கங்களைப் பற்றியும் இசை ஆர்வலர் திரு. செந்தில்குமார் அவர்களுடன் ஓர் இசை சார்ந்த உரையாடல். வாருங்கள்.. கேளுங்கள்.. பகிருங்கள்.. உரையாடியவர் – சரவணகுமரன்.
கனடா வாய்ப்புகள்
ஐடி தவிர வேறு என்ன துறை வாய்ப்புகள் கனடாவில் அதிகம் காணப்படுகின்றன? அமெரிக்க க்ரீன் கார்டுக்காக காத்திருப்போருக்கு கனடா குடியேற்ற வாய்ப்புகள் என்னென்ன? கோவிட்-19 கால நெருக்கடியில் கனடா குடியேற்றத்திற்கான சாதக பாதகங்கள் என்னென்ன? போன்ற கேள்விகளுக்கு நமது உரையாடலின் இந்த இரண்டாம் பகுதியில் CANext immigration திரு. ஸ்ரீராம் அவர்கள் பதிலளித்துள்ளார். வாருங்கள்.. கேளுங்கள்.. பகிருங்கள்.. உரையாடியவர் – சரவணகுமரன்.