அன்றாடம்
நவராத்திரி நிகழ்வுகள்

“சிதக்னி குண்ட ஸம்பூதா தேவ கார்ய சமுத்தியதா” என்ற வரிகளுடன் தொடங்கும் லலிதா சஹஸ்ரநாமத்தை முக்கிய சாரமாக கொண்டாடும் பண்டிகை சரத் நவராத்திரி. மனதின் உள் அகந்தை சொரூபத்தில் இருக்கும் மகிஷாசுரன் என்ற அரக்கனை அழிக்க அம்பிகை செய்யும் ஒரு யுத்தமே இந்த நவராத்திரி பண்டிகை. பத்து நாட்களின் முடிவில் சித்தத்தில் இருந்து எழும்பிய அம்பிகை மகிஷாசுரனை அழித்து பின் ராஜராஜேஸ்வரி சொரூபத்தில் மகிழ்வுடன் கொலுவேறும் நாளே விஜய தசமி என்று கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த […]
நவராத்திரி திருவிழா 2024

முப்பெருந்தேவியரான லட்சுமி, சக்தி, சரஸ்வதி ஆகிய மூவரையும் போற்றும் விதமாகக் கொண்டாடப்படுவது நவராத்திரி. நவம் என்ற சொல்லுக்கு வட மொழியில் ஒன்பது என்று பொருள். ஒன்பது நாட்கள் நடைபெறும் இவ்விழாவை இந்தியாவின் பல பகுதிகளில் பலவிதமாகக் கொண்டாடுகிறார்கள். குஜராத் மாநிலத்தில் இவ்விழா நடனத் திருவிழாவாக அனுசரிக்கப்படுகிறது. ஓவ்வொரு இரவும் மக்கள் ஒன்று கூடி நடனமாடுவார்கள். இந்த வகையான நடனத்தை கார்பா (garba) அல்லது தாண்டிய (dandiya) என்று அழைப்பார்கள். இந்த ஆண்டு மினசோட்டா மாநிலத்தில் உள்ள குஜராத் […]
வேட்டையன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் படத்தை ”ஜெய் பீம்” படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் அவர்கள் இயக்கப்போகிறார் என்ற செய்தி வந்தபோதே ஒரு ஆர்வம் கிளம்பியது. ரஜினி அவர்களின் கமர்ஷியல் படங்கள் தான் நம்மை விசிலடித்து, கைத்தட்டி, ஆட்டம் போட்டுப் படத்தைப் பார்க்க வைக்கும் என்றாலும், புதிய இயக்குனர்களின் வித்தியாசமான கதைக்களங்களில் அவர் நடித்தால் நல்லாயிருக்குமே என அவ்வப்போது எண்ணத் தோன்றும். கபாலி, காலா ஆகிய படங்களில் இயக்குனர் ரஞ்சித் அவர்கள் அப்படி வேறுபட்ட கதையில் ரஜினியைக் காட்டினார். […]
‘டிரிக்கிள் டவுன்’ பொருளாதாரம்

உலக நாடுகள் பலவும், தங்களது நில அமைப்பு, வளங்கள், மக்களமைப்பு போன்ற பல காரணிகளை மனதில் கொண்டு தங்களுக்கு தேவையான பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றுகின்றனர். அடிப்படையில் முதலாளித்துவம், சோஷியலிசம், கலப்பு பொருளாதாரம் என மூன்று முக்கிய கோட்பாடுகள் இருந்தாலும், அவற்றை செயல்படுத்துவதில் பல நாடுகள் வெவ்வேறு வழிமுறைகளைக் கையாள்கின்றன. உதாரணமாக முதலாளித்துவ பொருளாதாரக் கோட்பாடு இலாபத்தை இலக்காக வைத்து செயல்படக்கூடிய தனியார் நிறுவனங்களை சுதந்திரத்துடன், எந்தப் பொருளையும், எந்த விலையிலும் விற்க அனுமதிப்பது என்பதாகும். ஆனால் இந்த […]
‘மெய்’யழகன்

“வெண்ணிப் பறந்தலைப் போர், கரிகால் பெருவளத்தானின் வீரம், பெருஞ்சேரலாதனின் மானம், வடக்கிருத்தல், இலங்கைத் தமிழரின் துயர்கள், நீடாமாங்கலம் கலவரம், ஜல்லிக்கட்டுப் போராட்டம், ஸ்ட்டெரிலைட் பிரச்சனை மற்றும் அந்தத் துப்பாக்கிச் சூட்டில் இறந்த பெண்மணிக்கு சம்பந்தமே இல்லாத ஒருவர் திதி கொடுப்பது …. “ – இரு ஆண்கள் தண்ணி அடிக்கும்பொழுது பேசிக் கொள்ளும் பேச்சின் சாராம்சம்.. தமிழரின் வீரம், மானம், வரலாற்று உண்மைகள் இவை குறித்த புரிதல்களும், பெருமையும் உள்ளவர்களுக்கு இந்தக் காட்சிகள் புரிந்து கொள்ளக் கூடியவை. […]
பூசணிக்காய் Pie

தேவையான பொருட்கள்: 1 ¼ கோப்பை அனைத்து மாவு 2 தேக்கரண்டி சர்க்கரை ¼ தேக்கரண்டி உப்பு 8 தேக்கரண்டி (1 குச்சி) குளிர்ந்த, உப்பு சேர்க்காத வெண்ணெய், சிறிய சதுரங்களாக வெட்டப்பட்டது 4 தேக்கரண்டி குளிர்ந்த நீர் நிரப்புதலுக்கு: 15 அவுன்ஸ் சுத்தமான பூசணிக் கூழ் (Pumpkin Puree) 3 முட்டைகள் […]
ஆட்டம் பாட்டம் அனிருத்

அனிருத் – இன்றைக்கு தமிழ் சினிமாவின் ஹாட் இசையமைப்பாளர். ’3’ திரைப்படத்தில் அறிமுகம் ஆகும் போதே‘வொய் திஸ் கொலவெறி’ என்று யூ-ட்யூப் மூலம் உலக அளவில் வைரல் ஆகி நல்ல கவனத்தைப் பெற்றார். அடுத்தடுத்தபடங்களில் அவரது பாடல்கள் இளைஞர்களிடையே ஹிட் ஆகி, புகழ் ஏணியில் ஏறத் தொடங்கினார். குறுகியகாலத்திலேயே ரஜினி, கமல், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களது ஆஸ்தான இசையமைப்பாளர் ஆனார். ஆரம்பத்தில் அவருடைய பாடல்களைக் கேட்டு, ”என்ன இது டம் டும் என்று இவ்வளவு […]
சிகாகோவில் தமிழ்நாடு முதல்வர்

அரசுமுறைப் பயணமாக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 12 ஆம் தேதிவரை, அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து வந்த தமிழ்நாட்டு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள்செப்டம்பர் 3ஆம் தேதி அன்று சிகாகோ வந்தார். செப்டம்பர் 7, சனிக்கிழமையன்று அமெரிக்கத் தமிழர்களைரோஸ்மண்ட் அரங்கில் சந்தித்து உரையாற்றிய முதல்வர் அவர்கள், முன்னதாக அமெரிக்கத் தமிழர்களின் கலைநிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தார். அமெரிக்காவின் பல்வேறு தமிழ்ச் சங்கத்தினர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளைவழங்கினார்கள். இதில் […]