அன்றாடம்
கனடா குடியேற்றம்
கனடா அரசும், அந்நாட்டு மக்களும் பிற நாட்டு மக்களை எப்படி எதிர்கொள்கிறார்கள்? கனடாவில் வேலை வாய்ப்புக்கான சந்தை, அமெரிக்காவை ஒப்பிடும்போது எப்படி இருக்கிறது? குடியேற்ற சேவை வழங்கும் மற்ற நிறுவனங்களில் இருந்து CANext எப்படி மாறுபடுகிறது? .. கனடாவில் CANext immigration நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வரும் திரு. ஸ்ரீராம் அவர்களுடன் ஒரு தகவல் பொதிந்த உரையாடல். வாருங்கள்.. கேளுங்கள்.. பகிருங்கள்.. உரையாடியவர் – சரவணகுமரன்.
தேர்த் திருவிழா
தமிழ்நாட்டில், தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் நகரில் திருக்காளகத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான திருத்தலமாகும். இங்கு,மார்ச் எட்டாம் தேதி அன்று மாசிமகத் தேரோட்டம் நடைபெற்றது. பத்து தினங்கள் கொண்டாடப்படும் இந்தத் திருவிழாவை ஃபிப்ரவரி 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினந்தோறும் பல்வேறு சமுதாயம் சார்பில் மண்டகப்படி நடத்தப்பட்டது. அப்போது ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனங்களில் கடவுளர்களும்,அம்மனும் வீதி உலா வர,திருவிழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த […]
கோவிட்-19 பரிசோதனைகளும் மருந்துகளும்
கோவிட்-19 மருந்து கண்டுபிடிக்க ஏன் இவ்வளவு நேரமாகிறது? தற்சமயம் பாதிக்கப்பட்டோருக்கு என்ன மருந்துகள் கொடுக்கப்படுகின்றன? அவற்றின் பலன் எப்படி உள்ளது? மினசோட்டாவில் எடுக்கப்போகும் தினசரி 20 ஆயிரம் பேர்களுக்கான பரிசோதனையின் சிறப்பம்சம் என்ன? இது போன்ற கேள்விகள் குறித்து, யூனிவர்சிடி ஆஃப் மினசோட்டாவில் ஆராய்ச்சியாளராக பணியாற்றும் திரு. அமுதா முத்துசாமி அவர்களுடன் பேசினோம். அந்த உரையாடலை இங்கு நீங்கள் கேட்கலாம். நண்பர்களுடன் பகிர்ந்து, இத்தகவல்கள் பலரையும் சென்று சேர உதவலாம். உரையாடியவர் – சரவணகுமரன்.
உழைப்பாளர் தின உரையாடல் – திரு. மதுசூதனன்
உலகமெங்கும் உழைப்பாளர் தினம் மே 1ஆம் தேதியன்று கொண்டாடப்படுவது ஏன்? உலகமெங்கும் மே 1ஆம் தேதியன்று கொண்டாடப்பட்டாலும், இதற்கு காரணமாக இருக்கும் அமெரிக்காவில் ஏன் மே 1 அன்று உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுவது இல்லை? அமெரிக்காவில் மே தினத்திற்கு வேறு அர்த்தம். என்ன அது? வாருங்கள்.. கேட்போம்.. அறிவோம்.. உரையாடியவர் – சரவணகுமரன்.
தன்னார்வலர்களின் முகக் கவசத் தயாரிப்பு
இன்றைய தினம் உலகையே ஸ்தம்பிக்கச் செய்து மனிதர்களைப் பயமுறுத்தி, வீட்டில் அடைப்பட்டிருக்கச் செய்த, கொடிய நோயாக கொரோனா வைரஸ் உள்ளது. அவசியக் காரணங்களுக்காகக் கூட வெளியில் செல்வதற்கு மிகவும் பயந்து போய் உள்ளனர். இந்த நோய் எப்படி பரவுகிறது என்று தெரியாத சூழ்நிலையில் மக்கள் வெளியே செல்வதற்கு முகக் கவசம் அணிந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த முகக் கவசத் தயாரிப்பில் பல நிறுவனங்கள் இருந்தாலும் அனைத்து தொழிலாளிகளும் பணிக்கு வர முடியாத நிலையில், பல நிறுவனங்களில் […]
ரமலான் பண்டிகை குறித்து திரு. இம்ரான்
ரமலான் பண்டிகை குறித்து திரு. இம்ரான் உரையாடியவர் – சரவணகுமரன்.
காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (மார்ச் 2020)
2020 ஆண்டின் தொடக்க மாதங்களில் வெளியான படங்களிலிருந்து, ரசிகர்களைக் கவர்ந்த பாடல்களை இந்தப் பகுதியில் காணலாம். சைக்கோ – உன்னை நினைச்சு இளையராஜாவின் இசையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளியாகிய படம் – மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த சைக்கோ. 1976இல் இருந்து இசையமைத்து வரும் இளையராஜாவின் இசை, இத்தனை தசாப்தங்களுக்குப் பிறகு, இன்றைய தலைமுறையையும் ரசிக்க வைக்கிறது என்பது வியப்புக்குரிய விஷயமே. ஜனவரியில் வெளிவந்த இப்படம், கலவையான விமர்சனத்தைப் பெற்றிருந்தாலும், இளையராஜாவின் இசையும், பின்னணி இசையும் ரசிகர்களை […]
கபீர்தாஸ்
இந்தி இலக்கிய உலகினை ஆதிகாலம் (1050-1375), பக்தி காலம் (1375-1700), ரீதி காலம் (1700-1900), தற்காலம் (1900 முதல் இன்றுவரை) எனப் பகுத்துள்ளனர். பக்தி காலத்தில் இடம் பெறுபவர் கபீர்தாஸ். நிர்குண பக்தி, சகுண பக்தி எனும் பக்தியின் இரு நெறிகளில் நிர்குணத்தைச் சார்ந்தவர் கபீர். நிர்குண பக்தர்கள் ஞானிகள் ஆவர். இவர்களின் பக்தி நெறியில் வணங்கப்படும் இறைவனுக்குப் பெயர், உருவம், நிறம், குலம் ஏதும் கிடையாது. எங்கும் நிறைந்தவன்; உருவமில்லாதவன், சாதி, மத வேறுபாடின்றி இருப்பவன் […]
1917 – திரை அனுபவம்
முதல் காட்சியில் பசுமை படர்ந்து கிடக்கும் அமைதியான ஒரு நிலப்பரப்பைக் காட்டும் கேமரா, கொஞ்சம் பின்னால் நகரும் போது, இரண்டு இளம் சிப்பாய்கள் ராணுவ உடையில் உறங்கிக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது. அங்கு வரும் ஒரு அதிகாரி, ஒருவனை எழுப்பி, “உனக்குத் துணையாக இன்னொரு ஆளைத் தேர்வு செய்துகொண்டு உயர் அதிகாரியைப் போய்ப்பார்” என ஆணையிடுகிறார். கதாநாயகன் தன் நண்பனை எழுப்பிவிட, இருவரும் உயர் அதிகாரி இருக்கும் இடத்தை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறார்கள், நடந்து முன்னோக்கிச் செல்லும் அவர்களை […]
மினசோட்டாத் தமிழ்ச்சங்கப் பள்ளியின் உலகத் தாய்மொழி தினக் கொண்டாட்டம்
உலகத் தாய்மொழி தினத்தையொட்டி, மினசோட்டாத் தமிழ்ப்பள்ளியில் தமிழ்மொழி சார்ந்த கொண்டாட்ட நிகழ்ச்சிகள், பிப்ரவரி 22ஆம் தேதியன்று ஈடன் ப்ரெய்ரியில் இருக்கும் PiM Arts High School இல் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் தமிழ்ப்பள்ளியில் தமிழ் பயிலும் மாணவர்கள் வெவ்வெறு தலைப்பில் காட்சிப்பொருட்கள் செய்து, அவற்றைக் காட்சிப்படுத்தியிருந்தனர். கீழடி, கல்லணை, தமிழ் மன்னர்கள், தமிழ்த் தலைவர்கள், தமிழ் கவிஞர்கள், தமிழ்நாட்டு மாவட்டங்கள், ஊர்கள், ஆறுகள், விளையாட்டுகள், கலைகளின் சிறப்புகள் எனப் பல்வேறு தலைப்புகளில் தங்கள் படைப்புகளைக் காட்சிப்படுத்தியிருந்தனர். பின்னர், […]