அன்றாடம்
2019 டாப் சாங்க்ஸ்
ஒரு ஆண்டின் சிறந்த பத்துப் பாடல்கள் என்று ஒரு லிஸ்ட் எடுக்க வேண்டுமென்பது அவ்வளவு சுலபமானது அல்ல. ஒவ்வொருவரின் ரசனையும் வேறுபடும் என்பதால், ஒரு பட்டியல் அனைவரையும் திருப்திப்படுத்துவது என்பது சிரமமே. இருப்பினும், இந்த ஆண்டை நினைவுப்படுத்தும் வண்ணம் அமைந்த பாடல்களின் பட்டியல் அவசியம் என்பதால், அதற்கென முயன்று தேர்ந்தெடுத்த பட்டியல் இது. இதில் ஆட்டம் போட வைக்கும் பாடல்களும் உண்டு, ஆழ்ந்து உறங்க வைக்கும் பாடல்களும் உண்டு. குழந்தைகள் ரசித்த பாடல்களும் உண்டு, பெரியோர்கள் ரசித்த […]
ஐ.ஏ.எம் நன்றி நவில்தல் விழா 2019 (IAM Thanksgiving 2019)
அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள இந்தியன் அசோசியேஷன் ஆஃப் மினசோட்டா (Indian Association of Minnesota) அமைப்பு சார்பில் 2019 ஆண்டில் உதவிய அனைத்து தன்னார்வலர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா கொண்டப்பட்டது. இந்த விழா சென்ற வாரம், டிசம்பர் 6 ஆம் தேதி நியு பிரைட்டன் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. திருமதி. மீனா கோனார் நடனத்துடன் தொடங்கிய விழாவில், அமைப்பின் தலைவி திருமதி. நாஷ் அனைவரையும் வரவேற்று, தன்னார்வலர்களுக்கு நன்றி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டின் […]
அட்லாண்டா வாழ் தமிழர்களின் முதல்நூல் வெளியீட்டு விழா
நவம்பர் 17, 2019 அன்று ஆல்ஃபெரட்டாவில் நிகழ்ந்தேறிய அட்லாண்டா வாழ் தமிழர்கள் மற்றும் உறவினர்களின் முதல்நூல் வெளியீட்டு விழாவில், பல கண்டங்களைத் தாண்டித் தன் சுவை மாறாது ஓங்கி ஒலித்தது தமிழ். அட்லாண்டா மாநகரத் தமிழ்ச்சங்கத்தின் முழு ஆதரவுடன் மூன்று நூல்களும், இரண்டு கையேடுகளும் ஒரே சமயத்தில் இவ்விழாவில் அரங்கேறியது பெருமைக்குரியது. முதல் நாள் நடைபெற்ற தமிழ்ச்சங்கத் தீபாவளி விழாவில், திருமதி. ஜெயா மாறன் நூலாசிரியர்களை அறிமுகப்படுத்தி, நூல்களைப் பற்றிய முன்னோட்டத்தை அழகுற அளித்தார். அவர் பேசுகையில், […]
ஃப்ரோஸன் 2
2013 இல் ஃப்ரோஸன் முதல் பாகம் வெளிவந்த போது, பெண் குழந்தைகளின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றதோடு நிற்காமல், பாக்ஸ் ஆபிஸிலும் சாதனைகளைப் படைத்தது. ‘லெட் இட் கோ’ பாடல், அப்போதைய சிறுமிகளின் தேசிய கீதமாகவே மாறிவிட்டிருந்தது. அந்த ஆண்டின் வசூல் சாதனை படைத்த படங்களில் முதல் இடத்தைப் பிடித்தது. வீடுகளில் வாங்கப்படும் வீடியோ விற்பனையிலும் முதல் இடத்தைப் பிடித்தது. அனிமேஷன் படங்களின் வசூல் சாதனை பட்டியலில் இந்தாண்டு வரை அதுவே முன்னணியில் இருந்தது. சமீபத்தில் தான் லயன் […]
எலுமிச்சை மெறாங் பை (Lemon Meringue Pie)
குளிர் காலம் ஆரம்பித்து விட்டது; சுற்றுப்புற சூழல் யாவும் மந்தமாகும் காலமிது. இச்சமயத்தில் நாக்குத் தித்திக்க மினசோட்டா மற்றும் அண்டை மாநிலங்களில் பனிக் காலப் பண்டிகை, கேளிக்கைகளில் பாங்காகப் பகிரப்படும் உணவுகளில் ஒன்று தான் எலுமிச்சை மெறாங் பை. இது எலுமிச்சையின் புளிப்பு, சர்க்கரையின் இனிப்பு சேர்ந்த பாகினை மத்தியிலும், ஒரத்தில் நறுக்கான மாவினால் ஆன கோது (crust) கொண்டும் அமைந்திருக்கும். தேவையானவை பாகு செய்ய 1 கோப்பை சீனி ½ கோப்பை சோள மாவு (Corn […]
காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (அக்டோபர் 2019)
சென்ற இரு மாதங்களில் வெளிவந்த படங்களில் பல படங்கள் நல்ல பாராட்டையும், வெற்றியையும் பெற்று வருவது நல்ல விஷயம். கேட்பதற்கு நல்ல பல பாடல்கள் வெளியாகி உள்ளன. இனி வரும் மாதங்களிலும், தீபாவளி, கிருஸ்துமஸ் எனப் பண்டிகை தினங்களில் பெரிய படங்கள் வரவிருக்கின்றன. அப்படங்களில் உள்ள பாடல்களும் நம்மைக் கவரும்விதமாக இருக்கும் என்று நம்புவோமாக. பக்ரீத் – ஆலங்குருவிகளா ரொம்பவும் சிரமப்பட்டு வெளிவந்த இப்படம் வந்ததே தெரியாமல் போய்விட்டாலும், இமான் இசையில் சித் ஸ்ரீராம் […]
மகாத்மா காந்தி 150-வது பிறந்த நாள் விழா
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா, வன்முறை இல்லாத தினமாக அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் உள்ள மினசோட்டா வரலாற்று அமைப்புக் (Minnesota History society) கட்டிடத்தில் சென்ற மாதம் 29ம் தேதி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சி, மதியம் மூன்று மணிக்கு, கட்டிடத்தில் உள்ள 3 எம் (3M) அரங்கத்தில் ஆரம்பித்தது. ராம் கடா (Ram Gada) நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, மினசோட்டாவில் புகழ் பெற்ற நிர்மலா ராஜசேகர் (Nirmala Rajasekar), Dr.பூஜா கோஸ்வாமி (Dr. Pooja Goswami), வி. […]
அசுரன்
“சாதிச் சச்சரவுகளைத் தாண்டிச் செல்ல, கல்வியே சரியான வழி” ‘மெட்ராஸ்’ படத்தில் இயக்குனர் ரஞ்சித் சொன்னதையும், ரஞ்சித்தின் தயாரிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் சொன்னதையும், அசுரன் படத்தில் இயக்குனர் வெற்றி மாறன் அவருக்கே உரிய பாணியில் சொல்லியிருக்கிறார். கூடவே “அப்படிக் கல்வியால் பெற்ற பதவியில் உட்கார்ந்து அவர்கள் நமக்குச் செய்ததை, நாம் செய்யாமல் இருக்க வேண்டும்” என்று சொல்லி நம்மை மேலும் கவருகிறார் வெற்றி மாறன். கலைப்புலி தாணு தயாரிப்பில், தனுஷ் நடிப்பில், […]
‘உட்பரி தேசிஸ்’ இன்பச் சுற்றுலா 2019
வட அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் கோடை காலம் என்பது ஜீன், ஜூலை ஆகஸ்ட் மாதங்கள் மட்டுமே. இந்த மூன்று மாதங்களில் மக்கள் கோடை காலத்தைப் பல வழிகளில் கொண்டாடி அனுபவிப்பார்கள். மினசோட்டா மாநிலத்தின் உட்பரி நகரில் வசிக்கும் இந்தியர்கள் ஒன்றிணைந்து ஒரு கூட்டாஞ்சோறு விழாவை ஏற்பாடு செய்திருந்தனர். ஆகஸ்ட் 31ம் தேதி அன்று .உட்பரி நகரப் பூங்காவின் தங்குமனையில் (shelter) இந்தக் கூட்டாஞ்சோறு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. முதலில் குடும்பப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு அனைவரும் வரவேற்கப்பட்டனர். […]
மினசோட்டா மாநிலக் கண்காட்சி 2019
அமெரிக்க மாகாணங்களில் நடத்தப்படும் மாநிலக் கண்காட்சிகள் (State fair) ஊர்த் திருவிழாவாகவே காட்சியளிப்பவவை. மினசோட்டா மாநிலக் கண்காட்சி, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாத இறுதி வாரத்தில் ஆரம்பித்து செப்டம்பர் முதல் வாரத்தில் வரும் தொழிலாளர் தினம் வரை 12 நாட்கள் நடைபெறும். ‘மினசோட்டாவின் ஒன்று கூடல்’ என்ற செல்லப்பெயரிடப்படும் இவ்விழா வருகையாளர்களின் தினசரி எண்ணிக்கை அடிப்படையில் நாட்டிலேயே முதன்மையானதாகவும், மொத்த வருகையாளர் எண்ணிக்கை அடிப்படையில் டெக்சாசுக்கு அடுத்து இரண்டாவதாகவும் கருதப்படுகிறது இவ்விழாவுக்கான நுழைவுக் கட்டணம், வயதைப் பொறுத்து […]