அன்றாடம்
காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (ஆகஸ்ட் 2019)
கடந்த இரண்டு மூன்று மாதங்களில் நிறையத் தமிழ்ப்படங்கள் வெளியாகி இருந்தாலும், வெற்றி சதவிகிதம் மிக மிகக் குறைவு. அதனால், பெரிய ஹிட் பாடல்கள் என்று நிறைய வரவில்லை. இந்த லிஸ்ட்டை எடுத்துக்கொண்டாலே, இதில் நிறையப் படங்கள் ஓடவில்லை என்று தெரியும். இனி வரும் மாதங்களில் நல்ல பெரிய ஹிட் பாடல்களும், படங்களும் வரும் என்று நம்புவோம். அயோக்யா – கண்ணே கண்ணே தெலுங்கு டெம்பரின் (Temper) தமிழ் ரீ-மேக்கான இப்படத்தில் இடம்பெற்ற இப்பாடலைப் பாடியது அனிருத். […]
மேல் பட்டண கலைச் சந்தை (UpTown Art Fair)
56 ஆவது கலைச் சந்தை ஆகஸ்ட் 3 – 4ம் தேதிகளில் மினியாப்பொலிஸ் நகரத்தின் ஹென்னப்பின் தெருவில் நடைபெற்றது. இது w 31 st இல் இருந்து w28 th வீதி வரை வாகனங்களை மறித்து ஹென்னப்பின் வீதி இருபுறமும் கூடாரங்கள் போடப்பட்டிருந்தன. இந்தப் பண்டிகைக்கு வருடா வருடம் சுமார் மூன்றரை லட்சம் மக்கள் வருகைத் தருகின்றனர். இவ்விடம் பல ரக ஓவியர்கள், சிற்பிகள், புகைப்படவியலாளர்களின் கைவண்ணங்கள் மிகுந்திருந்தன. விதவிதமான உணவு, குடிபான வகைகளும் விற்கப்பட்டன. இம்முறை […]
நேர்கொண்ட பார்வை
அமிதாப் நடிப்பில் ஹிந்தியில் வெற்றிப்பெற்ற ‘பிங்க்’ திரைப்படம் தமிழில் அஜித்தின் நடிப்பில் ‘நேர்கொண்ட பார்வை’யாக இந்த வாரம் வெளியாகியுள்ளது. இது அவருடைய வழக்கமான கமர்ஷியல் மசாலா படம் அல்ல என்பதையறிந்து அஜித்தின் ரசிகக் கண்மணிகள் சென்றால் படம் அவர்களைக் கவரும். ஒரு பெண் “இல்லை என்றால் இல்லை” தான் எனும் ஒரு மிக அடிப்படையான கருத்தை, இக்காலக்கட்டத்தில் பெரும்பாலோருக்கு மீண்டும் நினைவுப்படுத்த அஜித் எண்ணியதின் வெளிப்பாடாக இப்படத்தைக் கருதலாம். இன்றைய காலக்கட்டத்தில் இந்த எளிய கருத்தே, ஒரு […]
மினசோட்டாவில் 73வது இந்திய சுதந்திர தின விழா
இந்தியாவின் 73வது சுதந்திரத் தினத்தை மினசோட்டாவில் உள்ள ‘இந்தியன் அசோசியேஷன் ஆஃப் மினசோட்டா’ (IAM) அமைப்பினர், செயின்ட் பாலில் உள்ள மாநில தலைமைக் கட்டிட மைதானத்தில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி நடத்தினர். விழா மைதானத்தில் பல வகையான இந்திய உணவகங்கள், சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு இடங்கள், குழந்தைகள் விளையாட பல்வேறு விளையாட்டுப் பகுதிகள், மெஹந்தி கூடங்கள் என நிரம்பி வழிந்தன. இவை தவிர மினசோட்டாவிலுள்ள இந்தியச் சங்கங்களின் கூடங்களும் மற்ற நிறுவன கடைகளின் கூடாரமும் இடம்பெற்றிருந்தன. […]
மனித உடலின் மிகக் கடினமான வலி
மருத்துவத் துறையில் பல்வேறு வளர்ச்சி அடைந்த கால கட்டம் முதல் இன்னமும் தீர்வே கண்டு பிடிக்காத கடினமான நோய்கள் உலகில் இருந்து கொண்டே இருக்கின்றன. Trigeminal neuralgia அது போன்ற ஒரு நோயே. இது “மனித உடலின் மிகக் கடினமான வலி” என்று அழைக்கப்படுகிற ஒரு முக நரம்பு நோய். சிரிப்பதாலும்,பேசுவதாலும்,பல் துலக்குவதாலும்,தொடுவதாலும், உண்பதாலும் கூட ஒரு மனிதனுக்கு கொடிய வலி உண்டாகும் என்பது வேதனைக்குரியது. இந்த நோய் பற்றி ஒரு விழிப்புணர்வு உண்டாக்க ஐந்து கிலோமீட்டர் நடை […]
உலகத் தமிழ்ச் சங்கங்களின் சங்கமம்
ஃபெட்னா பேரவை தமிழ் விழாக்களில் பொதுவாக அமெரிக்காவில் இருக்கும் தமிழ்ச் சங்கத்தினர் ஆடிப்பாடி அணிவகுத்துச் செல்வார்கள். இம்முறை சிகாகோவில் நடைபெற்ற விழாவில், உலகமெங்குமிருந்து வந்திருந்த தமிழ்ச் சங்கத்தினர் கலந்துக்கொண்டு அணிவகுத்து சென்றனர். சில அணிகள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் வந்தனர். இந்தியாவிலிருந்து தமிழக அரசின் சார்பில் வந்திருந்த அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்சியைக் கண்டுகளித்ததுடன் அவர்களும் தமிழக அணியாகச் சேர்ந்து நடந்து வந்தனர். மிகவும் வண்ணமயமாக, கலகலப்புடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இங்கே உங்கள் […]
சிகாகோ பத்தாவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு
பத்தாவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஜூலை 6 மற்றும் 7 ஆகிய தினங்களில் சிகாகோ மாநகரில் நடைபெற்றது. அமெரிக்காவில் நடைபெற்ற முதல் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு இதுவாகும். இதற்கு முன்னால் மலேசியா, இந்தியா, ப்ரான்ஸ், இலங்கை, மொரிசியஸ் ஆகிய நாடுகளில் முந்தைய ஒன்பது மாநாடுகள் நடைபெற்றிருந்தன. 1966 ஆம் ஆண்டு முதல் இந்த மாநாடுகள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு என்பது தமிழ் மொழி மற்றும் பண்பாடு குறித்த ஆய்வுகளை உலக மக்களிடையே […]
சம்பூரண ராமாயணம் – சின்மயா மிஷன்
மினசோட்டாவின் சாஸ்க்கா நகரில், சின்மயா கணபதி என்றழைக்கப்படும் சின்மயா மிஷன் அமைந்துள்ளது. கோடை விடுமுறையாதலால் பால் விஹார் பள்ளிகளுக்கும் விடுமுறை. அப்படியிருக்க ஆன்மிகப் பசி எடுப்பவர்களுக்கு வயிறார உணவளிக்கும் வகையில் இவர்கள் சம்பூரண ராமாயணம் காலாட்சேபம் நடத்தினர். சுவாமி சாந்தாநந்தா அவர்கள் நமது ட்வின் சிடிஸ்க்கு விஜயம் செய்து இந்த நிகழ்ச்சியினைச் சிறப்பாக நடத்திவைத்தார். சூலை 14 முதல் 20 வரை இந்த நிகழ்வு நடந்தது. துளசிதாஸ் எழுதிய ராமா சரித்திரத்தை அடிப்படையாகக்கொண்டு உரையாற்றிய அவர், முதல் […]
மினசோட்டா முத்தமிழ் விழா
ஜூலை 20ஆம் தேதியன்று மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ்ப் பள்ளியின் சார்பில் ஹாப்கின்ஸ் ஐசன்ஹவர் சமூகக் கூடத்தில் (Hopkins Eisenhower Community Center) முத்தமிழ் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொள்ள திரு. சீர்காழி சிவசிதம்பரம் அவர்கள் வந்திருந்தார். இந்த நிகழ்ச்சி மதியம் 1 மணியளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. பின்னர், நாயனக் கலைஞர் திரு. மாரிமுத்து, தவில் கலைஞர்கள் திரு. நாகராஜ் மற்றும் திரு. ரங்கராஜ் ஆகியோர் மங்கல இசை நிகழ்ச்சி நடத்தினார்கள். அதன் […]
ஃபெட்னா 2019 தமிழ் விழா
ஒவ்வொரு ஆண்டும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் தமிழ் விழா ஜூலை முதல் வாரயிறுதியில் அமெரிக்கச் சுதந்திரத்தின விடுமுறையையொட்டி, அமெரிக்காவின் மாநகர் ஒன்றில் நடைபெறும். இவ்வருடம் இந்த விழா சிகாகோவில் ஜூலை 4ஆம் தேதியிலிருந்து 7ஆம் தேதிவரை நடைபெற்றது. இந்தாண்டு இதனுடன் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு மற்றும் சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் 50வது ஆண்டுவிழாவும் இணைந்து முப்பெரும் விழாவாக நடைபெற்றது. ஜுலை 4ஆம் தேதி வியாழன் காலையில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்ட இவ்விழாவில் திருக்குறள் மறை ஓதப்பட்டு, அமெரிக்க […]