அன்றாடம்
சவுத் டக்கோடாவில் என்ன பார்க்கலாம்?
ஒரு வழியா மினசோட்டாவில் சம்மர் தொடங்கிவிட்டது. மக்கள் எங்குப் போகலாம் என்று திட்டமிடலை ஏற்கனவே தொடங்கியிருப்பார்கள். மினசோட்டாவுக்குப் பக்கத்து மாநிலமான சவுத் டக்கோடா வாரயிறுதியில் பக்கோடா சாப்பிட்டுக்கொண்டே காரில் சென்று வருவதற்கு நல்ல சாய்ஸ். மினியாபொலிஸிலிருந்து மூன்று மணி நேரத்தில் சவுத் டகோடாவை அடைந்துவிடலாம் என்றாலும், அங்கு நாம் பார்க்க வேண்டிய இடங்களைக் காண இன்னும் அதிகத்தூரம் பயணம் செய்ய வேண்டி இருக்கும். அதனால், பயணத்தை அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்வது அவசியம். இனி சவுத் டக்கோடாவிலிருக்கும் காண […]
பட்டமளிப்பு விழா 2019
மினசோட்டாவிலுள்ள மேப்பிள் குரோவ் இந்து கோவிலில் பள்ளிப் படிப்பு முடித்து கல்லூரி செல்லவிருக்கும் மாணவர்களுக்கு மே மாதம் 19 ஆம் தேதி பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு, ஓக்கலாமா மாநிலப் பல்கலைக் கழகத்தின், பத்மஸ்ரீ முனைவர் சுபாஷ் காக், சிறப்புரையாற்றி மாணவ மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கினார். முனைவர் டேஷ் அறக்கட்டளை சார்பில் சிறந்த 7 மாணவர்களுக்கு $500 ஊக்கத் தொகை வழங்கப்பட்டது இவர்கள் அனைவரும் கோவில் மற்றும் கோவில் பள்ளிகளில் பணியாற்றிய தன்னார்வலத் தொண்டர்கள். இந்த […]
கோழி சுக்கா
சுலபமான முறையில் சுவையான கோழி சுக்காவுக்கான செயல்முறை இது. தேவையான பொருட்கள்: கோழி – 400g –ஊறவைக்க தேவையான பொருட்கள்:– மஞ்சள் தூள் – 1 tsp காஷ்மீரி மிளகாய்த் தூள் – 2 tsp கொத்தமல்லித் தூள் – 2 tsp கரம் மசாலாத் தூள் – 1 tsp சீரகத் தூள் – 1 tsp மிளகுத் தூள் – 1 tsp இஞ்சி பூண்டு விழுது – 2 tbsp தயிர் – […]
ஃபெஸ்டிவல் ஆஃப் நேஷன்ஸ் – 2019
ஆண்டுதோறும் செயிண்ட் பால் ரிவர் சென்டரில் (St. Paul River Center) இன்டர்நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஆஃப் மினசோட்டா (International Institue of Minnesota) அமைப்பால் நடத்தப்படும் ஃபெஸ்டிவல் ஆஃப் நேஷன்ஸ் (Festival of Nations) நிகழ்ச்சி, இந்தாண்டு மே இரண்டாம் தேதி, வியாழக்கிழமையன்று தொடங்கி ஐந்தாம் தேதி, ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்று முடிந்தது. 86 ஆண்டுகளாக நடைபெறும் இந்த நிகழ்ச்சி, அமெரிக்காவில் பல்வேறு இனக்குழுக்கள் சங்கமிக்கும் நிகழ்வுகளில் பழமையான ஒன்றாகும். கிட்டத்தட்ட நூறு இனக்குழுக்கள் இந்த நிகழ்வில் […]
பான் ஏசியன் ஆர்ட்ஸ் ஃபெஸ்டிவல் 2019
பல்வேறு ஆசியக் கலைக்குழுக்கள், கலைஞர்கள் கலந்துகொண்ட பான் ஏசியன் ஆர்ட்ஸ் ஃபெஸ்டிவல், ப்ளுமிங்டனில் இருக்கும் மால் ஆஃப் அமெரிக்கா பேரங்காடியில் மே 4ஆம் தேதியன்று நடைபெற்றது. காலை பதினொரு மணியிலிருந்து இரவு எட்டு மணி வரை இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்திய, சீன, ஜப்பானிய இசைக்குழுக்களும், நடனக்குழுக்களும் இதில் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். பரத நாட்டியம், காவடி, கரகம் போன்றவற்றுடன், தமிழ் திரைப்பாடல்களுக்கும் தமிழ்க்குழுக்கள் நடனமாடின. நிகழ்ச்சிக்காக வந்திருந்த பார்வையாளர்களுடன், பேரங்காடிக்கு வந்தவர்களும் பார்வையாளர்களாக மாறி நிகழ்ச்சியைக் கண்டுக்களித்தனர். […]
திகைப்பூட்டும் திரைப்படப் பாடல்கள்
புராணம், இதிகாசம், சீர்த்திருத்தம் எனப் பல பரிமாணங்களைக் கடந்து வந்த தமிழ்த்திரையுலகம் ஐம்பதுகளின் துவக்கத்தில் அரசியல் தாக்கத்தைப் பெற்றது. குறிப்பாக மந்திரிகுமாரி, பராசக்தி, மனோகரா போன்ற படங்கள் மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தின. அறுபதுகளில் C.V. ஸ்ரீதர், A. பீம்சிங், B.R. பந்துலு, T.R. ராமண்ணா, A.C. திருலோகச்சந்தர், K.S. கோபாலகிருஷ்ணன், K. பாலச்சந்தர் போன்றோர் காதல் மற்றும் குடும்பப் பின்னல்களின் பின்னணியில் படங்களை நகர்த்திச் சென்றனர். ஒரு கட்டம் வரை, தனது வாள் சண்டை திறமை […]
மினசோட்டாத் தமிழ்ச்சங்கப் பள்ளியின் 11ஆவது ஆண்டு விழா
மினசோட்டாத் தமிழ்ச்சங்கப் பள்ளியின் 11ஆவது ஆண்டு விழா ஏப்ரல் 20ஆம் தேதி ஐசன்ஹோவர் சமூகக்கூடத்தில் நடந்தது. மதியம் 2 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழா, மாலை ஆறரை மணிவரை நடைபெற்றது. பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோரது பங்களிப்புடன் பல்வேறு வகை நிகழ்ச்சிகள் மேடையேற்றப்பட்டன. பாடல், நடனம், நாடகம், இசை, பேச்சு என அனைத்துப் பிரிவுகளிலும் மாணவர்களது திறன் அங்கு வெளிப்பட்டது. நிகழ்ச்சிக்கு வந்தோரை வரவேற்று பேசிய பள்ளியின் இயக்குனர் திரு. பாலமுருகன் ராமசாமி, பள்ளியின் […]
நாட்டிய மஞ்சரி நடனப் போட்டி 2019
ஏப்ரல் 14ம் தேதி மினசோட்டா எடைனா நகரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆலயத்தில், தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நடனப் போட்டிகள் நடைபெற்றன. கோயில் நிர்வாகத்தினரும், தன்னார்வல தொண்டர்களும் சேர்ந்து இந்த விழாவைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில உங்களுக்காக ராஜேஷ் கோவிந்தராஜன்
காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (ஏப்ரல் 2019)
2019 இன் தொடக்கத்தில் வந்த ஹிட் பாடல்களின் எண்ணிக்கை, பிறகு குறைந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். பொங்கலுக்குப் பிறகு ஸ்டார் நடிகர்களின் படங்கள் குறைந்துவிட்டது ஒரு காரணம் என்றால், ஹிட் ஆன படங்களில் பெரிய ஹிட் ஆன பாடல்கள் என்று எதுவும் இல்லாமல் போனது இன்னொரு காரணம். சென்ற வருட இறுதியில் வெளிவந்த மாரி-2 படத்தில் வந்த ‘ரௌடி பேபி’ பாடலின் வீடியோ யூ-ட்யூபில் இந்தாண்டு தொடக்கத்தில் வெளியாகி, தென்னிந்தியப் பாடல்களிலேயே அதிகப் பார்வைகளைப் பெற்ற […]
சின்மயா மிஷனின் வண்ண கொண்டாட்டம் 2019
ஏப்ரல் 20ம் தேதி மினசோட்டா சின்மயா மிஷன் சார்பில் வண்ண (ஹோலி) கொண்டாட்டம் உட்பரி நகரத்தில் அமைந்துள்ள ஈஸ்ட் ரிட்ஜ் உயர் நிலை பள்ளியில் நடை பெற்றது. உட்பரி நகர மேயர் திருமதி ஆன் பர்ட் (Anne Burt) குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். சின்மயா மிஷன் உள்ளூர் அமைப்பின் தலைவி மற்றும் மாநிலத் தலைவர் சிறப்புரை ஆற்றினார்கள். ட்வின் சிட்டிஸில் உள்ள இந்தியர்கள் பலரும் இவ்விழாவில் கலந்து கொண்டார்கள். அரங்கில் சிறிய கடைகள் […]