அன்றாடம்
பான் ஏசியன் ஆர்ட்ஸ் ஃபெஸ்டிவல் 2019
பல்வேறு ஆசியக் கலைக்குழுக்கள், கலைஞர்கள் கலந்துகொண்ட பான் ஏசியன் ஆர்ட்ஸ் ஃபெஸ்டிவல், ப்ளுமிங்டனில் இருக்கும் மால் ஆஃப் அமெரிக்கா பேரங்காடியில் மே 4ஆம் தேதியன்று நடைபெற்றது. காலை பதினொரு மணியிலிருந்து இரவு எட்டு மணி வரை இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்திய, சீன, ஜப்பானிய இசைக்குழுக்களும், நடனக்குழுக்களும் இதில் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். பரத நாட்டியம், காவடி, கரகம் போன்றவற்றுடன், தமிழ் திரைப்பாடல்களுக்கும் தமிழ்க்குழுக்கள் நடனமாடின. நிகழ்ச்சிக்காக வந்திருந்த பார்வையாளர்களுடன், பேரங்காடிக்கு வந்தவர்களும் பார்வையாளர்களாக மாறி நிகழ்ச்சியைக் கண்டுக்களித்தனர். […]
திகைப்பூட்டும் திரைப்படப் பாடல்கள்
புராணம், இதிகாசம், சீர்த்திருத்தம் எனப் பல பரிமாணங்களைக் கடந்து வந்த தமிழ்த்திரையுலகம் ஐம்பதுகளின் துவக்கத்தில் அரசியல் தாக்கத்தைப் பெற்றது. குறிப்பாக மந்திரிகுமாரி, பராசக்தி, மனோகரா போன்ற படங்கள் மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தின. அறுபதுகளில் C.V. ஸ்ரீதர், A. பீம்சிங், B.R. பந்துலு, T.R. ராமண்ணா, A.C. திருலோகச்சந்தர், K.S. கோபாலகிருஷ்ணன், K. பாலச்சந்தர் போன்றோர் காதல் மற்றும் குடும்பப் பின்னல்களின் பின்னணியில் படங்களை நகர்த்திச் சென்றனர். ஒரு கட்டம் வரை, தனது வாள் சண்டை திறமை […]
மினசோட்டாத் தமிழ்ச்சங்கப் பள்ளியின் 11ஆவது ஆண்டு விழா
மினசோட்டாத் தமிழ்ச்சங்கப் பள்ளியின் 11ஆவது ஆண்டு விழா ஏப்ரல் 20ஆம் தேதி ஐசன்ஹோவர் சமூகக்கூடத்தில் நடந்தது. மதியம் 2 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழா, மாலை ஆறரை மணிவரை நடைபெற்றது. பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோரது பங்களிப்புடன் பல்வேறு வகை நிகழ்ச்சிகள் மேடையேற்றப்பட்டன. பாடல், நடனம், நாடகம், இசை, பேச்சு என அனைத்துப் பிரிவுகளிலும் மாணவர்களது திறன் அங்கு வெளிப்பட்டது. நிகழ்ச்சிக்கு வந்தோரை வரவேற்று பேசிய பள்ளியின் இயக்குனர் திரு. பாலமுருகன் ராமசாமி, பள்ளியின் […]
நாட்டிய மஞ்சரி நடனப் போட்டி 2019
ஏப்ரல் 14ம் தேதி மினசோட்டா எடைனா நகரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆலயத்தில், தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நடனப் போட்டிகள் நடைபெற்றன. கோயில் நிர்வாகத்தினரும், தன்னார்வல தொண்டர்களும் சேர்ந்து இந்த விழாவைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில உங்களுக்காக ராஜேஷ் கோவிந்தராஜன்
காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (ஏப்ரல் 2019)
2019 இன் தொடக்கத்தில் வந்த ஹிட் பாடல்களின் எண்ணிக்கை, பிறகு குறைந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். பொங்கலுக்குப் பிறகு ஸ்டார் நடிகர்களின் படங்கள் குறைந்துவிட்டது ஒரு காரணம் என்றால், ஹிட் ஆன படங்களில் பெரிய ஹிட் ஆன பாடல்கள் என்று எதுவும் இல்லாமல் போனது இன்னொரு காரணம். சென்ற வருட இறுதியில் வெளிவந்த மாரி-2 படத்தில் வந்த ‘ரௌடி பேபி’ பாடலின் வீடியோ யூ-ட்யூபில் இந்தாண்டு தொடக்கத்தில் வெளியாகி, தென்னிந்தியப் பாடல்களிலேயே அதிகப் பார்வைகளைப் பெற்ற […]
சின்மயா மிஷனின் வண்ண கொண்டாட்டம் 2019
ஏப்ரல் 20ம் தேதி மினசோட்டா சின்மயா மிஷன் சார்பில் வண்ண (ஹோலி) கொண்டாட்டம் உட்பரி நகரத்தில் அமைந்துள்ள ஈஸ்ட் ரிட்ஜ் உயர் நிலை பள்ளியில் நடை பெற்றது. உட்பரி நகர மேயர் திருமதி ஆன் பர்ட் (Anne Burt) குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். சின்மயா மிஷன் உள்ளூர் அமைப்பின் தலைவி மற்றும் மாநிலத் தலைவர் சிறப்புரை ஆற்றினார்கள். ட்வின் சிட்டிஸில் உள்ள இந்தியர்கள் பலரும் இவ்விழாவில் கலந்து கொண்டார்கள். அரங்கில் சிறிய கடைகள் […]
ஈஸ்டர் முட்டை வேட்டை 2019
ஈஸ்டர் என்பது இயேசுநாதர் மறைந்தபின் உயிர்த்தெழுந்ததைக் குறிக்கும் திருவிழா. இவ்விழாவை ஒட்டி நடைபெறும் ஈஸ்டர் முட்டை வேட்டை (Easter Egg hunt) குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த நிகழ்வாகும். இந்த வருடம் மினசோட்டா மாநிலத்தில் உள்ள உட்பரி நகரில் ஏப்ரல் 13ம் தேதி இந்த விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் எடுத்த புகைப்படம் உங்களுக்காக:
ஹோலி 2019
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத பௌர்ணமி தினத்தில் ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. வசந்த காலத்தை வரவேற்கும் விதமாகவும், மக்களிடம் புன்னகையையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டுவதைக் குறிக்கோளாக் கொண்டும் ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஹோலிப் பண்டிகையன்று ஒருவரை ஒருவர் சந்தித்து, வாழ்த்துக்களைத் தெரிவித்து, கலர்ப் பொடிகளைத் தூவியும், வண்ண நீரைப் பீய்ச்சி அடித்தும், திலகமிட்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். இந்தப் பொடி காற்றில் உயரப் பறந்து தேவர்களையும் மகிழ்விப்பதாக ஐதீகம். வட மாநிலங்களில் இந்தப் பண்டிகையை வண்ண மயமாக, மிகவும் விமரிசையாக் […]
2019 மினசோட்டா மாநிலத் தமிழ்த் தேனீப் போட்டிகள்
2019 ஆண்டின் மினசோட்டா மாநிலத்தின் தமிழ்த் தேனீக்கான போட்டிகள் மார்ச் மாதம் 17ஆம் தேதி ஞாயிறன்று மினியாபொலிஸ் நார்த் ரீஜினல் நூலகத்தில் நடைபெற்றன. முதலாம் மற்றும் இரண்டாம் நிலை மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும், மூன்று முதல் ஐந்தாம் நிலை மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும், ஆறாம் நிலை மற்றும் அதற்கு மேற்பட்ட நிலை மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும் என மொத்தம் மூன்று பிரிவுகளில் இப்போட்டிகள் நடைபெற்றன. சிறுவயது மாணவர்கள் பெரும் திரளாக இப்போட்டிகளில் கலந்துகொண்டு, சிறப்பாகத் தங்கள் தமிழ்த் […]
குளிர்காலப் பொழுதுபோக்கு விளையாட்டு
அமெரிக்காவின் மினசோட்டா மாநிலம் குளிர் மிகுந்திருக்கும் பிரதேசமாகும். பனிப்பொழிவும் இங்கு அதிகம். குளிர்காலங்களில் தொடர்ந்து சில நிமிடங்கள் வெளியில் நின்றாலே உறைந்துபோய்விடக் கூடிய அளவுக்கு வெப்பநிலை, பூஜ்யத்துக்கு 50 டிகிரி (-50 F) குறைவாகயிருக்கும் தினங்களும் இங்குண்டு. குளிர்காலங்களில், சிறுவர்களுக்கு வெளியே சென்று விளையாட முடியாத நிலையில் பொழுதைக் கழிப்பது மிகப் பெரிய சவால். ஆனால் இங்குள்ள நிறுவனங்கள் சில, சிறுவர்களின் இந்தத் தவிப்பைப் போக்கும் வகையில் புதிய வகையான, பனிக்காலங்களுக்கேற்றதான விளையாட்டுகளை உருவாக்கிய வண்ணம் […]