அன்றாடம்
திகைப்பூட்டும் திரைப்படப்பாடல்கள்
கிராமியச் சூழலை, மண்மணம் மாறாது வெளிக் கொணர்பவை நாட்டுப் புறப்பாடல்கள். மக்களின் அன்றாட வாழ்க்கை முறைகளை, ஆசாபாசங்களை எளிமையான சொற்களால் விளக்கிடும் பாடல் வரிகள் இவை. எழுத்திலக்கியப் பாடல்களைப் போன்று யாப்பிலக்கணக் கட்டுப்பாடுகள் இல்லையென்றாலும் பெரும்பாலான நாட்டுப்புற வகைப் பாடல்கள் எதுகை, மோனை, இயைபு கொண்டிருப்பது ஆச்சரியமான விஷயம். தெம்மாங்கு நாட்டுப்புறப் பாடல் வகைகளுள் ஒன்றாகும். தென்னகத்தின் பாங்கு , தென் + பாங்கு, தெம்மாங்கு ஆகியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இப்பாடல்கள் வேலைப் பளு தெரியாமலிருக்க வயல்களிலும், […]
2018 டாப் 10 பாடல்கள்
2018ஐ பொறுத்தவரை பெரிய ‘மியூசிக்கல் ஹிட்’ என்று சொல்லும் வகை படங்கள் நிறைய வெளிவரவில்லை. இவ்வருடமும் இளம் இசையமைப்பாளர்களின் ஆதிக்கம் தொடர்ந்தவண்ணமுள்ளது. வழக்கம் போல், இளையராஜா என்ன படங்களில் இசையமைத்தார் என்று தெரியாத வகையிலான படங்களுக்கு இசையமைத்தார். ஆனால், செய்திகளில் ராயல்டி தொடர்பாக அதிகம் அடிபட்டார். ஏ.ஆர்.ரஹ்மான் சொல்லிக்கொள்ளும்படி செக்கச் சிவந்த வானம், சர்கார், 2.0 என பெரிய இயக்குனர்களின் படங்களுக்கு இசையமைத்து தனது இருப்பைக் காட்டினார். கடந்த வருடங்களுக்கு ஒப்பிட்டால், இந்த வருடம் யுவன் ஷங்கர் […]
திகைப்பூட்டும் திரைப்படப்பாடல்கள்
வாழ்க்கை விடையில்லாத வினாக்கள் பல நிரம்பியது. உலகில் மிகச் சிலரே, மனதில் தோன்றும் வினாக்களுக்கு விடை தேட முனைவதில்லை. அவர்கள் மிக உன்னதமான மன நிலையிலிருப்போர் எனலாம். மனதைக் கட்டுப்படுத்தத் தெரிந்தவர்கள் இவர்கள். ஆனால் நம்மில் பலர் அவற்றிற்கு விடை காண முயல்கிறோம். அந்தத் தேடலின் முடிவில் கிடைப்பதைச் சரியான பதிலென்று மகிழ்வோர் சிலர். சில சமயங்களில் தேடலின் முடிவுகள் புதிய, மேலும் சிக்கலான கேள்விகளை உண்டாக்கிவிடும். முன்னால் தொங்கும் கேரட்டைத் துரத்தியோடும் கழுதையைப் போல விடை […]
நன்றி நவிலல் நாள் – பிரதிக்ஷனா 5 கி.மீ, ஓட்டம் 2018
மினசோட்டா மாநிலத்தின் மேபிள் குரோவ் நகரத்தில் உள்ள இந்து கோவில் சார்பில், நன்றி நவிலல் நாளான நவம்பர் 22ம் தேதியன்று, 7வது ஆண்டாக, பிரதிக்ஷனா ஐந்து கிலோமீட்டர் ஓட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வைக் கோயில் நிர்வாகத்தினர், தன்னார்வலர்கள் பலர் துணையுடன் சேர்ந்து நடத்தினர். சிறியவர் முதல் பெரியவர் வரை சுமார் 50 பேர் இந்தப் பந்தயத்தில் பங்கேற்றனர். முதல் மூன்று இடம் பெற்றவர்களுக்குப் பரிசும், பங்கேற்றவர்கள் அனைவருக்கும் சான்றிதழும் வழங்கப்பட்டன அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில […]
2.0
நடப்பதைக் காணும் போது ரஜினியின் மவுசு குறைந்து விட்டது போல் தான் தெரிகிறது. சூப்பர் ஹிட் படமான எந்திரனின் தொடர்ச்சி, பெரும் பொருட்செலவு, VFX என பரபரப்பைக் கிளப்ப ஏகப்பட்ட சங்கதிகள் 2.0 க்கு இருந்தாலும், படத்தின் ரிலீஸ் அந்தளவுக்கு எதிர்பார்ப்பைக் கிளப்பவில்லை. அதாவது ரஜினி, ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான், அக்ஷய் குமார் என இத்தனை பெரும் தலைகள் இருக்கும் போது, அதற்கேற்ற பெரிய ஓப்பனிங் இல்லை. படம் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொண்டு படம் பார்க்கலாம் என்பது […]
சர்க்கார்
உண்மையில் ஜெயிக்க இதுதான் சக்சஸ் பார்முலா என்று ஒன்று இல்லாவிட்டாலும், அப்படி ஒன்று இருப்பதாக எண்ணிக் கொண்டு தமிழ்த் திரையுலகினர் ஒரு வரைமுறையில் படம் எடுப்பார்கள். அஞ்சு பாட்டு, நாலு ஃபைட்டு, இரண்டு செண்டிமெண்ட் சீன், நடுநடுவே காமெடி என்று போகும் அவர்களது ஃபார்முலா. தற்போது அதில் சேர்ந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தும் வசனங்கள் மற்றும் காட்சிகள். ஒரு பிரிவினரைக் காயப்படுத்துவது, ஒரு கட்சியினைத் தாக்குவது, கதைத் திருட்டு வழக்கு என்ற சர்ச்சைகளும் தற்போது படத்தின் வெற்றிக்குத் தேவைப்படுகிறது. […]
பெஸ்ட் தேங்க்ஸ்கிவிங்க் எவர்
”ஹே… விஷ்… டு யூ ரிமெம்பர் தட் ஐ நீட் டு லீவ் எர்ளி இன் த மார்னிங்…..” கேட்டுக் கொண்டே பெட் ரூமிலிருந்து லிவிங்க் ரூமுக்குள் நுழைந்தாள் டெப்ரா…. லிவிங்க் ரூம் சோஃபாவில் அமர்ந்து மும்முரமாக கால்ஃப் சேனல் பார்த்துக் கொண்டிருந்த விஷ்வா, “யெஸ் டார்லிங்க், ஐ டு ரெமெம்பர்…. ஐம் கோயிங்க் டு மிஸ் யூ….” என்று சொல்லிக் கொண்டே எழுந்து கட்டியணைத்து, கிடைத்த சந்தர்ப்பமாக நினைத்து இதழோடு இதழ் பதித்தான் ……. […]
அமெரிக்க இடைத்தேர்தல் 2018 – முடிவுகள்
மிகுந்த எதிர்பார்ப்பு மற்றும் பரபரப்புடன் நடைபெற்ற இடைத்தேர்தலின் பெரும்பான்மையான முடிவுகள், தேர்தல் நடந்த இரவே வெளிவந்தன. கட்சிக்குள் சில மாறுபட்ட கருத்துகள் இருந்த போதிலும் பிரதிநிதிகளவை (House of Representatives) மற்றும் அதிகாரச் சபை (Senate) என்ற இரண்டு அவைகளிலும் பெரும்பான்மை பெற்றிருந்த குடியரசுக் கட்சி அதை நிலைநிறுத்திக் கொள்ள மிகக் கடுமையாக முனைந்தது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் மாற்றம் கொண்டுவர வேண்டுமெனில் இந்த இடைத்தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டுமென்ற கட்டாயத்தில் ஜனநாயகக் கட்சி போட்டியிட்டது. அதிகார அவைத் தேர்தல் முடிவுகள் (Senate results) செப்டம்பர் மாதக் […]
வன்முறை மறுப்பு நாள் – NON VIOLENCE DAY 2018
இந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்தியின்149 ஆவது பிறந்த நாள் “வன்முறை மறுப்பு நாள்” (NON-VIOLENCE DAY) என்று கொண்டாடப்பட்டது. மினசோட்டா மாநிலத்தின் தலைநகரக் கட்டிட அரங்கில் இந்த நாளில் ஒரு பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவை இந்திய மினசோட்டா அசோசியேஷன் மற்றும் மினசோட்டாவில் உள்ள மற்ற இந்திய அமைப்புகளும் இணைந்து ஏற்பாடு செய்து இருந்தனர். ஸ்ரீவித்யா வைத்தியநாதன் இந்திய மினசோட்டா அசோசியேஷன் சார்பில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். […]